Author: admin

  • எனக்கு யாருமில்ல என்று Yenakku Yaarumilla Endru

    எனக்கு யாருமில்ல என்று சொல்லி
    தனிமையில் அழுதேன்
    நான் இருக்கேன்னு தேடி வந்து
    கட்டி பிடிசீங்க
    ஒன்றும் இல்ல என்று சொல்லி
    வெறுமையா கிடந்தேன்
    எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க – 2

    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
    உங்க கிருபை இல்லாம
    ஒரு அடி நடக்க முடியுமா?
    உங்க அன்பு இல்லாம
    மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
    உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?

    நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
    நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க – 2
    உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல

    சின்ன சின்ன தேவைக்காக
    ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
    அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக – 2
    தேவை எல்லாமே நீங்க தான் அப்பா


    Yenakku Yaarumilla Endru Solli
    Thanimaiyil Azhudhaen
    Naan Irukkaennu Thedi Vandhu
    Katti Pidicheenga
    Ondrumilla endru Solli
    Verumaiyaa Kidanden
    Enakkaaga Muttrilumaaga
    Ummaiyae Thandheenga – 2

    Neenga Illaama Naan
    Vaazha Mudiyuma
    Unga Kiruba illaama Oru Adi
    Nadakka Mudiyuma
    Unga Anbu illaama Moochu Kaatha
    Swasikka Mudiyuma
    Unga Siththam illaama Ennaala

    Nesitha Uravugal Nenachu
    Kooda Paakkala
    Nenachu Paakkaadha Uravaaga Vandheenga – 2
    Ummai Naan Marandha Podhum
    Neenga Marakkala

    Chinna Chinna Thevaikkaaga
    engi Nindra Naatkkal Undu
    Alave illaama Uyarthi Enna Vacheenga – 2
    Thevai ellaam Neengadhan Appa


  • பாசம் பண்போடு நல் Paasam Panbodu Nal

    பாசம் பண்போடு நல் நண்பர்கள் சேர
    வாசம் வருடும் வாழ்வில் என்றும்
    நேசம் மிகுந்த நம் வாழ்வை காண
    வீசும் தென்றலும் ஏங்கி நிற்கும்

    அன்பர்கள் வேண்டும் நண்பர்கள் வேண்டும்
    இந்த பூமியில் நாம் வாழும் நாள் வரையில்

    ஓ நண்பனே என் உயிர் நண்பனே
    இயேசு அன்பின் பாலமே நம்மை இணைத்து வைத்தாரே

    கள்ளம் இல்லாமல் நம் உள்ளம் இருக்க
    அன்பின் துணையே வேண்டும் என்றும்
    நெஞ்சம் தளர்ந்து கண் கொஞ்சும் வேலையில்
    நண்பர்கள் வேண்டும் ஏற்று கொள்ள – அன்பர்கள்

    என்றும் ஒன்றாக என்றென்றும் நன்றாக
    நியாயம் தவழுவோம் வாழ்விலே
    நேசம் வகைத்து நல்பாதையில் சேர
    நண்பர்கள் வேண்டும் வாழ்விலே – ஓ நண்பனே


    Paasam Panbodu Nal Nanbargal Sera
    Vaasam Varudum Vaazhvil Endrum
    Nesam Mihundha Nam Vaazhvai Kaana
    Veesum Thendralum Yengi Nirkum

    Anbargal Vendum Nanbargal Vendum
    Indha Boomiyil Naam Vaazhum Naal Varayil

    Oh Nanbane En Uyir Nanbane
    Yesu Anbin Paalame Nammai Inaithu Vaithaarae – 2

    Kallam Illamal Nam Ullam Irukka
    Anbin Thunaye Vendum Endrum
    Nenjam Thalarndhu Kan Konjum Velayil
    Nanbargal Vendum Yeatru Kola – Anbargal

    Endrum Ondraga Endrendrum Nandraga
    Nyayam Thavazhuvom Vaazhvile
    Nesam Vagaithu Nalpaathayil Sera
    Nanbargal Vendum Vaazhvile – Oh Nanbane


  • கண்ணீரில் கண்ணீரில் Kannerile Kannerile

    கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே

    கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே
    தவிக்கின்றேன் தவிக்கின்றேன் தனிமையில் துடிக்கிறேன்
    அனுதினமும் வெறும் கனவாய் காற்றினிலே சிறகானேன்
    யுகயுகமாக சோகம் என்னை சூழ்ந்துகொண்டது

    என் யேசுவே என் யேசுவே என் பாரத்தை தீர்த்திரே
    என் வாழ்விலே துன்பங்களை நீக்கிடவே வந்தீரே
    இனிப்பொழுதும் மாறாமல் என்னுடனே இருக்கின்றேன்
    இதயத்தின் பாரம் போக்கி என்னை அன்பால் காக்கின்றீர்


