Author: admin

  • Thaevathi Thaevanae Peththalai Uurinilae தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே

    1. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
      சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
      தம்மை வேண்டா மானிடர்க்காய், தம்சொல் கேளா பாவிகட்காய்
      தம்மைத்தாம் வெறுமையாக்கினார், அடிமை ரூபம் எடுத்து வந்தாரே
      ஆ வினோதமே ஆ வினோதமே
    2. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
      சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
      மந்தைக் காக்கும் வேளையிலே, தங்க மாட்டு கொட்டினிலே
      கந்தைக் கோலம் பூண்டு வந்தனர், மனுஷத் தன்மை யாவும் ஏற்றாரே
      ஆ வினோதமே ஆ வினோதமே
    3. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
      சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
      வானம் பார்த்த மேய்ப்பர்கட்கும், நிதம் பார்த்த சாஸ்திரகட்கும்
      உன்னதத்தின் தேவன் தோன்றினார், தேவ பாலனாய் பிறந்தாரே
      ஆ வினோதமே ஆ வினோதமே

    Thaevathi Thaevanae Peththalai Uurinilae Lyrics in English

    1. thaevaathi thaevanae peththalai oorinilae
      saththira kottinilae (2) pullannai meethilae
      thammai vaenndaa maanidarkkaay, thamsol kaelaa paavikatkaay
      thammaiththaam verumaiyaakkinaar, atimai roopam eduththu vanthaarae
      aa vinothamae aa vinothamae
    2. thaevaathi thaevanae peththalai oorinilae
      saththira kottinilae (2) pullannai meethilae
      manthaik kaakkum vaelaiyilae, thanga maattu kottinilae
      kanthaik kolam poonndu vanthanar, manushath thanmai yaavum aettaாrae
      aa vinothamae aa vinothamae
    3. thaevaathi thaevanae peththalai oorinilae
      saththira kottinilae (2) pullannai meethilae
      vaanam paarththa maeypparkatkum, nitham paarththa saasthirakatkum
      unnathaththin thaevan thontinaar, thaeva paalanaay piranthaarae
      aa vinothamae aa vinothamae
  • Thaevasaenai Vanameethu Koetikoetiyakath Thoenrum தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்

    1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
      பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்
      விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
      நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

    அல்லேலூயா, அல்லேலூயா – 4

    1. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
      இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
      தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
      நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்
    2. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்
      போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
      வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
      நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்

    Thaevasaenai Vanameethu Koetikoetiyakath Thoenrum Lyrics in English

    1. thaevasenai vaanameethu kotikotiyaakath thontum
      palakotith thiralkooti kukaithaeti vaekam odum
      vinnmeenkal idammaarip paarengum vanthu kottum
      naano aati mikappaati en naesarudan servaen

    allaelooyaa, allaelooyaa – 4

    1. ainthu kanndam thanil aalum aatchiyaavum attuppokum
      irul soolum itimulangum koochchal kaetkum kannnneer sinthum
      thooyar koottam suththa ullam saatchippaadal engum kaetkum
      naano aati mikappaati en naesarudan servaen
    2. kadal kumurum karai utaiyum kappal kavilum perum naasam
      pokkuvaraththu yaavum nirkum ini ulakam enpathillai
      vaakkumaaraa vaetham koorum vaarththai yaavum niraivaerum
      naano aati mikappaati ennaesarudan servaen
  • Thaevap Pitha Enthan Maeyppan Alloe தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

    தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
    சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே

    ஆவலதாய் எனைப் பைம்புல்மேல்
    அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

    1. ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணி
      அடியேன் கால்களை நீதி என்னும்
      நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
      நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
    2. சாநிழல் பள்ளத் திறங்கிடினும்
      சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
      வானபரன் என்னோடிருப்பார்
      வளை தடியும் கோலுமே தேற்றும்
    3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
      பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
      சுக தயிலம் கொண்டென் தலையைச்
      சுபமாய் அபிஷேகம் செய்குவார்
    4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
      அருளும் நலமுமாய் நிரம்பும்
      நேயன் வீட்டினில் சிறப்போடே
      நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன

    Thaevap Pitha Enthan Maeyppan Alloe Lyrics in English
    thaevap pithaa enthan maeyppan allo
    sirumai thaalchchi ataikilaenae

    aavalathaay enaip paimpulmael
    avar maeyth thamar neer arulukintar

    1. aaththumath thannaik kulirappannnni
      atiyaen kaalkalai neethi ennum
      naerththiyaam paathaiyil avar nimiththam
      nithamum sukamaay nadaththukintar
    2. saanilal pallath thirangitinum
      sattum theengu kanndanjaenae
      vaanaparan ennotiruppaar
      valai thatiyum kolumae thaettum
    3. pakaivark kethirae oru panthi
      paangaay enakken raerpaduththich
      suka thayilam konnden thalaiyaich
      supamaay apishaekam seykuvaar
    4. aayul muluvathum en paathram
      arulum nalamumaay nirampum
      naeyan veettinil sirappotae
      nedunaal kutiyaay nilaiththiruppaena
  • Thaevanae Ummaith Thaetukiraen தேவனே உம்மைத் தேடுகிறேன்

    தேவனே உம்மைத் தேடுகிறேன்
    தினமும் துதிக்கின்றேன்
    துதித்துக் கொண்டே யிருப்பேன்

    1. அரணும் கோட்டையும் நீர் எனக்கு
      அஞ்சமாட்டேன் என் இயேசுவே
      நீர் எனக்கு துணையானீர்
      துதித்துக் கொண்டே பின் செல்வேன்
    2. பாவங்களெல்லாம் போக்கி விட்டீர்
      பரிசுத்தமாய் மாற்றி விட்டீர்
      கல்வாரி சிலுவையிலே
      என் நோய்கள் சுமந்து கொண்டீர்
    3. தாயும் தந்தையும் நீர் எனக்கு
      தளர்ந்து போக மாட்டேனய்யா
      தாலாட்டி சீராட்டினீர்
      தயவோடு காத்துக் கொண்டீர்
    4. உலகம் என்னை வெறுத்தாலும்
      உம் கரம் என்னை அணைத்துக் கொள்ளும்
      உற்றார் என்னைத் தூற்றினாலும்
      உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
    5. மீண்டும் உமது வருகையிலே
      ஆயத்தமாக இருப்பேனய்யா
      அறியா மக்கள் அனைவரையும்
      ஆயத்தமாக்கிக் கொள்வேனய்யா

    Thaevanae Ummaith Thaetukiraen Lyrics in English

    thaevanae ummaith thaedukiraen
    thinamum thuthikkinten
    thuthiththuk konntae yiruppaen

    1. aranum kottaைyum neer enakku
      anjamaattaen en Yesuvae
      neer enakku thunnaiyaaneer
      thuthiththuk konntae pin selvaen
    2. paavangalellaam pokki vittir
      parisuththamaay maatti vittir
      kalvaari siluvaiyilae
      en Nnoykal sumanthu konnteer
    3. thaayum thanthaiyum neer enakku
      thalarnthu poka maattaenayyaa
      thaalaatti seeraattineer
      thayavodu kaaththuk konnteer
    4. ulakam ennai veruththaalum
      um karam ennai annaiththuk kollum
      uttaாr ennaith thoottinaalum
      um kirupai soolnthu kollum
    5. meenndum umathu varukaiyilae
      aayaththamaaka iruppaenayyaa
      ariyaa makkal anaivaraiyum
      aayaththamaakkik kolvaenayyaa
  • Thaevanae Neer Ennil Vaarum தேவனே நீர் என்னில் வாரும்

    தேவனே நீர் என்னில் வாரும்
    தேவை நீர் என் வாழ்வு தோறும்
    தேடி நான் உம்மண்டை வந்தேன்
    தீருமே என் வாஞ்சை யாவும்

    1. பாவத்தில் நான் வாழ்வதை விட்டு
      பரிசுத்தமான வாழ்வினை பெற்று
      நீர் காட்டும் மாறா நேசத்தை ஏற்று
      நிலைமாறும் இந்த உலகினில் வாழ்வேன்
    2. உம் திருசாயல் நான் ஆகவேண்டும்
      உம்மை நான் சார்ந்து வாழ்ந்திட வேண்டும்
      உம் சிந்தை என்றும் எனையாள வேண்டும்
      என் சித்தம் நீங்கி உம் சித்தம் செய்வேன்

    Thaevanae Neer Ennil Vaarum Lyrics in English
    thaevanae neer ennil vaarum
    thaevai neer en vaalvu thorum
    thaeti naan ummanntai vanthaen
    theerumae en vaanjai yaavum

    1. paavaththil naan vaalvathai vittu
      parisuththamaana vaalvinai pettu
      neer kaattum maaraa naesaththai aettu
      nilaimaarum intha ulakinil vaalvaen
    2. um thirusaayal naan aakavaenndum
      ummai naan saarnthu vaalnthida vaenndum
      um sinthai entum enaiyaala vaenndum
      en siththam neengi um siththam seyvaen
  • Thaevanae En Thaevaa தேவனே என் தேவா

    தேவனே என் தேவா
    உம்மை நோக்கினேன்
    நீரில்லா நிலம் போல
    உம்மை பார்க்கிறேன்

