Author: admin

  • Kaarru Veesuthae Thaesaththin Maelae காற்று வீசுதே தேசத்தின் மேலே

    காற்று வீசுதே தேசத்தின் மேலே
    ஆவியானவர் வந்து விட்டாரே

    எல்லோரும் பாடுங்கள்
    களிப்பாய் பாடுங்கள்
    இயேசுவைப் போற்றி
    கெம்பீரமாய் பாடுங்கள்

    1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
      மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே (எல்லோரும்…)
    2. பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு
      பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே (எல்லோரும்…)
    3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
      தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே (எல்லோரும்…)
    4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
      சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே (எல்லோரும்;…)
    5. பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவே
      பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே (எல்லோரும்…)

    Kaarru Veesuthae Thaesaththin Maelae Lyrics in English

    kaattu veesuthae thaesaththin maelae
    aaviyaanavar vanthu vittarae

    ellorum paadungal
    kalippaay paadungal
    Yesuvaip potti
    kempeeramaay paadungal

    1. paasamaay vanthavarae naesamaay thaeti vanthu
      mosamaay vaalntha ennai meetteduththeerae (ellorum…)
    2. pisaasin vallamaikalai anaiththaiyum murinthu pottu
      pithaavin siththamathai mutiththu vaiththeerae (ellorum…)
    3. aelaiyaay iruntha ennai selvanthanaakkidavae
      thariththiraraanavarae sthoththirippaenae (ellorum…)
    4. narakai jeyiththidavae narar pinni neekkidavae
      siluvai meethinilae jeevan thantheerae (ellorum;…)
    5. paraloka vaalvuthanai parisaakath thanthidavae
      pooloka vaalvai namakkaay virumpi ettaீrae (ellorum…)
  • Kaariyathai Vaaikapannum Dhevan காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்

    காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்
    இந்த ஆண்டும் என் முன்னே போவார் – 2
    காரியங்கள் மாறுதலாய் முடிய
    இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் (உன் காரியங்கள்) – 2

    இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
    அவரே என் யுத்தங்களை செய்வார்
    இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
    வாக்குதத்தம் சுதந்தரிக்க செய்வார் – 2

    1. கன்மலையை தடாகமாய் மாற்றி
      கற்பாறை நீரூற்றாக செய்வார் (உன்) – 2
      அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
      ஏழு வழியை இந்த ஆண்டு (நாளில்) திறப்பார் (ஓ)- 2

    அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்வாரே

    1. வானத்தின் பலகணியை திறந்து
      இடங்கொள்ளா ஆசிதனை தருவார் (ஓ)- 2
      அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
      களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார் (ஓ) – 2
    2. தாமதங்கள் துரிதமாக மாறி
      அற்புதங்கள் கையில் சேர செய்வார் (உன்) – 2
      நஷ்ட பட்டு இழந்து போனதெல்லாம்
      இந்த ஆண்டு இரண்டு மடங்கு தருவார் (நீ) – 2

    காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்
    இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் – 2
    காரியங்கள் மாறுதலாய் முடிய
    இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
    கோணலாக தோன்றுவதை எல்லாம்
    நேராக மாற்றி எனக்கு தருவார்

    இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு


    Kaariyathai Vaaikapannum Dhevan Lyrics in English

    kaariyaththai vaaykka pannnum thaevan
    intha aanndum en munnae povaar – 2
    kaariyangal maaruthalaay mutiya
    intha aanndum arputhangal seyvaar (un kaariyangal) – 2

    intha aanndu kirupaiyin aanndu
    avarae en yuththangalai seyvaar
    intha aanndu makimaiyin aanndu
    vaakkuthaththam suthantharikka seyvaar – 2

    1. kanmalaiyai thadaakamaay maatti
      karpaarai neeroottaாka seyvaar (un) – 2
      atainthu pona oru valikku pathilaay
      aelu valiyai intha aanndu (naalil) thirappaar (o)- 2

    amukki kulukki sarinthu vila seyvaarae

    1. vaanaththin palakanniyai thiranthu
      idangaொllaa aasithanai tharuvaar (o)- 2
      amukki kulukki sarinthu vila seythu
      kalanjiyangal nirampi valiya seyvaar (o) – 2
    2. thaamathangal thurithamaaka maari
      arputhangal kaiyil sera seyvaar (un) – 2
      nashda pattu ilanthu ponathellaam
      intha aanndu iranndu madangu tharuvaar (nee) – 2

    kaariyaththai vaaykka pannnum thaevan
    intha aanndum (varusham) en munnae povaar – 2
    kaariyangal maaruthalaay mutiya
    intha aanndum arputhangal seyvaar
    konalaaka thontuvathai ellaam
    naeraaka maatti enakku tharuvaar

    intha aanndu kirupaiyin aanndu

  • Kaariyathai kaikoodi varappannuvar காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்

    காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
    சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2

    இது கிருபையின் நேரம், மகிமையின் ஆண்டு
    காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2

    அல்லேலூயா அல்லேலுயா
    காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4

    1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே
      கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2
      கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே
      கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே
      இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)
    2. வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே
      புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே & 2
      கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே
      இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே
      இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)

    Kaariyathai kaikoodi varappannuvar Lyrics in English

    kaariyaththaik kaikkooti varappannnuvaar
    suthanthiraththai nichchayamaay pitikkach seyvaar — & 2

    ithu kirupaiyin naeram, makimaiyin aanndu
    kaariyangal vaaykkappannnum naeram & 2

    allaelooyaa allaeluyaa
    kaariyangal vaaykkappannnum naeram & 4

    1. ninaippatharkum jepippatharkum athikamaaka seythiduvaarae
      kaettathellaam niraivaetti en thakappan uyarththiduvaarae & 2
      koduththa vaakkuththaththam Complete ah thanthiduvaarae
      kannnneer jepamellaam kalippaaka maattiduvaarae
      Yesu raajaa enna raajaavaa maattidum naeram (2)
    2. valathu idathu pakkam peruka kirupai seythiduvaarae
      puthiya aaseekalai pirathishtai seythu thanthiduvaarae & 2
      kadanae illaamal allikkodukka vaiththiduvaarae
      ini vetkam illaama thalai nimirach seythiduvaarae
      Yesu raajaa enna raajaavaa maattidum naeram (2)
  • Kaariyam Maaruthalaai காரியம் மாறுதலாய்

    காரியம் மாறுதலாய் முடியும்
    நம் கர்த்தரின் கரம் அதை செய்யும்
    நம் தேசத்தின் சிறையிருப்பை
    மாற்றிடும் காலம் இதுவே

    எழுந்துவா ஜெபித்திட எழுந்துவா துதித்திட
    நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்

    துதித்திட கதவுகள் திறக்கும்
    தூத சேனை வந்திறங்கும்
    கட்டுகள் யாவும் அறுந்திடும்
    கதவுகளெல்லாம் திறந்திடும்

    ஜெபித்திட அக்கினி இறங்கும்
    கர்த்தரின் வல்லமை விளங்கும்
    பாகலின் ஆவிகள் அழியும்
    தேசம் தேவனை அறியும்

    சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்
    சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடும்
    தேவனின் ராஜ்ஜியம் வளர்ந்திட
    தேவ சபைகள் பெருகிடும்


    Kaariyam Maaruthalaai Lyrics in English

    kaariyam maaruthalaay mutiyum
    nam karththarin karam athai seyyum
    nam thaesaththin siraiyiruppai
    maattidum kaalam ithuvae

    elunthuvaa jepiththida elunthuvaa thuthiththida
    naam jepiththida naam thuthiththida siraiyiruppu maaridum

    thuthiththida kathavukal thirakkum
    thootha senai vanthirangum
    kattukal yaavum arunthidum
    kathavukalellaam thiranthidum

    jepiththida akkini irangum
    karththarin vallamai vilangum
    paakalin aavikal aliyum
    thaesam thaevanai ariyum

    saththuruvin kottaைkal thakarnthidum
    saaththaanin raajjiyam alinthidum
    thaevanin raajjiyam valarnthida
    thaeva sapaikal perukidum

  • Kaarirul Vaelaiyil Kadum Kulir காரிருள் வேளையில் கடும் குளிர்

    காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்
    ஏழைக் கோலமதாய்
    பாரினில் வந்தது மன்னவனே
    உன் மாதயவே தயவு

    1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
      தூதர்கள் பாடினரே
      வீற்றிருக்காமல் மானிடனானது
      மா தயவே தயவு
    2. விண்ணில் தேவனுக்கே மகிமை
      மண்ணில் சமாதானம்
      மனுஷரில் பிரியம் மலர்ந்தது உன்தன்
      மா தயவே தயவு

    Kaarirul Vaelaiyil Kadum Kulir Lyrics in English

    kaarirul vaelaiyil kadum kulir naeraththil
    aelaik kolamathaay
    paarinil vanthathu mannavanae
    un maathayavae thayavu

    1. vinnnulakil simmaasanaththil
      thootharkal paatinarae
      veettirukkaamal maanidanaanathu
      maa thayavae thayavu
    2. vinnnnil thaevanukkae makimai
      mannnnil samaathaanam
      manusharil piriyam malarnthathu unthan
      maa thayavae thayavu
  • Kaarirul soozhnthidum neram காரிருள் சூழ்ந்திடும் நேரம்

    காரிருள் சூழ்ந்திடும் நேரம்
    கர்த்தாவே என் பக்கம் நீரே
    யாருமின்றி அனாதையாய்
    அலைந்த என்னை அணைத்தீரே

    கானகப்பாதை நான் செல்கையில்
    காதலனாய் வந்து காத்திடுவீர்
    கரடானாலும் முரடானாலும்
    காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர்

    மாராவின் தண்ணீர் மதுரமாகும்
    மாறாத நேசர் நீர் சொந்தமானீர்
    இயேசுநாதா (2) எளியேனைக்
    கரங்கொண்டு தாங்கிடுவீர்

    என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
    கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதே
    எந்தன் கொம்பை எண்ணெயினால்
    அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர்


    Kaarirul soozhnthidum neram Lyrics in English

    kaarirul soolnthidum naeram
    karththaavae en pakkam neerae
    yaaruminti anaathaiyaay
    alaintha ennai annaiththeerae

    kaanakappaathai naan selkaiyil
    kaathalanaay vanthu kaaththiduveer
    karadaanaalum muradaanaalum
    kaarunnyaththaal ennaith thaettiduveer

    maaraavin thannnneer mathuramaakum
    maaraatha naesar neer sonthamaaneer
    Yesunaathaa (2) eliyaenaik
    karangaொnndu thaangiduveer

    en kaalkal sarukkum pothellaam
    karththaavae nin kirupai thaangiduthae
    enthan kompai ennnneyinaal
    apishaekam pannnni uyarththiduveer

  • Kaarirul En Nesa Deepame காரிருளில் என் நேச தீபமே

    1. காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்
      வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்
      நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன்
      ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமே
    2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலே
      ஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமேன்
      உல்லாசம் நாடினேன் திகிலிலும்
      வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்
    3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் இனிமேலும்
      காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்
      உதய நேரம் வரக் களிப்பேன்
      மறைந்து போன நேசரைக் காண்பேன்

    Kaarirul En Nesa Deepame – காரிருளில் என் நேச தீபமே Lyrics in English

    Kaarirul En Nesa Deepame

    1. kaarirulil en naesa theepamae nadaththumaen
      vaeroliyillai veedum thooramae nadaththumaen
      neer thaangin thoorakkaatchi aasiyaen
      or ati mattum en mun kaattumae
    2. en ishdappati nadanthaen, aiyo! munnaalilae
      oththaasai thaedavillai ippotho nadaththumaen
      ullaasam naatinaen thikililum
      veempu konntaen anpaaka manniyum
    3. immattum ennai aaseervathiththeer inimaelum
      kaadaatru setru kuntil thaevareer nadaththidum
      uthaya naeram varak kalippaen
      marainthu pona naesaraik kaannpaen
  • Kaappaar Unnaik Kaappaar காப்பார் உன்னைக் காப்பார்

    காப்பார் உன்னைக் காப்பார்
    காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்
    கலங்காதே மனமே — காத்திடுவார்

    1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்
      ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
      என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்
      ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் — காப்பார்
    2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
      இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
      இல்லையோ , இல்லையோ , இல்லையோ
      மனஸ்தாபம் கொள்ளவில்லையோ — காப்பார்
    3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
      சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
      ஜெயமும் , கனமும் , சுகமும்
      இரக்கமா யுனக்களிப்பவரும் — காப்பார்
    4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
      காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
      அன்பு கொண்டு மணந்தவரே — காப்பார்
    5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
      காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
      பரிசுத்தத்தில் லங்கரித்தார் — காப்பார்

    Kaappaar Unnaik Kaappaar Lyrics in English

    kaappaar unnaik kaappaar
    kaaththavar kaappaar , innum inimael kaaththiduvaar
    kalangaathae manamae — kaaththiduvaar

