Category: Song Lyrics

  • Ezhuputhalin vaasanai enkum எழுப்புதலின் வாசனை எங்கும்

    எழுப்புதலின் வாசனை எங்கும் வீசட்டும்
    எழுப்புதலின் அக்கினி பற்றிப் பிடிக்கட்டும்
    எழுப்புதலால் உள்ளங்கள் இன்றே மாறட்டும்
    பிரிவினை அகலட்டும் தேவ அன்பு பெருகட்டும்
    தேவனின் ராஜ்ஜியம் கட்டப்படட்டும்

    ஒன்று சேர்ந்து நாம் உழைப்போம்
    ஒன்று சேர்ந்து நாம் ஜெபிப்போம்
    ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
    தேவ ராஜ்ஜியம் கட்டுவோம்

    பாரம்பரியங்களை விட்டுவிடுவோம் – நாம்
    பாரதம் மீட்டிட பாடுபடுவோம்
    கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்வோம்
    இயேசுவை உலகிற்கு காட்டிடுவோம்

    சபைகளின் வித்தியாசம் களைந்து – ஒரே
    சரீரமாக சேர்ந்து உழைப்போம்
    தேவனின் அன்பால் நிறைந்திடுவோம்
    எழுப்புதல் மழையில் நனைந்திடுவோம்

    பிரிவினை ஆவிகளை எதிர்ப்போம் – நாம்
    பிடிவாதங்களை தூக்கி எறிவோம்
    சாத்தானின் சதிகளை அறிந்திடுவோம்
    இயேசுவின் நாமத்தில் ஜெயமெடுப்போம்

    சுய நலத்திற்காய் நாம் வாழாமல்
    பரந்த மனதோடு செயல்படுபோம்
    பண ஆசை, இச்சைகளை வெறுத்து விட்டு
    பரலோகம் சென்றிட ஆயத்தமாகவோம்

    ஆதி அன்பிற்கு திரும்பிடுவோம்
    அழைத்த அழைப்பிலே நிலைத்திருப்போம்
    அழைத்த நோக்கத்தை மறந்திடாமல்
    அழைத்தவரின் சித்தம் செய்து முடிப்போம்


    Ezhuputhalin vaasanai enkum Lyrics in English

    elupputhalin vaasanai engum veesattum
    elupputhalin akkini pattip pitikkattum
    elupputhalaal ullangal inte maarattum
    pirivinai akalattum thaeva anpu perukattum
    thaevanin raajjiyam kattappadattum

    ontu sernthu naam ulaippom
    ontu sernthu naam jepippom
    ontu sernthu naam thuthippom
    thaeva raajjiyam kattuvom

    paarampariyangalai vittuviduvom – naam
    paaratham meettida paadupaduvom
    kiristhuvin sinthaiyai thariththuk kolvom
    Yesuvai ulakirku kaatdiduvom

    sapaikalin viththiyaasam kalainthu – orae
    sareeramaaka sernthu ulaippom
    thaevanin anpaal nirainthiduvom
    elupputhal malaiyil nanainthiduvom

    pirivinai aavikalai ethirppom – naam
    pitivaathangalai thookki erivom
    saaththaanin sathikalai arinthiduvom
    Yesuvin naamaththil jeyameduppom

    suya nalaththirkaay naam vaalaamal
    parantha manathodu seyalpadupom
    pana aasai, ichchaைkalai veruththu vittu
    paralokam sentida aayaththamaakavom

    aathi anpirku thirumpiduvom
    alaiththa alaippilae nilaiththiruppom
    alaiththa Nnokkaththai maranthidaamal
    alaiththavarin siththam seythu mutippom

  • Ezhuputhalea engal vaanjai எழுப்புதலே எங்கள் வாஞ்சை

    எழுப்புதலே எங்கள் வாஞ்சை
    எழுப்புதல் தாரும் தேவா
    பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
    பரவட்டும் எங்கள் தேசத்தில்

    அந்தகார இருள் முற்றும் அகலவே
    ஆவியின் மழையை ஊற்றுமே
    அனலாய் கொழுந்து விட்டெரிய
    அக்கினியால் எம்மை நிரப்பும்

    இந்தியாவின் எல்லைகளெங்கிலும்
    இயேசுவின் இரத்தம் பூசப்படட்டுமே
    இயேசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
    இன்றே தொனிக்கச் செய்யும்

    எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
    நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
    தேவ கோபம் மாற வேண்டும்
    தேசம் இயேசுவைக் காண வேண்டும்

    எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
    ஆவியானவரே அருள் புரியும்
    பெருமழையின் சத்தம் கேட்க
    எங்கள் செவிகளைத் தூய்மையாக்கும்


    Ezhuputhalea engal vaanjai Lyrics in English

    elupputhalae engal vaanjai
    elupputhal thaarum thaevaa
    parisuththa aaviyin elupputhal
    paravattum engal thaesaththil

    anthakaara irul muttum akalavae
    aaviyin malaiyai oottumae
    analaay kolunthu vitteriya
    akkiniyaal emmai nirappum

    inthiyaavin ellaikalengilum
    Yesuvin iraththam poosappadattumae
    Yesuvae aanndavar enta mulakkam
    inte thonikkach seyyum

    engal thaesaththai alikka vaenndaam
    naangal thirappinil nirkirom
    thaeva kopam maara vaenndum
    thaesam Yesuvaik kaana vaenndum

    engal sapaikal uyirmeetchi ataiya
    aaviyaanavarae arul puriyum
    perumalaiyin saththam kaetka
    engal sevikalaith thooymaiyaakkum

  • Ezhuputhal ezuputhal எழுப்புதல் எழுப்புதல்

    எழுப்புதல் எழுப்புதல்
    அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல
    எழுப்புதல் தேசத்தின் எழுப்புதல்
    அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல

    அது உன்னிடத்திலே புறப்படும்
    அது உனக்குள்ளிருந்து புறப்படும்
    நீ(நான்) எழுந்து விட்டால்
    எழுப்புதல் வந்திடும்-4

    பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய்
    பரிசுத்தமாய் வாழ்ந்தால் எழுப்புதல்-2
    நீ பரிசுத்தம் ஆனால் தேசம்
    பரிசுத்தமாகும்-2

    துதிக்கு பாத்திரர் இயேசுவை
    நீ பிரியமாய் துதித்தால்
    அதுவே (தொழுதால்)
    எழுப்புதல்-2
    நீ இயேசுவை துதித்தால் தேசம்
    இயேசுவை துதிக்கும் (அறியும்)-2

    ஜெபத்தை கேட்கும் தேவனிடத்தில்
    தேசத்திற்காய்
    நீ ஜெபித்தால் எழுப்புதல்
    நீ திறப்பிலே நின்றால் தேசம்
    (இயேசுவை) தேவனை அறியும்

    ஊழியர் அனைவரும்
    ஒருமைணப் பட்டால்
    உடனே வருமே தேசத்தின்
    எழுப்புதல்-2
    ஊழியர் இனைந்து விட்டால்
    தேசத்தின் எழுப்புதல் வருமே-2


    Ezhuputhal ezuputhal Lyrics in English

    elupputhal elupputhal
    athu engae irunthu purappadukirathalla
    elupputhal thaesaththin elupputhal
    athu engae irunthu purappadukirathalla

    athu unnidaththilae purappadum
    athu unakkullirunthu purappadum
    nee(naan) elunthu vittal
    elupputhal vanthidum-4

    parisuththamulla thaevan munpaay
    parisuththamaay vaalnthaal elupputhal-2
    nee parisuththam aanaal thaesam
    parisuththamaakum-2

    thuthikku paaththirar Yesuvai
    nee piriyamaay thuthiththaal
    athuvae (tholuthaal)
    elupputhal-2
    nee Yesuvai thuthiththaal thaesam
    Yesuvai thuthikkum (ariyum)-2

    jepaththai kaetkum thaevanidaththil
    thaesaththirkaay
    nee jepiththaal elupputhal
    nee thirappilae nintal thaesam
    (Yesuvai) thaevanai ariyum

    ooliyar anaivarum
    orumainap pattal
    udanae varumae thaesaththin
    elupputhal-2
    ooliyar inainthu vittal
    thaesaththin elupputhal varumae-2

  • Ezhupputhal En Thaesaththilae எழுப்புதல் என் தேசத்திலே

    எழுப்புதல் என் தேசத்திலே
    என் கண்கள் காண வேண்டும்
    தேவா கதறுகிறேன்
    தேசத்தின் மேல் மனமிரங்கும்

    1. சபைகளெல்லாம் தூய்மையாகி
      சாட்சியாக வாழணுமே
    2. தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்
      முழங்கணுமே முழங்கணுமே
    3. கோடி மக்கள் சிலுவையை தேடி
      ஓடி வந்து சுகம் பெறணும்
    4. ஒரு மனமாய் சபைகளெல்லாம்
      ஒன்று கூடி ஜெபிக்கணுமே
    5. தேசமெல்லாம் மனம் திரும்பி
      நேசரையே நேசிக்கணும்
    6. ஆதி சபை அதிசயங்கள்
      அன்றாடம் நடக்கணுமே
    7. துதிசேனை எழும்பணுமே
      துரத்தணுமே எதிரிகளை
    8. மோசேக்கள் கரம் விரித்து
      ஜனங்களுக்காய் கதறணுமே
    9. ஸ்தோவான்கள் எழும்பணுமே
      தேவனுக்காய் நிற்கணுமே
    10. அதிசயங்கள் அற்புதங்கள்
      அனுதினமும் நடக்கணுமே
    11. உம் வழியை அறியணுமே
      உம் மீட்பை உணரணுமே
    12. இருளில் வாழும் மனிதரெல்லாம்
      பேரொளியை காணணுமே

    Ezhupputhal En Thaesaththilae Lyrics in English

    elupputhal en thaesaththilae
    en kannkal kaana vaenndum
    thaevaa katharukiraen
    thaesaththin mael manamirangum

    1. sapaikalellaam thooymaiyaaki
      saatchiyaaka vaalanumae
    2. theru theruvaay en Yesuvin naamam
      mulanganumae mulanganumae
    3. koti makkal siluvaiyai thaeti
      oti vanthu sukam peranum
    4. oru manamaay sapaikalellaam
      ontu kooti jepikkanumae
    5. thaesamellaam manam thirumpi
      naesaraiyae naesikkanum
    6. aathi sapai athisayangal
      antadam nadakkanumae
    7. thuthisenai elumpanumae
      thuraththanumae ethirikalai
    8. mosekkal karam viriththu
      janangalukkaay katharanumae
    9. sthovaankal elumpanumae
      thaevanukkaay nirkanumae
    10. athisayangal arputhangal
      anuthinamum nadakkanumae
    11. um valiyai ariyanumae
      um meetpai unaranumae
    12. irulil vaalum manitharellaam
      paeroliyai kaananumae
  • Ezhunthu Sel Veeranae எழுந்து செல் வீரனே

    எழுந்து செல் வீரனே இயேசு இராஜன் உன்னை அழைக்கிறார்
    துணிந்து நில் சாட்சியாய்
    இயேசு இராஜன் நமக்காய் மரித்து உயிர்த் தெழுந்தாரே

    1. அன்பு தூய்மை தாழ்மை விசுவாசம் கொண்டிரு
      வளரும் விசுவாசிகளுக்கு மாதிரி காண்பி
      பவுலைப் போல் சாட்சியாய்
      பரமனுக்காய்ப் பாடு சகித்து மகிமை அடைந்திடு
    2. பாவ மீட்பை அறிந்திடாத பாரதம் உண்டு
      இயேசு நாமம் அறிவித்திட யார் இங்கு உண்டு?
      ஸ்தேவான் போல் சாட்சியாய்
      இரத்தம் சிந்த முன் வருவோர் வேண்டுமே இன்று
    3. உலகின் முடிவு நாள் வரைக்கும் உன்னிடம் இருப்பேன்
      சகல அதிகாரங்களும் என்னிடம் உண்டே
      என்றவர் அழைக்கிறார்
      புறப்பட்டுப் போய் சீஷராக்க ஆயத்தம் தானா?

    Ezhunthu Sel Veeranae Lyrics in English

    elunthu sel veeranae Yesu iraajan unnai alaikkiraar
    thunninthu nil saatchiyaay
    Yesu iraajan namakkaay mariththu uyirth thelunthaarae

    1. anpu thooymai thaalmai visuvaasam konntiru
      valarum visuvaasikalukku maathiri kaannpi
      pavulaip pol saatchiyaay
      paramanukkaayp paadu sakiththu makimai atainthidu
    2. paava meetpai arinthidaatha paaratham unndu
      Yesu naamam ariviththida yaar ingu unndu?
      sthaevaan pol saatchiyaay
      iraththam sintha mun varuvor vaenndumae intu
    3. ulakin mutivu naal varaikkum unnidam iruppaen
      sakala athikaarangalum ennidam unntae
      entavar alaikkiraar
      purappattup poy seesharaakka aayaththam thaanaa?
  • Ezhunthu Oli Veesu எழுந்து ஒளி வீசு

    எழுந்து ஒளி வீசு – 2
    இயேசு வருகின்றார்
    உன்னில் வருகின்றார்

    1. கர்த்தர் மகிமை உன்னில் வந்ததே
      காரிருள் நீங்கிப் போனதே
    2. துன்பம் எல்லாம் மறைந்து போனதே
      துயரமெல்லாம் நீங்கிப் போனதே
    3. ஆவியான தேவன் தாமே
      அனுதினம் நடத்துவாரே
    4. கண்ணீரெல்லாம் துடைப்பாரே
      கரம் பிடித்து நடத்துவாரே

    Ezhunthu Oli Veesu Lyrics in English

    elunthu oli veesu – 2
    Yesu varukintar
    unnil varukintar

    1. karththar makimai unnil vanthathae
      kaarirul neengip ponathae
    2. thunpam ellaam marainthu ponathae
      thuyaramellaam neengip ponathae
    3. aaviyaana thaevan thaamae
      anuthinam nadaththuvaarae
    4. kannnneerellaam thutaippaarae
      karam pitiththu nadaththuvaarae
  • Ezhunthaar Iraivan எழுந்தார் இறைவன்

    எழுந்தார் இறைவன் – ஜெயமே
    ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

    1.விழுந்தவரைக் கறையேற்றப்
    பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை
    மாற்ற விண்ணுக்கெழுந்து
    நாம் அவரையே போற்ற

    1. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
      நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
      பக்தர் யாவரும் களிக்க — எழுந்தார்

    3.கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
    சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
    இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார்

    4.சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
    ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
    பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார்

    5.ஏதுந் வினை செய்யாத்
    தூயன்- எப்போதுமே நன்மைபுரி நேயன் – தப்பாது

    காத்திடும் நல்லாயன்


    Ezhunthaar Iraivan Lyrics in English

    elunthaar iraivan – jeyamae
    jeyamenavae elunthaar iraivan

    1.vilunthavaraik karaiyaettap
    paavath thamilntha manukkulaththai
    maatta vinnnukkelunthu
    naam avaraiyae potta

    1. seththavar meenndumae pilaikka – uyar
      niththiya jeevanai alikkath – thaeva
      pakthar yaavarum kalikka — elunthaar

    3.karuthiya kaariyam vaaykkath – thaeva
    suruthi molikalellaam kaakka – nam
    iru thiraththaaraiyum serkka — elunthaar

    4.saavin payangaraththai olikkak – ketta
    aaviyin vallamaiyai alikka – ip
    poovinmeethu sapai selikka — elunthaar

    5.aethun vinai seyyaath
    thooyan- eppothumae nanmaipuri naeyan – thappaathu
    kaaththidum nallaayan

  • Ezhunthituveer Neer Vaaliparae எழுந்திடுவீர் நீர் வாலிபரே

    தூசியைவிட்டு எழும்புவோம்

    எழுந்திடுவீர் நீர் வாலிபரே – நாமும்
    இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
    இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம்
    நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம்

    எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம்
    இயேசுவின் வீரரே எழுந்திடுவோம்
    அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திட
    தூசியை உதறி எழுந்திடுவோம்

    1. விழித்திருங்கள் நீர் கன்னியரே – நல்ல
      விளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவீர்
      மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலே
      கன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம்
    2. நித்திரைகள் வேண்டாம் முதியோரே – நல்ல
      நேரம் வேளை தன்னை நிதானிப்பீரே
      தீர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள்
      தினம் நிறைவேற கண்டதில்லையோ
    3. சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே – நல்ல
      தைலாபிஷேகம் செய்ய வருவீரே
      புதையல்கள் போன்ற புத்திரராம் பரணி
      நேசர் பாதத்தில் உடைத்திடுவீர்
    4. இந்து தேசம் வெல்ல முயன்றிடுவோம் – நல்ல
      இயேசு முன்னே செல்வார் பயம் இனியேன்
      என்ன தடை வரினும் இயேசு நாமம் ஜெயிக்கும்
      இன்றே யாவரும் எழுந்திடுவோம்

