Category: Song Lyrics

  • Ippothu Nesa Naatha Thalai Saithu இப்போது, நேச நாதா, தலை சாய்த்து

    1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
      தெளிந்த அறிவோடு ஆவியை
      ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது:
      பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே
    2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம்
      நீர் தாங்கி மனதார மரித்தீர்:
      உம் சாவில் பெலன் ஊற்றே, ஆவியையும்
      அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர்
    3. நல் மீட்பரே, சாவிருள் என்னை சூழ்ந்து
      மரண அவஸ்தை உண்டாகையில்,
      தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து
      ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.

    Ippothu Nesa Naatha Thalai Saithu Lyrics in English

    1. ippothu, naesa naathaa, thalai saayththu
      thelintha arivodu aaviyai
      oppuviththeer pithaavin karameethu:
      ponga nenjam moochchattaொdungitte
    2. saamattum saanthamaay en thukkapaaram
      neer thaangi manathaara mariththeer:
      um saavil pelan ootte, aaviyaiyum
      amaithalaayth thanthaikkukkoppuviththeer
    3. nal meetparae, saavirul ennai soolnthu
      marana avasthai unndaakaiyil,
      thoyyum aaviyil samaathaanam eenthu
      oli unndaakkum achcharaavinil.
  • Ippoovinil Nam Yesuvae இப்பூவினில் நம் இயேசுவே

    இப்பூவினில் நம் இயேசுவே – தேடியே
    மீட்க வந்தார் (2)
    விண்ணோர்களும் பண்பாடவே (2)
    விந்தையாய் இயேசுவே வந்துதித்தார் (2)

    1. அருணோதயம் பூவில் தோன்றினதே
      பாதை காட்டிடவே (2)
      தாவீதின் வேரில் தோன்றினவர்
      தேவ பாலன் இவர் (2)
      – இப்பூவினில்
    2. ஆலோசனை கர்த்தர் நாமமிதே
      வல்ல தேவன் இவர் (2)
      கர்த்தத்துவம் அவர் தோளில் உண்டே
      பாதம் போற்றிடுவோம் (2)
      – இப்பூவினில்
    3. அல்லேலூயா நாம் பாடுவோம்
      மீட்பர் பாரில் வந்தார் (2)
      இம்மானுவேலரை நம் தேவனை
      வாழ்த்தி போற்றிடுவோம் (2)
      – இப்பூவினில்

    Ippoovinil Nam Yesuvae Lyrics in English

    ippoovinil nam Yesuvae – thaetiyae
    meetka vanthaar (2)
    vinnnnorkalum pannpaadavae (2)
    vinthaiyaay Yesuvae vanthuthiththaar (2)

    1. arunnothayam poovil thontinathae
      paathai kaattidavae (2)
      thaaveethin vaeril thontinavar
      thaeva paalan ivar (2)
      – ippoovinil
    2. aalosanai karththar naamamithae
      valla thaevan ivar (2)
      karththaththuvam avar tholil unntae
      paatham pottiduvom (2)
      – ippoovinil
    3. allaelooyaa naam paaduvom
      meetpar paaril vanthaar (2)
      immaanuvaelarai nam thaevanai
      vaalththi pottiduvom (2)
      – ippoovinil
  • Ippoethum Eppoethum இப்போதும் எப்போதும்

    இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
    தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்

    துதிபலி சுகந்த வாசைன
    நன்றி பலி அது உகந்த காணிக்கை

    1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
      தேவனின் கிருபையே பிரசன்னமானீரே
      துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே
    2. தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்
      வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே
    3. நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
      நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா
    4. தேவ பக்தியுடன் தெளிந்த புத்தியோடு
      இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்
    5. சொந்த மகனாக தூய்மையாக்கிடவே
      உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே
    6. மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்
      இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்
    7. நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்
      நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப்பரிசாக

    Ippoethum Eppoethum Lyrics in English

    ippothum eppothum ellaavattirkaakavum
    thanthaiyaam kadavulukku thuthipali seluththiduvom

    thuthipali sukantha vaasaina
    nanti pali athu ukantha kaannikkai

    1. ellaa manitharukkum iratchippu tharukinta
      thaevanin kirupaiyae pirasannamaaneerae
      thuthikkiraen thooyavarae pottukiraen punnnniyarae
    2. theeya naattangal ulakusaarnthavaikal
      verukkach seytheerae vettiyum thantheerae
    3. nerikaedu anaiththinintum meetpu thantheerayyaa
      narseyal seyvatharku aarvam thantheerayyaa
    4. thaeva pakthiyudan thelintha puththiyodu
      immaiyil vaalvatharku payirsi tharukinteer
    5. sontha makanaaka thooymaiyaakkidavae
      ummaiyae paliyaaka oppataiththeer siluvaiyilae
    6. marujenma mulukkinaalum puthithaakkum aaviyaalum
      iratchiththuk kaluvineerae mikuntha irakkaththinaal
    7. neethimaan aakkineerae umathu kirupaiyinaal
      niththiya jeevan thantheerae nirantharapparisaaka
  • Ippo Naam Bethlegem Chendru இப்போ நாம் பெத்லெகேம் சென்று

