Author: admin

  • Kartharai ekkalamum கர்த்தரை எக்காலமும்

    கர்த்தரை எக்காலமும்
    ஸ்தோத்திரித்து பாடுவேன்
    அவர் துதி வாயிலிருக்கும்

    கர்த்தரை எக்காலமும்
    ஸ்தோத்திரித்து பாடுவேன்
    அவர் துதி என் வாயிலிருக்கும்

    கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமா
    மேன்மையினால் நிறைந்து நிற்குதே
    கனம் மகிமை அவர்க்கு உரியதே

    இந்த ஏழை அவரைக் கூப்பிட்டான்
    இறங்கி வந்தே பதில் கொடுத்தாரே
    இடுக்கண் எல்லாம் நீக்கி விட்டாரே

    வாதை துன்பம் வந்த வேளையில்
    பாதை காட்டி என்னைத் தேற்றினார்
    வலக்கரத்தால் தாங்கிக் கொண்டாரே

    என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்
    என் தேவனிடத்திலேயே கெஞ்சினேன்
    அவர் எனக்கு செவி கொடுத்தாரே


    Kartharai ekkalamum Lyrics in English

    karththarai ekkaalamum
    sthoththiriththu paaduvaen
    avar thuthi vaayilirukkum

    karththarai ekkaalamum
    sthoththiriththu paaduvaen
    avar thuthi en vaayilirukkum

    karththarukkul enthan aaththumaa
    maenmaiyinaal nirainthu nirkuthae
    kanam makimai avarkku uriyathae

    intha aelai avaraik kooppittan
    irangi vanthae pathil koduththaarae
    idukkann ellaam neekki vittarae

    vaathai thunpam vantha vaelaiyil
    paathai kaatti ennaith thaettinaar
    valakkaraththaal thaangik konndaarae

    en saththaththai uyarththik kenjinaen
    en thaevanidaththilaeyae kenjinaen
    avar enakku sevi koduththaarae

  • Karthar-Ennakkai-Yavayium கர்த்தர் எனக்காய் யாவையும்

    கர்த்தர் எனக்காய் யாவையும்
    செய்து முடிப்பார்

    சொன்னதை செய்யும்வரை அவர்
    என்னைக் கைவிடுவதில்லை

    கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார்
    கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
    மலைகளை பெயர்ப்பாரே

    நீர் சொன்னது நடக்குமோ
    என்ற சந்தேகம் இல்லை
    நீர் நினைத்தது நிலைநிற்குமோ
    என்ற பயமும் இல்லை

    என் நிந்தனை நிரந்தரம்
    இல்லை என்றீரே
    நான் இழந்ததைத் திரும்பவும்
    தருவேன் என்றீரே


    Karthar-Ennakkai-Yavayium Lyrics in English

    karththar enakkaay yaavaiyum
    seythu mutippaar

    sonnathai seyyumvarai avar
    ennaik kaividuvathillai

    karththar enakkaay karththar enakkaay
    yaavaiyum seythu mutippaar
    karththar enakkaay karththar enakkaay
    malaikalai peyarppaarae

    neer sonnathu nadakkumo
    enta santhaekam illai
    neer ninaiththathu nilainirkumo
    enta payamum illai

    en ninthanai nirantharam
    illai enteerae
    naan ilanthathaith thirumpavum
    tharuvaen enteerae

  • Karthar uyirthelundar கர்த்தர் உயிர்த்தெழுந்தார்

    கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – இன்னும்
    கல்லறை திறந்திருக்க
    நற்செய்தி தரிசனங்கள்
    சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம்

    காரிருளில் கண்ணீருடன்
    கல்லறை நோக்கியே சென்றனரே
    அற்புதக் காட்சியும் கண்டிட ஸ்திரீகள்
    ஆச்சர்யம் அடைந்தனரே

    மரியாளே என்ற சத்தம்
    மா திகைப்பாய் அவள் கேட்டிடவே
    ரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடி
    ரபூனி என்றழைத்தான்

    பயந்திடவே சீஷர்களே
    பூட்டின உள்ளறை தங்கினரே
    மெய்ச் சமாதானத்தின் வாக்குகள் கூறி
    மேசியா வாழ்த்தி சென்றார்.


