Author: admin

  • Kaangindra devan nam காண்கின்ற தேவன் நம்

    காண்கின்ற தேவன் நம் தேவன்
    காலமும் அவரைத் துதித்திடுவோம்

    அல்லேலூயா அல்லேலூயா

    தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
    தரணியில் எவரேனும் உண்டோ
    கர்த்தர் இயேசு காண்கின்றார்
    கருத்தாய் அவரைத் தேடிடுவோம்

    ஆவியிலே நொறுக்கப்பட்டு
    ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
    அன்பு இதயம் காண்கின்றார்
    அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு

    உத்தம இதயம் கொண்டிருப்போம்
    உன்னத வல்லமை பெற்றிடுவோம்
    கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
    கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன

    ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
    அவரது கிருபைக்கு காத்திருந்தால்
    பஞ்ச காலத்தில் உணவளிக்க
    பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.


    Kaangindra devan nam Lyrics in English

    kaannkinta thaevan nam thaevan
    kaalamum avaraith thuthiththiduvom

    allaelooyaa allaelooyaa

    thammaith thaedum unarvullavan
    tharanniyil evaraenum unntoo
    karththar Yesu kaannkintar
    karuththaay avaraith thaediduvom

    aaviyilae norukkappattu
    aanndavar vaarththaikku nadungukira
    anpu ithayam kaannkintar
    anukiduvom naam kannnneerodu

    uththama ithayam konntiruppom
    unnatha vallamai pettiduvom
    karththarin kannkal poomiyengum
    karuththaay Nnokkip paarkkintana

    aanndavar vaarththaikkup payanthu
    avarathu kirupaikku kaaththirunthaal
    panja kaalaththil unavalikka
    parivaay nammaip paarkkintar.

  • Kaanamarpona Ennai காணாமற்போன என்னை

    காணாமற்போன என்னை
    நல் மேய்ப்பர் தேடினார்
    தன் தோளின் மேலில் போட்டுக்
    கொண்டன்பாய் ரட்சித்தார்
    மேலோக தூதர் கூடினார்
    ஆனந்தம் பொங்கிப் பாடினார்

    நேசர் தேடி வந்தார்
    ரத்தம் சிந்தி மீட்டார்
    என்னைச் சொந்தமாகக் கொண்டனர்
    பேரன்போடு சேர்த்துக் கொண்டனர்

    1. என் பாவக் காயங் கட்டி
      வீண் பயம் நீக்கினார்
      என் சொந்தமாக உன்னைக்
      கொண்டேனே பார் என்றார்
      அவ்வின்ப சத்தங் கேட்கவே
      என் உள்ளம் பூரிப்பாயிற்றே
    2. பேரன்பராகத் தோன்றி
      ஐங்காயம் காட்டினார்
      முட்கிரீடம் சூடினோராய்
      என்னோடு பேசினார்
      இப்பாவியினிமித்தமே
      படாதபாடு பட்டாரே
    3. இப்போது இன்பமாக
      என் மீட்பர் பாதத்தில்
      ஒப்பற்ற திவ்ய அன்பதை
      தியானஞ் செய்கையில்
      ஆனந்தம் பொங்கிப்
      பூரிப்பேன் மென்மேலும்
      பாடிப் போற்றுவேன்
    4. ஆட்கொண்ட நாதர் பின்பு
      பிரசன்ன மாகுவார்
      தம் ஞான மணவாட்டி
      சேர்த்தென்றும் வாழ்விப்பார்
      எம் மாசும் தீங்கும் நீங்கிப்போம்

    பேரின்பம் பெற்று வாழுவோம்


    Kaanamarpona Ennai Lyrics in English

    kaannaamarpona ennai
    nal maeyppar thaetinaar
    than tholin maelil pottuk
    konndanpaay ratchiththaar
    maeloka thoothar kootinaar
    aanantham pongip paatinaar

    naesar thaeti vanthaar
    raththam sinthi meettar
    ennaich sonthamaakak konndanar
    paeranpodu serththuk konndanar

