மனுஷர் பாஷை பேசினாலும் தூதர் பாஷை பேசினாலும்
அன்பு எனக்கு இல்லாவிட்டால் அர்த்தம் இல்லையே…
சத்தமிடும் வெண்கலமாய் ஓசையிடும் கைத்தாளமாய்
வாழுகின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லையே…
தீர்க்கமான தரிசனங்கள் ஆழமான இரகசியங்கள்
அன்பு இல்லா காரணத்தால் அற்பமாகுமே…
அறிவு கலந்த வார்த்தைகளும் மலை பெயர்க்கும் விசுவாசமும்
அன்பு எனக்கு இல்லாவிட்டால் அர்த்தம் இல்லையே…
அன்பு ஒழியாது என்றும் அழியாது
அன்பு குறையாது என்றும் நிறைவானது
அன்பு அசையாது என்றும் அணையாது
அன்பு பிரிக்காது என்றும் ஜெயமானது
நேசருடைய சத்தம் ஒப்பில்லாத சத்தம்
ஆண்டவரின் சத்தம் எங்க ஆராதனை சத்தம் – 2
1. சாந்தமும் தயவும் சத்தியமும் சந்தோஷமும்
அன்பிற்கு அடையாளமே
அன்புகொண்ட பாஷைகளும் மனதுருகும் வார்த்தைகளும்
இயேசுவின் அடையாளமே
அயோக்கியம் செய்யாது அநியாயம் பண்ணாது
போட்டியும் பொறாமையும் அன்பாகாது
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்து போகும்
சுகவாழ்வு மணவாழ்வு வளமாகுமே
2. குழந்தையாக இருந்தோம் மழலையாக பேசினோம்
பரலோகம் இறங்கி வந்ததே
ஆவியிலே வளர்ந்தோம் வார்த்தையிலே வளர்ந்தோம்
அனுபவங்கள் மாறுகின்றதே
கண்ணாடியில் பார்ப்பதெல்லாம் கண் முன்னே நிற்காது
கர்த்தரோடே நடப்பது தான் நிறைவானதே
முகமுகமாய் பார்ப்போமே முழுமையாக ருசிப்போமே
மகிமையிலே அவரோடு பறப்போமே
Manishar Baashai Pesinaalum Dhoodhar Baashai Pesinaalum
Anbu Enakku Illaavittaal Artham Illayae
Sathamidum Venkalamaai Oosaiidum Kaithaalamaai
Vaalugindra Vaalkaiku Artham Illayae
Dheerkamaana Dharisanangal Aalamaana Ragasiyangal
Anbu Illaa Kaaranathaal Arpam Aagumae
Arivu Kalandha Vaarthaigalum Malai Peyarkkum Visvaasamum
Anbu Enakku Illaavittaal Artham Illayae
Anbu Oliyaadhu Endrum Aliyaadhu
Anbu Kuraiyaadhu Endrum Niraivaanadhu
Anbu Asaiyaadhu Endrum Anaiyaadhu
Anbu Pirikaadhu Endrum Jeyamaanadhu
Nesarudaya Satham Opilaadha Satham
Aandavarin Satham Enga Aaraadhanai Satham – 2
- Saandhamum Dhayavum Sathiyamum Sandhoshamum
Anbukku Adaiyaalamae
Anbukonda Baashaigalum Manadhurugum Vaarthaigalum
Yesuvin Adaiyaalamae
Ayokiyam Seiyaadhu Aniyaayam Pannaadhu
Pootiyum Poraamaiyum Anbaagaadhu
Niraivaanadhu Varumbodhu Kuraivaanadhu Olindhupogum - Kulandhaiyaaga Irundhom Malalaiyaaga Pesinom
Paraloogam Irangi Vandhadhae
Aaviyilae Valarndhom Vaarthayilae Valarndhom
Anubavangal Maarugindrathae
Kanaadiyil Paarpathellam Kanmunnae Nirkaadhu
Kartharodu Nadapadhu Dhaan Niraivaanadhey
Mugamugamaai Paarpomae Mulumaiyaaga Rusipoomae
Magimayilae Avarodu Parapoomae
Leave a Reply
You must be logged in to post a comment.