Category: Tamil Worship Songs Lyrics

  • Unnai Valakamal உன்னை வாலாக்காமல்

    உன்னை வாலாக்காமல்
    இயேசு தலையாக்குவார்
    உன்னை கீழாக்காமல்
    இயேசு மேலாக்குவார்

    ஜெயம் ஜெயம் அல்லேலூயா

    இஸ்ரவேலே நீ பயப்படாதே
    கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார்

    செங்கடலும் யோர்தானும்
    உன்னைக் கண்டு விலகி ஓடுமே

    சிறியவனை குப்பையிலிருந்து
    உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்

    ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரே
    பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்

    பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தை
    போல் உன்னை மாற்றிடுவார்


    Unnai valakamal Lyrics in English
    unnai vaalaakkaamal
    Yesu thalaiyaakkuvaar
    unnai geelaakkaamal
    Yesu maelaakkuvaar

    jeyam jeyam allaelooyaa

    isravaelae nee payappadaathae
    karam pitiththu unnai nadaththi selvaar

    sengadalum yorthaanum
    unnaik kanndu vilaki odumae

    siriyavanai kuppaiyilirunthu
    uyarththukireer appaa uyarththukireer

    ontumillaatha ennai alaiththeerae
    payanpaduththum innum payanpaduththum

    paalum thaenum odukinta thaesaththai
    pol unnai maattiduvaar

  • Unnai Thedum Enthan Ullam உன்னைத் தேடும் எந்தன் உள்ளம்

    உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் – என்

    உள்ளத்தில் உறைந்திட வா

    உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் – என்

    உயிரினில் கலந்திட வா

    வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே – 2

    உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா

    வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா – 2

    நீதியும் நேர்மையும் மறைந்தாலும்

    உரிமையை மனிதம் இழந்தாலும் – 2

    உண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா

    பிரிவுகள் என்னைப் பிரிந்தாலும் பரிவாய் என்னில் வா

    அன்பையே நானும் மறந்தாலும் அன்பாய் என்னில் வா – 2

    வாள்களும் போர்களும் அழித்தாலும்

    வாழ்வினை வாழ்வே எரித்தாலும் – 2

    வாழ்வின் ஊற்றே வா எந்தன் வாழ்வின் நிறைவாய் வா


    Unnai Thedum Enthan Ullam Lyrics in English
    unnaith thaedum enthan ullam – en

    ullaththil urainthida vaa

    unnaip paadum enthan nenjam – en

    uyirinil kalanthida vaa

    vaarumae en Yesuvae vaarumae en vaalvilae – 2

    uravukal ennaip pirinthaalum uravaay ennil vaa

    varuththamum ennaich soolnthaalum valamaay ennil vaa – 2

    neethiyum naermaiyum marainthaalum

    urimaiyai manitham ilanthaalum – 2

    unnmaiyai uraiththida vaa emmil uravai valarththida vaa

    pirivukal ennaip pirinthaalum parivaay ennil vaa

    anpaiyae naanum maranthaalum anpaay ennil vaa – 2

    vaalkalum porkalum aliththaalum

    vaalvinai vaalvae eriththaalum – 2

    vaalvin ootte vaa enthan vaalvin niraivaay vaa

  • Unnai Nambi Vazhum Pothu உன்னை நம்பி வாழும் போது

    உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன்

    உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன்

    உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன்

    இறைவா இறைவா அமைதி காண்கிறேன்

    நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன்

    என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன்

    எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் – 2

    என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைத்தேன் – 2

    இனி இமயமெனத் தடைவரினும் எளிதாய் கடப்பேன்

    எளிதாய் கடப்பேன் நான் எளிதாய் கடப்பேன்

    இருளின் சக்தி எந்தன் வாழ்வைப் பணியச் சொல்லுதே

    இறைவா உன் நினைவு என்னைத் துணியச் சொல்லுதே

    உன் சொல்லின் உறுதியினால் பயணம் செல்லுவேன் – 2

    உண்மை அன்பு நீதியில் நான் என்றும் வாழுவேன்

    என்றும் வாழுவேன் நான் என்றும் வாழுவேன்


    Unnai Nambi Vazhum Pothu Lyrics in English
    unnai nampi vaalum pothu uruthi perukiraen