    Kannerile Kannerile En Ullamum Urugudhey

    Kannerile Kannerile En Ullamum Urugudhey
    Thavikindren Thavikindren Thanimayil Thudikindren
    Anudhinamum Verum Kanavu Kaatriniley Siraganen
    Ugaugamaga Sogam Ennai Suzhdhukondadhu

    En Yesuvey En Yesuvey En Barathai Theerthirey
    En Vaazhviley Thunbangalai Neekidavey Vandheerae
    Inipozhudhum Maaramal Enudane Irukindren
    Idhaiyathin Baaram Pokki Ennai Anbal Kaakindrir


  • மனமே மனமே நீ சோர்ந்து Maname Maname Nee Soruinthu

    மனமே மனமே நீ சோர்ந்து போகாதே
    மனமே மனமே நீ கலங்கி வாடாதே – 2

    வேதனை பாதையில் நீ தினம் நடப்பதோ
    தேவா கிருபை உன்னை காக்கும் அறியாயோ
    சோதனை யாவுமே சேர்ந்து உன்னை தாக்கினும்
    தேவா கரங்கள் உன்னை காக்கும் அறியாயோ
    மரண இருளில் இன்று தொடரிந்தாலும்
    தேவா ஆவி உன்னை காத்திடும்
    இயேசு ஒரு போதும் உன்னை கை விடர்

    ஆதரவு இன்றியே தவிக்கிக்கும் போதிலும்
    தேவா அன்பு உன்னை காக்கும் மறவாதே
    ஆணவம் ஆணவர் தந்திடும் தொலைகள்
    தேவா நாமம் தினம் பாட மறந்தோடும்
    ஜெனமாம் உயிர் எல்லோரும் ஜீவன் உள்ள வரை எந்நாளும்
    நேச பாதாம்களை நாமும் தொழுவுமே


    Maname Maname Nee Soruinthu Poogathe
    Maname Maname Nee Kaalangi Vadathe – 2

    Vethani Pathaile Nee Thenam Nadapatho
    Deva Kirubai Unnai Kakum Ariyayo
    Sonthanai Yavummae Serinthu Unnai Thakinum
    Deva Karankal Unnai Kakum Ariyayo
    Marana Iruyil Indru Thodarinthalum
    Deva Aavi Unnai Kathidum
    Yesu Oru Pothum Unnai Kai Vidaru

    Atharavu Indriya Thavikikum Pothulum
    Deva Anbu Unnai Kakum Maravathe
    Anavam Anavaru Thanthidum Thoalikal
    Deva Namam Thinam Paada Maranthovum
    Jenamam Uyir Yellorum Jeevan Ula Varai Ennalum
    Nesa Pathamgali Naamum Tholuvumae


  • அன்பால் என்னை கவந்தவரே Anbaal Ennai Kavanthavare

    அன்பால் என்னை கவந்தவரே
    என்னுள் வாழ்பவரே
    என் நேசர் நீரே – 2

    நான் என்னென்று சொல்வேன்
    உம் மாறாத அன்பை
    உயிர் வாழும் நாளில்
    ஒரு போதும் மறவேன்

    வழி தெரியாமல் அலைகின்ற நேரம்
    கருணையால் என்னை அழைத்தீர் – 2
    இது வரை உதவி செய்த தேவன் நீரே – 2
    வணங்குவேன் வாழ்த்துவேன் போற்றுவேன்

    தாயினும் மேலாய் அன்பதை பொழிந்து
    தூக்கிய சுமந்தவர் நீர் – 2
    அன்பிற்கு ஈடாக என்ன செய்வான் – 2
    என்னையே தருகிறேன் ஏசுவே

    அன்பே உம்மை மரவேனோ
    உம்மை பிரிவேனோ
    என் வாழ்வும் நீரே – 2

    கண்மணி போல காத்தீர்
    கரம் நீட்டி அனைதீர்
    உயிர் வாழும் நாளில்
    ஒரு போதும் மறவேனே


    Anbaal Ennai Kavanthavare
    Ennul Vaazhbavarae
    En Naesar Neerae – 2

    Naan Ennendru Solvaen
    Um Maaradha Anbai
    Uyir Vaazhum Naalil
    Oru Podhum Maravaen

    Vazhi Theriyaamal Alaigindra Neram
    Karunayaal Ennai Azhaithir – 2
    Idhu Varai Udhavi Seitha Devan Neerae – 2
    Vananguvaen Vaazhthuvaen Potruvaen

    Thaayinum Maelaai Anbadhai Pozhindhu
    Thookiya Sumandhavar Neern – 2
    Anbirkku Eedaaga Enna Seivaen – 2
    Ennayae Tharugiraen Yesuvae

