Category: Song Lyrics

  • Intha velaiyinil vantharulum இந்த வேளையினில் வந்தருளும்

    இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போ
    எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே

    அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே – முன்
    ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே

    அர்ச்சியர்க் கந்நானில் அற்புதம் செய்தாண்ட ஆவியே – இந்த
    ஆதிரை மீதினில் தீதகற்றியாளும் ஆவியே

    ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே – இங்கு
    அஞ்ஞானம் அகற்றி மெய்ஞ்ஞானம் புகட்டும் ஆவியே

    சித்தம் இரங்காயோ நித்தியராகிய ஆவியே – அருள்
    ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும் ஆவியே

    வாரும் வாரும் கண்பாரும் பரிசுத்த ஆவியே – இன்று
    வந்து சபைமீதில் சிந்தை வைத்தருளும் ஆவியே

    தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே – நிதம்
    சித்தம் வைத்தென் மீதில் முற்றிலுங் காத்திடும் ஆவியே


    Intha velaiyinil vantharulum Lyrics in English

    intha vaelaiyinil vantharulum thaeva aaviyae – ippo
    engal meethirangith thangi varam thaarum aaviyae

    anthanar thammidam vinthai seytha sathyaaaviyae – mun
    aachchariyamaakak kaatchi thantha njaana aaviyae

    archchiyark kannaanil arputham seythaannda aaviyae – intha
    aathirai meethinil theethakattiyaalum aaviyae

    aarumariyaatha aaruthal seythidum aaviyae – ingu
    anjnjaanam akatti meynjnjaanam pukattum aaviyae

    siththam irangaayo niththiyaraakiya aaviyae – arul
    jeeva vali kaattip paavam akattidum aaviyae

    vaarum vaarum kannpaarum parisuththa aaviyae – intu
    vanthu sapaimeethil sinthai vaiththarulum aaviyae

    thaettaravaalan entettip pukalnthidum aaviyae – nitham
    siththam vaiththen meethil muttilung kaaththidum aaviyae

  • Intha Naamathil Jeyamundu இந்த நாமத்தில் ஜெயம் உண்டு

    இந்த நாமத்தில் ஜெயம் உண்டு
    இந்த நாமத்தில் சுகமுண்டு
    இந்த நாமத்தில் வல்லமை உண்டு
    இந்த நாமம் மேலானது

    இந்த நாமம் போல வேற நாமம் இல்லையே
    இயேசுவின் நாமமிது
    இந்த நாமம் சொன்னால் பயமெல்லாம் தீருமே
    இயேசுவின் நாமமிது

    இயேசுவின் நாமம் மேலான நாமம்

    சாபக் கட்டுகள் உடைந்திடும் அற்புதங்கள் திரளாய் நடந்திடும்
    வானமும் பூமியும் வணங்கிடும் இந்த நாமம் மேலானது


    Intha Naamathil Jeyamundu Lyrics in English

    intha naamaththil jeyam unndu
    intha naamaththil sukamunndu
    intha naamaththil vallamai unndu
    intha naamam maelaanathu

    intha naamam pola vaera naamam illaiyae
    Yesuvin naamamithu
    intha naamam sonnaal payamellaam theerumae
    Yesuvin naamamithu

    Yesuvin naamam maelaana naamam

    saapak kattukal utainthidum arputhangal thiralaay nadanthidum
    vaanamum poomiyum vanangidum intha naamam maelaanathu

  • Intha Naalai Naan Samarpippen இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்

    இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
    இயேசுவின் திருப் பாதத்தில்

    காலை முதல் மாலை வரை
    காக்கும் கர்த்தர் நமது இயேசு
    காலைத் தள்ளாட என்றுமே விடார்

    இனிய வார்த்தை எப்போதும் பேச
    இயேசு நடத்திடும்
    இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க
    இயேசு காட்டிடும்
    இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
    இயேசு போதியும்
    இன்முகம் காட்டி இறங்கி நோக்க
    இயேசு கற்பியும்

    பிறர் என்ன செய்ய விரும்புவேனோ
    அதையே செய்யவும்
    பிறர் எனக்கு மன்னிப்பதையே
    அவர்க்கு மன்னிக்கவும்
    பிறர் நலம் கருதியே
    சதா உழைக்கவும்
    பிறருக்காக என்னை ஒடுக்கி
    நான் மரிக்கவும்


    Intha Naalai Naan Samarpippen Lyrics in English

    intha naalai naan samarppippaen
    Yesuvin thirup paathaththil

    kaalai muthal maalai varai
    kaakkum karththar namathu Yesu
    kaalaith thallaada entumae vidaar

    iniya vaarththai eppothum paesa
    Yesu nadaththidum
    idukkannnnil iruppor yaaraiyum meetka
    Yesu kaatdidum
    inpaththai veruththu thunpaththai naada
    Yesu pothiyum
    inmukam kaatti irangi Nnokka
    Yesu karpiyum

    pirar enna seyya virumpuvaeno
    athaiyae seyyavum
    pirar enakku mannippathaiyae
    avarkku mannikkavum
    pirar nalam karuthiyae
    sathaa ulaikkavum
    pirarukkaaka ennai odukki
    naan marikkavum

  • Intha Naal Varaiyil Ennai இந்த நாள் வரையில் என்னை

    இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்
    இனிமேலும் என்னை நடத்துவார்
    ஒன்றுமில்லாத வேளையில் – அவர்
    உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே,
    எந்தன் அன்பு இயேசுவே – இந்த

    1. தனிமையில் அன்று நாள் தவிக்கையில்
      தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமே
      துன்பம், துக்கம், துயரம் என்னை
      சூழ்ந்து கொண்ட வேளையில்
      துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர் – இந்த
    2. என்னை விட்டு விலகி நீர் போனீரோ?
      என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ?
      என்று நான் குழம்பி,
      அலைந்து துடித்த வேளையில்
      உன்னைவிட்டு விலகவில்லை என்றீரே – இந்த
    3. தூற்றுவோரின் நிந்தை அவமானமும்
      எங்களை வாட்டின வேளையில்
      இனியும் இந்த நிந்தைகள்
      பூமியில் இராதபடி
      முற்றிலும் நான் நீக்கிடுவேன் என்றீரே – இந்த

    Intha Naal Varaiyil Ennai Lyrics in English

    intha naal varaiyil ennai nadaththinaar
    inimaelum ennai nadaththuvaar
    ontumillaatha vaelaiyil – avar
    uthavikkaram neettiyae uyarththinaarae,
    enthan anpu Yesuvae – intha

    1. thanimaiyil antu naal thavikkaiyil
      thaetivanthu annaiththa enthan theyvamae
      thunpam, thukkam, thuyaram ennai
      soolnthu konnda vaelaiyil
      thukkamellaam makilchchiyaaka maattineer – intha
    2. ennai vittu vilaki neer poneero?
      ennai maranthu marainthu neer poneero?
      entu naan kulampi,
      alainthu thutiththa vaelaiyil
      unnaivittu vilakavillai enteerae – intha
    3. thoottuvorin ninthai avamaanamum
      engalai vaattina vaelaiyil
      iniyum intha ninthaikal
      poomiyil iraathapati
      muttilum naan neekkiduvaen enteerae – intha
  • Intha Mattum Kaatha Ebenesare இந்த மட்டும் காத்த எபெனேசரே

    1. இந்த மட்டும் காத்த எபெனேசரே
      இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
      எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
      இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
      ஸ்தோத்தரிப்போம் நாமே
      துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
      அன்பர் இயேசுவை – அல்லேலூயா!
    2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
      எழும்பி வந்த போதிலும் காத்தவர்
      சாபப் பிசாசின் சோதனை போதிலும்
      இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2)
    3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
      இந்த மாயலோகில் என்னைக்
      காக்கும் தேவனே – மகத்தான கிருபை
      என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2)
    4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
      எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
      உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
      நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)