    un panniyaich seyyum pothu niraivu ataikiraen

    un valiyil sellum vaalvil amaithi kaannkiraen

    iraivaa iraivaa amaithi kaannkiraen

    niraivu ataikiraen naan amaithi kaannkiraen

    ennai mattum nampum pothu idari vilukiraen

    elunthu nadakka mutiyaamal thavalnthu thavikkiraen – 2

    ennul vaalum unnai nampi elunthati vaiththaen – 2

    ini imayamenath thataivarinum elithaay kadappaen

    elithaay kadappaen naan elithaay kadappaen

    irulin sakthi enthan vaalvaip panniyach solluthae

    iraivaa un ninaivu ennaith thunniyach solluthae

    un sollin uruthiyinaal payanam selluvaen – 2

    unnmai anpu neethiyil naan entum vaaluvaen

    entum vaaluvaen naan entum vaaluvaen

  • Unnai Kaangiraar உன்னைக் காண்கிறார்

    உன்னைக் காண்கிறார் – உன்
    கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு
    நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்
    அதிசயம் செய்திடுவார் -உன்னை

    1. நோய்நொடியில் வாடுகின்ற
      உன்னைக் காண்கிறார்
      நொடிப்பொழுது சுகம் தந்து
      உன்னைத் தேற்றுவார்
    2. கடன் தொல்லையால் கதறுகின்ற
      உன்னைக் காண்கிறார்
      உடன் இருந்த நடத்திடுவார்
      ஒருபோதும் கைவிடார்
    3. எதிர்காற்றோடு போராட்டமா
      உன்னைக் காண்கிறார்
      உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்
    4. உனக்கெதிரான ஆயுதங்கள்
      வாய்க்காதே போகும்
      உன்னை எதிர்த்து வழக்காடுவோர்
      உன் சார்பில் வருவார்கள்
    5. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு
      வெற்றி உண்டு
      நறுமணம் போல் பரவிடுவோம்
      நற்செய்தி முழங்குவோம்

    Unnai Kaangiraar Lyrics in English
    unnaik kaannkiraar – un
    kannnneer thutaikkintar – Yesu
    nee alavaenndaam…ala vaenndaam
    athisayam seythiduvaar -unnai

    1. Nnoynotiyil vaadukinta
      unnaik kaannkiraar
      notippoluthu sukam thanthu
      unnaith thaettuvaar
    2. kadan thollaiyaal katharukinta
      unnaik kaannkiraar
      udan iruntha nadaththiduvaar
      orupothum kaividaar
    3. ethirkaattaோdu poraattamaa
      unnaik kaannkiraar
      un padakil aerukiraar amaithi tharukiraar
    4. unakkethiraana aayuthangal
      vaaykkaathae pokum
      unnai ethirththu valakkaaduvor
      un saarpil varuvaarkal
    5. kiristhuvodu innainthu vaalum namakku
      vetti unndu
      narumanam pol paraviduvom
      narseythi mulanguvom
  • Unnai Enakku உன்னை எனக்கு காட்டையா

    உன்னை எனக்கு காட்டையா
    காட்டாமல் சும்மா
    ஒளித்தென்ன விளையாட்டையா?
    தன்னைப் பாராமலே
    தன் பிள்ளை கண்மூடி
    தனம் ஊட்டும் தாயுண்டோ
    சாமி நீ தயை கூடி

    1. கறவைதனைப் பிரிந்த
      கன்று கதறல் போலும்
      கணவன்தனைப் பிரிந்து
      கலங்கும் உத்தமி போலும்
      இறகுகள் பறிகொடுத்
      தேங்கும் பறவை போலும்
      இருகண்ணுந் தெரியாத
      ஈனக்குருடன் போலும்
      ஏங்கினேன் சுகம் நீங்கினேன்- துயர்
      தாங்கினேன் மனம் வீங்கினேன் நீ
    2. நினைக்க நினைக்க எந்தன்
      நெஞ்சம் எல்லாம் ருசிக்கும்
      நின்னைப் புகழும் வாயே
      நித்தியாமிர்தம் புசிக்கும்!
      கனக்கும் நின்னடி காணக்
      கண்கள் தினம் பசிக்கும்
      கர்த்தனே உன்னைக்கண்டால்
      கவலை எல்லாம் நசிக்கும்
      கனத்திலேனும் ககனத்திலேனும் என்
      மனத்திலேனும் சொப்பனத்திலேனும்
      நீ
    3. விண்ணே! நினையல்லால்
      வேறொன்றைத் தொடுவேனோ?
      மேதினி எங்குந்தேடி
      வேதனைப்படுவேனோ!
      கண்ணே மணியே நினைக்
      கண்டால் நான் விடுவேனோ?
      கட்டிக் கொண்டானந்தம்
      கலக்கப் பின்னிடுவேனோ!
      கருத்தில் மூடுவன் வருத்தம் போடுவன்
      நிருத்தம் ஆடுவன் விருத்தம் பாடுவன்
    4. தேவனே உன்னைக்
      கண்டால் கிட்டி
      தோஷந் தொடுமோ? திவ்ய
      தேஜோ மயமென்
      தேகந்தனை சுடுமோ?
      கூவும் கோழி மிதித்தால்
      குஞ்சு முடம்படுமோ?
      கொல்லும் சிங்கமானாலும்
      குட்டிகள் தாம் அஞ்சிடுமோ?
      கோலனே அனுகூலனே -பரி