    Karthar uyirthelundar Lyrics in English

    karththar uyirththelunthaar – innum
    kallarai thiranthirukka
    narseythi tharisanangal
    saatti geerththanam pannnniduvom

    kaarirulil kannnneerudan
    kallarai Nnokkiyae sentanarae
    arputhak kaatchiyum kanntida sthireekal
    aachcharyam atainthanarae

    mariyaalae enta saththam
    maa thikaippaay aval kaettidavae
    ratchakar tharisanam kanndu munnoti
    rapooni entalaiththaan

    payanthidavae seesharkalae
    poottina ullarai thanginarae
    meych samaathaanaththin vaakkukal koori
    maesiyaa vaalththi sentar.

  • Karthar Unnai Menmaiyaga Vaipaar கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
    நீ கலங்காதே மனமே -2

    1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
      களங்களில் நிரம்பிடும் தானியமும் -2
      நிறைவான நன்மை உண்டாக
      கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
    2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
      கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
      வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
      கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
    3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
      தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2
      சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
      கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
    4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
      உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் -2
      பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
      கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2

    Karthar Unnai Menmaiyaga Vaipaar Lyrics in English

    karththar unnai maenmaiyaaka vaippaar
    nee kalangaathae manamae -2

    1. kaiyidum vaelaiyil aaseervaathamum
      kalangalil nirampidum thaaniyamum -2
      niraivaana nanmai unndaaka
      karththar unnai maenmaiyaaka vaippaar -2
    2. saththurukkal ethiraay elumpumpothu
      karththarae yuththaththai seythiduvaar
      vetti mael vettiyai unakku thanthu
      karththar unnai maenmaiyaaka vaippaar -2
    3. unnai avar thanakkaaka therinthukonndaar
      than peyarai unakkaaka valanginaarae -2
      suttamum nannparum unnai mathikka
      karththar unnai maenmaiyaaka vaippaar -2
    4. un thaesam muluvathum malai poliyum
      unakkaaka pokkishaththai thiranthiduvaar -2
      pirarukku neeyum kadan kodukka
      karththar unnai maenmaiyaaka vaippaar -2
  • Karthar Thuyar Dhoniyai கர்த்தர் துயர் தொனியாய்

    கர்த்தர் துயர் தொனியாய்
    கதறி முகங்கவிழ்ந்தே
    இருள் சூழ்ந்த தோட்டத்தில்
    இதயம் நொறுங்கி ஜெபித்தார்

    1. மரணத்தின் வியாகுலமோ
      மனிதர் துணை இல்லையோ
      தேவ தூதன் தோன்றிடவே
      தருணம் நெருங்க ஒப்படைத்தார்
      துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர்
    2. துக்கத்தால் தம் சீஷர்களே
      தலை சாய்த்து தூங்கினாரே
      தம்மை மூவர் கைவிடவே
      தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
      தன்னந்தனிமையிலே – கர்த்தர்
    3. பிதாவே இப்பாத்திரத்தின்
      பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
      ஆகட்டும் உமது சித்தம்
      அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
      ஆ! இரத்த வேர்வையுடன் – கர்த்தர்
    4. திறந்த கெத்சமெனேயில்
      துணிந்து வந்த பகைஞன்
      என்ன துரோகம் செய்திடினும்
      எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
      என்ன மா அன்பிதுவோ – கர்த்தர்
    5. பரமன் ஜெப சத்தமே
      பூங்காவினில் கேட்கிறதே
      பெருமூச்சுடன் அழைக்கும்
      அவரோடிணைந்தே கண்ணீருடன்
      ஆவியுடன் ஜெபிப்பேன் – கர்த்தர்
    6. இயேசு தாங்கின துன்பங்கள்
      என்னைத் தாண்டியே செல்லாதே
      எனக்கும் அதில் பங்குண்டே
      சிலுவை மரணப் பாடுகளால்
      சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்