    1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
      ஓடி வருகிறேன்
      உம் வல்லமை மகிமை கண்டு
      உலகை மறக்கின்றேன்
    2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
      எனக்குப் போதுமே
      உதடுகளாலே துதிக்கின்றேன்
      உலகை மறக்கின்றேன்
    3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
      இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
      உம் சிறகுகளின் நிழல்தனிலே
      உலகை மறக்கின்றேன்
    4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
      பற்றி கொண்டது
      உம் வலக்கரமோ என்னை நாளும்
      தாங்கி கொண்டது
    5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
      வாழ்த்திப் பாடுவேன்
      சுவையான உணவை உண்பதுபோல்
      திருப்தி அடைகின்றேன்

    Thaevanae En Thaevaa Lyrics in English
    thaevanae en thaevaa
    ummai Nnokkinaen
    neerillaa nilam pola
    ummai paarkkiraen

    1. ovvoru naalum um pirasannam
      oti varukiraen
      um vallamai makimai kanndu
      ulakai marakkinten
    2. jeevanaip paarkkilum um kirupai
      enakkup pothumae
      uthadukalaalae thuthikkinten
      ulakai marakkinten
    3. padukkaiyilae ummai ninaikkinten
      iraachchaாmaththil thiyaanikkiraen
      um sirakukalin nilalthanilae
      ulakai marakkinten
    4. enathu aanmaa thodarnthu ummai
      patti konndathu
      um valakkaramo ennai naalum
      thaangi konndathu
    5. vaalnaalellaam um naamam
      vaalththip paaduvaen
      suvaiyaana unavai unnpathupol
      thirupthi ataikinten
  • Thaevanae Aaraathikkinraen தேவனே ஆராதிக்கின்றேன்

    தேவனே ஆராதிக்கின்றேன்
    தெய்வமே ஆராதிக்கின்றேன்

    1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
      ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
    2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
      காண்பவரே ஆராதிக்கின்றேன்
    3. முழமனதோடு ஆராதிக்கின்றேன்
      முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
    4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
      எல்லாமே பார்த்துக் கொள்வீர்
    5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
      எந்நாளும் வெற்றி தருவீர்
    6. யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
      எந்நாளும் சமாதானமே

    Thaevanae Aaraathikkinraen Lyrics in English
    thaevanae aaraathikkinten
    theyvamae aaraathikkinten

    1. athikaalaiyil aaraathikkinten
      aanantha saththaththodu aaraathikkinten
    2. kanmalaiyae aaraathikkinten
      kaannpavarae aaraathikkinten
    3. mulamanathodu aaraathikkinten
      mulanthaal patiyittu aaraathikkinten
    4. yaekovaayeerae aaraathikkinten
      ellaamae paarththuk kolveer
    5. yaekovaanisi aaraathikkinten
      ennaalum vetti tharuveer
    6. yaekovaa shaalom aaraathikkinten
      ennaalum samaathaanamae
  • Thaevanaam Iyaesuvae Ummai Naan தேவனாம் இயேசுவே உம்மை நான்

    காலமெல்லாம் துதிப்பேன்

    தேவனாம் இயேசுவே உம்மை நான்
    ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன்

    இயேசுவே நீர் எந்தன் பெலனும்
    இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!
    இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்ää
    இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே!

    1. ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
      அற்புதமான உம் திருவசனம்
      ஆதரவாய் எங்கள் கரமதிலே – என்றும்
      அழியா பொக்கிஷமாய் நிலைக்க – ஜீவ
    2. உலகின் முடிவு பரியந்தமும்
      உங்களோடிருப்பேன் என்றவரே
      உந்தனின் ஊழியம் செய்திட என்னையும்
      தகுதிப்படுத்தியதால் துதிப்பேன் ஜீவ
    3. நன்மையும் கிருபையும் என்னைத் தொடர
      நாதனே நீர் என்னை நடத்திடுமே
      ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க
      ஜீவன் தந்தென்னை மீட்டதினால் ஜீவ

    Thaevanaam Iyaesuvae Ummai Naan Lyrics in English
    kaalamellaam thuthippaen

    thaevanaam Yesuvae ummai naan
    jeeviya naalellaam thuthiththiduvaen

    Yesuvae neer enthan pelanum
    Yesuvae neer enthan jeevanumae!
    Yesuvae neer enthan nampikkaiyumää
    Yesuvae neer enthan vaalkkaiyumae!