    1. en paavak kaayang katti
      veenn payam neekkinaar
      en sonthamaaka unnaik
      konntaenae paar entar
      avvinpa saththang kaetkavae
      en ullam poorippaayitte
    2. paeranparaakath thonti
      aingaayam kaattinaar
      mutkireedam sootinoraay
      ennodu paesinaar
      ippaaviyinimiththamae
      padaathapaadu pattarae
    3. ippothu inpamaaka
      en meetpar paathaththil
      oppatta thivya anpathai
      thiyaananj seykaiyil
      aanantham pongip
      poorippaen menmaelum
      paatip pottuvaen
    4. aatkonnda naathar pinpu
      pirasanna maakuvaar
      tham njaana manavaatti
      serththentum vaalvippaar
      em maasum theengum neengippom
      paerinpam pettu vaaluvom
  • Kaanagap Paatha Kaadum கானகப் பாதை காடும்

    கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும்
    மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் வேகம் நடந்தே முன்செல்லுவாய்
    பயப்படாதே கலங்கிடாதே பாரில் ஏசு காத்திடுவார்
    பரம கானான் விரைந்து சேர்வாய் பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்

    2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே
    ஏசுவின் பின்னே நடந்தே
    தூய பஸ்கா நீ புசித்தே
    தேவ பெலனால் முன்செல்லுவாய்

    3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும்
    கூட்டமாய் சென்றே கடப்பாய்
    சத்ரு சேனை மூழ்கி மாளும் ஜெயம்
    சிறந்தே முன்செல்லுவாய்

    4.கசந்த மாரா உன்னைக் கலக்கும்
    கஷ்டத்தால் உன் கண் சொரியும்
    பின் திரும்பிச் சோர்ந்திடாதே
    நன்மை அருள்வார் முன்செல்லுவாய்

    5.கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
    கோர யோர்தான் வந்தெதிர்க்கும்
    தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
    தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய்

    6.புதுக்கனிகள் கானான் சிறப்பே
    பாலும் தேனும் ஓடிடுமே
    இந்தக் கானான் கால் மிதித்து
    சொந்தம் அடைய முன்செல்லுவாய்


    Kaanagap Paatha Kaadum Lyrics in English

    kaanakap paathai kaadum malaiyum kaarirulae soolnthitinum
    maekasthampam akkini thontum vaekam nadanthae munselluvaay
    payappadaathae kalangidaathae paaril aesu kaaththiduvaar
    parama kaanaan virainthu servaay paramanodentum vaalnthiduvaay

    2.ekipthin paava vaalkkai veruththae
    aesuvin pinnae nadanthae
    thooya paskaa nee pusiththae
    thaeva pelanaal munselluvaay

    3.kadalaip paarum iranndaaypilakkum
    koottamaay sente kadappaay
    sathru senai moolki maalum jeyam
    siranthae munselluvaay

    4.kasantha maaraa unnaik kalakkum
    kashdaththaal un kann soriyum
    pin thirumpich sornthidaathae
    nanmai arulvaar munselluvaay

    5.kodumai yuththam unnai madakkum
    kora yorthaan vanthethirkkum
    thaangum karththar ongum kaiyaal
    thookkich sumappaar munselluvaay

    6.puthukkanikal kaanaan sirappae
    paalum thaenum odidumae
    inthak kaanaan kaal mithiththu
    sontham ataiya munselluvaay

  • Kaanaan Enpathu Valamulla Naadu கானான் என்பது வளமுள்ள நாடு

    கானான் என்பது வளமுள்ள நாடு
    தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு
    இழந்த அந்நாட்டை யோசுவாவோடு
    இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார்
    தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால்
    தகர்ந்தது எரிகோ மதில்
    சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமே
    தேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம்
    ஆர்ப்பரிப்போமே


    Kaanaan Enpathu Valamulla Naadu Lyrics in English

    kaanaan enpathu valamulla naadu
    thaenum paalum odum nalla naadu
    ilantha annaattaை yosuvaavodu
    isravaelar thirumpap pettaாr
    thaevanukkuk geelppatinthathaal
    thakarnthathu eriko mathil
    saaththaanin kottaைyaith thakarththida naamumae
    thaevanukkuk geelppativomae vettik geetham
    aarpparippomae

  • Kaalaththin Palanai காலத்தின் பலனை

    இயேசுவே நீரே நித்தியர்

    1. காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்
      காலத்தின் அதிபதியே
      ஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகு
      உம் சித்தத்தில் செல்வதாக

    இயேசுவே நீரே நித்தியர்!
    தேவனே நீரே நித்தியர்!
    காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனே
    நீரே நித்தியர்!