    1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
      ஆச்சரிய காட்சியாம்
      பாலனான நம் ராஜாவும்
      பெற்றோரும் காணலாம்;
      வான் ஜோதி மின்னிட
      தீவிரித்துச் செல்வோம்,
      தூதர் தீங்கானம் கீதமே
      கேட்போம் இத்தினமாம்.

    2.இப்போ நாம் பெத்லெகேம் சென்று
    ஆச்சரிய காட்சியாம்
    பாலனான நம் ராஜாவும்
    பெற்றோரும் காணலாம்;
    தூதரில் சிறியர்
    தூய தெய்வ மைந்தன்;
    உன்னத வானலோகமே
    உண்டிங் கவருடன்.

    1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
      ஆச்சரிய காட்சியாம்
      பாலனான நம் ராஜாவும்
      பெற்றோரும் காணலாம்;
      நம்மை உயர்த்துமாம்
      பிதாவின் மகிமை!
      முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,
      போற்றுவோம் தெய்வன்பை.
    2. அப்போ நாம் ஏகமாய்க் கூடி
      விஸ்வாசத்தோடின்றே
      சபையி தங்கும் பாலனின்
      சந்நிதி சேர்வோமே;
      மகிழ்ந்து போற்றுவோம்
      ஜோதியில் ஜோதியே!
      கர்த்தா! நீர் பிறந்த தினம்
      கொண்டாடத் தகுமே.

    Ippo Naam Bethlegem Chendru Lyrics in English

    1. ippo naam pethlekaem sentu
      aachchariya kaatchiyaam
      paalanaana nam raajaavum
      pettaோrum kaanalaam;
      vaan jothi minnida
      theeviriththuch selvom,
      thoothar theengaanam geethamae
      kaetpom iththinamaam.

    2.ippo naam pethlekaem sentu
    aachchariya kaatchiyaam
    paalanaana nam raajaavum
    pettaோrum kaanalaam;
    thootharil siriyar
    thooya theyva mainthan;
    unnatha vaanalokamae
    unnting kavarudan.

    1. ippo naam pethlekaem sentu
      aachchariya kaatchiyaam
      paalanaana nam raajaavum
      pettaோrum kaanalaam;
      nammai uyarththumaam
      pithaavin makimai!
      munthi nammil anpukoornthaar,
      pottuvom theyvanpai.
    2. appo naam aekamaayk kooti
      visvaasaththotinte
      sapaiyi thangum paalanin
      sannithi servomae;
      makilnthu pottuvom
      jothiyil jothiyae!
      karththaa! neer pirantha thinam
      konndaadath thakumae.
  • Intu Kiristhu Elunthaar இன்று கிறிஸ்து எழுந்தார்

    1. இன்று கிறிஸ்து எழுந்தார்,
      அல்லேலூயா!
      இன்று வெற்றி சிறந்தார்;

    அல்லேலூயா!
    சிலுவை சுமந்தவர்,
    அல்லேலூயா!
    மோட்சத்தைத் திறந்தவர்,

    அல்லேலூயா!

    1. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம்,

    அல்லேலூயா!
    விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,

    அல்லேலூயா!
    அவர் தாழ்ந்துயர்ந்தாரே;

    அல்லேலூயா!
    மாந்தர் மீட்பர் ஆனாரே,

    அல்லேலூயா!

    1. பாடநுபவித்தவர்,
      அல்லேலூயா!
      ரட்சிப்புக்குக் காரணர்,

    அல்லேலூயா!
    வானில் இப்போதாள்கிறார்;

    அல்லேலூயா!
    தூதர் பாட்டைக் கேட்கிறார்,

    அல்லேலூயா!


    Intu Kiristhu Elunthaar Lyrics in English

    1. intu kiristhu elunthaar,
      allaelooyaa!
      intu vetti siranthaar;

    allaelooyaa!
    siluvai sumanthavar,
    allaelooyaa!
    motchaththaith thiranthavar,

    allaelooyaa!