    பாலனே கன மூலனே


    Unnai Enakku Lyrics in English
    unnai enakku kaattaைyaa
    kaattamal summaa
    oliththenna vilaiyaattaைyaa?
    thannaip paaraamalae
    than pillai kannmooti
    thanam oottum thaayunntoo
    saami nee thayai kooti

    1. karavaithanaip pirintha
      kantu katharal polum
      kanavanthanaip pirinthu
      kalangum uththami polum
      irakukal parikoduth
      thaengum paravai polum
      irukannnun theriyaatha
      eenakkurudan polum
      aenginaen sukam neenginaen- thuyar
      thaanginaen manam veenginaen nee
    2. ninaikka ninaikka enthan
      nenjam ellaam rusikkum
      ninnaip pukalum vaayae
      niththiyaamirtham pusikkum!
      kanakkum ninnati kaanak
      kannkal thinam pasikkum
      karththanae unnaikkanndaal
      kavalai ellaam nasikkum
      kanaththilaenum kakanaththilaenum en
      manaththilaenum soppanaththilaenum
      nee
    3. vinnnnee! ninaiyallaal
      vaerontaith thoduvaeno?
      maethini engunthaeti
      vaethanaippaduvaeno!
      kannnnee manniyae ninaik
      kanndaal naan viduvaeno?
      kattik konndaanantham
      kalakkap pinniduvaeno!
      karuththil mooduvan varuththam poduvan
      niruththam aaduvan viruththam paaduvan
    4. thaevanae unnaik
      kanndaal kitti
      thoshan thodumo? thivya
      thaejo mayamen
      thaekanthanai sudumo?
      koovum koli mithiththaal
      kunju mudampadumo?
      kollum singamaanaalum
      kuttikal thaam anjidumo?
      kolanae anukoolanae -pari
      paalanae kana moolanae
  • Unnai Andri Vere Kethi உன்னையன்றி வேறே கெதி

    உன்னையன்றி வேறே கெதி
    ஒருவரில்லையே ஸ்வாமீ

    அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ
    அதிசய மனுவேலா – ஆசை என் யேசு ஸ்வாமீ

    பண்ணின துரோகமெல்லாம் – எண்ணினா லெத்தனைகோடி
    பாதகத்துக் குண்டோ எல்லை – பரதவித்தேனே தேடி
    கண்ணினாலுன் திருவடிக் – காண நான் தகு மோதான்
    கடையனுக்கருள்புரி – மடியுமுன் யேசு ஸ்வாமீ

    அஞ்சியஞ்சித் தூர நின்றென் – சஞ்சலங்களை நான் சொல்லி
    அலைகடல் துரும்புபோல் – மலைவு கொண்டே னானையோ
    கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த – வஞ்சகன் முகம்பாராய்க்
    கிட்டி என்னிடம் சேர்ந்து – க்ருபைவை யேசு ஸ்வாமீ

    எத்தனை கற்றாலும் தேவ – பக்தியேது மற்ற பாவி
    எவ்வளவு புத்திகேட்டும் – அவ்வளவுக்கதி தோஷி
    பித்தனைப் போல பிதற்றிக் – கத்தியே மேழைப் புலபும்
    பேதையைக் கடைத் தேற்றிப் – பிழைக்கவை யேசு ஸ்வாமீ

    கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன
    கல்லைப்போல் கடினங்கொண்ட- கர்ம சண்டாளன் பாழும்
    உள்ளமுங்கரைந்தே உன்றன் – உயர் சிலுவையினன்பால்
    உலையிலிட்ட மெழுகாய் – உருகவை யேசு ஸ்வாமீ