    Karthar Thuyar Dhoniyai Lyrics in English

    karththar thuyar thoniyaay
    kathari mukangavilnthae
    irul soolntha thottaththil
    ithayam norungi jepiththaar

    1. maranaththin viyaakulamo
      manithar thunnai illaiyo
      thaeva thoothan thontidavae
      tharunam nerunga oppataiththaar
      thunpa sumai sumanthaar – karththar
    2. thukkaththaal tham seesharkalae
      thalai saayththu thoonginaarae
      thammai moovar kaividavae
      thooramaay kadanthae thikilatainthaar
      thannanthanimaiyilae – karththar
    3. pithaavae ippaaththiraththin
      panginai naan aettukkonntaen
      aakattum umathu siththam
      athu neengidumo enturaiththaar
      aa! iraththa vaervaiyudan – karththar
    4. thirantha kethsamenaeyil
      thunninthu vantha pakainjan
      enna thurokam seythitinum
      enthan sinaekithanae entalaiththaar
      enna maa anpithuvo – karththar
    5. paraman jepa saththamae
      poongaavinil kaetkirathae
      perumoochchudan alaikkum
      avarotinnainthae kannnneerudan
      aaviyudan jepippaen – karththar
    6. Yesu thaangina thunpangal
      ennaith thaanntiyae sellaathae
      enakkum athil pangunntae
      siluvai maranap paadukalaal
      seeyonil sernthiduvaen – karththar
  • Karthar Thame Nam Munne Povaar கர்த்தர் தாமே நம் முன்னே போவார்

    கர்த்தர் தாமே நம் முன்னே போவார்
    கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் – (2)

    நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
    எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2)

    1. உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம்
      விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் – (2)
      நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
      எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) — கர்த்தர்
    2. உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே

    கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் – (2)
    நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
    எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) — கர்த்தர்

    1. உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான்
      மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் – (2)
      நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
      எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) — கர்த்தர்

    Karthar Thame Nam Munne Povaar Lyrics in English

    karththar thaamae nam munnae povaar
    karththar thaamae nam pin vanthu kaappaar – (2)

    naam avar utaimai ini illaiyae thanimai
    engum inimai nitham kaannpom puthumai – (2)

    1. uthavidum kanmalai Yesuvai Nnokkuvom
      vilakidaar kaividaar thaanguvaar urangidaar – (2)
      naam avar utaimai ini illaiyae thanimai
      engum inimai nitham kaannpom puthumai – (2) — karththar
    2. uyir tharum aayanae sukam tharum naeyanae

    kanivudan nadaththuvaar parivudan thaettuvaar – (2)
    naam avar utaimai ini illaiyae thanimai
    engum inimai nitham kaannpom puthumai – (2) — karththar

    1. ulakukku velichcham naan poomikku uppu naan
      marikkum viththu naan paramanin soththu naan – (2)
      naam avar utaimai ini illaiyae thanimai
      engum inimai nitham kaannpom puthumai – (2) — karththar
  • Karthar Thamae Karthar Thamae கர்த்தர் தாமே கர்த்தர் தாமே

    கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
    நம் பட்சத்தில் நிற்பதால்
    சத்ரு வெள்ளம்போல் வந்தாலும்
    பத்திரமாய் நிற்கின்றோம்

    நம்மை நம்பி, பிறரை நம்பி
    நாம் நடந்தால் விம்முவோம்
    கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
    துணைக்கு நின்றால் வெல்லுவோம்

