ஸ்திரிகளுக்குள் ரூபவதியே Sthirikalukkul rupavathiye

ஸ்திரிகளுக்குள் ரூபவதியே
தண்ணீர்மொள்ள வந்தவளே ஓஹோ ஹோ
கானானின் மானே என்
எஜமானின் தேனே நி
கண் கவரும் புள்ளிமானே

அழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்த
அழகு மணவாட்டியே உன்
உள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும்
மணவாளன் நான் தானே
உன் பற்களின் நடுவே வரும்
பொற்கால துதிகளுக்கு மயங்கும் மன்னன் நானே
உன் சொற்களின் கோர்வையால்
அழகு துதி தந்து என்னை நீ கவர்ந்தாயே

சித்திரதையலாடை முத்திரை மோதிரம்
அணிந்து வருபவளே
உன் நித்திரை மயக்கத்தில்
நேசரின் மார்பினில் சாய்ந்து மகிழ்பவளே
இத்தரை மீதினில் அத்துரை தேவனை
பாடி மகிழ்பவளே
உன் உத்தம புத்திரத்தில் நேசரின்
இதயத்தில் இடம் பெற்று மகிழ்ந்தாயே


Sthirikalukkul rupavathiye
thannirmolla vanthavale ooho ho
kananin mane en
ejamanin thene ni
kan kavarum pullimane

azhakir siranthavarin azhakai rasikka vantha
azhaku manavattiye un
ullazhakin kanikalai rasiththu rusiththitum
manavalan nan thane
un parkalin natuve varum
porkala thuthikalukku mayangkum mannan nane
un sorkalin korvaiyal
azhaku thuthi thanthu ennai ni kavarnthaye

siththirathaiyalatai muththirai mothiram
aninthu varupavale
un niththirai mayakkaththil
nesarin marpinil saynthu makizhpavale
iththarai mithinil aththurai thevanai
pati makizhpavale
un uththama puththiraththil nesarin
ithayaththil itam perru makizhnthaye