Author: admin

  • Yesuvae Ummai Paaduvaen இயேசுவே உம்மை பாடுவேன் நான்

    இயேசுவே உம்மை பாடுவேன் – நான்
    நேசரே உம்மை போற்றுவேன்
    உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மை
    என்றும் பாடிடுவேன்

    1. பாவத்தை போக்க பலியாக வந்த
      பரனே உம்மைப் பாடுவேன்
      பாவத்தை வெறுத்து பாவியை அணைத்து
      பரமனே உம்மை பாடுவேன்
      பாரினில் வந்து பழி சுமந்தீரே
      பாவ பலியாய் அடிக்கப் பட்டீரே
      பரமனே உம்மை பாடுவேன் – நான்
      என்றும் பாடிடுவேன்
    2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபா
      உம்மையே நான் பாடுவேன்
      சாவினை வென்று சாத்தானை ஜெயித்த
      யேசுவே உம்மை பாடுவேன்
      சகலமும் படைத்த சீர் இயேசு நாதா
      அகிலமும் போற்றும் ஆருயிர் நாதா
      தேவனே உம்மை பாடுவேன் – நான்
      என்றும் பாடிடுவேன்
    3. தேவகுமாரா தேற்றரவாளனே
      உம்மையே நான் பாடுவேன்
      ஆறுதல் தந்து என்னை தேற்றி
      மார்புடனே இருப்பவரே
      தேடி வந்த தேவ சுதனே
      தன்னையே தந்த தேவாதி தேவா
      தினமும் உம்மை பாடுவேன் – நான்
      என்றும் பாடிடுவேன்

    Yesuvae Ummai Paaduvaen Lyrics in English
    Yesuvae ummai paaduvaen – naan
    naesarae ummai pottuvaen
    ulakaththil uthiththa unnatharae – ummai
    entum paadiduvaen

    1. paavaththai pokka paliyaaka vantha
      paranae ummaip paaduvaen
      paavaththai veruththu paaviyai annaiththu
      paramanae ummai paaduvaen
      paarinil vanthu pali sumantheerae
      paava paliyaay atikkap pattirae
      paramanae ummai paaduvaen – naan
      entum paadiduvaen
    2. saaronin rojaa saantha soroopaa
      ummaiyae naan paaduvaen
      saavinai ventu saaththaanai jeyiththa
      yaesuvae ummai paaduvaen
      sakalamum pataiththa seer Yesu naathaa
      akilamum pottum aaruyir naathaa
      thaevanae ummai paaduvaen – naan
      entum paadiduvaen
    3. thaevakumaaraa thaettaravaalanae
      ummaiyae naan paaduvaen
      aaruthal thanthu ennai thaetti
      maarpudanae iruppavarae
      thaeti vantha thaeva suthanae
      thannaiyae thantha thaevaathi thaevaa
      thinamum ummai paaduvaen – naan
      entum paadiduvaen
  • Yesuvae Um Naamathinaal இயேசுவே உம் நாமத்தினால்

    இயேசுவே உம் நாமத்தினால்
    இன்பம் உண்டு யாவருக்கும்
    நன்றியுள்ள இதயத்துடன்
    கூடினோம் இந்நன்னாளிலே

    எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2)
    என்றும் உம்மையே சேவிப்போம்
    நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம்

    மன்னை நாடி பொன்னை அடைந்தோம்
    புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்
    வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம்
    இயேசுவின் க‌ரிசனத்தால் ‍- எங்கள் தேவனே

    இயேசுவை நாம் பின் செல்லுவோம்
    உலகை என்றும் வெறுப்போம்
    துன்ப பாதை சென்றிடுவோம்
    என்றும் அவரின் பலத்தால் – எங்கள் தேவனே

    உன்னைக் கண்டு அழைக்கும்
    சத்தத்தை கேட்டாயோ பாவியே
    இன்று இயேசுவன்டை வாராயோ
    நித்ய ஜீவன் பெற்றிடவே ‍ – எங்கள் தேவனே


    Yesuvae Um Naamathinaal Lyrics in English

    Yesuvae um naamaththinaal
    inpam unndu yaavarukkum
    nantiyulla ithayaththudan
    kootinom innannaalilae

    engal thaevanae engal raajanae(2)
    entum ummaiyae sevippom
    nantiyulla saatchiyaaka umakkentum jeevippom

    mannai naati ponnai atainthom
    pukalthaeti aemaattam konntoom
    vinnai Nnokki jeyam pettaோm
    Yesuvin ka‌risanaththaal ‍- engal thaevanae

