ஆவியை மழைபோலே யூற்றும், – பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.
பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், – ஆவியை
- அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். – ஆவியை - சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். – ஆவியை - காத்திருந்த பல பேரும் – மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். – ஆவியை - தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்.. – ஆவியை
Aaviyai Malai Pola Ootrum – Pola
Aadugalai Yesu Manthaiyir Kootum
Paarikkai Jeevanai Vitta Christhe
Parinthu Neer Pesiye Irangida Seiyum – Aaviyai
- Anbinaal Jeevanai Vitteer – Aavi
Arul Maari Poliyare Paralogam Sendreer
Inba Perikkile Pongi Magila
Yeralamana Janangalai Serum – Aaviyai - Sitharundalaigira Aatai Pinnum
Thedi Piditha Neer Thukki Summanthu
Patharathe Naan Than Un Nal Meippan Yesu
Bakkiyar Ennum Nal Vaakaiyarulum – Aaviyai - Kathiruntha Pala Perum – Manam
Kadinam Kalla Munne Um Paatham Serum
Thothira Geethangal Paadi Pungalnthu
Suthalogam Vara Thuyavi Utrum – Aaviyai - Thothira Geethangal Paadi – Yengum
Suvishesa Jeyathaiye Nitham Nitham Thedi
Paathiraraga Anegarelumba
Parisutha Aaviyin Arulmaari Utrum – Aaviyai
Leave a Reply
You must be logged in to post a comment.