    1. aathiyil vaarththaiyaay irunthavarae
      arputhamaana um thiruvasanam
      aatharavaay engal karamathilae – entum
      aliyaa pokkishamaay nilaikka – jeeva
    2. ulakin mutivu pariyanthamum
      ungalotiruppaen entavarae
      unthanin ooliyam seythida ennaiyum
      thakuthippaduththiyathaal thuthippaen jeeva
    3. nanmaiyum kirupaiyum ennaith thodara
      naathanae neer ennai nadaththidumae
      jeevanullorin thaesaththil nilaikka
      jeevan thanthennai meettathinaal jeeva
  • Thaevan Varukinraar Vaekam Iranki தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

    இயேசு கிறிஸ்து வருகின்றார்

    1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
      தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
      பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
      பூலோக மக்களும் கண்டிடுவார்

    இயேசு கிறிஸ்து வருகின்றார்
    இந்தக் கடைசி காலத்திலே
    கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
    கண்டு புலம்பிடுமே

    1. ஏழாம் தலைமுறை ஏனோக்குரைத்த
      எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
      இயேசு கிறிஸ்துவின்சத்தியத்தை
      ஏற்க மறுத்தவர் நடுங்குவார்
    2. தம்மை விரோதித்த அவபக்தரை
      செம்மை வழிகளில் செல்லாதவரை
      ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
      அந்நாளிலே நியாயந் தீர்த்திடுவார்
    3. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
      எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய்
      கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
      கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்
    4. அந்திக் கிறிஸ்தன்று அழிந்து மாள
      அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க
      வாயில் இருபுறம் கருக்குள்ள
      வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார்
    5. கையால் பெயர்க்காத கல்லொன்று பாயும்
      கன்மலையாகி இப்பூமி நிரப்பும்
      கிரீடங்கள் பாகைகள் கவிழ்ந்திடும்
      கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்
    6. யுத்தம் தொடங்கு முன் மத்திய வானம்
      சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
      ஆவி மணவாட்டி வாரும் என்றே
      ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்

    Thaevan Varukinraar Vaekam Iranki Lyrics in English
    Yesu kiristhu varukintar

    1. thaevan varukintar vaekam irangi
      thaeva parvatham tham paatham niruththi
      poomithanai niyaayam theerththiduvaar
      pooloka makkalum kanndiduvaar

    Yesu kiristhu varukintar
    inthak kataisi kaalaththilae
    karththaraik kuththina kannkal yaavum
    kanndu pulampidumae

    1. aelaam thalaimurai aenokkuraiththa
      ellaam niraivaerum kaalam nerunga
      Yesu kiristhuvinsaththiyaththai
      aerka maruththavar nadunguvaar
    2. thammai virothiththa avapaktharai
      semmai valikalil sellaathavarai
      aanndavar aayiram paktharotae
      annaalilae niyaayan theerththiduvaar
    3. ethai vithaiththaayo athai aruppaay
      ellaa aneethikkum kooliperuvaay
      kalvaari siluvai anndiduvaay
      karththarai nampiyae thappiduvaay
    4. anthik kiristhantu alinthu maala
      anparaam Yesuvae jeyam sirakka
      vaayil irupuram karukkulla
      vaalaal neruppaaka yuththam seyvaar
    5. kaiyaal peyarkkaatha kallontu paayum
      kanmalaiyaaki ippoomi nirappum
      kireedangal paakaikal kavilnthidum
      kiristhaesu urimai pettiduvaar
    6. yuththam thodangu mun maththiya vaanam
      suththarai alaikka karththarae vaarum
      aavi manavaatti vaarum ente
      aanndavar Yesuvai alaikkintom
  • Thaevan Thantha Thiruch Sapaiyae தேவன் தந்த திருச் சபையே

    தேவன் தந்த திருச் சபையே
    விசுவாச வாழ்வு தரும் சபையே
    மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்
    இன்றும் என்றும் அருளிச்செய்யும்

    1. ஆதி அந்தம் வரையில்
      நித்ய ஜீவன் நல்கும் மீட்பரை
      நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
      இந்த நல் தேவனின் திருச்சபையே
    2. போற்றும் போற்றும் இயேசுவை
      சுப வாழ்வு தரும் நேசரை
      நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
      இந்த நல் தேவனின் திருச் சபையே

    Thaevan Thantha Thiruch Sapaiyae Lyrics in English
    thaevan thantha thiruch sapaiyae
    visuvaasa vaalvu tharum sapaiyae
    malarum santhosham olirum nalnaesam
    intum entum arulichcheyyum

    1. aathi antham varaiyil
      nithya jeevan nalkum meetparai
      niththam niththam vaalththum vaalththum
      intha nal thaevanin thiruchchapaiyae
    2. pottum pottum Yesuvai
      supa vaalvu tharum naesarai
      niththam niththam vaalththum vaalththum
      intha nal thaevanin thiruch sapaiyae