    1. மனித வாழ்க்கை கண்ணீர் என்பார்
      உலகில் அநேகர் உண்டல்லோ
      கர்த்தரின் துணை அறியார் கூறும்
      மன வருத்தம் அதுவல்லோ
      துன்பம், துக்கம், சூழ்ச்சி, சதிகள்
      எதுவென்றாலும் வெல்லுவோம்
      கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
      துணைக்கு நின்றால் வெல்லுவோம் – கர்த்தர்
    2. இம்மட்டுமாய் நடத்தும் கர்த்தர்
      இனிமேலும் உன்னை நடத்தாரோ
      கர்த்தரில் நீ மனம் பதித்து
      நிதம் நடந்தால் நடத்தாரோ
      மன கஷ்டங்கள், பண கஷ்டங்கள்
      வியாதி, தோல்வி வந்தாலும்
      கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
      துணைக்கு நின்றால் வெல்லுவோம் – கர்த்தர்
    3. என் உள்ளத்தில் என் உள்ளத்தில்
      வாசம் செய்யும் கர்த்தாவே
      இயேசுவில் நான் நேசம் கொண்டு
      வளரச் செய்யும் கர்த்தாவே
      கறைகள் இன்றி, குறைகள் இன்றி
      உலகை கடக்கச் செய்திடும்
      கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
      துணைக்கு நின்றால் வெல்லுவோம் – கர்த்தர்

    Karthar Thamae Karthar Thamae Lyrics in English

    Karthar Thamae Karthar Thamae
    karththar thaamae karththar thaamae
    nam patchaththil nirpathaal
    sathru vellampol vanthaalum
    paththiramaay nirkintom

    nammai nampi, pirarai nampi
    naam nadanthaal vimmuvom
    karththar thaamae karththar thaamae
    thunnaikku nintal velluvom

    1. manitha vaalkkai kannnneer enpaar
      ulakil anaekar unndallo
      karththarin thunnai ariyaar koorum
      mana varuththam athuvallo
      thunpam, thukkam, soolchchi, sathikal
      ethuventalum velluvom
      karththar thaamae karththar thaamae
      thunnaikku nintal velluvom – karththar
    2. immattumaay nadaththum karththar
      inimaelum unnai nadaththaaro
      karththaril nee manam pathiththu
      nitham nadanthaal nadaththaaro
      mana kashdangal, pana kashdangal
      viyaathi, tholvi vanthaalum
      karththar thaamae karththar thaamae
      thunnaikku nintal velluvom – karththar
    3. en ullaththil en ullaththil
      vaasam seyyum karththaavae
      Yesuvil naan naesam konndu
      valarach seyyum karththaavae
      karaikal inti, kuraikal inti
      ulakai kadakkach seythidum
      karththar thaamae karththar thaamae
      thunnaikku nintal velluvom – karththar
  • Karthar seiya ninaithathu கர்த்தர் செய்ய நினைத்தது

    கர்த்தர் செய்ய நினைத்தது
    ஒன்றும் தடைபடாது
    தடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார்
    ஜெயமாய் நடத்துவார் – உன்னை (நம்மை)
    ஜெயமாய் நடத்துவார்
    அல்லேலூயா… அல்லேலூயா (8)

    இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே -நம்
    கர்த்தருக்கு பிரியமானதே
    அபிரகாமை ஆசிர்வதித்தவர்
    உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்
    சூழ்நிலைகளைப் பார்த்து நீ சோர்ந்து போகாதே
    கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் – அல்லேலூயா

    வழியே இல்லா இடங்களிலும் – புது
    வழியை உனக்கு உண்டாக்குவார்
    இருண்டுபோன உந்தன் வாழ்க்கையில் – ஜீவ
    ஒளியை இன்று ஏற்றிடுவார்
    வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் – புது
    வாசல் உனக்கு திறந்திடுவார்


