Author: admin

  • Paavee, Kael! Un Aanndavar பாவீ, கேள்! உன் ஆண்டவர்

    1. பாவீ, கேள்! உன் ஆண்டவர்,
      அறையுண்ட ரஷகர்
      கேட்கிறார், என் மகனே
      அன்புண்டோ என்பேரிலே!
    2. நீக்கினேன் உன் குற்றத்தை,
      கட்டினேன் உன் காயத்தை,
      தேடிப் பார்த்து ரஷித்தேன்,
      ஒளி வீசப்பண்ணினேன்.
    3. தாயின் மிக்க பாசமும்,
      ஆபத்தாலே குன்றினும்,
      குன்றமாட்டாதென்றுமே
      ஒப்பில்லா என் நேசமே.
    4. எனதன்பின் பெருக்கும்
      ஆழம் நீளம் உயரமும்
      சொல்லி முடியாது, பார்;
      என்னைப் போன்ற நேசனார்!
    5. திவ்விய ரூபம் தரிப்பாய்,
      என்னோடரசாளுவாய்;
      ஆதலால் சொல், மகனே,
      அன்புண்டோ என்பேரிலே!
    6. இயேசுவே, என் பக்தியும்
      அன்பும் சொற்பமாயினும்,
      உம்மையே நான் பற்றினேன்,
      அன்பின் ஸ்வாலை ஏற்றுமேன்!

    Paavee, Kael! Un Aanndavar Lyrics in English

    1. paavee, kael! un aanndavar,
      araiyunnda rashakar
      kaetkiraar, en makanae
      anpunntoo enpaerilae!
    2. neekkinaen un kuttaththai,
      kattinaen un kaayaththai,
      thaetip paarththu rashiththaen,
      oli veesappannnninaen.
    3. thaayin mikka paasamum,
      aapaththaalae kuntinum,
      kuntamaattathentumae
      oppillaa en naesamae.
    4. enathanpin perukkum
      aalam neelam uyaramum
      solli mutiyaathu, paar;
      ennaip ponta naesanaar!
    5. thivviya roopam tharippaay,
      ennodarasaaluvaay;
      aathalaal sol, makanae,
      anpunntoo enpaerilae!
    6. Yesuvae, en pakthiyum
      anpum sorpamaayinum,
      ummaiyae naan pattinaen,
      anpin svaalai aettumaen!
  • Paavathin Balan Naragam Oh Paavi பாவத்தின் பலன் நரகம்

    பாவத்தின் பலன் நரகம்

    1. பாவத்தின் பலன் நரகம் – ஓ பாவி நடுங்கிடாயோ,
      கண் காண்பதெல்லாம் அழியும் காணாததல்லோ நித்தியம்

    இயேசு இராஜா வருவார்
    இன்னுங் கொஞ்ச காலந்தான்
    மோட்சலோகம் சேர்ந்திடுவோம்

    1. உலக இன்பம் நம்பாதே, அதின் இச்சை யாவும் ஒழியும்
      உன் ஜீவன் போகும் நாளிலே, ஓர் காசும்கூட வராதே
    2. உன் காலமெல்லாம் போகுதே, உலக மாய்கையிலே,
      ஓ தேவகோபம் வருமுன், உன் மீட்பரண்டை வாராயோ
    3. தேவன்பின் வெள்ளம் ஓடுதே, கல்வாரி மலை தனிலே
      உன் பாவம் யாவும் நீங்கிப்போம்,அதில்ஸ்நானம்செய்வதாலே.
    4. மாபாவியான என்னையும், என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
      ஒபாவி நீயும் ஓடிவா, தேவாசீர்வாதம் பெறுவாய்

    Paavathin Balan Naragam Oh Paavi Lyrics in English

    paavaththin palan narakam

    1. paavaththin palan narakam – o paavi nadungidaayo,
      kann kaannpathellaam aliyum kaannaathathallo niththiyam