    Intha Mattum Kaatha Ebenesare Lyrics in English

    1. intha mattum kaaththa epenaesarae
      inimaelum kaakkum yekovaayeerae
      enthan vaalkkaiyin immaanuvaelarae
      intha varudaththin naatkalilae puthu (2)
      sthoththarippom naamae
      thuthikaludanae aarpparippom
      anpar Yesuvai – allaelooyaa!
    2. yorthaanum sengadalum nam ethiril
      elumpi vantha pothilum kaaththavar
      saapap pisaasin sothanai pothilum
      Yesu naamaththil akattiyavar – (2)
    3. seyaik kaakkum oru thaayaip polavae
      intha maayalokil ennaik
      kaakkum thaevanae – makaththaana kirupai
      enmaelae makipaa neer oottidumae – (2)
    4. palamaiyellaam olinthu ponathae
      ellaam puthithaaka thaevanae aanathae
      unthan makimaiyil irangiyae vaarumae
      naangal maruroopam atainthidavae – (2)
  • Intha Kulanthaiyai Neer Yetrukkollum இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும்

    இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே,

    அனுபல்லவி

    உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த,

    சரணம்

    1. பிள்ளைகள் எனக்கதிகப் பிரியம், வரலாம், என்று
      உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே.
    2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த
      சீலமாயின்றும் வந்தாசீர்வதம் செய்யும், ஐயா.
    3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,
      உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து.
    4. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,
      நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே!
    5. விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,
      புசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர.

    Intha Kulanthaiyai Neer Yetrukkollum Lyrics in English

    inthak kulanthaiyai neer aettukkollum, karththaavae,

    anupallavi

    untham njaanasnaanaththaal umakkup pillaiyaay vantha,

    saranam

    1. pillaikal enakkathikap piriyam, varalaam, entu
      ullamurukich sonna uththama saththiyanae.
    2. paalaraik kaiyil aenthi pannpaay aaseervathiththa
      seelamaayintum vanthaaseervatham seyyum, aiyaa.
    3. umak kooliyanj seyyavum ummaich sinaekikkavum,
      umathu aaviyaith thanthu ummuda manthai serththu.
    4. ulakamum paeyp pasaasum ontum theethu seyyaamal,
      nalamaay ithaik kaaththaalum, nanmaip paraaparanae!
    5. visuvaasath thotithunthan maeyppukkum ulladangip,
      pusiya marampol theyva paththiyilae valara.
  • Intha Kallin Mel இந்தக் கல்லின்மேல்

    இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் (மத் 16:18)
    பாதாளத்தின் வாசல் அதை மேற்க்கொள்ளாதே
    சபையின் தலைவர் இயேசுவே (கொலொ 1:18)
    மூலைக்கு தலைக்கல் இயேசுவே (அப் 4:11)

    ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
    ஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே

    1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே (அப் 20:28)
      சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே & 2
      சபைதனில் நிலைநாட்டினீர் (சங் 92:13)
      புது மனிதனாய் என்னை மாற்றினீர்
      வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
      கிருபையால் உயர்த்தினீர்
      என்னை கிருபையால் உயர்த்தினீர்
    2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே (ஏசாயா 56:7)
      குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே / வீடிதுவே
      ஆவியின் நல்ல தகப்பனே
      சபை முழுவதும் எங்கள் சொந்தமே
      வேற்றுமைகள் இங்கு இல்லையே
      கிறிஸ்துவின் சரீரமே
      நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே (1 கொரி 12:27)
    3. பார்வோனின் வல்லமைகள் முறியச் செய்தீர்
      யேசபேலின் தந்திரங்கள் அழியச் செய்தீர்
      எழுப்புதல் தரும் அக்கினி
      எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுதே
      தடைகளை அது தகர்க்குதே
      (என்றும்) சபைதான் வெல்லுமே

    ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா
    ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா


    Intha Kallin Mel Lyrics in English

    Intha Kallin Mel

    inthak kallinmael en sapaiyaik kattuvaen (math 16:18)
    paathaalaththin vaasal athai maerkkollaathae
    sapaiyin thalaivar Yesuvae (kolo 1:18)
    moolaikku thalaikkal Yesuvae (ap 4:11)

    halaelooyaa (2) sapaithaan jeyikkumae
    halaelooyaa (2) paathaalam thorkumae

    1. iraththam sinthi meetkappatta sapaiyithuvae (ap 20:28)
      suththam pera kiristhu thantha sthalamithuvae & 2
      sapaithanil nilainaattineer (sang 92:13)
      puthu manithanaay ennai maattineer
      vaalkkaiyai selippaakkineer
      kirupaiyaal uyarththineer
      ennai kirupaiyaal uyarththineer
    2. jepaththinaal kattappatta sapai ithuvae (aesaayaa 56:7)
      kudumpamaay innaiththa nal uravithuvae / veetithuvae
      aaviyin nalla thakappanae
      sapai muluvathum engal sonthamae
      vaettumaikal ingu illaiyae
      kiristhuvin sareeramae
      naangal kiristhuvin sareeramae (1 kori 12:27)
    3. paarvonin vallamaikal muriyach seytheer
      yaesapaelin thanthirangal aliyach seytheer
      elupputhal tharum akkini
      engal jepaththilae patti eriyuthae
      thataikalai athu thakarkkuthae
      (entum) sapaithaan vellumae

    halaelooyaa (2) aamen halaelooyaa
    halaelooyaa (2) aamen halaelooyaa

  • Intha Kaalam Pollathathu இந்த காலம் பொல்லாதது

    இந்த காலம் பொல்லாதது
    உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
    நீ வாழும் உலகம் தான்
    அது வாடகை வீடு தான்

    1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
      என்று வாக்கு அளித்தவர்
      இன்னும் காத்து வருகிறார்
    2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
      சாத்தான் களத்தினில் போராட
      ஜெய வீரனாய் திகழ வா
    3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
      சத்திய தேவனின் கிருபையோ
      நித்திய ஜீவனை அருளுமே
    4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
      மனம் திரும்பி நீ வாழவே
      மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்

    Intha Kaalam Pollathathu Lyrics in English

    intha kaalam pollaathathu
    unnaik karththar alaikkiraar
    nee vaalum ulakam thaan
    athu vaadakai veedu thaan

    1. unnai ratchikka un koodavae irukkiraen
      entu vaakku aliththavar
      innum kaaththu varukiraar
    2. vaalipa naatkalil un thaevanaith thaetivaa
      saaththaan kalaththinil poraada
      jeya veeranaay thikala vaa
    3. paavaththin sampalam erinarakam thaan thinnnamae
      saththiya thaevanin kirupaiyo
      niththiya jeevanai arulumae
    4. kaalamo mutiyuthae thaeva raajjiyam nerunguthae
      manam thirumpi nee vaalavae
      mannan Yesunnai alaikkiraar
  • Intha Arul Kaalathil இந்த அருள் காலத்தில்

    1. இந்த அருள் காலத்தில்
      கர்த்தரே உம் பாதத்தில்
      பணிவோம் முழந்தாளில்
    2. தீர்ப்பு நாள் வருமுன்னே
      எங்கள் பாவம் உணர்ந்தே
      கண்ணீர் சிந்த ஏவுமே
    3. மோட்ச வாசல், இயேசுவே
      பூட்டுமுன் எம் பேரிலே
      தூய ஆவி ஊற்றுமே
    4. உந்தன் ரத்த வேர்வையால்
      செய்த மா மன்றாட்டினால்
      சாகச் சம்மதித்ததால்
    5. சீயோன் நகர்க்காயக் கண்ணீர்
      விட்டதாலும் தேவரீர்
      எங்கள்மேல் இரங்குவீர்
    6. நாங்கள் உம்மைக் காணவே
      அருள் காலம் போமுன்னே
      தஞ்சம் ஈயும் இயேசுவே

