ஆர் இவர் ஆராரோ – இந்த
அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமய் உதித்த
இவ்வற்புத பாலகனார்?
- பாருருவாகு முன்னே – இருந்த
பரம் பொருள் தானிவரோ?
சீருடன் புவி, வான், அவை
பொருள் யாவையுஞ் சிருட்டித்த
மாவலரோ! - மேசியா இவர்தானோ? – நம்மை –
மேய் த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய்
மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ? - தித்திக்குந் தீங்கனியோ? – நமது –
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும்
அதிசயமேவிய விண்ணொளியோ! - பட்டத்துத் துரைமகனோ? –
நம்மைப் பண்புடன்
ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும்
மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ? - ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
– தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
அடைக்கல மானவர் இவர்
தானோ?
Aar Ivar Aaraaro Lyrics in English
aar ivar aaraaro – intha
avaniyor maathidamae
aanatai kutilitai monamay uthiththa
ivvarputha paalakanaar?
- paaruruvaaku munnae – iruntha
param porul thaanivaro?
seerudan puvi, vaan, avai
porul yaavaiyunj siruttiththa
maavalaro! - maesiyaa ivarthaano? – nammai –
maey ththidum nararkono?
aasaiyaay manitharukkaay
mariththidum athi anpulla
manasaano? - thiththikkun theenganiyo? – namathu –
thaevanin kannmanniyo?
meththavae ulakirul neekkidum
athisayamaeviya vinnnnoliyo! - pattaththuth thuraimakano? –
nammaip pannpudan
aalpavano?
kattalai meeridum yaavarkkum
mannippuk kaatdidun
thaayakano? - jeevanin appamothaan? – thaakam
– theerththidum paanamothaan?
aavalaay aelaikal atainthidum
ataikkala maanavar ivar
thaano?
Leave a Reply
You must be logged in to post a comment.