    Yesu iraajaa varuvaar
    innung konja kaalanthaan
    motchalokam sernthiduvom

    1. ulaka inpam nampaathae, athin ichchaை yaavum oliyum
      un jeevan pokum naalilae, or kaasumkooda varaathae
    2. un kaalamellaam pokuthae, ulaka maaykaiyilae,
      o thaevakopam varumun, un meetparanntai vaaraayo
    3. thaevanpin vellam oduthae, kalvaari malai thanilae
      un paavam yaavum neengippom,athilsnaanamseyvathaalae.
    4. maapaaviyaana ennaiyum, en naesar aettuk konndaarae
      opaavi neeyum otivaa, thaevaaseervaatham peruvaay
  • Paavathin Baarathinaal Thavithidum பாவத்தின் பாரத்தினால்

    பாவத்தின் பாரத்தினால்
    தவித்திடும் பாவி என்னை
    நின் கிருபை பிரவாகத்தால்
    தேற்றிடும் ஏசு நாதா (2)

    கெட்ட குமாரனைப் போல்
    துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
    நின் அன்பை உணராமல்
    துரோகம் நான் செய்தேனே

    கள்ளனாயினும் நான்
    நீர் பெற்ற பிள்ளை அல்லோ
    கள்ளனுக்கருள் செய்த நீ
    தள்ளாதே சிலுவை நாதா

    தந்தையை விட்ட பின்பு
    தவிடு தான் ஆகாரமோ
    மனம் கசிந்து நொந்தேன்
    கண்ணீரை துடைத்திடுமே

    தந்தை தாய் தாமரெல்லாம்
    என்னைக் கைவிடுவார்கள்
    சாகும் நாளில் தாங்குவார்
    நீர் அல்லால் யாருமில்லை


    Paavathin Baarathinaal Thavithidum Lyrics in English

    paavaththin paaraththinaal
    thaviththidum paavi ennai
    nin kirupai piravaakaththaal
    thaettidum aesu naathaa (2)

    ketta kumaaranaip pol
    thushdanaay alainthaen appaa
    nin anpai unaraamal
    thurokam naan seythaenae

    kallanaayinum naan
    neer petta pillai allo
    kallanukkarul seytha nee
    thallaathae siluvai naathaa

    thanthaiyai vitta pinpu
    thavidu thaan aakaaramo
    manam kasinthu nonthaen
    kannnneerai thutaiththidumae

    thanthai thaay thaamarellaam
    ennaik kaividuvaarkal
    saakum naalil thaanguvaar
    neer allaal yaarumillai

  • Paavangal Pookkave பாவங்கள் போக்கவே

    பாவங்கள் போக்கவே சாபங்கள்
    நீக்கவேபூலோகம் வந்தாரையா
    மனிதனை மீட்கவே
    பரலோகம்சேர்க்கவே
    சிலுவையை சுமந்தாரையா!
    கண்ணீரைத் துடைத்தாரையா

    சந்தோஷம் தந்தாரையா (2)
    எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
    எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே (2)

    1. தங்கத்தை கேட்கவில்லை
      வைரத்தை கேட்கவில்லை
      உள்ளத்தை கேட்டாரையா
      ஆஸ்தியைக் கேட்கவில்லை
      அந்தஸ்தைக் கேட்கவில்லை
      உள்ளத்தை கேட்டாரையா!
      நான் தேடிப் போகவில்லை
      என்னைத் தேடி வந்தாரையா (2)
    2. தாய் உன்னை மறந்தாலும்
      தந்தை உன்னை வெறுத்தாலும்
      அவர் உன்னை வெறுக்க மாட்டார்!
      நண்பன் உன்னை மறந்தாலும்
      உற்றார் என்னை வெறுத்தாலும்
      அவர் உன்னை வெறுக்கமாட்டார்!
      கரம் பிடித்து நடத்திடுவார்
      கன்மலைமேல் நிறுத்திடுவார் (2)

    Paavangal Pookkave Lyrics in English

    paavangal pokkavae saapangal
    neekkavaepoolokam vanthaaraiyaa
    manithanai meetkavae
    paralokamserkkavae
    siluvaiyai sumanthaaraiyaa!
    kannnneeraith thutaiththaaraiyaa

    santhosham thanthaaraiyaa (2)
    enthan Yesuvae enthan Yesuvae
    enthan Yesuvae enthan Yesuvae (2)