    Yesuvai naam pin selluvom
    ulakai entum veruppom
    thunpa paathai sentiduvom
    entum avarin palaththaal – engal thaevanae

    unnaik kanndu alaikkum
    saththaththai kaettayo paaviyae
    intu Yesuvantai vaaraayo
    nithya jeevan pettidavae ‍ – engal thaevanae

  • Yesuvae Um Aruginilae இயேசுவே உம் அருகினிலே

    இயேசுவே உம் அருகினிலே
    ஆவலாய் வருகின்றேன்
    எந்நேரமும் எந்தன் சுவாசம்
    உம்மையே துதித்திடுமே
    எந்நாளுமே எந்தன் வாழ்க்கை
    உந்தன் மகிமையைப் பாடிடுமே
    இயேசுவே… இயேசுவே…


    Yesuvae um aruginilae Lyrics in English
    Yesuvae um arukinilae
    aavalaay varukinten
    ennaeramum enthan suvaasam
    ummaiyae thuthiththidumae
    ennaalumae enthan vaalkkai
    unthan makimaiyaip paadidumae
    Yesuvae… Yesuvae…

  • Yesuvae Thiruchabai Aalayathin யேசுவே திருச்சபை ஆலயத்தின்

    யேசுவே திருச்சபை ஆலயத்தின்
    என்றும் நிலைக்கும் மூலைக்கல்

    பேசற் கரிய மூலைக்கல் அவர்
    பெரும் மாளிகையைத் தாங்கும் கல்

    ஆகாதிதென்று வீடு கட்டுவோர்
    அவமதித்திட்ட இந்தக் கல்
    வாகாய் ஆலய மூலைக் கமைந்து
    வடிவாய்த் தலைக்கல்லான கல்

    ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும்
    அதிசயமான அன்பின் கல்
    ஞாலத்துப் பல ஜாதிகள் தமை
    நட்புற ஒன்றய்ச் சேர்க்கும் கல்

    ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும்
    உன்னத விலைபெற்ற கல்
    எப்பொதும் பரஞ்சோதியாய் நீதி
    இலங்கும் சூரியனான கல்

    காற்றுக்கும் கன மழைக்கும் அசையா
    கடிய மாபலமான கல்
    மாற்றிக் கலியை ஆற்றித் துயரைத்
    தேற்றிச் சபையைக் காக்குங் கல்

    என்றும் கட்டுவோம் இந்த ஆலயத்தை
    எழிலுறவே இக் கல்லின் மேல்
    நன்றாய் இக்கல்லில் நம்பிக்கை வைப்போன்
    நாணம் அடையான் மெய்தானே


    Yesuvae Thiruchabai Aalayathin Lyrics in English
    yaesuvae thiruchchapai aalayaththin
    entum nilaikkum moolaikkal

    paesar kariya moolaikkal avar
    perum maalikaiyaith thaangum kal

    aakaathithentu veedu kattuvor
    avamathiththitta inthak kal
    vaakaay aalaya moolaik kamainthu
    vativaayth thalaikkallaana kal

    aalayamellaam isaivaay innaikkum
    athisayamaana anpin kal
    njaalaththup pala jaathikal thamai
    natpura ontaych serkkum kal

    oppillaa arum maatchimai yurum
    unnatha vilaipetta kal
    eppothum paranjaோthiyaay neethi
    ilangum sooriyanaana kal

    kaattukkum kana malaikkum asaiyaa
    katiya maapalamaana kal
    maattik kaliyai aattith thuyaraith
    thaettich sapaiyaik kaakkung kal

    entum kattuvom intha aalayaththai
    eliluravae ik kallin mael
    nantay ikkallil nampikkai vaippon
    naanam ataiyaan meythaanae

  • Yesuvae Oli Veesum இயேசுவே ஒளி வீசும்

    இயேசுவே ஒளி வீசும்
    எங்கள் நாட்டை உம் ஒளியால் நிரப்பும்
    பற்றி எரியட்டும் எங்கள் வாழ்க்கை யாவும்
    கிருபை இரக்கத்தில் அன்பால்
    என் தேசம் நிரப்பச் செய்யும்
    வார்த்தையை அனுப்புமேன்
    இயேசுவையே ஒளி வீசும்

    1. இயேசுவே உந்தன் அன்பின் வெளிச்சம்
      இருளின் நடுவில் என்றும் உதிக்கும்
      உலகின் ஒளியாம் இயேசுவின் வெளிச்சம்
      இருளில் இருந்தென்னை விடுதலை ஆக்கும்
      இயேசுவே ஒளி வீசும் — இயேசுவே
    2. உந்தன் ராஜ மேன்மையைப் பார்த்து
      எங்கள் முகங்களும் உம் முகம் காட்ட
      மகிமையில் இருந்து மகிமையாய் மாற
      என்னை காண்பவர் உம் செயல் காண
      இயேசுவே ஒளி வீசும் — இயேசுவே

    Yesuvae Oli Veesum Lyrics in English
    Yesuvae oli veesum
    engal naattaை um oliyaal nirappum
    patti eriyattum engal vaalkkai yaavum
    kirupai irakkaththil anpaal
    en thaesam nirappach seyyum
    vaarththaiyai anuppumaen
    Yesuvaiyae oli veesum

    1. Yesuvae unthan anpin velichcham
      irulin naduvil entum uthikkum
      ulakin oliyaam Yesuvin velichcham
      irulil irunthennai viduthalai aakkum
      Yesuvae oli veesum — Yesuvae
    2. unthan raaja maenmaiyaip paarththu
      engal mukangalum um mukam kaatta
      makimaiyil irunthu makimaiyaay maara
      ennai kaannpavar um seyal kaana
      Yesuvae oli veesum — Yesuvae
  • Yesuvae Kirubasana Pathiyae இயேசுவே கிருபாசனப்பதியே கெட்ட

    இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்ட
    இழிஞன் எனை மீட்டருள்,
    ஏசுவே, கிருபாசனப்பதியே.

    1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு
    கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!
    நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து
    நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி,

    2.பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,
    பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@
    தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
    தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி,

    3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி
    தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே,
    குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்
    குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து,

    4.பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,
    புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்@
    எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி?
    இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து,


    Yesuvae Kirubasana Pathiyae Lyrics in English
    Yesuvae, kirupaasanappathiyae, ketta
    ilinjan enai meettarul,
    aesuvae, kirupaasanappathiyae.

    1.kaasiniyil unnai anti, thaasan enak kaatharavu
    kanntilaen, saruva valla manndalaathipaa!
    naesamaay aelaikkirangi, mosam anukaathu kaaththu
    niththanae, enaith thiruththi, vaiththarul puththi varuththi,

    2.paeyutaich siraiyathilum, kaaya vinaik kaedathilum,
    pinnamaakach sikkunnda thurk kanmi aayinaen@
    theeyarai meetkum porulaay naeyam uttuthiram vitta
    thaevanae, enaikkann Nnokkith theevinai anaiththum neekki,

    3.siraippaduththina vattaைch siraiyaakki vitta athi
    theeramulla engal upakaara vallalae,
    kurai aethunai anntinork kiraivaa? enaich sathikkum
    kuttangal aravae theerththu, muttumutiyak kann paarththu,

    4.pollaa ulakam athil nallaar evarum illai,
    punnnniyanae, un saranam nannnni anntinaen@
    ellaarkkul ellaam nee allo enakkuthavi?
    innaal arul purinthu un aaviyaich sorinthu,

  • Yesuvae Kalavariyil Ennai Vaitthu இயேசுவே கல்வாரியில் என்னை

    1. இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்
      பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக்காட்டும்

    மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரே
    விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே

    1. பாவியேன் கல்வாரியில் இரட்சிப்பைப் பெற்றேனே
      ஞானஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே
    2. இரட்சகா, கல்வாரியின் காட்சி கண்டோனாக
      பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக

    Yesuvae Kalavariyil Ennai Vaitthu Lyrics in English

    1. Yesuvae kalvaariyil ennai vaiththukkollum
      paavam pokkum iraththamaam thivya oottaைkkaattum

    meetparae, meetparae, enthan maenmai neerae
    vinnnnil vaalumalavum nanmai seykuveerae