    1. sthothrap paattup paaduvom,

    allaelooyaa!
    vinnnnin vaenthaip pottuvom,

    allaelooyaa!
    avar thaalnthuyarnthaarae;

    allaelooyaa!
    maanthar meetpar aanaarae,

    allaelooyaa!

    1. paadanupaviththavar,
      allaelooyaa!
      ratchippukkuk kaaranar,

    allaelooyaa!
    vaanil ippothaalkiraar;

    allaelooyaa!
    thoothar paattaைk kaetkiraar,

    allaelooyaa!

  • Inthu Devanudaiya Pramanam இது தேவனுடைய பிரமாணம்

    இது தேவனுடைய பிரமாணம்
    உன்னை அதிசயங்கள் பார்க்க வைக்கும்
    இது தேவனுடைய பிரமாணம்
    உன்னை ஆச்சரியப்படுத்திவிடும்

    1. தள்ளப்பட்ட கல்லே
      மூலைக்கு தலைக்கல்லாம்
      தள்ளப்பட்ட நீயும்
      மூலைக்கு தலைக்கல்லே

    இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
    இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

    1. பாவங்களை தேவனிடம்
      அறிக்கை செய்துவிட்டால்
      இயேசு கிறிஸ்து இரத்தம்
      உன்னை கழுவி சுத்தமாக்கும்

    இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
    இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

    1. எந்த இடம் ஆனாலும்
      கர்த்தரை நீ உயர்த்தினால்
      அந்த இடத்தில் வந்து
      உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

    இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
    இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

    1. அள்ளி தூவும் விதையை
      நீ கண்ணீரோடு விதைத்தால்
      அறுவடை நாள் வந்துவிடும்
      நீ கெம்பீரத்தோடு அறுப்பாய்

    இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
    இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

    1. கர்த்தர் மேலே உந்தன்
      பாரத்தை வைத்தால்
      நீதிமானின் காலை
      தள்ளாட விடமாட்டார்

    இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
    இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

    1. நீ முழு இருதயத்தோடு
      தேவனை விசுவாசி
      தேவமகிமை உந்தன்
      வாழ்வை வந்து மூடும்

    இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
    இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்


    Inthu Devanudaiya Pramanam Lyrics in English

    Devanudaiya Pramanam
    ithu thaevanutaiya piramaanam
    unnai athisayangal paarkka vaikkum
    ithu thaevanutaiya piramaanam
    unnai aachchariyappaduththividum

    1. thallappatta kallae
      moolaikku thalaikkallaam
      thallappatta neeyum
      moolaikku thalaikkallae

    ithu thaevapiramaanam ithu vaethapiramaanam
    ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

    1. paavangalai thaevanidam
      arikkai seythuvittal
      Yesu kiristhu iraththam
      unnai kaluvi suththamaakkum

    ithu thaevapiramaanam ithu vaethapiramaanam
    ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

    1. entha idam aanaalum
      karththarai nee uyarththinaal
      antha idaththil vanthu
      unnai karththar aaseervathippaar

    ithu thaevapiramaanam ithu vaethapiramaanam
    ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

    1. alli thoovum vithaiyai
      nee kannnneerodu vithaiththaal
      aruvatai naal vanthuvidum
      nee kempeeraththodu aruppaay

    ithu thaevapiramaanam ithu vaethapiramaanam
    ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

    1. karththar maelae unthan
      paaraththai vaiththaal
      neethimaanin kaalai
      thallaada vidamaattar

    ithu thaevapiramaanam ithu vaethapiramaanam
    ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

    1. nee mulu iruthayaththodu
      thaevanai visuvaasi
      thaevamakimai unthan
      vaalvai vanthu moodum

    ithu thaevapiramaanam ithu vaethapiramaanam
    ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

  • Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்

    இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்
    இயேசுவே ஆண்டவர் என்று சொல்லனும்
    சொந்தமாகனும் .. இயேசுவுக்கு .. சொந்தமாகனும்

    1. சிறையில் உள்ளோர் விடுதலையும்
      புதுவாழ்வுப் பெற வேண்டும்
    2. பாவமெல்லாம் மறைய வேண்டும்
      சாபங்கள் மாற வேண்டும்
    3. ஜனங்களெல்லாம் தேட வேண்டும்
      நேசரை தேட வேண்டும்
    4. கண்களெல்லாம் திறக்கப்பட்டு
      கர்த்தரை காண வேண்டும்
    5. சாத்தானின் சூழ்ச்சிகளை
      ஜெபத்தால் ஜெயிக்க வேண்டும்
    6. அற்புதங்கள் அதிசயங்கள்
      அனுதினம் நடக்க வேண்டும்
    7. போட்டிகளும் பொறாமைகளும்
      சபைகளில் மறைய வேண்டும்

    Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum Lyrics in English

    inthiyaa Yesuvukku sonthamaakanum
    Yesuvae aanndavar entu sollanum
    sonthamaakanum .. Yesuvukku .. sonthamaakanum

    1. siraiyil ullor viduthalaiyum
      puthuvaalvup pera vaenndum
    2. paavamellaam maraiya vaenndum
      saapangal maara vaenndum
    3. janangalellaam thaeda vaenndum
      naesarai thaeda vaenndum
    4. kannkalellaam thirakkappattu
      karththarai kaana vaenndum
    5. saaththaanin soolchchikalai
      jepaththaal jeyikka vaenndum
    6. arputhangal athisayangal
      anuthinam nadakka vaenndum
    7. pottikalum poraamaikalum
      sapaikalil maraiya vaenndum
  • Intheeyar Yaar இந்தியர் யார்

    இந்தியர் யார்? இந்தியர் யார்?
    இந்தியர் யார்? இந்தியர் யார்? – (2)

    1. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்
      போராட்டம், வன்முறைக்கு உட்படாதவர்
      தேசத்தின் வளர்ச்சிகளை கெடுக்காதவர்
      அரசாங்க சட்டங்களை மீறாதவர்
      அவரே உண்மை இந்தியர்கள்
      உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?
    2. பலவந்தம் செய்து மதம் மாற்றமாட்டார்
      ஏமாற்றி கொள்கைகளை விற்கமாட்டார்
      பிறரின் உரிமைகளை தடுக்கமாட்டார்
      தேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார்
      அவரே உண்மை இந்தியர்கள்
      உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?
    3. தேசத்தின் உடைமைகளை களவுசெய்யார்
      கருப்பு பணங்களை ஏற்கமாட்டார்
      கொள்ளை அடித்து குவிக்கமாட்டார்
      வரிகளில் வஞ்சம் செய்யமாட்டார்
      அவரே உண்மை இந்தியர்கள்
      உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?
    4. குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்வார்
      குறிப்பிட்ட கடமையில் தவறமாட்டார்
      லஞ்சம் எதுவும் வாங்கமாட்டார்
      சிபாரிசு, செல்வாக்கு நோக்கமாட்டார்
      அவரே உண்மை இந்தியர்கள்
      உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?
    5. சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பார்
      சாலை விதிகளை கடைப்பிடிப்பார்
      ஒளித்தும் மறைத்தும் ஒன்றும் செய்யமாட்டார்
      உண்மை பிரஜையாக செயல்படுவார்
      அவரே உண்மை இந்தியர்கள்
      உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?
    6. ஏழைகள், அகதிகள் நலம் தேடுவார்
      தான தர்மங்களில் பங்கெடுப்பார்
      விலங்குகள், பறவைகள் பாதுகாப்பார்
      தன்னைப்போல் பிறருக்கும் அன்பே செய்வார்
      அவரே உண்மை இந்தியர்கள்!
      உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) இந்தியர் யார்?

    Intheeyar Yaar – இந்தியர் யார் Lyrics in English
    Intheeyar Yaar
    inthiyar yaar? inthiyar yaar?
    inthiyar yaar? inthiyar yaar? – (2)

    1. jaathi mathangalukku appaarpattavar
      poraattam, vanmuraikku utpadaathavar
      thaesaththin valarchchikalai kedukkaathavar
      arasaanga sattangalai meeraathavar
      avarae unnmai inthiyarkal
      ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar?
    2. palavantham seythu matham maattamaattar
      aemaatti kolkaikalai virkamaattar
      pirarin urimaikalai thadukkamaattar
      thaesaththin nal ennnam ongach seyvaar
      avarae unnmai inthiyarkal
      ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar?
    3. thaesaththin utaimaikalai kalavuseyyaar
      karuppu panangalai aerkamaattar
      kollai atiththu kuvikkamaattar
      varikalil vanjam seyyamaattar
      avarae unnmai inthiyarkal
      ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar?
    4. kuriththa naeraththil vaelaikkuch selvaar
      kurippitta kadamaiyil thavaramaattar
      lanjam ethuvum vaangamaattar
      sipaarisu, selvaakku Nnokkamaattar
      avarae unnmai inthiyarkal
      ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar?
    5. suththam sukaathaaram paathukaappaar
      saalai vithikalai kataippitippaar
      oliththum maraiththum ontum seyyamaattar
      unnmai pirajaiyaaka seyalpaduvaar
      avarae unnmai inthiyarkal
      ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar?
    6. aelaikal, akathikal nalam thaeduvaar
      thaana tharmangalil pangaெduppaar
      vilangukal, paravaikal paathukaappaar
      thannaippol pirarukkum anpae seyvaar
      avarae unnmai inthiyarkal!
      ullaththil thaesa pakthi konndavarkal! – (2) inthiyar yaar?
  • Inthamattum Katha Ebinesare இந்தமட்டும் காத்த எபிநேசரே