    Unnai andri vere kethi Lyrics in English
    unnaiyanti vaetae kethi
    oruvarillaiyae svaamee

    annai thanthai uttaாr suttaாr – aarumuthavuvaro
    athisaya manuvaelaa – aasai en yaesu svaamee

    pannnnina thurokamellaam – ennnninaa leththanaikoti
    paathakaththuk kunntoo ellai – parathaviththaenae thaeti

    kannnninaalun thiruvatik – kaana naan thaku mothaan
    kataiyanukkarulpuri – matiyumun yaesu svaamee

    anjiyanjith thoora ninten – sanjalangalai naan solli
    alaikadal thurumpupol – malaivu konntae naanaiyo
    kenjik kenjik koovumintha – vanjakan mukampaaraayk
    kitti ennidam sernthu – krupaivai yaesu svaamee

    eththanai kattaாlum thaeva – pakthiyaethu matta paavi
    evvalavu puththikaettum – avvalavukkathi thoshi
    piththanaip pola pithattik – kaththiyae maelaip pulapum
    paethaiyaik kataith thaettip – pilaikkavai yaesu svaamee

    kallanaam kapadanennaith thallivittalaavathenna
    kallaippol katinangaொnnda- karma sanndaalan paalum
    ullamungarainthae untan – uyar siluvaiyinanpaal
    ulaiyilitta melukaay – urukavai yaesu svaamee

  • Unnai Adhisayam Kaana Seiven உன்னை அதிசயம் காணச் செய்வேன்

    உன்னை அதிசயம் காணச் செய்வேன்
    நீ அற்புதம் கண்டிடுவாய் (2)

    இன்று வாக்களித்தார் தேவன்
    இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை

    1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
      செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)
      தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
      இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை
    2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
      இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே
      வாதையெல்லாம் மறைந்தே போகுமே
      பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே – உன்னை
    3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
      காரிருளில் பேரொளி வீசிடுமே
      வனாந்திரமே வழியாய் வந்தாலும்
      வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை

    Unnai Adhisayam Kaana Seiven Lyrics in English

    unnai athisayam kaanach seyvaen
    nee arputham kanndiduvaay (2)

    intu vaakkaliththaar thaevan
    intu niraivaetta vanthu vittar(2) – unnai

    1. valithirakkum athisayam nadanthidumae
      sengadalum thiranthae valividumae (2)
      thataikalellaam thakarnthae pokumae
      itainjalellaam inte marainthidumae(2) – unnai
    2. kuraikalellaam niraivaakum athisayamae
      iraimakanaam iyesuvaal nadanthidumae
      vaathaiyellaam marainthae pokumae
      paathaiyellaam naeyaay polinthidumae – unnai
    3. valinadaththum athisayam nadanthidumae
      kaarirulil paeroli veesidumae
      vanaanthiramae valiyaay vanthaalum
      vallavarin karamae nadaththidumae – unnai
  • Unnadhathin Thoothargale Ondraga Koodungal உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்

    1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
      மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்

    ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்
    ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
    அவர் திரு நாமமே விளங்க – (2)
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
    அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே

    1. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
      மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்
    2. இயேசுவென்னும் நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
      ராஜாதிராஜன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்
    3. சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
      மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்

    Unnadhathin Thoothargale Ondraga Koodungal Lyrics in English

    1. unnathaththin thootharkalae ontakak koodungal
      mannan Yesu naatharukkae vaanmuti soottungal

    raajaathi raajan Yesu Yesu makaaraajan – avar
    raajjiyam puviyengum makaa maatchiyaay vilanga
    avar thiru naamamae vilanga – (2)
    allaelooyaa allaelooyaa allaelooyaavae
    alpaa omaekaa avarkkae allaelooyaavae

    1. naalaa thaesaththilullorae nadanthu vaarungal
      maeloka naatharukkae meymuti soottungal
    2. Yesuvennum naamaththaiyae ellaarum paadungal
      raajaathiraajan thalaikku nanmuti soottungal
    3. sakala koottaththaarkalae saashdaangam seyyungal
      makaththuva raasarivarae maamuti soottungal
  • Unnadharae Um உன்னதரே உம்

    உன்னதரே உம்
    பாதுகாப்பில் வாழ்கின்றேன் -சர்வ
    வல்லவரே உம் நிழலில்தான்
    தங்கியுள்ளேன்

    புகலிடமே அடைக்கலமே
    கோட்டையே நம்பிக்கையே

    பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது
    வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது
    காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே

    படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன்
    பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார்
    தீங்கு நிகழாது நோயும் அணுகாது

    வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு
    பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார்
    மிதிப்பேன் சிங்கத்தையே நான்
    நடப்பேன் சர்ப்பத்தின்மேல்

    சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர்
    உம் சமூகம்தான் நிரந்தர நீரோடை
    நிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே -தலை

    இரவில் வரும் திகிலுக்கு
    நான் பயப்படேன்
    பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன்
    ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் பயமில்லையே

    கர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருப்பதால்
    விடுதலையும் ஜெய வாழ்வும் எனக்குண்டு
    நாமம் அறிந்ததினால் உயர்வு உண்டெனக்கு

    உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம்
    பதில் தந்து கனப்படுத்தும் தகப்பன் நீரே
    நீடிய ஆயுள் உண்டு நிச்சயம் வெற்றி உண்டு


    Unnadharae um Lyrics in English
    unnatharae um
    paathukaappil vaalkinten -sarva
    vallavarae um nilalilthaan
    thangiyullaen

    pukalidamae ataikkalamae
    kottaைyae nampikkaiyae

    paalaakkum kollai Nnoy anukaathu
    vaedanin kannnni ontum seyyaathu
    kaakkum arann neerae en kaedakamaaneerae

    pataiththavarai pukalidamaayk konndullaen
    parisuththarae paathukaakkum mathilaanaar
    theengu nikalaathu Nnoyum anukaathu

    valiyellaam kaakkum thoothan enakkunndu
    paatham kallil mothaamal thaangiduvaar
    mithippaen singaththaiyae naan
    nadappaen sarppaththinmael

    sirakukalaal aravannaiththu moodukireer
    um samookamthaan niranthara neerotai
    nimirach seytheerae nirantharamaaneerae -thalai

    iravil varum thikilukku
    naan payappataen
    pakalil varum sothanaikalai maerkolvaen
    aayiram enakkethiraay vanthaalum payamillaiyae

    karththaridaththil vaanjaiyaay iruppathaal
    viduthalaiyum jeya vaalvum enakkunndu
    naamam arinthathinaal uyarvu unndenakku

    ummai Nnokki mantadum pothellaam
    pathil thanthu kanappaduththum thakappan neerae
    neetiya aayul unndu nichchayam vetti unndu

  • Unnadha Devanukku Aarathanai உன்னத தேவனுக்கு ஆராதனை

    உன்னத தேவனுக்கு ஆராதனை
    மகத்துவ ராஜனுக்கு ஆரதனை
    சர்வவல்ல தேவனுக்கு ஆராதனை
    எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை

    அல்லேலுய பாடி

    துதிப்போம்
    எங்கள் இயேசு இரஜனை
    வாழ்த்தி போற்றுவோம் – 2

    பிதாவம் தேவனுக்கு ஆரதனை
    குமாரனாம் இயேசுவுக்கு ஆரதனை
    ஆவியாம் கர்த்தனுக்கு ஆரதனை
    எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை

    1. அதிசயம் செய்பவரை ஆராதிப்போம்
      அற்புதங்கள் செய்பவரை ஆராதிப்போம்
      கரம் பற்றி நடத்தினர் ஆராதிப்போம்
      கன்மலைமேல் உயர்த்தினர் ஆராதிப்போம்
      அல்லேலுய பாடி
    2. பாவங்கள் மன்னித்தார் ஆராதிப்போம்
      பரிசுத்தம் தந்திட்டார் ஆராதிப்போம்
      அக்கினியால் புடமிட்டரே ஆராதிப்போம்
      பொன்னாக மின்ன செய்தார் ஆராதிப்போம்
      அல்லேலுய பாடி
    3. வாக்குத்தத்தம் தந்தவரை ஆராதிப்போம்
      வாக்குமாற நல்லவரை ஆராதிப்போம்
      விண்ணப்பத்தை கேட்டவரை ஆராதிப்போம்
      விடுதலை தந்தவரை ஆராதிப்போம்
      அல்லேலுய பாடி

    Unnadha Devanukku Aarathanai Lyrics in English

    unnatha thaevanukku aaraathanai
    makaththuva raajanukku aarathanai
    sarvavalla thaevanukku aaraathanai
    engal aaraathanai engal aaraathanai

    allaeluya paati

    thuthippom
    engal Yesu irajanai
    vaalththi pottuvom – 2

    pithaavam thaevanukku aarathanai
    kumaaranaam Yesuvukku aarathanai
    aaviyaam karththanukku aarathanai
    engal aaraathanai engal aaraathanai

    1. athisayam seypavarai aaraathippom
      arputhangal seypavarai aaraathippom
      karam patti nadaththinar aaraathippom
      kanmalaimael uyarththinar aaraathippom
      allaeluya paati
    2. paavangal manniththaar aaraathippom
      parisuththam thanthittar aaraathippom
      akkiniyaal pudamittarae aaraathippom
      ponnaaka minna seythaar aaraathippom
      allaeluya paati
    3. vaakkuththaththam thanthavarai aaraathippom
      vaakkumaara nallavarai aaraathippom
      vinnnappaththai kaettavarai aaraathippom
      viduthalai thanthavarai aaraathippom
      allaeluya paati