பல்லவி
ஏற்றுக்கொண்டருளுமே தேவா! – இப்போ
தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்.
சரணங்கள்
- சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்,
சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்,
தேற்றிக்கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி. - குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே,
குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்:
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;
முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி, - மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி;
மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி,
சிறுடைப்பட் டடியேன், கேட்கிறேன், ஸ்வாமி;
தேற்றிடும், புது பெலன் ஊற்றிடும், ஸ்வாமி. - விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும் ;
வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும் ;
சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும் ;
தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்
Aettukkonndarulumae Thaevaa! Lyrics in English
pallavi
aettukkonndarulumae thaevaa! – ippo
thaelaiyaen jepaththai Yesuvin moolam.
saranangal
- saattina aathi aayaththa jepamum,
saanthamaay jepiththa paava arikkaiyum,
thaettikkonndarulum mannippin maruvum
thivviya paathaththil vaikkiraen, svaami. - kuraivunndu ithilae, arumaip pithaavae,
kuttam manniththidum yaesuvin moolam:
muraippati kaetka naan theriyaatha paavi;
muluthum maesiyaamael vaikkiraen, svaami, - maruroopa aavi vaenndumen svaami;
manamellaam puthithaakkidum svaami,
sirutaippat datiyaen, kaetkiraen, svaami;
thaettidum, puthu pelan oottidum, svaami. - visuvaasam peruki nilaiththidach seyyum ;
velippadum maraiporul palappadach seyyum ;
sisuvaippol marupati piranthidach seyyum ;
thaevaavi ennulan thangidach seyyum
Leave a Reply
You must be logged in to post a comment.