ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
- புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே — ஆனந்த - மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே — ஆனந்த - மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே — ஆனந்த - அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே — ஆனந்த - கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடுவோம் — ஆனந்த
Aanantha Geethangal Lyrics in English
aanantha geethangal ennaalum paati
aanndavar Yesuvai vaalththiduvom
allaelooyaa jeyam allaelooyaa
allaelooyaa jeyam allaelooyaa
- puthumai paalan thiru manuvaelan
varumai kolam eduththavathariththaar
munnuraippatiyae munnannai meethae
mannuyir meetkavae piranthaarae — aanantha - makimai thaevan makaththuvaraajan
atimai roopam thariththikalokam
thootharum paada maeypparum potta
thuthikkup paaththiran piranthaarae — aanantha - manathin paaram yaavaiyum neekki
marana payamum purampae thalli
maa samaathaanam maa thaeva anpum
maaraa visvaasamum aliththaarae — aanantha - arumai Yesuvin thirunaamam
inimai thangum innalkal neekkum
kodumai paeyin pelan odukkum
valimai vaaynthidum naamamithae — aanantha - karunnai ponga thiruvarul thanga
kirupai poliya aarpparippomae
emmullam Yesu pirantha paakkiyam
ennnniyae paatik konndaaduvom — aanantha
Leave a Reply
You must be logged in to post a comment.