    Karthar seiya ninaithathu Lyrics in English

    karththar seyya ninaiththathu
    ontum thataipadaathu
    thataikalai neekkuvaar jeyaththai thanthiduvaar
    jeyamaay nadaththuvaar – unnai (nammai)
    jeyamaay nadaththuvaar
    allaelooyaa… allaelooyaa (8)

    isravaelai aaseervathippathae -nam
    karththarukku piriyamaanathae
    apirakaamai aasirvathiththavar
    unnaiyum intu aaseervathippaar
    soolnilaikalaip paarththu nee sornthu pokaathae
    karththar unnai uyarththiduvaar – allaelooyaa

    valiyae illaa idangalilum – puthu
    valiyai unakku unndaakkuvaar
    irunndupona unthan vaalkkaiyil – jeeva
    oliyai intu aettiduvaar
    vaasalkal ellaam ataikkappattalum – puthu
    vaasal unakku thiranthiduvaar

  • Karthar Periyavar Thuthiku கர்த்தர் பெரியவர் துதிக்குப்

    கர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்-2
    கர்த்தர் என்றென்றும் நம்முடைய தேவன்-2
    மரணபரியந்தம் நடத்துவார் நம்மை -2
    கை விடார் – 4
    1.அனுதினம் போஷித்து நடத்துவார்
    அன்றாட தேவைகளைச் சந்திப்பார்-2

    2.கரம்பிடித்து நம்மை நடத்துவார்
    கன்மலைமேல் நம்மை நிறுத்துவார்-2

    3.வழுவாமல் நம்மை காத்திடுவார் சொன்ன
    வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்- 2

    1. நீதீயின் பாதையில் நடத்துவார்
      நிழல்போல நம் வாழ்வில் தொடருவார்-2

    Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப் Lyrics in English

    Karthar Periyavar Thuthiku
    karththar periyavar thuthikkup paaththirar-2
    karththar ententum nammutaiya thaevan-2
    maranapariyantham nadaththuvaar nammai -2
    kai vidaar – 4
    1.anuthinam poshiththu nadaththuvaar
    antada thaevaikalaich santhippaar-2

    2.karampitiththu nammai nadaththuvaar
    kanmalaimael nammai niruththuvaar-2

    3.valuvaamal nammai kaaththiduvaar sonna
    vaakkuththaththangal niraivaettuvaar- 2

    1. neetheeyin paathaiyil nadaththuvaar
      nilalpola nam vaalvil thodaruvaar-2
  • Karthar Periyavar Nam Appa Periyavar கர்த்தர் பெரியவர் – நம் அப்பா பெரியவர்

    கர்த்தர் பெரியவர் – நம் அப்பா பெரியவர்
    தேவன் பெரியவர் நம் இயேசு பெரியவர்

    1. அன்னாளைப் போல கர்த்தரிடம்
      இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
      அன்னாளை நினைத்த பெரியவர்
      நம்மையும் நினைத்திடுவார்
    2. சாலமோனைப் போல கர்த்தரிடம்
      ஞானத்தை(யே) கேளுங்கள்
      அந்த ஞானத்தை தந்த பெரியவர்
      நமக்கு நிச்சமாய் தந்திடுவார்
    3. எலியாவைப் போல கர்த்தருக்காய்
      பெருங்காரியம் செய்திடுங்கள் – அன்று
      எலிசாவை நடத்திய தேவனே
      இன்று நம்மையும் நடத்துவார்

    Karthar Periyavar Nam Appa Periyavar Lyrics in English

    karththar periyavar – nam appaa periyavar
    thaevan periyavar nam Yesu periyavar

    1. annaalaip pola karththaridam
      iruthayaththai oottividungal
      annaalai ninaiththa periyavar
      nammaiyum ninaiththiduvaar
    2. saalamonaip pola karththaridam
      njaanaththai(yae) kaelungal
      antha njaanaththai thantha periyavar
      namakku nichchamaay thanthiduvaar
    3. eliyaavaip pola karththarukkaay
      perungaariyam seythidungal – antu
      elisaavai nadaththiya thaevanae
      intu nammaiyum nadaththuvaar