    1. thangaththai kaetkavillai
      vairaththai kaetkavillai
      ullaththai kaettaraiyaa
      aasthiyaik kaetkavillai
      anthasthaik kaetkavillai
      ullaththai kaettaraiyaa!
      naan thaetip pokavillai
      ennaith thaeti vanthaaraiyaa (2)
    2. thaay unnai maranthaalum
      thanthai unnai veruththaalum
      avar unnai verukka maattar!
      nannpan unnai maranthaalum
      uttaாr ennai veruththaalum
      avar unnai verukkamaattar!
      karam pitiththu nadaththiduvaar
      kanmalaimael niruththiduvaar (2)
  • Paavam Seyyaathae Nee நீ பாவம் செய்யாதே

    நீ பாவம் செய்யாதே

    பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே
    பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே

    1. தேவன் சொன்ன கற்பனை மீறித் தீமை செய்யாதே
      காவல் நின்று பார்ப்பாரென்று
      கருத்தாய் மனதில் நினைத்தே இரு – பாவம்
    2. எப்பொழுது சாவு வரும் என்றறியாயே
      இப்பொழுதே நீ திரும்பி
      ஏசு மேசியாவை நம்பு – பாவம்
    3. பெற்ற தாலந்துகளை நீ பேணாமல் போனால்
      குற்றவாளி என்றே தேவன்
      கோபம் கொள்வார் லாபம் பண்ணு – பாவம்
    4. நித்தம் நித்தம் நீ புரிந்த நின் பாவமெல்லாம்
      கர்த்தர் எழுதி வைத்திருக்கும்
      கணக்கில் வழக்கில் இருக்குமல்லோ – பாவம்

    Paavam Seyyaathae Nee Lyrics in English

    nee paavam seyyaathae

    paavam seyyaathae nee paavam seyyaathae
    paavam seyyaathae nee paavam seyyaathae

    1. thaevan sonna karpanai meerith theemai seyyaathae
      kaaval nintu paarppaarentu
      karuththaay manathil ninaiththae iru – paavam
    2. eppoluthu saavu varum entariyaayae
      ippoluthae nee thirumpi
      aesu maesiyaavai nampu – paavam
    3. petta thaalanthukalai nee paennaamal ponaal
      kuttavaali ente thaevan
      kopam kolvaar laapam pannnu – paavam
    4. niththam niththam nee purintha nin paavamellaam
      karththar eluthi vaiththirukkum
      kanakkil valakkil irukkumallo – paavam
  • Paavam Pokkum Jeevanathiyai பாவம் போக்கும் ஜீவநதியைப்

    பாவம் போக்கும் ஜீவநதியைப்
    பாரீர் வந்து பாரீர் – பாரில்

    தீவினை தீர்க்கும் தேவமறியின்
    திருரத்த மிந்த ஆறாம் – பாரில்

    கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக்
    கண்கள் ஐந்து திறந்தே – அதோ
    மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
    வழிந்தோடுது பாரீர் – பாரில்

    பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
    பதறி விழுந் தலறி – நிதம்
    கூவியழுத அனந்தம் பேரிதில்
    குளித்தே யுளங் களித்தார் – பாரில்

    பத்தருளத்தி லிடைவிடாமல்
    பாய்ந்து வளமீந்து – அதை
    நித்தமும் பரிசுத்த குணத்தில்
    நிலைநாட்டுது பாரீர் – பாரில்

    ஒருதர இந்த ந்தியின் தீர்த்தம்
    உண்டோ ஜீவன் கண்டோர் – தாகம்
    அறுதி யடைவர் வேறொருதிநதிக்
    கலையார் தேடி யலையார் – பாரில்

    நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
    நீரார் நிதியிதிலே – தங்கள்
    வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
    வாழ்ந்துகீதம் பாட – பாரில்