    Anbae Ummai Maravaeno
    Ummai Pirivaeno
    En Vaazhvum Neerae – 2

    Kanmani Pola Kaatheer
    Karam Neeti Anaitheer
    Uyir Vaazhum Naalil
    Oru Podhum Maravaenae


  • தேடினேன் உம்மை தேடினேன் Thedinaen Ummai Thedinaen

    தேடினேன் உம்மை தேடினேன்
    நல்ல வேலையில் உள்ள காதலில் உம்மை தேடினேன்
    பாடியே உம்மை தேடினேன்
    நாடினேன் உம்மை நாடினேன்

    அன்பிலே உள்ளம் வாழுதே
    ஆதலால் பாசம் பொங்குதே
    நல்ல மேய்ப்பரே எந்தன் அன்பரே
    வாரும் நீர் வாரும் ஏசுவே


    Thedinaen Ummai Thedinaen
    Nalla Velayil Ulla Kadhalil Ummai Thedinaen
    Paadiyae Ummai Thedinaen
    Naadinaen Ummai Naadinaen

    Anbilae Ullam Vazhudhae
    Aadhalal Paasam Pongudhae
    Nalla Meipparae Endhan Anbarae
    Vaarum Neer Vaarum Yesuvae


  • உம்மை காண வேண்டும் Um Prasannathile Naan

    உம்மை காண வேண்டும் உம்மை காண வேண்டும்
    உம் பிரசன்னத்தில் நான் மூழ்க வேண்டும் – 2
    தூதர் கணங்கள் போற்றும் தெய்வமே
    மூப்பர் யாவரும் பணியும் கர்த்தரே – 2
    உம்மை நானும் காண வேண்டும்
    நானும் போற்ற வேண்டும்
    உம்மை நானும் பணிய வேண்டும்
    நானும் உயர்த்த வேண்டும்

    உம்மை காண வேண்டும் உம்மோடு பேச வேண்டும்
    உம் மார்பினிலே இளைப்பாற வேண்டும் – 2
    வானம் பூமியும் போற்றும் தெய்வமே
    ஆழக்கடலும் பண்ணியும் கர்த்தரே – 2
    உம்மை நானும் காண வேண்டும்
    நானும் போற்ற வேண்டும்
    உம்மை நானும் பணிய வேண்டும்
    நானும் உயர்த்த வேண்டும்

    உம்மை நேசிக்கிறேன் என் ஏசுவே
    உம்மை ஆராதிப்பேன் என் ராஜனே – 2
    அல்லேலுயா – 4
    ஆராதனை – 4


    Um Prasannathile Naan Moozhga Vendum – 2
    Thoothar Kanangal Potrum Deivame
    Mooppar Yaavarum Paniyum Karthare – 2
    Ummai Naanum Kaana Vendum
    Naanum Potra Vendum
    Ummai Naanum Paniya Vendum
    Naanum Uyartha Vendum

    Ummai Kaana Vendum Ummodu Pesa Vendum
    Um Maarbinile Ilaippaara Vendum – 2
    Vaanam Boomiyum Potrum Deivame
    Aazhakkadalum Panniyum Karthare – 2
    Ummai Naanum Kaana Vendum
    Naanum Potra Vendum
    Ummai Naanum Paniya Vendum
    Naanum Uyartha Vendum

    Ummai Nesikkiren En Yesuve
    Ummai Aaraadippen En Raajane – 2
    Alleluyah – 4
    Aaraadhanai – 4


  • தொட்டு சுகமாக்கும் ஐயா Thottu Sugamaakum Iyya

    தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே
    நீர் தொட்டால் போதும்
    எந்தன் வாழ்க்கை மாறுமே -2

    மாறுமே….மாறுமே
    மாறுமே…எல்லாம் மாறுமே – தொட்டு

    எட்டி காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
    உம் பாச கைகள் எட்டி இன்று தொடணுமே -2
    கட்டி பிடித்தேன் உந்தன் பாதம்
    கர்த்தா எந்தன் கதறல் கேளும் -2
    தொடணுமே…என்னை தொடணுமே -2 – தொட்டு

    கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே
    கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கிறார் -2
    கடல் மேல் என்னை நடக்க செய்வார் -2
    கடனை எல்லாம் மாற செய்வார் -2
    மாறுமே எல்லாம் மாறுமே -2 – தொட்டு

    குறை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
    நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் -2
    இல்லை என்பது எனக்கு இல்லை
    தொல்லை என்பது துளியும் இல்லை -2
    இல்லையே தொல்லை இல்லையே -2

    தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே
    நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே -2

    மாறுமே…மாறுமே
    மாறுமே…எல்லாம் மாறுமே

    தொடணுமே என்னை தொடணுமே .. -4


    Thottu Sugamaakum Iyya Yesuvae
    Neer Thotaal Pothum Endhan Vazhkai Maatumae -2