    1. paaviyaen kalvaariyil iratchippaip pettenae
      njaanajothi thontavum kanndu pooriththaenae
    2. iratchakaa, kalvaariyin kaatchi kanntoonaaka
      pakthiyodu jeevikka ennai aalveeraaka
  • Yesuvae Immanuevelare Manitharai Meetka Vantha இயேசுவே இம்மானுவேலரே மனிதனை மீட்க

    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
    மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
    இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
    வழியாய் வந்த இயேசுவே (2)

    இயேசுவே இம்மானுவேலரே
    மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2

    பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
    சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
    உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
    மகனாய் உன்னை மாற்றுவார் (2)
    -இயேசுவே

    சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
    எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
    பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல
    இயேசு செலுத்திவிட்டாரே (2)
    -இயேசுவே

    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
    மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
    இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
    வழியாய் வந்த இயேசுவே (2)
    -இயேசுவே


    Yesuvae Immanuevelare Manitharai Meetka vantha Lyrics in English
    aathiyil vaarththaiyaaka iruntha engal Yesuvae
    manithanai meetka neerae mannnnil vantheerae
    irulilil oliyaaka vantha engal velichchamae
    valiyaay vantha Yesuvae (2)

    Yesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha makaa pirapuvae -2

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiraar un ullaththai kaetkiraar
    makanaay unnai maattuvaar (2)
    -Yesuvae

    saapaththin kattukalai utaikka vantha Yesuvae
    enakkaay saapamaaneer siluvai meethilae
    paavaththin sampalaththai naan seluththa thaevaiyilla
    Yesu seluththivittarae (2)
    -Yesuvae

    aathiyil vaarththaiyaaka iruntha engal Yesuvae
    manithanai meetka neerae mannnnil vantheerae
    irulil oliyaaka vantha engal velichchamae
    valiyaay vantha Yesuvae (2)
    -Yesuvae

  • Yesuvae Enakaga Marithirae இயேசுவே எனக்காக மரித்தீரே

    இயேசுவே எனக்காக மரித்தீரே
    இயேசுவே உயிரோடு எழுந்தீரே

    உம் அன்பு போதும்
    உம் கிருபை போதும்
    உம் வல்லமை போதும்
    உம் அபிஷேகம் போதும்
    வேறொன்றும் வேண்டாமையா
    நீர் மட்டும் போதுமையா

    தேவனே உலகத்தை படைத்தீரே
    தேவனே என்னை உருவாக்கினீர்

    ஆவியானவரே இறங்கி வந்தீரே
    ஆவியானவரே என்னோடு இருப்பவரே


    Yesuvae enakaga marithirae Lyrics in English
    Yesuvae enakkaaka mariththeerae
    Yesuvae uyirodu eluntheerae

    um anpu pothum
    um kirupai pothum
    um vallamai pothum
    um apishaekam pothum
    vaerontum vaenndaamaiyaa
    neer mattum pothumaiyaa

    thaevanae ulakaththai pataiththeerae
    thaevanae ennai uruvaakkineer

    aaviyaanavarae irangi vantheerae
    aaviyaanavarae ennodu iruppavarae

  • Yesuvae En Yesuvae இயேசுவே என் இயேசுவே

    இயேசுவே என் இயேசுவே
    நீர் இல்லாமல் எனக்கு யாருண்டு

    நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
    உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே
    நன்றி இயேசுவே -4

    பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்
    உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே
    உம் பெலன் போதுமே -4

    பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்
    கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே
    யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்
    தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே
    உம் அன்பு போதுமே
    உம் துணை போதுமே


    Yesuvae en yesuvae
    Neer illamal enakku yarumillaiyae
    Nan seidha paavangal pala ahyiram
    Um rathathal ennai meetukondirae
    Nandri Yesuvae (x4) Yesuvae

    Belanillamal nan nindra veylayil
    Um belathalae ennai thangi kondeerae
    Um Belanpodhumae (x4) Yesuvae

    Paadhai theriyammal nan azhudha veylayil
    kanneerai thudaithu endhan karam pidithirae
    Yarumillai endru yengum nerathil
    thozhanai pol thondri thol koduthirae
    Um anbu poduhumae
    Um thunai podhumae (X2)