Author: admin

  • Yesu Namam Enthan Valvil இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே

    இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே
    எந்தன் வாழ்வில் உந்தன்
    நாமம் உயர்த்துவேன் – நீரே
    என் தேவா நீரே என் தேவா

    கோடான கோடி நாவுகள் போதாதையா
    நீர் செய்த நன்மை நான் துதித்துப்பாடிட
    என் தேவனே நீர் போதுமே
    உம் அன்பு என் வாழ்விலே

    ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் – நான்
    சொல்லுவேன் உமதன்பின் வெள்ளம்
    என் உள்ளம் பாய்ந்திட
    என் இயேசுவே நீர் போதுமே
    உம் கிருபை என் வாழ்விலே

    அதிகாலை தோறும் உம் பாதம்
    பணிந்திடுவேன் விண்ணப்பம் செய்திட
    உதவிடும் என் தெய்வமே
    தூய ஆவியே நீர் போதுமே
    உம் ஐக்கியம் என் வாழ்விலே


    Yesu namam enthan valvil Lyrics in English
    Yesu naamam enthan vaalvil pothumae
    enthan vaalvil unthan
    naamam uyarththuvaen – neerae
    en thaevaa neerae en thaevaa

    kodaana koti naavukal pothaathaiyaa
    neer seytha nanmai naan thuthiththuppaatida
    en thaevanae neer pothumae
    um anpu en vaalvilae

    aayiramaayiram sthoththiram – naan
    solluvaen umathanpin vellam
    en ullam paaynthida
    en Yesuvae neer pothumae
    um kirupai en vaalvilae

    athikaalai thorum um paatham
    panninthiduvaen vinnnappam seythida
    uthavidum en theyvamae
    thooya aaviyae neer pothumae
    um aikkiyam en vaalvilae

  • Yesu Nam Pinigalai இயேசு நம் பிணிகளை

    இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்
    நம் நோய்களைச் சுமந்து
    கொண்டார் இயேசு

    நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்
    அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்
    நம்மை நலமாக்கும் தண்டனை
    அவர் மேல் விழுந்தது

    அவருடைய காயங்களால்
    குணமடைந்தோம் நாம்

    கொல்வதற்காய் இழுக்கப்படும்
    ஆட்டுக்குட்டியைப் போல மயிர்
    கத்திரிப்போன் முன்னிலையில்
    கத்தாத செம்மறி போல
    வாய்கூட அவர் திறக்கவில்லை
    தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்

    நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்
    இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்
    கழுமரத்தின் மீது தம் உடலில்
    நம் பாவங்கள் அவர் சுமந்தார்


    Yesu Nam Pinigalai Lyrics in English
    Yesu nam pinnikalai aettuk konndaar
    nam Nnoykalaich sumanthu
    konndaar Yesu

    nam paavangalukkaay kaayappattar
    akkiramangalukkaay norukkappattar
    nammai nalamaakkum thanndanai
    avar mael vilunthathu

    avarutaiya kaayangalaal
    kunamatainthom naam

    kolvatharkaay ilukkappadum
    aattukkuttiyaip pola mayir
    kaththirippon munnilaiyil
    kaththaatha semmari pola
    vaaykooda avar thirakkavillai
    thaalmaiyudan athai thaangik konndaar

    nam paavam anaiththum akatti vittar
    iraivanin pillaiyaay maattivittar
    kalumaraththin meethu tham udalil
    nam paavangal avar sumanthaar

  • Yesu Nallavar Yesu Vallavar Ratchagar இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

    இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
    இயேசு இரட்சகரே
    அல்லேலுயா ஆராதனை
    ராஜ ராஜனுக்கே

