Author: admin

  • Yesu Thaanae Athisaya Theyvam இயேசு தானே அதிசய தெய்வம்

    இயேசு தானே அதிசய தெய்வம்
    என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்

    1. அதிசயமே அவர் அவதாரம்
      அதிலும் இனிமை அவர் உபகாரம்
      அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
      அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் — இயேசு
    2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
      இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
      அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
      அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு
    3. மனிதன் மறு பிறப்படைவதவசியம்
      மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
      மறையும் முன்னே மகிபனைத் தேடு
      இறைவனோடு பரலோகம் சேரு — இயேசு
    4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
      பாவிகளை நேசிக்கும் தெய்வம்
      ஆவியோடு உண்மையாய் தொழுதால்
      தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் — இயேசு

    Yesu Thaanae Athisaya Theyvam Lyrics in English
    Yesu thaanae athisaya theyvam
    entum jeevikkiraar nam theyvam

    1. athisayamae avar avathaaram
      athilum inimai avar upakaaram
      avaraith theyvamaakak kolvathae paakkiyam
      avaril nilaithiruppathae silaakkiyam — Yesu
    2. iruvar orumiththu avar naamaththilae
      irunthaal varuvaar iruvar maththiyilae
      antharangaththil aluthu nee jepiththaal
      avar karaththaal mukam thottu thutaippaar — Yesu
    3. manithan matru pirappataivathavasiyam
      mariththa Yesuvaal ataiyum irakasiyam
      maraiyum munnae makipanaith thaedu
      iraivanodu paralokam seru — Yesu
    4. aaviyinaal arinthidum theyvam
      paavikalai naesikkum theyvam
      aaviyodu unnmaiyaay tholuthaal
      thaevasaayalaay maari nee makilvaay — Yesu
  • Yesu Sumanthu இயேசு சுமந்து

    இயேசு சுமந்து கொண்டாரே
    நான் சுமக்க தெவையில்லை

    இயேசுவின் காயங்களால்
    சுகமானேன் சுகமானேன்

    பெலவீனம் சுமந்து கொண்டார்
    பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின்

    என் நோய்கள் சுமந்து கொண்டார்
    என் துக்கம் ஏற்றுக் கொண்டார்


    Yesu Sumanthu Lyrics in English
    Yesu sumanthu konndaarae
    naan sumakka thevaiyillai

    Yesuvin kaayangalaal
    sukamaanaen sukamaanaen

    pelaveenam sumanthu konndaar
    pelavaanaay maattivittar – Yesuvin

    en Nnoykal sumanthu konndaar
    en thukkam aettuk konndaar

  • Yesu Sonnathai Kel இயேசு சொன்னதைக் கேள்

    பல்லவி

    இயேசு சொன்னதைக் கேள்

    இயேசு வாழ்ந்ததைப் பார்

    இன்பமாகவே என்றும் வாழவே

    உண்டு மார்க்கமே வா! – இயேசு

    சரணங்கள்

    1. அன்பினால் பகையும் வெல்லலாம் நன்று செய் நலம் காணலாம் பண்போடுப் பழகுப் பணிவொடுப் பேசு பொன்மொழி இது போல் ஆயிரம் – இயேசு
    2. அன்பினால் வாழ்ந்துக் காட்டினார் தொண்டுகள் யாவும் ஆற்றினார் இன்னுயிரும் தந்தார் உயிர்த்தே எழுந்தார் உலகினைக் காக்கும் தேவனாம் – இயேசு

    Yesu Sonnathai Kel Lyrics in English
    pallavi

    Yesu sonnathaik kael

    Yesu vaalnthathaip paar

    inpamaakavae entum vaalavae

    unndu maarkkamae vaa! – Yesu

    saranangal

    1. anpinaal pakaiyum vellalaam nantu sey nalam kaanalaam pannpodup palakup pannivodup paesu ponmoli ithu pol aayiram – Yesu
    2. anpinaal vaalnthuk kaattinaar thonndukal yaavum aattinaar innuyirum thanthaar uyirththae elunthaar ulakinaik kaakkum thaevanaam – Yesu
  • Yesu Ratham Enmeliruppathal இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்

    இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
    தீமைகள் அணுகாது
    இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
    வியாதிகள் அணுகாது
    என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
    இயேசுவின் இரத்தம்
    அவர் வார்த்தை என்னில்
    இருப்பதினால் பயமேயில்லை

    1. பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு
      நான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன்
    2. சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்
      விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன்
    3. சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்
      நீதி என்னும் மார்க்கவசம் தரித்திடுவேன்

    Yesu Ratham Enmeliruppathal Lyrics in English

    Yesu iraththam enmaeliruppathaal
    theemaikal anukaathu
    Yesu iraththam enmaeliruppathaal
    viyaathikal anukaathu
    en aavi aathmaa sareeramellaam
    Yesuvin iraththam
    avar vaarththai ennil
    iruppathinaal payamaeyillai

    1. pollaatha aavikalin senaikalodu
      naan poraati jepiththu jeyameduppaen
    2. samaathaana suvisesham solliduvaen
      visuvaasa kaedayaththai pitiththiduvaen
    3. saththiyamennum vasthiram naan anninthiduvaen
      neethi ennum maarkkavasam thariththiduvaen
  • Yesu Ratchakar Peyarai Sonnaal இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

    இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
    எதுவும் நடக்குமே
    அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
    எல்லாம் கிடைக்குமே

    1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
      அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
      பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
      பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு – இயேசு ரட்சகர்
    2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
      நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
      தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
      தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு – இயேசு ரட்சகர்

    Yesu ratchakar peyaraich sonnaal
    ethuvum nadakkumae
    avar ithayaththodu kalanthu vittal
    ellaam kitaikkumae

    1. vaati kidantha uyirkalellaam vaala vaiththaarae
      avar vaalvum saththiyam jeevanumaay nanmai seythaarae
      parama pithaa oruvan entu vakuththu sonnavar Yesu
      paasam anpu karunnaiyodu ulakai kanndavar Yesu – Yesu ratchakar
    2. ethaiyum thaangum sakipputh thanmai vaenndum entavar Yesu
      nam ellorukkum iraivanaaka vilangukintavar Yesu
      theemai valarum ennnam thannai akatta sonnavar Yesu
      thooymai niraintha ullaththodu palakach sonnavar Yesu – Yesu ratchakar
  • Yesu Raja Um Namathai இயேசு ராஜா உம் நாமத்தை

    இயேசு ராஜா உம் நாமத்தை
    சொல்லி சொல்லி நான் மகிழ்வேன்
    உந்தன் அன்பை என் உள்ளத்தில்
    எண்ணி எண்ணி துதிபாடுவேன்

    ஆமென் ஆமென் அல்லேலுயா

    பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்
    பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்
    பரமனே உம் அன்பு மிகப்பெரியது
    பாரினில் நிகரேதும் இல்லாதது

    வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்
    வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்
    வார்த்தையினாலே என்னைத் தேற்றி
    வளமான வாழ்வை எனக்குத் தந்தீர்

    உலகமே என்னை வெறுத்தாலும்
    நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
    நீதியின் தேவன் என்னோடு உண்டு
    நித்தமும் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன்


    Yesu Raja Um Namathai Lyrics in English

    Yesu raajaa um naamaththai
    solli solli naan makilvaen
    unthan anpai en ullaththil
    ennnni ennnni thuthipaaduvaen

    aamen aamen allaeluyaa

    paaviyaay vaalntha enaith thaeti vantheer
    parisuththa iraththam sinthi ennai meettir
    paramanae um anpu mikapperiyathu
    paarinil nikaraethum illaathathu

    viyaathikal vaethanai enai soolntha pothum
    vaalnthida valiyinti kalangina naeram
    vaarththaiyinaalae ennaith thaetti
    valamaana vaalvai enakkuth thantheer

    ulakamae ennai veruththaalum
    nannparkal yaavarum kaivittalum
    neethiyin thaevan ennodu unndu
    niththamum makilvudan vaalnthiduvaen