    1. புல்லைப் போல் ஒழியும் தொல்லைகள் நிறைந்த
      எம் வாழ்வு வெறும் கதையே
      குமிழிபோல் தோன்றி மறைந்திடும் மாயை
      உணர்த்திட உதவி செய்யும்
    2. உலகத்து ஆசை மாமிசப்பற்று
      சிற்றின்ப சோதனைகள்
      இயேசுவே எங்களை விடுதலை செய்யும்
      நித்திய வாசியாக்கும்

    Kaalaththin Palanai Lyrics in English

    Yesuvae neerae niththiyar

    1. kaalaththin palanai ullaththil unarththum
      kaalaththin athipathiyae
      njaalaththil enathu vaalkkaiyaam padaku
      um siththaththil selvathaaka

    Yesuvae neerae niththiyar!
    thaevanae neerae niththiyar!
    kaalaththil adangaa karththanaam thaevanae
    neerae niththiyar!

    1. pullaip pol oliyum thollaikal niraintha
      em vaalvu verum kathaiyae
      kumilipol thonti marainthidum maayai
      unarththida uthavi seyyum
    2. ulakaththu aasai maamisappattu
      sittinpa sothanaikal
      Yesuvae engalai viduthalai seyyum
      niththiya vaasiyaakkum
  • Kaalathin Arumaiyai Arinthu காலத்தின் அருமையை அறிந்து

    காலத்தின் அருமையை அறிந்து

    வாழாவிடில் கண்ணீர் விடுவாயே

    அனுபல்லவி

    ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை

    சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்

    சரணங்கள்

    1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
      வருங்கோபம் அறிந்திடாயோ?
      கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட
      காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? — காலத்தின்
    2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
      நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
      தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
      தவணையின் காலமிவ் வருட முடியலாமே — காலத்தின்
    3. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
      யேசுனை அழைத்தாரல்லோ,
      மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
      பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? — காலத்தின்
    4. முந்தின எரேமியா அனனியாவுக் குரைத்த
      முடிவை நீ அறியாயோ?
      எந்தக் காலமும் சிரஞ்சீவி யென்றெண்ணிடாமல்
      ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? — காலத்தின்

    Kaalathin Arumaiyai Arinthu Lyrics in English

    kaalaththin arumaiyai arinthu

    vaalaavitil kannnneer viduvaayae

    anupallavi

    njaalaththil paranunnai naattina Nnokkaththai

    seelamaay ninaiththavar moolam pilaiththiduvaay

    saranangal

    1. mathiyai ilanthu theeya valiyilae nee nadanthaal
      varungaோpam arinthidaayo?
      kathiyaam ratchannya vaalvai nee kanndu makilnthida
      kaalam ithuvae nalla kaalam entariyaayo? — kaalaththin
    2. Nnovaavin kaalaththil noottirupathu aanndu
      Nnokkippin aliththaaranto?
      thaavaatha kirupaiyaal thaangi unakkaliththa
      thavannaiyin kaalamiv varuda mutiyalaamae — kaalaththin
    3. ikaththinil ooliyam akaththinil niraivaera
      yaesunai alaiththaarallo,
      makaththuva vaelaiyai maranthu thoonguvaayaanaal
      pakarkaala mutiyum raakkaalaththilenna seyvaay? — kaalaththin
    4. munthina eraemiyaa ananiyaavuk kuraiththa
      mutivai nee ariyaayo?
      enthak kaalamum siranjaீvi yentennnnidaamal
      aetta aayaththamaay eppothum irunthidaayo? — kaalaththin
  • Kaalamoe Kognsam Thaan Meethi காலமோ கொஞ்சம் தான் மீதி