    1. வறண்ட நிலமாய் இருந்த வாழ்வை
      வயலாய் மாற்றினாரே
      அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை
      களிப்பாய் மாற்றினாரே
      குறைகள் எல்லாம் நிறைவாய் மாற்றி
      கவலை தீர்த்தாரே
      கண்ணீர் துடைத்தாரே – (2) அவர்
    2. சேற்றினின்றும் குழியினின்றும்
      தூக்கி எடுத்தாரே
      கன்மலைமேல் கால்கள் நிறுத்தி
      உறுதிப்படுத்தினாரே
      புதிய பாடல் நாவில் தந்து
      பாட வைத்தாரே
      துதிக்க செய்தாரே – என்னை (2)
    3. பாவம் யாவும் மன்னித்தாரே
      சாபம் நீக்கினாரே
      கிருபையாலே நீதிமானாய்
      என்னை மாற்றினாரே
      பிள்ளையாக என்னை கூட
      ஏற்றுக் கொண்டாரே
      அப்பா இயேசுவே – என் (2)
    4. பரலோகத்தில் எனது பெயரை
      எழுதி வைத்தாரே
      நானும் வாழ அங்கோர் இடத்தை
      தெரிந்து வைத்தாரே
      இயேசு வருவார் அழைத்துச் செல்வார்
      பறந்து சென்றிடுவேன்
      சுகமாய் வாழ்ந்திடுவேன் – (2) அங்கு

    Yesu nallavar Yesu vallavar
    Yesu iratchakarae
    allaeluyaa aaraathanai
    raaja raajanukkae

    1. varannda nilamaay iruntha vaalvai
      vayalaay maattinaarae
      alukai niraintha pallaththaakkai
      kalippaay maattinaarae
      kuraikal ellaam niraivaay maatti
      kavalai theerththaarae
      kannnneer thutaiththaarae – (2) avar
    2. settinintum kuliyinintum
      thookki eduththaarae
      kanmalaimael kaalkal niruththi
      uruthippaduththinaarae
      puthiya paadal naavil thanthu
      paada vaiththaarae
      thuthikka seythaarae – ennai (2)
    3. paavam yaavum manniththaarae
      saapam neekkinaarae
      kirupaiyaalae neethimaanaay
      ennai maattinaarae
      pillaiyaaka ennai kooda
      aettuk keாnndaarae
      appaa Yesuvae – en (2)
    4. paralaeாkaththil enathu peyarai
      eluthi vaiththaarae
      naanum vaala angaeாr idaththai
      therinthu vaiththaarae
      Yesu varuvaar alaiththuch selvaar
      paranthu sentiduvaen
      sukamaay vaalnthiduvaen – (2) angu
  • Yesu Nallavar Yesu Periyavar இயேசு நல்லவர் நம்

    இயேசு நல்லவர் – நம்
    இயேசு பெரியவர்
    இயேசு உன்னதர்
    சர்வ லோகத்தின் ஆண்டவர்
    நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர்

    வியாதியால் வருந்திடும் உனக்கு
    சுகம் தரும் தெய்வம் நம் இயேசு
    சாபங்கள் யாவையும் நீக்கி – உன்னை
    வாழ வைக்கும் தெய்வம் இயேசு

    மரண பயம் சூழ்ந்த உன்னை
    விடுவிக்க வல்லவர் இயேசு
    இருண்டு போன உந்தன் வாழ்வில் – ஜீவ
    ஒளியை ஏற்றுவார் இயேசு

    ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில்
    புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசு
    தோல்வியை சந்தித்த உனக்கு
    ஜெயத்தைத் தருபவர் இயேசு


    Yesu nallavar yesu periyavar Lyrics in English
    Yesu nallavar – nam
    Yesu periyavar
    Yesu unnathar
    sarva lokaththin aanndavar
    nallavar periyavar sarva vallavar

    viyaathiyaal varunthidum unakku
    sukam tharum theyvam nam Yesu
    saapangal yaavaiyum neekki – unnai
    vaala vaikkum theyvam Yesu

    marana payam soolntha unnai
    viduvikka vallavar Yesu
    irunndu pona unthan vaalvil – jeeva
    oliyai aettuvaar Yesu

    aemaattam niraintha un vaalvil
    puthu nampikkai koduppavar Yesu
    tholviyai santhiththa unakku
    jeyaththaith tharupavar Yesu

  • Yesu Nallavar Paattu Paadungal இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்

    இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
    என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)
    ஆனந்தக் கீதங்கள் பாடிடுங்கள்
    ஆன்டவர் இயேசுவை உயர்த்திடுங்கள் (2)
    இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
    என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)