    Paavam pokkum jeevanathiyai Lyrics in English

    paavam pokkum jeevanathiyaip
    paareer vanthu paareer – paaril

    theevinai theerkkum thaevamariyin
    thiruraththa mintha aaraam – paaril

    kalvaari malaichchikara meethoottuk
    kannkal ainthu thiranthae – atho
    malkich siluvai yatiyil vilunthu
    valinthoduthu paareer – paaril

    paavachchumaiyaal nonthu sornthu
    pathari vilun thalari – nitham
    kooviyalutha anantham paerithil
    kuliththae yulang kaliththaar – paaril

    paththarulaththi litaividaamal
    paaynthu valameenthu – athai
    niththamum parisuththa kunaththil
    nilainaattuthu paareer – paaril

    oruthara intha nthiyin theerththam
    unntoo jeevan kanntoor – thaakam
    aruthi yataivar vaeroruthinathik
    kalaiyaar thaeti yalaiyaar – paaril

    niththiyanthanil kalanthuraiyunj sen
    neeraar nithiyithilae – thangal
    vasthiran thoyththa suththar sapaiyil
    vaalnthugeetham paada – paaril

  • Paavam Piravaesiyaay பாவம் பிரவேசியாய்

    1. பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே
      தீட்டானதொன்றும், தீட்டானதொன்றும்
      ஓர்காலும் சேராதே
    2. இதோ நல் மீட்பரே உம்மண்டையில் வந்தேன்
      என் பாவம் நீக்கி, என் பாவம் நீக்கி
      நீர் சுத்தமாக்குமேன்
    3. உம் நேசப் பிள்ளையாய் நீர் சேர்த்துக்கொள்ளுவீர்
      தீமை செய்யாமல், தீமை செய்யாமல்
      என்னைக் காப்பாற்றுவீர்
    4. பின் மோட்ச தேசத்தில் வெண் வஸ்திரம் தரிப்பேன்
      குற்றமில்லாமல், குற்றமில்லாமல்
      இன்பமாய் வாழுவேன்

    Paavam Piravaesiyaay Lyrics in English

    1. paavam piravaesiyaay ponnakaram unntae
      theettanathontum, theettanathontum
      orkaalum seraathae
    2. itho nal meetparae ummanntaiyil vanthaen
      en paavam neekki, en paavam neekki
      neer suththamaakkumaen
    3. um naesap pillaiyaay neer serththukkolluveer
      theemai seyyaamal, theemai seyyaamal
      ennaik kaappaattuveer
    4. pin motcha thaesaththil venn vasthiram tharippaen
      kuttamillaamal, kuttamillaamal
      inpamaay vaaluvaen
  • Paavam Perukuthae Paarum பாவம் பெருகுதே பாரும்

    இயேசுவே இரட்சியும்

    பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே
    அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே

    1. ஆத்தும ரட்சிப்பிழந்தவர் ஆயிரமாயிரமாய்
      அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே
    2. இரட்சிப்பின் நற்செய்தி கேட்பவர் எச்சரிப்பை வெறுத்து
      இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார்.
    3. தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார்
      திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் தூங்கிக் களைத்துப் போனார்
    4. ஜீவனை வெறுத்துத் தியாகமாய் சேவையும் செய்திடுவேன்
      ஜீவனுக் கீடாக ஜனங்களை ஜீவ தேவன் தருவார்

    Paavam Perukuthae Paarum Lyrics in English

    Yesuvae iratchiyum

    paavam perukuthae paarum paran Yesuvae
    aliyum manukkulam athaiyum iratchippeerae

    1. aaththuma ratchippilanthavar aayiramaayiramaay
      antadakam intha mannnatiyil alinthu saakintarae
    2. iratchippin narseythi kaetpavar echcharippai veruththu
      iratchakar Yesuvai ilanthoraay intum kettalikintar.
    3. thaaniyael pola jepiththidum thaasar palar marainthaar
      thirappin vaasalil nirkum silar thoongik kalaiththup ponaar
    4. jeevanai veruththuth thiyaakamaay sevaiyum seythiduvaen
      jeevanuk geedaaka janangalai jeeva thaevan tharuvaar
  • Paava Sagnsalaththai Neekka பாவ சஞ்சலத்தை நீக்க