    காலமோ கொஞ்சம் தான் மீதி
    தேவையோ ஏராளம் உண்டே
    பின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்
    முன்னோக்கியே சென்றிட வேண்டும்
    இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே

    1. சுவிசேஷ ஊழியம் செய்ய
      தவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றே
      உலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும்
      உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்
      இயேசு சமாதானம் அருளுவதாலே
    2. முன்னோடியாய் செல்லும் இயேசு
      பின்னேகியே நாமும் செல்வோம்
      நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்
      முழு மனதுடன் முன்னேறி செல்வோம்
      விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே
    3. நம்மையனுப்பிய தேவனின் நாமம்
      அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்
      பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்று
      முழுப்பொறுப்பினை நாம் ஏற்க வேண்டும்
      வல்ல தேவன் நம்மோடிருப்பதாலே

    Kaalamoe Kognsam Thaan Meethi Lyrics in English

    kaalamo konjam thaan meethi
    thaevaiyo aeraalam unntae
    pin Nnokkippaaraamal itainintuvidaamal
    munnokkiyae sentida vaenndum
    Yesu raajan nammotiruppathaalae

    1. suvisesha ooliyam seyya
      thavirppom vetkam yaavaiyum inte
      ulakam pakaiththaalum kashdam ethu vanthaalum
      unnmai valiyinai arivikka vaenndum
      Yesu samaathaanam aruluvathaalae
    2. munnotiyaay sellum Yesu
      pinnaekiyae naamum selvom
      nammai naamae veruppom siluvaiyai eduppom
      mulu manathudan munnaeri selvom
      visuvaasikalaay naam iruppathaalae
    3. nammaiyanuppiya thaevanin naamam
      athai ariyaathor arinthidach seyvom
      pakal paranthotittu irul vanthaayittu
      mulupporuppinai naam aerka vaenndum
      valla thaevan nammotiruppathaalae
  • Kaalamo Selluthe காலமோ செல்லுதே

    காலமோ செல்லுதே
    வாலிபம் மறையுதே (2)
    எண்ணமெல்லாம் வீணாகும்
    கல்வியெல்லாம் மண்ணாகும் (2)

    மகிமையில் இயேசுவை
    தரிசிக்கும் நேரத்தில்
    அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

    கருணையின் அழைப்பினால்
    மரண நேரம் வருகையில்
    சுற்றத்தார் சூழ்ந்திட
    பற்றுள்ளோர் பதறிட

    – மகிமையில்

    தும்பமெல்லாம் மறைந்துபோம்
    இன்னல் எல்லாம் மாறிப்போம் (2)
    வியாதியெல்லாம் நீங்கிப்போம்
    நாயகன் நம் இயேசுவால் (2)
    – மகிமையில்

    வாழக்கையை இயேசுவால்
    நாட்களை பூரிப்பாய்
    ஓட்டத்தை முடித்திட
    காத்துக்கொள் விசுவாசத்தை
    – மகிமையில்

    உலகத்தின் மாந்தரே
    கலங்காது வாருமே

    இயேசுவை அண்டினால்

    கிலேசங்கள் மாறிப்போம்

    – மகிமையில்


    Kaalamo Selluthe Lyrics in English

    Kaalamo Selluthe
    kaalamo selluthae
    vaalipam maraiyuthae (2)
    ennnamellaam veennaakum
    kalviyellaam mannnnaakum (2)

    makimaiyil Yesuvai
    tharisikkum naeraththil
    antha naal nalla naal paakya naal

    karunnaiyin alaippinaal
    marana naeram varukaiyil
    suttaththaar soolnthida
    pattullor patharida

    • makimaiyil

    thumpamellaam marainthupom
    innal ellaam maarippom (2)
    viyaathiyellaam neengippom
    naayakan nam Yesuvaal (2)

    • makimaiyil

    vaalakkaiyai Yesuvaal
    naatkalai poorippaay
    ottaththai mutiththida
    kaaththukkol visuvaasaththai