    1. kanndunai alaiththavar karamathaippaar , avar kaividaathiruppaar
      aanndukal thorum unakkavar aliththa aasikalai ennnnippaar
      ennnippaar , ennnippaar , ennnnippaar
      ontaொntayathai ennnnippaar — kaappaar
    2. isravaelukku vaakkuppati inpak kaanaan alikkavillaiyo
      ippothivarkalai nirmoolam seyvathentu pinnum irangavillaiyo
      illaiyo , illaiyo , illaiyo
      manasthaapam kollavillaiyo — kaappaar
    3. veelchchiyil viliththunnai meetpavarum ikalnthuvidaathu serppavarum
      sirsila vaelaiyil sitchaைyinaalunnaik kittiyiluppavarum
      jeyamum , kanamum , sukamum
      irakkamaa yunakkalippavarum — kaappaar
    4. thaayin kattil varumun unakkaayth thaamuyir koduththavarae
      kaayeenaip polunaith thallividaathu kai koduththeduththavarae
      anpu konndu mananthavarae — kaappaar
    5. aatharavaayp pala aanndukalil paran ataikkalamaayirunthaar
      kaathaludannavar kaippanni seythidak kanivudanaathariththaar
      parisuththaththil langariththaar — kaappaar
  • Kaanikai Tharuvaye காணிக்கை தருவாயே

    காணிக்கை தருவாயே கர்த்தற்குனது
    காணிக்கை தருவாயே

    அனுபல்லவி

    காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு
    வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால் – காணிக்கை

    சரணங்கள்

    1. பத்தில் ஒரு பங்குதானோ பந்தினில் கட்டுப்
      பட்ட யூதருக் கல்லவோ
      அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்
      பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ – காணிக்கை
    2. உன்றன் உடல் உன் சொந்தமோ அதைவிடினும்
      உன்மனம் ஆவி பந்தமோ
      அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்
      உன்னையும் உன்னுடைய உடைமையுல்லோ ஈவாய் – காணிக்கை
    3. தேவ வசனம் பரப்ப அதனுக்கென்று
      செல்லும் செலவை நிரப்ப
      ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
      தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே – காணிக்கை
    4. பயிர் பலன் மூலமாகவும் இன்னும் பலர்க்குப்
      பணம் முதலானதாகவும்
      உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
      உயிரைப் படைப்பாயோ உடைமையைக் கொடாவிடில் – காணிக்கை

    Kaanikai Tharuvaye Lyrics in English

    Kaanikai Tharuvaye
    kaannikkai tharuvaayae karththarkunathu
    kaannikkai tharuvaayae

    anupallavi

    kaannikkai thaa unakkaay aannik kurisi laesu
    vaenum ratchippinai nee kaanumpati seythathaal – kaannikkai

    saranangal

    1. paththil oru panguthaano panthinil kattup
      patta yootharuk kallavo
      aththan unakkaliththa alavai utkaarnthu paarththaal
      paththil oru pangalla pala madangaakidaatho – kaannikkai
    2. untan udal un sonthamo athaivitinum
      unmanam aavi panthamo
      annavan utaiya thentarinthu unarvaayaanaal
      unnaiyum unnutaiya utaimaiyullo eevaay – kaannikkai
    3. thaeva vasanam parappa athanukkentu
      sellum selavai nirappa
      aavalaay yaesuvukkae aaraathanai nadaththum
      thaeva ooliyaththukkum thirantha manathudanae – kaannikkai
    4. payir palan moolamaakavum innum palarkkup
      panam muthalaanathaakavum
      uyirp piraanniyaakavum uthavum kadavulukkae
      uyiraip pataippaayo utaimaiyaik kodaavitil – kaannikkai
  • Kaanikai Thanthom Karthave காணிக்கை தந்தோம் கர்த்தாவே

    காணிக்கை தந்தோம் கர்த்தாவே
    ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
    கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
    காணிக்கை யார் தந்தார் நீர்தானே
    நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
    மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)
    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2
    ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
    ஆனாலும் உம் அன்பு மாறாது
    ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
    ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)
    கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2
    கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
    கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே


    Kaanikai Thanthom Karthave Lyrics in English

    kaannikkai thanthom karththaavae
    aettukkol emmaiyae ippothae
    kannkonndu paarum kadavulin makanae
    kaannikkai yaar thanthaar neerthaanae
    naangal thantha kaannikkai ellaam iratchakar koduththathu
    maekam sinthum neerththuli ellaam poomi koduththathu (2)
    kaalangal maarum kolangal maarum – 2
    aakaayam maarum kadavulin makanae
    aanaalum um anpu maaraathu
    aalayaththin vaasal vanthaal alukai varukuthae
    aanamattum aluthuvittal amaithi perukuthae (2)
    kannnneeraip pola kaannikkai illai -2
    kannkonndu paarum kadavulin makanae
    kannnneerin arththangal neer thaanae