    Maarumae….Maarumae
    Maarumae…Ellam Maarumae – Thottu

    Etti Kaai Pol Kasakkum Endan Vazhkaiyai
    Um Paasa Kaigal Etti Intru Thodanumae -2
    Katti Pidithen Undan Paatham
    Karthaa Endan Katharal Kelum -2
    Thodanumae….Ennai Thodanumae -2 – Thottu

    Kadanum Udanum Ennai Mudakka Mudiyathea
    Kadal Mel Nadantha Karthar Enodirukiraar -2
    Kadal Mel Ennai Nadakka Seivaar -2
    Kadanai Ellam Maara Seivaar -2
    Maarumae Ellam Maarumae -2 – Thottu

    Kurai Enni Pulambuvathai Niruthuven
    Niraivaai Ennai Nadathubavar Irupathaal -2
    Illai Enbathu Enaku Illai
    Thollai Enbathu Thulium Illai -2
    Illaiye Thollai Illaiyae-2

    Thottu Sugamaakum Iyya Yesuvae
    Neer Thotaal Pothum Endhan Vazhkai Maatumae-2

    Maarumae….Maarumae
    Maarumae…Ellam Maarumae

    Thodanumae Ennai Thodanumae….-4


  • மாயாத அன்பு மறையாத Ennai Anaithatham Karamallavo

    மாயாத அன்பு மறையாத அன்பு
    விலகாத அன்பு நீர்தானே அன்பு – 2

    என்னை அணைத்ததாம் கரமல்லவோ
    என்னை போயின புயமல்லவோ
    என்னை நடத்தின வழியல்லவோ
    என்னை பாதுகாத்த நிழலல்லவோ

    மாயாத அன்பு மறையாத அன்பு
    விலகாத அன்பு நீர்தானே அன்பு
    மாயத்தை அன்பு மறையாத அன்பு
    விலகாத அன்பு இயேசுவின் அன்பு

    என்னை உயர்திணை கரமல்லவோ
    என்னை ரசித்ததாம் முகமல்லவோ
    என்னை நேசித்த உயிரல்லவோ
    என்னை உயிர்ப்பித்த பெளமல்லவோ

    மாயாத அன்பு மறையாத அன்பு
    விலகாத அன்பு நீர்தானே அன்பு
    மாயத்தை அன்பு மறையாத அன்பு
    விலகாத அன்பு இயேசுவின் அன்பு


    Ennai Anaithatham Karamallavo
    Ennai Potina Puyamallavo
    Ennai Nadathina Valiyallavo
    Ennai paathukatha Nilalalavo

    Mayatha Anbu Marayatha Anbu
    Vilagatha Anbu Neerthanae Anbu
    Mayatha Anbu Marayatha Anbu
    Vilagatha Anbu Yesuvin Anbu

    Ennai Uyarthina Karamallavo
    Ennai Rasithatham Mugamallavo
    Ennai Nesitha Uyirallavo
    Ennai Uyirpitha Belamalavo

    Mayatha Anbu Marayatha Anbu
    Vilagatha Anbu Neerthanae Anbu
    Mayatha Anbu Marayatha Anbu
    Vilagatha Anbu Yesuvin Anbu


  • விரும்புகிறதைச் செய்யாமல் Virumbugiradhai Seiyyaamal

    விரும்புகிறதைச் செய்யாமல்
    விரும்பாததையை செய்கிறேன்
    இயேசுவே உதவி செய்யும் – 2

    இரத்தத்தால் என்னைக் கழுவும்
    ஆவியால் என்னை நிரப்பும் – 2

    விரும்புகிறதை பார்க்காமல்
    விரும்பாததையே பார்க்கிறேன்
    கண்களை கழுவிடுமே – 2

    விரும்புகிறதை நினையாமல்
    விரும்பாததையே நினைக்கிறேன்
    சிந்தையை கழுவிடுமே – 2

    விரும்புகிறவர் சொல்லுவதை
    என் வாழ்வில் இனி செய்திடுவேன்
    சித்தத்தை நிறைவேற்றுவேன் – 2


    Virumbugiradhai Seiyyaamal
    Virumbadadhayae Seigiraen
    Yesuvae Udhavi Seiyyum – 2

    Raththathaal Ennai Kazhauvum
    Aaviyaal Ennai Nirappum – 2

    Virumbugiradhai Paarkkaamal
    Virumbaadhathaiyae Paarkkiraen
    Kangalai Kazhuvidumae – 2

    Virumbugiradhai Ninaiyaamal
    Virumbaadhadhaiyae Ninaikkiraen
    Sindhayai Kazhuvidmae

    Viumbugiravar Solluvadhai
    En Vaazhvil Ini Seidhiduvaen
    Viruppaththai Niraivaettruvaen