அடியார் வேண்டல் கேளும், இயேசுவே
- அடியார் வேண்டல் கேளும், இயேசுவே
உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே
நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்,
உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே. - எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
பந்தியில் நீரும் கூட அமர்வீர்.
எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,
எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர். - பாலனாய் வந்த இயேசு ரட்சகா,
எம் பாலர் முகம் பாரும், நாயகா
தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே. - வாலிபர் நெறி தவறாமலும்,
ஈனர் இழிஞரைச் சேராமலும்,
ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
நல் சேவை செய்ய நீர் அருள்வீரே. - மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
காரும், உம் பலம் ஆறுதல் தாரும்
நோயுற்றோர் பலவீனர் யாரையும்
தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும். - எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
எங்கெங்கோ தங்கும் எல்லாப்பேரையும்
அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
அவரைக் காத்து அல்லும் பகலும். - ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,
ஆவியில் அன்பில் என்றும் பெருக,
எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்
இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.
Adiyaar Vendal Kelum Yesuve Lyrics in English
atiyaar vaenndal kaelum, Yesuvae
- atiyaar vaenndal kaelum, Yesuvae
um paatham sernthom thaasar innaalae
nal veettaைk katta neerae varuveer,
um aasi thaeti vanthom naangalae. - engal nal veettil neerae thanguveer
panthiyil neerum kooda amarveer.
engal narpaechchil neerum makilveer,
engal thunpaththai inpamaakkuveer. - paalanaay vantha Yesu ratchakaa,
em paalar mukam paarum, naayakaa
theyva kirupai narkunam narseyal
yaavilum ivar ongach seyveerae. - vaalipar neri thavaraamalum,
eenar ilinjaraich seraamalum,
njaanamaay vaalnthu seelamudanae
nal sevai seyya neer arulveerae. - mooththor muthiyor yaaraiyum anpaay
kaarum, um palam aaruthal thaarum
Nnoyuttaோr palaveenar yaaraiyum
thalarchchi theerththuth thaapariththidum. - em veettaை innaal pirinthu sentu
engaெngaோ thangum ellaappaeraiyum
anpaay annaiththu aathariththidum
avaraik kaaththu allum pakalum. - aanndaanndaay engal veedu valara,
aaviyil anpil entum peruka,
engal nal naattil inpa illangal
Yesuvin veedaay entum polika.
Leave a Reply
You must be logged in to post a comment.