  • Yesu Raja Um Idaya இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை

    இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை

    அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்

    உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற

    கிருபையைத் தாரும்

    ஒருவாழ்வு உமக்காக (2)

    உணர்வெல்லாம் உமக்காக

    உள்ளமெல்லாம் உமக்காக

    1. உம் இதயம் மகிழ்ந்திட

    வாழ்ந்திட வேண்டும்

    உம் சித்தம் செய்து நான்

    மடிந்திட வேண்டும்

    1. அழிந்து போகும் ஆத்துமாக்கள்

    நினைத்திட வேண்டும்

    ஆத்தும பாரத்தினால்

    அலைந்திட வேண்டும்

    1. உலத்திற்கு மரித்து நான்

    வாழ்ந்திட வேண்டும்

    உண்மையான ஊழியனாய்

    உழைத்திட வேண்டும்

    1. அகிலத்தையே உம் அண்டை

    சேர்த்திட வேண்டும்

    அனைத்து மகிமை

    உமக்கே நான் செலுத்திட வேண்டும்


    Yesu Raja Um Idaya Lyrics in English
    Yesu raajaa um ithayath thutippai

    arinthu kollum paakkiyam thaarum

    um aekkam ellaam niraivaetta

    kirupaiyaith thaarum

    oruvaalvu umakkaaka (2)

    unarvellaam umakkaaka

    ullamellaam umakkaaka

    1. um ithayam makilnthida

    vaalnthida vaenndum

    um siththam seythu naan

    matinthida vaenndum

    1. alinthu pokum aaththumaakkal

    ninaiththida vaenndum

    aaththuma paaraththinaal

    alainthida vaenndum

    1. ulaththirku mariththu naan

    vaalnthida vaenndum

    unnmaiyaana ooliyanaay

    ulaiththida vaenndum

    1. akilaththaiyae um anntai

    serththida vaenndum

    anaiththu makimai

    umakkae naan seluththida vaenndum

  • Yesu Raja Nandri Endru இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

    இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
    செய்த நன்மை நினைத்து
    துதி சொல்லி பாடுகிறேன்
    காலையும் மாலையும் எந்த வேளையிலும்
    துதிபாடல் ஓய்வதில்லை
    காலமே மாறினும் சூழ்நிலை மாறினும்
    நாவில் துதி ஓய்வதில்லை

    வானம் பூமி யாவும் ஆளுகின்றவரே
    ராஜ்ஜியம் எல்லையில்லையே(உம்)
    என்னையாளும் ராஜாவே உம்
    அன்பின் எல்லையில்லையே

    வாக்கு மாறா தேவன் வாக்குத்தத்தம் தந்து
    சொன்னதெல்லாம் செய்தீரே (நீர்)
    பொய்யுரையா என் தேவனே நீர்
    மனம் மாறுவதில்லையே

    வாக்குக்கடங்காத பெருமூச்சோடு
    வேண்டுதல் (எனக்காகவே) செய்கிறீர்
    எனக்காக யாவையும் நீர்
    செய்து முடிக்கின்றீர்

    பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல்
    மன்னிப்பையும் தந்தீரே(நீர்)
    இரக்கத்தில் ஐஸ்வர்யமே உம்
    இரக்கத்தில் முடிவில்லையே

    பாதாளத்தில் நானும் போய் சோர்ந்திடாமல்
    பாதுகாத்துக் கொண்டீரே(நீர்)
    என் நீதியால் இல்லையே உம்
    சுத்த கிருபையினாலே


    Yesu raja nandri endru Lyrics in English
    Yesu raajaa nanti entu sollukiraen
    seytha nanmai ninaiththu
    thuthi solli paadukiraen
    kaalaiyum maalaiyum entha vaelaiyilum
    thuthipaadal oyvathillai
    kaalamae maarinum soolnilai maarinum
    naavil thuthi oyvathillai

    vaanam poomi yaavum aalukintavarae
    raajjiyam ellaiyillaiyae(um)
    ennaiyaalum raajaavae um
    anpin ellaiyillaiyae