    • makimaiyil

    ulakaththin maantharae
    kalangaathu vaarumae
    Yesuvai anntinaal
    kilaesangal maarippom

    • makimaiyil
  • Kaalamellam ummai paatiduven காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்

    காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்
    ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன்
    உள்ளம் எல்லாம்
    உம்மையே தியானிப்பேன்
    எண்ணமும் ஏக்கமும் நீர் தானே

    ஆராதிப்பேன்-2
    ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்

    என் தஞ்சமும் என் கேடகமும்
    என்றும் நீர் தானே
    என் அடைக்கலம் என் கோட்டையும்
    என் துருகமும் நீர் தானே

    என் வழியும் என் சத்தியமும்
    ஜீவனும் நீர் தானே
    என் பெலனும் என் கன்மலையும்
    என் துணையும் நீர் தானே


    Kaalamellam ummai paatiduven Lyrics in English

    kaalamellaam ummai paadiduvaen
    aaththuma naesarae ummai thaediduvaen
    ullam ellaam
    ummaiyae thiyaanippaen
    ennnamum aekkamum neer thaanae

    aaraathippaen-2
    aaviyodum unnmaiyodum aaraathippaen

    en thanjamum en kaedakamum
    entum neer thaanae
    en ataikkalam en kottaைyum
    en thurukamum neer thaanae

    en valiyum en saththiyamum
    jeevanum neer thaanae
    en pelanum en kanmalaiyum
    en thunnaiyum neer thaanae

  • Kaalamae Ummaith Thaeduvaen காலமே உம்மைத் தேடுவேன்

    1. காலமே உம்மைத் தேடுவேன்
      கர்த்தனே முழு மனதுடன்
      தண்ணீரில்லா நிலத்திலே
      தாகத்துடன் தேடிடுவேன்
      தேவா வாஞ்சிக்கிறேன்
    2. உம் வல்லமையும் மகிமையும்
      காணவே மிக ஆசையே
      உம் கிருபை சிறந்தது
      உயிரிலும் உயர்ந்தது
      உம்மை துதித்திடுவேன்
    3. வாழ்நாள் முழுதும் வாழ்த்துவேன்
      உயர்த்துவேன் உம் நாமத்தை
      திர்ப்தியாகும் என் ஆத்துமா
      உதடுகள் உம்மைப் போற்றும்
      மகா களிப்புடனே மிக மகிழ்வுடனே
    4. படுக்கையில் உம்மை நினைக்கையில்
      தியானமே நடுச்சாமமே
      நீரே என்றும் எந்தன் துணை
      உம் நிழலில் தங்கிடுவேன்
      களிகூர்ந்திடுவேன்
    5. ஆத்துமா பற்றிக் கொண்டதால்
      உம் வலக்கரம் எனைத் தாங்குதே
      பகைவர்கள் பதராவர்
      பொய்யர்கள் வாய்கள் மூடும்
      களிகூருகிறேன் கர்த்தர் சமூகத்திலே

    Kaalamae Ummaith Thaeduvaen Lyrics in English

    1. kaalamae ummaith thaeduvaen
      karththanae mulu manathudan
      thannnneerillaa nilaththilae
      thaakaththudan thaediduvaen
      thaevaa vaanjikkiraen
    2. um vallamaiyum makimaiyum
      kaanavae mika aasaiyae
      um kirupai siranthathu
      uyirilum uyarnthathu
      ummai thuthiththiduvaen
    3. vaalnaal muluthum vaalththuvaen
      uyarththuvaen um naamaththai
      thirpthiyaakum en aaththumaa
      uthadukal ummaip pottum
      makaa kalippudanae mika makilvudanae
    4. padukkaiyil ummai ninaikkaiyil
      thiyaanamae naduchchaாmamae
      neerae entum enthan thunnai
      um nilalil thangiduvaen
      kalikoornthiduvaen
    5. aaththumaa pattik konndathaal
      um valakkaram enaith thaanguthae
      pakaivarkal patharaavar
      poyyarkal vaaykal moodum
      kalikoorukiraen karththar samookaththilae