    Intha Arul Kaalathil Lyrics in English

    1. intha arul kaalaththil
      karththarae um paathaththil
      pannivom mulanthaalil
    2. theerppu naal varumunnae
      engal paavam unarnthae
      kannnneer sintha aevumae
    3. motcha vaasal, Yesuvae
      poottumun em paerilae
      thooya aavi oottumae
    4. unthan raththa vaervaiyaal
      seytha maa mantattinaal
      saakach sammathiththathaal
    5. seeyon nakarkkaayak kannnneer
      vittathaalum thaevareer
      engalmael iranguveer
    6. naangal ummaik kaanavae
      arul kaalam pomunnae
      thanjam eeyum Yesuvae
  • Inru Muthal Naan Unnai இன்று முதல் நான் உன்னை

    இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
    எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்

    1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
      உனது பெயரை நான் உயர்த்திடுவேன்
      ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்
    2. செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன்
      சொன்னதை செய்திடுவேன் கைவிடவேமாட்டேன்
      நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்
    3. பரவி பாயகின்ற ஆறுகள் நீதானே
      நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
      வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே
    4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
      வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
      இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்
    5. எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்
      பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம் நிரம்பிடுங்கள்
      உயிர் வாழும் அனைத்தின் மேல் ஆளுகை செய்திடுங்கள்
    6. வானத்து விண்மீன் போல ஒளிக் கொடுப்பாய்
      கடற்கரை மணலை போல பெருகிடுவாய்
      எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய்
    7. நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே
      மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே
      பகை நிறைந்த உலகத்தில் அன்பு கரம் நீட்டிடுவாய்
    8. மாராவின் கசந்த கண்ணீர் மதுரமாகிடும்
      பன்னிரெண்டு நீரற்றும் ஏலீமும் உனக்கு உண்டு
      கல்வாரி நிழலதனிலே காலமெல்லாம் வாழ்ந்திடுவாய்
    9. கர்த்தரின் குரலுக்கு கவனமாய் செவிகொடுத்து
      பார்வைக்கு நல்லதையே செய்து நீ வாழ்ந்துவந்தால்
      வியாதி வருவதில்லை குணமாக்கும் ஆண்டவர் நான்
    10. உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன்
      மலடு இருப்பதில்லை கருக்கலைப்பு ஆவதில்லை
      ஆவியிலும் உண்மையிலும் ஆராதனை செய்திடுங்கள்

    Inru Muthal Naan Unnai Lyrics in English

    intu muthal naan unnai aaseervathippaen
    ellaiyillaa nanmaikalaal nirappiduvaen

    1. periya inamaakki aaseervathippaen
      unathu peyarai naan uyarththiduvaen
      aaseervaatha vaaykkaalaay nee iruppaay
    2. sellum idamellaam kaavalaay naan iruppaen
      sonnathai seythiduvaen kaividavaemaattaen
      nee vaalum intha thaesam unakku thanthiduvaen
    3. paravi paayakinta aarukal neethaanae
      nathiyoram valarukinta thottamum neethaanae
      vaasanai tharukinta santhanamum neethaanae
    4. paththil oru pangu nee koduththaal
      vaanaththin palakanikal thiranthiduvaen
      idam kollaathamattum nirappiduvaen
    5. enathu saayalaay uruvaakki nadaththukiraen
      paluki perukidungal poomiyellaam nirampidungal
      uyir vaalum anaiththin mael aalukai seythidungal
    6. vaanaththu vinnmeen pola olik koduppaay
      kadarkarai manalai pola perukiduvaay
      ethiriyin vaasalkalai urimai aakkiduvaay
    7. neeranntai valarukinta setiyum neethaanae
      mathil mael aerukinta kotiyum neethaanae
      pakai niraintha ulakaththil anpu karam neetdiduvaay
    8. maaraavin kasantha kannnneer mathuramaakidum
      pannirenndu neerattum aeleemum unakku unndu
      kalvaari nilalathanilae kaalamellaam vaalnthiduvaay
    9. karththarin kuralukku kavanamaay sevikoduththu
      paarvaikku nallathaiyae seythu nee vaalnthuvanthaal
      viyaathi varuvathillai kunamaakkum aanndavar naan
    10. unavaiyum thannnneeraiyum aaseervathippaen
      maladu iruppathillai karukkalaippu aavathillai
      aaviyilum unnmaiyilum aaraathanai seythidungal