    vaakku maaraa thaevan vaakkuththaththam thanthu
    sonnathellaam seytheerae (neer)
    poyyuraiyaa en thaevanae neer
    manam maaruvathillaiyae

    vaakkukkadangaatha perumoochchodu
    vaennduthal (enakkaakavae) seykireer
    enakkaaka yaavaiyum neer
    seythu mutikkinteer

    paavangalukkaetta thanndanai tharaamal
    mannippaiyum thantheerae(neer)
    irakkaththil aisvaryamae um
    irakkaththil mutivillaiyae

    paathaalaththil naanum poy sornthidaamal
    paathukaaththuk konnteerae(neer)
    en neethiyaal illaiyae um
    suththa kirupaiyinaalae

  • Yesu Raja Ezhai இயேசு ராஜா ஏழை

    இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
    தேடி வந்தீரே

    என் நேசர் நீர்தானையா
    என்னைத் தேற்றிடும் எனதேசையா
    சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
    சீக்கிரம் வாருமையா

    உளையான சேற்றினின்று
    என்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
    அலைபோல துன்பம் எனை சூழ்ந்தபோது
    அன்பாலே அணைத்துக் கொண்டீர்

    ஆபத்து காலத்திலே நல்ல
    அநுக்கிரகம் துணையும் நீரே
    அன்பே என்றீர் மகளே என்றீர்
    மணவாட்டி நீ தான் என்றீர்

    பரிசுத்த ஆவியினால்
    என்னை அபிஷேகம் செய்தீரே
    பயங்களை நீக்கி பலத்தையே தந்து
    பரிசுத்த மகளாக்கினீர்


    Yesu raja ezhai Lyrics in English
    Yesu raajaa aelai en ullam
    thaeti vantheerae

    en naesar neerthaanaiyaa
    ennaith thaettidum enathaesaiyaa
    saaronin rojaa leeli pushpamae
    seekkiram vaarumaiyaa

    ulaiyaana settinintu
    ennai uyirppiththu jeevan thantheer
    alaipola thunpam enai soolnthapothu
    anpaalae annaiththuk konnteer

    aapaththu kaalaththilae nalla
    anukkirakam thunnaiyum neerae
    anpae enteer makalae enteer
    manavaatti nee thaan enteer

    parisuththa aaviyinaal
    ennai apishaekam seytheerae
    payangalai neekki palaththaiyae thanthu
    parisuththa makalaakkineer

  • Yesu Raajanin Thiruvadikku இயேசு ராஜனின் திருவடிக்கு

    இயேசு ராஜனின் திருவடிக்கு
    சரணம் சரணம் சரணம்
    ஆத்ம நாதனின் மலரடிக்கு
    சரணம் சரணம் சரணம்

    1. துன்ப துயரம் சூழும் வேளையும் – வெகு
      கஷ்ட நஷ்டம் வரும் நாளிலும்
      அன்பருக்கருள் தரும் இன்பமே
      சரணம் சரணம் சரணம் — இயேசு
    2. ஆடுபோல் அடிக்கப்பட்டீரே – அன்பால்
      தேடி எமை மீட்கவந்தீரே – எங்கள்
      ஜீவ பலியாய் மாண்டீரே
      சரணம் சரணம் சரணம் — இயேசு
    3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
      பெலன் ஈந்து வலக்கரம் பிடிப்பீரே
      ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்
      சரணம் சரணம் சரணம் — இயேசு

    Yesu Raajanin Thiruvadikku Lyrics in English

    Yesu raajanin thiruvatikku
    saranam saranam saranam
    aathma naathanin malaratikku
    saranam saranam saranam

    1. thunpa thuyaram soolum vaelaiyum – veku
      kashda nashdam varum naalilum
      anparukkarul tharum inpamae
      saranam saranam saranam — Yesu
    2. aadupol atikkappattirae – anpaal
      thaeti emai meetkavantheerae – engal
      jeeva paliyaay maannteerae
      saranam saranam saranam — Yesu
    3. pelaveenam yaavum pokkum vallorae
      pelan eenthu valakkaram pitippeerae
      aavi aathmaa sareeraththaip pataikkiraen
      saranam saranam saranam — Yesu