    1. இந்தமட்டும் காத்த எபிநேசரே
      இனிமேலும் காக்கும் யெஹோவா யீரே
      எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே
      இந்த (புது) வருடத்தின் நாட்களிலே

    ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
    ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா

    1. யோர்தானும் செங்கடலும் நம் எதிரே
      எழும்பி வந்தபோதிலும் காத்தவர்
      சாபப்பிசாசின் சோதனைபோதிலும்
      இயேசு நாமத்தில் அகற்றிட்டவர்
    2. சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
      இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே
      மகத்தான கிருபை என்மேலே
      மகிபா நீர் ஊற்றிடுமே
    3. பழமை எல்லாம் ஒழிந்துப் போனதே
      எல்லாம் புதிதாக, தேவனே, ஆனதே
      உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
      நாங்கள் மறுரூபம் அடைந்திடவே

    Inthamattum Katha Ebinesare Lyrics in English

    1. inthamattum kaaththa epinaesarae
      inimaelum kaakkum yehovaa yeerae
      enthan vaalkkaiyil immaanuvaelarae
      intha (puthu) varudaththin naatkalilae

    sthoththarippom naamae thuthikaludanae
    aarpparippom anpar Yesuvai – allaelooyaa

    1. yorthaanum sengadalum nam ethirae
      elumpi vanthapothilum kaaththavar
      saapappisaasin sothanaipothilum
      Yesu naamaththil akattittavar
    2. seyaik kaakkum oru thaayaippolavae
      intha maayalokil ennaik kaakkum thaevanae
      makaththaana kirupai enmaelae
      makipaa neer oottidumae
    3. palamai ellaam olinthup ponathae
      ellaam puthithaaka, thaevanae, aanathae
      unthan makimaiyil irangiyae vaarumae
      naangal maruroopam atainthidavae
  • Inthak Kataisi Naatkalil இந்தக் கடைசி நாட்களில்

    அவர் சீக்கிரமாய் வருவார்

    1. இந்தக் கடைசி நாட்களில்
      சந்தோஷம் நம்பிக்கை உண்டு
      ஆச்சர்யமாம் சத்தியமாய்
      இராஜாதி ராஜாவாய் ஆளுவார்ää

    அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்
    ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
    காலையிலோ மாலை நேரத்திலோ
    வரவே வருவார் அறிவோம்

    1. வானத்திலும் ப10மியிலும்
      நாம் காணும் அடையாளங்கள்
      அவர் வருகை சமீபம்
      எனவே சாட்சியாய் கூறுது – அவர்
    2. கிறிஸ்துவுக்குள் மரித்த
      கணக்கில்லாத பக்தர்கள்
      ஆகாயத்தில் பறந்துபோய்
      அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் – அவர்
    3. உயிரோடிருக்கிற நாமும்
      நம் தேவனைச் சந்திப்போமே
      இந்நம்பிக்கை வீண் அல்லவே
      நாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம் – அவர்

    Inthak Kataisi Naatkalil Lyrics in English

    avar seekkiramaay varuvaar

    1. inthak kataisi naatkalil
      santhosham nampikkai unndu
      aachcharyamaam saththiyamaay
      iraajaathi raajaavaay aaluvaarää

    avar varuvaar seekkiramaay varuvaar
    aavalodu ethirpaarkkirom
    kaalaiyilo maalai naeraththilo
    varavae varuvaar arivom

    1. vaanaththilum pa10miyilum
      naam kaanum ataiyaalangal
      avar varukai sameepam
      enavae saatchiyaay kooruthu – avar
    2. kiristhuvukkul mariththa
      kanakkillaatha paktharkal
      aakaayaththil paranthupoy
      avarudan ententum jeevippaar – avar
    3. uyirotirukkira naamum
      nam thaevanaich santhippomae
      innampikkai veenn allavae
      naam oruvar oruvarai thaettuvom – avar