Aaruthal Adai Maname ஆறுதல் அடை மனமே

ஆறுதல் அடை மனமே
பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின்
கூரை அழித்த யேசு கொற்றவன்றனை நோக்கி

நம்பிக்கை யற்றோரைப் போலே மரித்தோர்க்காக
நலிவதேன் ஒருக்காலே
உம்பர் கோன் மேகத்தின் மேலே – தோன்றிடும் போ
துயிர்த்தெழும்புவ தாலே
வெம்பிப் புலம்பி அழ வேண்டாம் கிறிஸ்து வெனும்
தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து

ஜீவ நதிகள் ஓடுமே – எருசலேமில்
திரளாய் ஜனங்கள் கூடுமே
தேவ துதியைப் பாடுமே – யேசுகிறிஸ்தின்
ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமே
ஆவலுடனே நாமும் அதையே அடைவதற்கு
ஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக

எண்ணம் கவலைகள் உண்டாம் மரித்தோர்க்காக
ஏக்கம் பெருமூச்சும் உண்டாம்
கண்ணீர் சொரிவதும் உண்டாம் -துயரம் மிஞ்சிக்
கலங்கி அழுவதும் உண்டாம்
அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார்
நண்ணி அவரை ஜெபம் பண்ணித் துயரை விட்டு

யேசுவைப் பற்றின பேர்கள் – மரித்தும் உயிர்த்
தெழுந்து புறப்படுவார்கள்
மாசற்ற தேவன் அவர்கள் – உடனிருக்க
மகிமை பெற்றிருப்பார்கள்
பேச வேண்டுமோ யேசு ராசன் சமுகமதில்
நேசமுடன் என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ


Aaruthal Adai Maname Lyrics in English

aaruthal atai manamae -kiristhuvukkul
aaruthal atai manamae
paarul paavaththaal vantha palanaam marana mathin
koorai aliththa yaesu kottavantanai Nnokki

nampikkai yattaோraip polae mariththorkkaaka
nalivathaen orukkaalae
umpar kon maekaththin maelae – thontidum po
thuyirththelumpuva thaalae
vempip pulampi ala vaenndaam kiristhu venum
thampiraan thirumolich saaraththai rusipaarththu

jeeva nathikal odumae – erusalaemil
thiralaay janangal koodumae
thaeva thuthiyaip paadumae – yaesukiristhin
jeyaththaich sollik konndaadumae
aavaludanae naamum athaiyae ataivatharku
jeeva vasanan thannaith thidanaayp pitippomaaka

ennnam kavalaikal unndaam mariththorkkaaka
aekkam perumoochchum unndaam
kannnneer sorivathum unndaam -thuyaram minjik
kalangi aluvathum unndaam
annnal kiristhuvum mun ennnnik kannnneer vittar
nannnni avarai jepam pannnnith thuyarai vittu

yaesuvaip pattina paerkal – mariththum uyirth
thelunthu purappaduvaarkal
maasatta thaevan avarkal – udanirukka
makimai pettiruppaarkal
paesa vaenndumo yaesu raasan samukamathil
naesamudan entaikkum vaasam seyvaarkal allo


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply