Category: Song Lyrics

  • Aalugai Seiyum Aaviyanavare ஆளுகை செய்யும் ஆவியானவரே

    ஆளுகை செய்யும் ஆவியானவரே
    பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
    ஆவியானவரே-என் ஆற்றலானவரே

    1. நினைவெல்லாம் உமதாகணும்
      பேச்செல்லாம் உமதாகணும்
      நாள் முழுதும் வழிநடத்தும்
      உம் விருப்பம் செயல்படுத்தும்
    2. அதிசயம் செய்பவரே
      ஆறுதல் நாயகனே
      காயம் கட்டும் கர்த்தாவே
      கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என்
    3. புதிதாக்கும் பரிசுத்தரே
      புதுபடைப்பாய் மாற்றுமையா
      உடைத்துவிடும் உருமாற்றும்
      பண்படுத்தும் பயன்படுத்தும்
    4. சங்கீதம் கிர்த்தனையால்
      பிறரோடு பேசணுமே
      எந்நேரமும் எப்போதுமே
      நன்றிப் பலி செலுத்தணுமே

    Aalugai Seiyum Aaviyanavare Lyrics in English
    aalukai seyyum aaviyaanavarae
    paliyaay thanthaen parisuththamaanavarae
    aaviyaanavarae-en aattalaanavarae

    1. ninaivellaam umathaakanum
      paechchellaam umathaakanum
      naal muluthum valinadaththum
      um viruppam seyalpaduththum
    2. athisayam seypavarae
      aaruthal naayakanae
      kaayam kattum karththaavae
      kannnneerellaam thutaippavarae-en
    3. puthithaakkum parisuththarae
      puthupataippaay maattumaiyaa
      utaiththuvidum urumaattum
      pannpaduththum payanpaduththum
    4. sangaீtham kirththanaiyaal
      pirarodu paesanumae
      ennaeramum eppothumae
      nantip pali seluththanumae
  • Aalamaana Aaliyilum Aalamaana Anbu ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு

    ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
    உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு
    அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
    விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat)

    இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
    புறம்பே தள்ளாத பூரண அன்பு (2)
    இது ஒப்பில்லாத அன்பு
    பூரண அன்பு (2)

    Verse 1

    குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு
    குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு (2)
    ஒடுக்கப்பட்டோரை உயர்த்திடும் அன்பு
    எந்தக் காலத்திலும் மாறாத அன்பு (2)

    இது ஒப்பில்லாத அன்பு
    பூரண அன்பு (2)

    இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
    புறம்பே தள்ளாத பூரண அன்பு (2)

    Verse 2

    மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு
    மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு (2)
    என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
    தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு (2)

    இது ஒப்பில்லாத அன்பு
    பூரண அன்பு (2)

    இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
    புறம்பே தள்ளாத பூரண அன்பு (2)

    ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
    உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு
    அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
    விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat)

    இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
    புறம்பே தள்ளாத பூரண அன்பு (2)

    இது ஒப்பில்லாத அன்பு
    பூரண அன்பு (2)


    Aalamaana Aaliyilum Aalamaana Anbu Lyrics in English
    aalamaana aaliyilum aalamaana anpu
    uyarntha malaikalilum uyaramaana anpu
    alanthu paarkka mutiyaatha alavillaatha anpu
    vivarikka mutiyaatha arputha anpu (repeat)

    Yesuvin anpu ithu oppillaatha anpu
    purampae thallaatha poorana anpu (2)
    ithu oppillaatha anpu
    poorana anpu (2)

    Verse 1

    kuliyil vilunthorai kuninthu thookkum anpu
    kuppaiyil irupporai eduththu niruththum anpu (2)
    odukkappattaோrai uyarththidum anpu
    enthak kaalaththilum maaraatha anpu (2)
    ithu oppillaatha anpu
    poorana anpu (2)

    Yesuvin anpu ithu oppillaatha anpu
    purampae thallaatha poorana anpu (2)

    Verse 2

    manitharkal maarinaalum maaridaatha anpu
    makanaay aettukkonnda makaa periya anpu (2)
    ennai meetpatharkaay ulakaththilae vanthu
    thannaiyae thanthuvitta thakappanin anpu (2)
    ithu oppillaatha anpu
    poorana anpu (2)

    Yesuvin anpu ithu oppillaatha anpu
    purampae thallaatha poorana anpu (2)

    aalamaana aaliyilum aalamaana anpu
    uyarntha malaikalilum uyaramaana anpu
    alanthu paarkka mutiyaatha alavillaatha anpu
    vivarikka mutiyaatha arputha anpu (repeat)

    Yesuvin anpu ithu oppillaatha anpu
    purampae thallaatha poorana anpu (2)

    ithu oppillaatha anpu
    poorana anpu (2)

  • Aakaathathu Ethuvumillai ஆகாதது எதுவுமில்ல

    வல்லவர் சர்வ வல்லவர்
    நல்லவர் எப்போதும் நல்லவர்
    எல்ஷடாய் அல்லேலூயா

    ஆகாதது எதுவுமில்ல
    உம்மால் ஆகாதது எதுவுமில்ல
    அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர்

    1. துதி செய்யத் தொடங்கியதும்
      எதிரிகள் தங்களுக்குள்
      வெட்டுண்டு மடியச் செய்தீர் (2)
      உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
    2. அலங்கார வாசலிலே
      அலங்கோல முடவன் அன்று
      நடந்தானே இயேசு நாமத்தில் (2)
    3. கோலும் கையுமாக
      பிழைக்கச் சென்றார் யாக்கோபு
      பெருகச் செய்தீர் பெரும் கூட்டமாய்
    4. கண்ணீரைக் கண்டதாலே
      கல்லறைக்குச் சென்றவனை
      கரம் பிடித்து தூக்கி விட்டீர்
    5. ஈசாக்கு ஜெபித்ததாலே
      ரெபேக்காள் கருவுற்று
      இரட்டையர்கள் பெற்றெடுத்தாள்
    6. எலியாவின் வார்த்தையாலே
      சாறிபாத் விதவை வீட்டில்
      எண்ணெய் மாவு குறையவில்லையே
    7. ஜெப வீரன் தானியேலை
      சிங்கங்களின் குகையினிலே
      சேதமின்றிக் காப்பாற்றினீர்
    8. கானாவூரில் வார்த்தை சொல்ல
      கப்பர்நகூம் சிறுவனங்கே
      சுகமானான் அந்நேரமே
    9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால்
      திராட்சை ரசம் வந்ததையா

    Aakaathathu Ethuvumillai Lyrics in English
    vallavar sarva vallavar
    nallavar eppothum nallavar
    elshadaay allaelooyaa

    aakaathathu ethuvumilla
    ummaal aakaathathu ethuvumilla
    akilam anaiththaiyum unndaakki aalukinteer

    1. thuthi seyyath thodangiyathum
      ethirikal thangalukkul
      vettunndu matiyach seytheer (2)
      ummaal aakum ellaam aakum
    2. alangaara vaasalilae
      alangaோla mudavan antu
      nadanthaanae Yesu naamaththil (2)
    3. kolum kaiyumaaka
      pilaikkach sentar yaakkopu
      perukach seytheer perum koottamaay
    4. kannnneeraik kanndathaalae
      kallaraikkuch sentavanai
      karam pitiththu thookki vittir
    5. eesaakku jepiththathaalae
      repaekkaal karuvuttu
      irattaைyarkal petteduththaal
    6. eliyaavin vaarththaiyaalae
      saaripaath vithavai veettil
      ennnney maavu kuraiyavillaiyae
    7. jepa veeran thaaniyaelai
      singangalin kukaiyinilae
      sethamintik kaappaattineer
    8. kaanaavooril vaarththai solla
      kapparnakoom siruvanangae
      sukamaanaan annaeramae
    9. thannnneeraal jaatikalai geelpatinthu nirappinathaal
      thiraatchaை rasam vanthathaiyaa
  • Aahaa enna inbam paralogam ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்

    ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்
    இன்ப இயேசு அளித்தனரே
    அளவிற் கடங்கா புத்திக்கும் எட்டிடா
    அன்பைக்கூற நாவும் போதுமோ

    நீசதுரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரோ நீர்
    பாவ உளையினிறே தூக்கி எடுத்தீரே நீர்

    நாசபுரி நோக்கியே விரைந்து சென்ற என்னை
    பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர்

    நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம்
    பரிந்து பேசி அன்பால் நிலையாய் நிறுத்தினீர்

    எச்சரிப்பின் சத்தத்தை தள்ளிவிட்ட போதிலும்
    அன்பின் சவுக்கடியால் சேர்த்தன்பாய் ஆதரித்தீர்

    காரிருள் சூழும் வேளை கலங்கித் தவிக்கையில்
    காத்து நீர் என்னைத் தேற்றி கருத்தாய் ஆதரித்தீர்

    பிராண நாதா உந்தனை என்று நான் கண்டிடுவேன்
    ஆருயிர் நேசா உம்மை என்றும் காண ஆசை பொங்குதே

    ஆழைப்பின் சத்தம் கேட்க நாட்கள் அதிகமாமோ
    நேசர் மார்பில் சாய்ந்திட வாஞ்சை பெருகிடுதே

    ஆகாய மேகந்தனில் சேர்த்திடும் நேரமிதில்
    ஆனந்தம் ஆனந்தமே என்றென்றும் ஆனந்தமே


    Aahaa enna inbam paralogam Lyrics in English
    aahaa enna inpam paraloka inpam
    inpa Yesu aliththanarae
    alavir kadangaa puththikkum ettidaa
    anpaikkoora naavum pothumo

    neesathuroki enthanai paasamaay aettaீro neer
    paava ulaiyinitae thookki eduththeerae neer

    naasapuri Nnokkiyae virainthu senta ennai
    paasam vaiththaen unthanil entu koovi alaiththeerae neer

    nerintha naanal ennai muriththidum tharunam
    parinthu paesi anpaal nilaiyaay niruththineer

    echcharippin saththaththai thallivitta pothilum
    anpin savukkatiyaal serththanpaay aathariththeer

    kaarirul soolum vaelai kalangith thavikkaiyil
    kaaththu neer ennaith thaetti karuththaay aathariththeer

    piraana naathaa unthanai entu naan kanndiduvaen
    aaruyir naesaa ummai entum kaana aasai ponguthae

    aalaippin saththam kaetka naatkal athikamaamo
    naesar maarpil saaynthida vaanjai perukiduthae

    aakaaya maekanthanil serththidum naeramithil
    aanantham aananthamae ententum aananthamae

  • Aah Nalla Sobanam ஆ நல்ல சோபனம்

    ஆ நல்ல சோபனம் அன்பாக இயேசுவும்
    ஆசீர்வதித்து மகிழும் கானா கலியாணம்

    நேசர் தாமேபக்கம் நின்றாசீர்வதிக்கும்
    மணவாளன் மணமகள் மா பாக்கியராவர்

    அன்றும்மை காணவும்
    ஆறு ஜாடித் தண்ணீர் அற்புத
    ரசமாகவும் ஆண்டவர் நீர் செய்தீர்

    நீரேஎங்கள் நேசம் நித்தியஜீவன் தாரும்
    என்றும் தங்கும் மெய் பாக்கியம்
    இன்றேஈய வாரும்

    ஏதேன் மணமக்கள்ஏற்றஆசீர்வாதம்
    இயேசு இவர் பக்கம் நின்று
    ஊற்றும் இவர் மீது

    என்றும் காத்தருளும்
    ஒன்றாய்இணைத்தோனே
    என்றும் சிலுவை ஆசனம்
    முன் கெஞ்சி நிற்கிறோம்


    Aah Nalla Sobanam Lyrics in English
    aa nalla sopanam anpaaka Yesuvum
    aaseervathiththu makilum kaanaa kaliyaanam

    naesar thaamaepakkam nintaseervathikkum
    manavaalan manamakal maa paakkiyaraavar

    antummai kaanavum
    aatru jaatith thannnneer arputha
    rasamaakavum aanndavar neer seytheer

    neeraeengal naesam niththiyajeevan thaarum
    entum thangum mey paakkiyam
    inteeeya vaarum

    aethaen manamakkalaettaaaseervaatham
    Yesu ivar pakkam nintu
    oottum ivar meethu

    entum kaaththarulum
    ontayinnaiththonae
    entum siluvai aasanam
    mun kenji nirkirom

  • Aaga mangal bukal ஆகமங்கள் புகழ்

    ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
    வாகு தங்கு குருனாதா நமோ நமோ
    ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ

    மாகமண்டல விலாசா நமோ நமோ
    மேகபந்தியி னுலாசா நமோ நமோ
    வான சங்கம் விஸ்வாசா நமோ நமோ

    நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ
    காகமும் பணிசெய் சீலா நமோ நமோ
    நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ

    ஏசு மந்த்ரமுறு பூமா நமோ நமோ
    யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ
    ஏசு வென்ற திருநாமா நமோ நமோ

    அறிவி னுருவாகிய மூலா நமோ நமோ
    மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ
    அதிசய பராப சீலா நமோ நமோ

    பொறிவினை யூறத சரீரா நமோ நமோ
    குறையணுவிலாத குமாரா நமோ நமோ
    புவன முழுதாள் அதிகாரா நமோ நமோ

    நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ
    முறைகள் தவறாத விணேனே நமோ நமோ
    நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ

    இறை தவிது பாடிய கீதா நமோ நமோ
    பறைகள்பல கூடிய போதா நமோ நமோ
    எருசலை யினீடிய நாதா நமோ நமோ


    Aaga mangal bukal Lyrics in English
    aakamangal pukal vaethaa namo namo
    vaaku thangu kurunaathaa namo namo
    aayar vanthanaisey paathaa namo namo

    maakamanndala vilaasaa namo namo
    maekapanthiyi nulaasaa namo namo
    vaana sangam visvaasaa namo namo

    naakavimpam uyar kolaa namo namo
    kaakamum pannisey seelaa namo namo
    naadum anpar anukoolaa namo namo

    aesu manthramutru poomaa namo namo
    yooka thanthravaathi seemaa namo namo
    aesu venta thirunaamaa namo namo

    arivi nuruvaakiya moolaa namo namo
    maraiyavarkal thaetiya noolaa namo namo
    athisaya paraapa seelaa namo namo

    porivinai yooratha sareeraa namo namo
    kuraiyanuvilaatha kumaaraa namo namo
    puvana muluthaal athikaaraa namo namo

    niraivaliyin maeviya konae namo namo
    muraikal thavaraatha vinneenae namo namo
    nithiperuku maarasa thaenae namo namo

    irai thavithu paatiya geethaa namo namo
    paraikalpala kootiya pothaa namo namo
    erusalai yineetiya naathaa namo namo

  • Aadhiyum Anthamumanavare ஆதியும் அந்தமுமானவரே

    ஆதியும் அந்தமுமானவரே
    அல்பா ஒமெகாவுமானவரே – 2
    அல்லேலுயா – 4

    இருக்கிறவராய் இருப்பவரே
    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
    அல்லேலுயா – 4

    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – 2
    அல்லேலுயா – 4

    பரிசுத்த பலியாய் வந்தவரே
    எங்களுக்காய் பலியானவரே – 2
    அல்லேலுயா – 4

    சிலுவையில் வெற்றி சிறந்தவரே
    இரட்சகா உம்மை தொழுகிறோமே – 2
    அல்லேலுயா – 4

    சத்துரு வெள்ளம் போல் வரும்போது
    ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2
    அல்லேலுயா – 4

    கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்
    ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே – 2
    அல்லேலுயா – 4

    புறப்பட்டுப் போங்கள் என்றவரே
    அதிகாரங்கள் யாவும் தந்தவரே – 2
    அல்லேலுயா – 4

    உலகின் முடிவு பரியந்தம் நான்
    உங்களோடிருப்பேன் என்றவரே – 2
    அல்லேலுயா – 4

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
    திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே – 2
    அல்லேலுயா – 4

    அல்லேலுயா ஆமென் அல்லேலுயா
    அல்லேலுயா ஆமென் அல்லேலுயா – 2
    அல்லேலுயா – 4


    Aadhiyum Anthamumanavare Lyrics in English
    aathiyum anthamumaanavarae
    alpaa omekaavumaanavarae – 2
    allaeluyaa – 4

    irukkiravaraay iruppavarae
    naettum intum entum maaraathavarae – 2
    allaeluyaa – 4

    parisuththar parisuththar parisuththarae
    senaikalin karththar parisuththarae – 2
    allaeluyaa – 4

    parisuththa paliyaay vanthavarae
    engalukkaay paliyaanavarae – 2
    allaeluyaa – 4

    siluvaiyil vetti siranthavarae
    iratchakaa ummai tholukiromae – 2
    allaeluyaa – 4

    saththuru vellam pol varumpothu
    aettuvaen jeyak koti entavarae -2
    allaeluyaa – 4

    karththarin pillaikal naangalentu engal
    aaviyudan saatchi koduppavarae – 2
    allaeluyaa – 4

    purappattup pongal entavarae
    athikaarangal yaavum thanthavarae – 2
    allaeluyaa – 4

    ulakin mutivu pariyantham naan
    ungalotiruppaen entavarae – 2
    allaeluyaa – 4

    sthoththiram sthoththiram sthoththiramae
    thiriyaeka thaevanukku sthoththiramae – 2
    allaeluyaa – 4

    allaeluyaa aamen allaeluyaa
    allaeluyaa aamen allaeluyaa – 2
    allaeluyaa – 4

  • Aadhiyum andhamum neere ஆதியும் அந்தமும் நீரே

    ஆதியும் அந்தமும் நீரே நீரே
    அல்பாவும் ஒமேகாவும் நீரே நீரே

    என் நேசரே என்
    அன்பரே
    என் தோழரே
    என் துணையே
    எனக்கெல்லாம் நீரே

    உம்மை உயர்த்துகிறேன்
    இயேசுவே
    உம்மை உயர்த்துகிறேன்
    அல்லேலூயா-4

    என் தாயும் நீரே
    என் தந்தை நீரே
    என் இராஜா நீரே
    என் தெய்வம் நீரே

    என் மேய்ப்பர் நீரே
    என் மீட்பர் நீரே
    என் இரட்சகர் நீரே
    என் எஜமான் நீரே

    என் கன்மலை நீரே
    என் கோட்டை நீரே
    என் தஞ்சம் நீரே
    என் கேடகம் நீரே

    என் மேய்ப்பர் நீரே
    என் மீட்பர் நீரே
    என் இரட்சகர் நீரே
    என் எஜமான் நீரே


    Aadhiyum andhamum neere Lyrics in English
    aathiyum anthamum neerae neerae
    alpaavum omaekaavum neerae neerae

    en naesarae en
    anparae
    en tholarae
    en thunnaiyae
    enakkellaam neerae

    ummai uyarththukiraen
    Yesuvae
    ummai uyarththukiraen
    allaelooyaa-4

    en thaayum neerae
    en thanthai neerae
    en iraajaa neerae
    en theyvam neerae

    en maeyppar neerae
    en meetpar neerae
    en iratchakar neerae
    en ejamaan neerae

    en kanmalai neerae
    en kottaை neerae
    en thanjam neerae
    en kaedakam neerae

    en kaedakam neerae

    en maeyppar neerae
    en meetpar neerae
    en iratchakar neerae
    en ejamaan neerae

  • Aadhiyum Andhamum Aanavar ஆதியும் அந்தமும் ஆனவர்

    ஆதியும் அந்தமும் ஆனவர்
    அல்பா ஒமேகாவும் ஆனவர்
    துவக்கம் முடிவும் இல்லயே ஆமென்

    1. நிகரே இல்லா தேவனே நீதியின் அரசே
      அக்கினி வல்லமை வேண்டுமே இன்றே வேண்டுமே
      பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா இயேசு இராஜனே
      துதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா தூதர் சேனையே – ஆதியும்
    1. ஒருவராய் அதிசயம் செய்பவர் கிருபையுள்ளவர்
      வானமும் பூமியும் படைத்தவர் உமக்கே ஸ்தோத்திரம்
      துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா
      துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா – ஆதியும்
    1. குருடரின் கண்களை திறந்தவர் அதிசயமானவர்
      செவிடரின் செவிகளை திரந்தவர் அற்புதம் செய்பவர்
      இறங்கி வாரும் இறங்கி வாரும் தூய ஆவியே – எனக்காய்
      இறங்கி வாரும் இறங்கி வாரும் பரிசுத்த ஆவியே – ஆதியும்

    Aadhiyum Andhamum Aanavar Lyrics in English
    aathiyum anthamum aanavar
    alpaa omaekaavum aanavar
    thuvakkam mutivum illayae aamen

    1. nikarae illaa thaevanae neethiyin arase
      akkini vallamai vaenndumae inte vaenndumae
      paaduvaen allaelooyaa allaelooyaa Yesu iraajanae
      thuthippaen allaelooyaa allaelooyaa thoothar senaiyae – aathiyum
    1. oruvaraay athisayam seypavar kirupaiyullavar
      vaanamum poomiyum pataiththavar umakkae sthoththiram
      thuthiyin aaraathanai aaraathanai entum osannaa
      thuthiyin aaraathanai aaraathanai entum osannaa – aathiyum
    1. kurudarin kannkalai thiranthavar athisayamaanavar
      sevidarin sevikalai thiranthavar arputham seypavar
      irangi vaarum irangi vaarum thooya aaviyae – enakkaay
      irangi vaarum irangi vaarum parisuththa aaviyae – aathiyum
  • Aadhipitha Kumaran Aavi Thiriyegarku ஆதிப்பிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்கு

    பல்லவி

    ஆதிப்பிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்கு
    அனவரதமும் தோத்திரம் – திரியேகர்க்கு
    அனவரதமும் தோத்திரம்

    அனுபல்லவி

    நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
    நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
    நிறைந்த சத்திய ஞான மனோகர,
    உறைந்த நித்திய வேத குணாசர
    நீடு வாரி திரை சூழு மேதினியை
    மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் — ஆதி

    சரணங்கள்

    1. எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
      என்றென்றைக்கும் பணிபாதர்,
      துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு
      சோதனை செய் அதி நீதர்
      பங்கில்லான், தாபன் இல்லான், பகர் அடி முடிவில்லான்,
      பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
      பண்பதாய்க யம்பு விவேகன்,
      அன்பிரக்கத யாளப்பிரவாகன்
      பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
      பாலனத்தையும்பண் பாய் நடத்தி, அருள் — ஆதி
    1. நீதியின் செங்கோல் கைக்கொண்டு – நடத்தினால் நாம்
      நீணிலத்தில்லாமல் அழிந்து,
      தீதறு நரகில் தள்ளுண்டு – மடிவோ மென்று
      தேவ திருவுளம் உணர்ந்து,
      பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு

    பரன் எங்கள் மிசை தயை வைத்தனர் இது நன்று
    பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம்
    இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
    பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
    சூரியன் முன் இருள் போலவே சிதறும் — ஆதி

    Aadhipitha Kumaran Aavi Thiriyegarku Lyrics in English
    pallavi

    aathippithaak kumaaran – aavi thiriyaekarkku
    anavarathamum thoththiram – thiriyaekarkku
    anavarathamum thoththiram

    anupallavi

    neetha muthar porulaay nintarul saruvaesan,
    nithamum panninthavarkal iruthayamalar vaasan,
    niraintha saththiya njaana manokara,
    uraintha niththiya vaetha kunnaasara
    needu vaari thirai soolu maethiniyai
    moodu paava irul odavae arulsey — aathi

    saranangal

    1. enganum niraintha naathar – parisuththarkal
      ententaikkum pannipaathar,
      thungamaamaraippira pothar kataisi nadu
      sothanai sey athi neethar
      pangillaan, thaapan illaan, pakar ati mutivillaan,
      pan njaanam, sampooranam, parisuththam, neethi ennum
      pannpathaayka yampu vivaekan,
      anpirakkatha yaalappiravaakan
      paarthalaththil sirushtippu, meetpu, pari
      paalanaththaiyumpann paay nadaththi, arul — aathi
    1. neethiyin sengaோl kaikkonndu – nadaththinaal naam
      neennilaththillaamal alinthu,
      theethatru narakil thallunndu – mativo mentu
      thaeva thiruvulam unarnthu,
      paathakark kuyir thantha paalan yaesuvaikkonndu

    3.paran engal misai thayai vaiththanar ithu nantu
    pakarntha thannati yaarkkutru sangsalam
    itainjal vantha pothae thayavaakaiyil
    paaril naeridum anjnjaana sethamuthar
    sooriyan mun irul polavae sitharum — aathi