    Ezhunthituveer Neer Vaaliparae Lyrics in English

    thoosiyaivittu elumpuvom

    elunthiduveer neer vaaliparae – naamum
    Yesuvin naamaththai uyarththiduvom
    innum konjam naeram Yesu varum naeram
    niththirai seyyaamal ulaiththiduvom

    elunthiduvom naam elunthiduvom
    Yesuvin veerarae elunthiduvom
    anuthinam alinthidum paaratham kaaththida
    thoosiyai uthari elunthiduvom

    1. viliththirungal neer kanniyarae – nalla
      vilakkukal eriya ennnney oottuveer
      manavaalan varukaiyin saththam kaetpathaalae
      kanniyarkal naamum elunthiduvom
    2. niththiraikal vaenndaam muthiyorae – nalla
      naeram vaelai thannai nithaanippeerae
      theerkkar murpithaakkal seppiya uraikal
      thinam niraivaera kanndathillaiyo
    3. sanjalangal vaenndaam thaaymaarae – nalla
      thailaapishaekam seyya varuveerae
      puthaiyalkal ponta puththiraraam paranni
      naesar paathaththil utaiththiduveer
    4. inthu thaesam vella muyantiduvom – nalla
      Yesu munnae selvaar payam iniyaen
      enna thatai varinum Yesu naamam jeyikkum
      inte yaavarum elunthiduvom
  • Ezhumbi prakasi oli எழும்பி பிரகாசி ஒளி

    எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்
    மகிமை உன்மேல் உதித்தது
    எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்
    மகிமை உன்மேல் உதித்தது
    பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

    உலகத்தின் வெளிச்சம் நான்தானே
    உலகத்திற்கே வெளிச்சமாமே
    பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

    மலையின் மேல் பட்டணம் மறையாதே
    மகிமையின் அளவும் குறையாதே
    பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி


    Ezhumbi prakasi oli Lyrics in English

    elumpi pirakaasi oli vanthathu karththarin
    makimai unmael uthiththathu
    elumpi pirakaasi oli vanthathu karththarin
    makimai unmael uthiththathu
    pirakaasi pirakaasi pirakaasi pirakaasi

    ulakaththin velichcham naanthaanae
    ulakaththirkae velichchamaamae
    pirakaasi pirakaasi pirakaasi pirakaasi

    malaiyin mael pattanam maraiyaathae
    makimaiyin alavum kuraiyaathae
    pirakaasi pirakaasi pirakaasi pirakaasi

  • Ezhai Manu Uruvai Edutha ஏழை மனு உருவை எடுத்த

    ஏழை மனு உருவை எடுத்த
    இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
    ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே

    1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
      கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
      கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
      சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
      கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு
    2. அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
      அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
      ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
      அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே
      அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை மனு
    3. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
      இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
      இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
      இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே
      அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு
    4. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
      அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
      உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
      நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
      சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை மனு
    5. மாயை உலகம் அதையும் நம்பாதே
      மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
      நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
      நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
      நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை மனு

    Ezhai Manu Uruvai Edutha Lyrics in English

    aelai manu uruvai eduththa
    Yesu raajan unnanntai nirkiraar
    aettuk kol avaraith thallaathae

    1. kaikalil kaalkalil aannikal kadaava
      kadum mul muti pon sirasil sootida
      kanthaiyum ninthaiyum vaethanaiyum sakiththaar
      sonthamaana iraththam sinthinaar unakkaay
      kanivudanae unnai alaikkiraarae – aelai manu
    2. avar thalaiyum saaykkavo sthalamumillai
      antu thaakaththaith theerkkavo paanamumillai
      aaruthal sollavo angae oruvarillai
      arumai ratchakar thongukiraar thaniyae
      anthap paadukal unnai meetkavae – aelai manu
    3. innamum thaamatham unakkaen makanae
      inpa Yesuvanntai elunthu vaaraayo
      intha ulakam tharakkoodaa samaathaanaththai
      intu unakku tharak kaaththu nirkiraarae
      annnal Yesu unnai alaikkiraarae – aelai manu
    4. avar maranaththaal saaththaanin thalai nasunga
      avar raththaththaal paavak karaikal neenga
      unthan viyaathiyin vaethanaiyum oliya
      neeyum saapaththinintu viduthalai ataiya
      siluvaiyil jeyiththaar yaavaiyum – aelai manu
    5. maayai ulakam athaiyum nampaathae
      manumakkal manamum maarip pokumae
      niththiya thaevanai naesiththaal ippothae
      nichchayam santhosham pettu nee makila
      nampikkaiyotae vanthiduvaay – aelai manu