    இயேசு என் நண்பர்

    1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே
      பாவப் பாரம் தீர்ந்துபோக மீட்பர் பாதம் தஞ்சமே
      சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
      துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்.
    2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டைச் சேருவோம்
      மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
      நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
      நீக்குவாரே மனச் சோர்பை தீய குணம் மாற்றுவார்.
    3. பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
      பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
      ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம்
      அளவற்ற அருள்நாதா உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

    Paava Sagnsalaththai Neekka Lyrics in English

    Yesu en nannpar

    1. paava sanjalaththai neekka piraana nannparthaan unntae
      paavap paaram theernthupoka meetpar paatham thanjamae
      saala thukka thunpaththaalae nenjam nonthu sorungaal
      thunpam inpamaaka maarum ookkamaana jepaththaal.
    2. kashda nashdam unndaanaalum Yesuvanntaich seruvom
      mosa naasam naerittalum jepa thoopam kaattuvom
      neekkuvaarae nenjin Nnovai palaveenam thaanguvaar
      neekkuvaarae manach sorpai theeya kunam maattuvaar.
    3. palaveenamaana pothum kirupaasanam unntae
      panthu janam saakum pothum pukalidam ithuvae
      oppillaatha piraana naesaa ummai nampi naesippom
      alavatta arulnaathaa ummai Nnokkik kenjuvom.
  • Paava Naasar Patta Kaayam பாவ நாசர் பட்ட காயம்

    1. பாவ நாசர் பட்ட காயம்
      நோக்கி தியானம் செய்வது
      ஜீவன், சுகம், நற்சகாயம்,
      ஆறுதலும் உள்ளது.
    2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
      அன்பின் வெள்ளம் ஆயிற்று;
      தெய்வ நேசம் அதினாலே
      மானிடர்க்குத் தோன்றிற்று.
    3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
      தஞ்சம் என்று பற்றினேன்;
      அவர் திவ்ய நேச முகம்
      அருள் வீசக் காண்கிறேன்.
    4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
      துக்கத்தால் கலங்குவேன்;
      அவர் சாவால் துக்கம் மாறி
      சாகா ஜீவன் அடைவேன்.
    5. சிலுவையை நோக்கி நிற்க,
      உமதருள் உணர்வேன்;
      தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட,
      சமாதானம் பெறுவேன்.
    6. அவர் சிலுவை அடியில்
      நிற்பதே மா பாக்கியம்;
      சோர்ந்த திரு முகத்தினில்
      காண்பேன் திவ்விய உருக்கம்.
    7. உம்மை நான் கண்ணாரக் காண
      விண்ணில் சேரும் அளவும்,
      உம்மை ஓயா தியானம் செய்ய
      என்னை ஏவியருளும்.

    Paava Naasar Patta Kaayam Lyrics in English

    1. paava naasar patta kaayam
      Nnokki thiyaanam seyvathu
      jeevan, sukam, narsakaayam,
      aaruthalum ullathu.
    2. raththa vellam paaynthathaalae
      anpin vellam aayittu;
      theyva naesam athinaalae
      maanidarkkuth thontittu.
    3. aanni paayntha meetpar paatham
      thanjam entu pattinaen;
      avar thivya naesa mukam
      arul veesak kaannkiraen.
    4. paasaththaal en nenjam pongi
      thukkaththaal kalanguvaen;
      avar saavaal thukkam maari
      saakaa jeevan ataivaen.
    5. siluvaiyai Nnokki nirka,
      umatharul unarvaen;
      theerththa raththam nenjil pada,
      samaathaanam peruvaen.
    6. avar siluvai atiyil
      nirpathae maa paakkiyam;
      sorntha thiru mukaththinil
      kaannpaen thivviya urukkam.
    7. ummai naan kannnnaarak kaana
      vinnnnil serum alavum,
      ummai oyaa thiyaanam seyya
      ennai aeviyarulum.