    1. இரக்கத்தில் ஐசுவரிய சம்பந்தரவர்
      அவர் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் (2)
      மனதுருக்கம் நிறைந்தோரவர்
      மன்னிப்பில் தயை பெருத்தோரவர் (2)
      கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்
    2. கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள்
      அவர் மேல் நம்பிக்கை வைப்போன் பாக்கியவான் (2)
      உலகெங்கும் சென்றிடுங்கள்
      ஊரெங்கும் சொல்லிடுங்கள் (2)
      கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்
    3. சாத்தானை சிலுவை மீதில் ஜெயித்தாரவர்
      சாவின்று முற்றுமாய் ஒழித்தாரவர் (2)
      பாதாள வல்லமைகள்
      பரிகரிக்க பிறந்தாரவர் (2)
      கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்

    Yesu Nallavar Paattu Paadungal Lyrics in English
    Yesu nallavar paattup paadungal
    entum nallavar thaalam podungal (2)
    aananthak geethangal paadidungal
    aandavar Yesuvai uyarththidungal (2)
    Yesu nallavar paattup paadungal
    entum nallavar thaalam podungal (2)

    1. irakkaththil aisuvariya sampantharavar
      avar irakkangal kaalaithorum puthiyavaikal (2)
      manathurukkam nirainthoravar
      mannippil thayai peruththoravar (2)
      karththar nallavarentu parai saattungal (2) – Yesu nallavar
    2. karththar nallavar entu rusiththup paarungal
      avar mael nampikkai vaippon paakkiyavaan (2)
      ulakengum sentidungal
      oorengum sollidungal (2)
      karththar nallavarentu parai saattungal (2) – Yesu nallavar
    3. saaththaanai siluvai meethil jeyiththaaravar
      saavintu muttumaay oliththaaravar (2)
      paathaala vallamaikal
      parikarikka piranthaaravar (2)
      karththar nallavarentu parai saattungal (2) – Yesu nallavar
  • Yesu Nallavar இயேசு நல்லவர்

    இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
    என்றென்றும் மாறாதவர் – அவர்
    என்றென்றும் மாறாதவர்

    1. வியாதியில் விடுதலை தருபவர்
      அவர் நல்லவர் நல்லவரே
      பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
      அவர் நல்லவர் நல்லவரே
      அவர் நல்லவர் சர்வ வல்லவர்
      அவர் கிருபை என்றுமுள்ளதே
    2. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
      அவர் நல்லவர் நல்லவரே
      நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
      அவர் நல்லவர் நல்லவரே
      அவர் நல்லவர் சர்வ வல்லவர்
      அவர் கிருபை என்றுமுள்ளதே

    ———————-

    இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
    மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா

    அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
    பயண்படச் செய்தீரே நன்றி ஐயா

    நன்றி நன்றி ஐயா
    உம்மை உயர்த்திடுவேன்

    கிருபைகள் தந்து ஊழியம் தந்து
    உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா


    Yesu Nallavar – Ithuvarai Nadathi Lyrics in English
    Yesu nallavar Yesu vallavar
    ententum maaraathavar – avar
    ententum maaraathavar

    1. viyaathiyil viduthalai tharupavar
      avar nallavar nallavarae
      paavaththai mannikkum parisuththar
      avar nallavar nallavarae
      avar nallavar sarva vallavar
      avar kirupai entumullathae
    2. thunpaththil aaruthal alippavar
      avar nallavar nallavarae
      nam paarangal yaavaiyum neekkuvaar
      avar nallavar nallavarae
      avar nallavar sarva vallavar
      avar kirupai entumullathae

    ———————-

    ithuvarai nadaththi kuraivinti kaaththu
    makilvai thantheerae nanti aiyaa

    apishaekam thanthu varangalai eenthu
    payannpadach seytheerae nanti aiyaa

    nanti nanti aiyaa
    ummai uyarththiduvaen

    kirupaikal thanthu ooliyam thanthu
    uyarththi vaiththeerae nanti aiyaa

  • Yesu Naesikkiraar இயேசு நேசிக்கிறார்

    இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ;
    இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
    தென்ன மாதவமோ!

    1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
      மாசில்லாத பரன் சுதன்றன் முழு
      மனதால் நேசிக்கிறார் — இயேசு
    2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
      நரராமீனரை நேசிக்கிறாரென
      நவிலல் ஆச்சரியம் — இயேசு
    3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
      நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
      நித்தம் ஆச்சரியம் — இயேசு
    4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;
      அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ
      ஆவலாய்ப் பரப்பேன் — இயேசு
    5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,
      ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற
      இணையில் கீதஞ் சொல்வேன் — இயேசு

    Yesu Naesikkiraar Lyrics in English
    Yesu naesikkiraar – Yesu naesikkiraar ;
    Yesu ennaiyum naesikka yaan seytha
    thenna maathavamo!

    1. neesanaamenaiththaan Yesu naesikkiraar,
      maasillaatha paran suthantan mulu
      manathaal naesikkiraar — Yesu
    2. parama thanthai thantha parisuththa vaetham
      nararaameenarai naesikkiraarena
      navilal aachchariyam — Yesu
    3. naathanai maranthu naatkalith thulainthum,
      neethan iyaesenai naesikkiraarenal
      niththam aachchariyam — Yesu
    4. aasai Yesuvennai anpaay naesikkiraar;
      athai ninainthavar anpin karaththule
      aavalaayp parappaen — Yesu
    5. raasan Yesuvin mael inpa geethanj solil ,
      eesan iyaesenaith thaanesiththaarenta
      innaiyil geethanj solvaen — Yesu
  • Yesu Naaman Solla இயேசு நாமம் சொல்ல சொல்ல

    இயேசு நாமம் சொல்ல சொல்ல
    எங்கும் எதிலும் ஜெயமே ஜெயமே
    அல்லேலூயா அல்லேலூயா

    இயேசுவின் நாமத்தில் புது பெலன் உண்டு
    உலர்ந்த எலும்பும் உயிர்பெறும் இன்று
    பெலவீனம் சுகவீனம் நீங்கிடும் இன்று
    உன்னத வல்லமை இறங்கிடும் இன்று
    தெய்வீக சுகமுண்டு இயேசுவின் நாமத்திலே

    இயேசுவின் பேர்சொல்ல பேய் நடு நடுங்கும்
    அசுத்த ஆவிகள் அகன்றே ஓடும்
    அந்தகார வல்லமை அழிந்தே போகும்
    சாத்தானின் கோட்டைகள் தகர்ந்தே
    நொறுங்கும் பிசாசை ஜெயித்திடுவோம்
    நம் இயேசுவின் நாமத்திலே

    இயேசுவின் நாமத்தில் கேட்பது கிடைக்கும்
    அற்புதம் அதிசயம் எதுவும் நடக்கும்
    இருளும் விலகி வெளிச்சம் தோன்றும்
    துக்கம் எல்லாம் சந்தோஷமாகும்
    வாழ்வே புதிதாகும் இயேசுவின் நாமத்திலே

    இயேசுவின் பெயரை சொல்லி அழைத்தாலே
    ஆர்வமாக ஓடி வருவாரே
    அன்பின் கரத்தால் அள்ளி அணைப்பாரே
    கண்களில் வழியும் கண்ணீர் துடைப்பாரே
    தூக்கி சுமந்திடுவார் துன்பம் நீக்கிடுவார்


    Yesu naaman solla Lyrics in English
    Yesu naamam solla solla
    engum ethilum jeyamae jeyamae
    allaelooyaa allaelooyaa

    Yesuvin naamaththil puthu pelan unndu
    ularntha elumpum uyirperum intu
    pelaveenam sukaveenam neengidum intu
    unnatha vallamai irangidum intu
    theyveeka sukamunndu Yesuvin naamaththilae

    Yesuvin paersolla paey nadu nadungum
    asuththa aavikal akante odum
    anthakaara vallamai alinthae pokum
    saaththaanin kottaைkal thakarnthae
    norungum pisaasai jeyiththiduvom
    nam Yesuvin naamaththilae

    Yesuvin naamaththil kaetpathu kitaikkum
    arputham athisayam ethuvum nadakkum
    irulum vilaki velichcham thontum
    thukkam ellaam santhoshamaakum
    vaalvae puthithaakum Yesuvin naamaththilae

    Yesuvin peyarai solli alaiththaalae
    aarvamaaka oti varuvaarae
    anpin karaththaal alli annaippaarae
    kannkalil valiyum kannnneer thutaippaarae
    thookki sumanthiduvaar thunpam neekkiduvaar

  • Yesu Naamame Jeya Naamame இயேசு நாமமே ஜெய நாமமே

    இயேசு நாமமே ஜெய நாமமே
    ஜெய நாமமே எங்கள் இயேசு நாமமே
    இயேசு நாமமே எங்கள் ஜெய நாமமே

    வானத்திலும் பூமியிலும்
    உயர்ந்த நாமமே- சர்வ பூமிக்கும்
    ஆண்டவரே உன்னத நாமமே

    மரணத்தின் கூரை உடைத்த
    இயேசு நாமமே- பாதாளத்தை வெற்றி
    சிறந்த இயேசு நாமமே

    நித்திய ஜீவனை தருகின்ற
    இயேசு நாமமே-வழியும் சத்தியம்
    ஜீவனுமான இயேசு நாமமே


    Yesu Naamame Jeya Naamame Lyrics in English
    Yesu naamamae jeya naamamae
    jeya naamamae engal Yesu naamamae
    Yesu naamamae engal jeya naamamae

    vaanaththilum poomiyilum
    uyarntha naamamae- sarva poomikkum
    aanndavarae unnatha naamamae

    maranaththin koorai utaiththa
    Yesu naamamae- paathaalaththai vetti
    sirantha Yesu naamamae

    niththiya jeevanai tharukinta
    Yesu naamamae-valiyum saththiyam
    jeevanumaana Yesu naamamae

  • Yesu Naamam Uyarntha Naamam இயேசு நாமம் உயர்ந்த நாமம்

    இயேசு நாமம் உயர்ந்த நாமம்
    உன்னத நாமம் மேலான நாமம்

    மரணத்தின் வல்லமைகள்
    தெறிப்பட்டு போகுதே
    இயேசுவின் நாமம் சொல்லையிலே
    பாதாள சங்கிலிகள்
    அறுப்பட்டு போகுதே
    இயேசுவின் நாமம் சொல்லையிலே

    சிலுவையில் இயேசு வெற்றி பெற்றார்
    மரணத்தை அவர் ஜெயித்திட்டார்

    பாவத்தின் வல்லமைகள்
    உடைபட்டு போகுதே
    இயேசுவின் நாமம் சொல்லையிலே
    வியாதியின் வல்லமைகள்
    விலகியே போகுதே
    இயேசுவின் நாமம் சொல்லையிலே

    தடைசெய்த மதில்கள்
    தளர்ந்து போய் விழுகுதே
    இயேசுவின் நாமம் சொல்லையிலே
    எரிகோவின் வல்லமைகள்
    பயந்துபோய் ஓடுதே
    இயேசுவின் நாமம் சொல்லையிலே


    Yesu Naamam Uyarntha Naamam Lyrics in English
    Yesu naamam uyarntha naamam
    unnatha naamam maelaana naamam

    maranaththin vallamaikal
    therippattu pokuthae
    Yesuvin naamam sollaiyilae
    paathaala sangilikal
    aruppattu pokuthae
    Yesuvin naamam sollaiyilae

    siluvaiyil Yesu vetti pettaாr
    maranaththai avar jeyiththittar

    paavaththin vallamaikal
    utaipattu pokuthae
    Yesuvin naamam sollaiyilae
    viyaathiyin vallamaikal
    vilakiyae pokuthae
    Yesuvin naamam sollaiyilae

    thataiseytha mathilkal
    thalarnthu poy vilukuthae
    Yesuvin naamam sollaiyilae
    erikovin vallamaikal
    payanthupoy oduthae
    Yesuvin naamam sollaiyilae