Category: Tamil Worship Songs Lyrics

  • Paatalpaati Makizhvaenae பாடல்பாடி மகிழ்வேனே

    பாடி மகிழ்வோம்

    பாடல்பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா!
    பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா!
    பாரில் வந்தாரே தந்தாரே அன்பால் மீட்டாரே
    பரிசுத்தரை நித்தியரை பாடி போற்றுவேன்

    அல்லேலூயா பாடுவேன் நான் – 4

    1. மகிமையின் இராஜா அவர் மகத்துவம் நிறைந்தவர்
      மனமெல்லாம் நிறையுதே மகிழ்ச்சியில் சிலிர்க்குதே
    2. கனிவான மேய்ப்பனவர் கண்மணிபோல் காப்பாரவர்
      கீதங்களால் ஆராதிப்பேன் ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்
    3. நீதியுள்ள நீதிபரர் மேகமீதில் வந்திடுவார்
      நித்யானந்த வாழ்வினையே எனக்காக தந்திடுவார்

    Paatalpaati Makizhvaenae Lyrics in English

    paati makilvom

    paadalpaati makilvaenae thuthi allaelooyaa!
    paavi ennai meettarae thuthi allaelooyaa!
    paaril vanthaarae thanthaarae anpaal meettarae
    parisuththarai niththiyarai paati pottuvaen

    allaelooyaa paaduvaen naan – 4

    1. makimaiyin iraajaa avar makaththuvam nirainthavar
      manamellaam niraiyuthae makilchchiyil silirkkuthae
    2. kanivaana maeyppanavar kannmannipol kaappaaravar
      geethangalaal aaraathippaen aikkiyaththil aananthippaen
    3. neethiyulla neethiparar maekameethil vanthiduvaar
      nithyaanantha vaalvinaiyae enakkaaka thanthiduvaar
  • Paarvai Pera Vaendum பார்வை பெற வேண்டும்

    பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்

    என் உள்ளம் உன்னொளி பெற வேண்டும்– புது

    பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்

    வாழ்வின் தடைகளைத் தாண்டி எழும்– புதுப்

    பார்வை பெற வேண்டும்

    நாளும் பிறக்கும் உன் வழியை –காணும்

    பார்வை தர வேண்டும்

    நீதி நேர்மை உணர்வுகளை– நான்

    பார்க்கும் வரம் வேண்டும்

    உண்மை அன்பு உயர்ந்திடவே

    உழைக்கும் உறுதி தர வேண்டும்

    எல்லோரும் ஒன்றாகவே வாழும் வழி வேண்டும்

    நான் பார்வை பெற வேண்டும்


    Paarvai Pera Vaendum Lyrics in English

    paarvai pera vaenndum naan paarvai pera vaenndum

    en ullam unnoli pera vaenndum– puthu

    paarvai pera vaenndum naan paarvai pera vaenndum

    vaalvin thataikalaith thaannti elum– puthup

    paarvai pera vaenndum

    naalum pirakkum un valiyai –kaanum

    paarvai thara vaenndum

    neethi naermai unarvukalai– naan

    paarkkum varam vaenndum

    unnmai anpu uyarnthidavae

    ulaikkum uruthi thara vaenndum

    ellorum ontakavae vaalum vali vaenndum

    naan paarvai pera vaenndum

  • Paareer Gethsamane Poongavil பாரீர் கெத்செமெனே பூங்காவில்

    பாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே
    பாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும்
    சத்தம் தொனித்திடுதே

    தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
    தேவாதி தேவன் ஏகசுதன் படும்
    பாடுகள் எனக்காகவே

    அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
    எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம்
    செய்தேன் என்றாரே

    இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
    இம்மானுவேலன் உள்ளம் உருகியே
    வேண்டுதல் செய்தனரே

    மும்முறை தரைமீதே தாங்கொண்ணா வேதனையால்
    முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
    பாதகர் மீட்புறவே

    அன்பின் அருள்மொழியால் ஆறுதல் அளிப்பவர்
    துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே
    நெந்து அலறுகின்றார்

    என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மாநேசத்தை
    எண்ணியெண்ணியே உள்ளங்கனிந்து நான்
    என்றும் புகழ்ந்திடுவேன்


    Paareer Gethsamane Poongavil Lyrics in English

    paareer kethsemenae poongaavil en naesaraiyae
    paavi yenakkaay vaennduthal seythidum
    saththam thoniththiduthae

    thaekamellaam varunthi sokamatainthavaraay
    thaevaathi thaevan aekasuthan padum
    paadukal enakkaakavae

    appaa ippaaththiramae neekkum nin siththamaanaal
    eppatiyum um siththam seyya ennaith thaththam
    seythaen entarae

    iraththaththin vaervaiyaalae meththavumae nanainthae
    immaanuvaelan ullam urukiyae
    vaennduthal seythanarae

    mummurai tharaimeethae thaangaொnnnnaa vaethanaiyaal
    munnavar thaamae veelnthu jepiththaarae
    paathakar meetpuravae

    anpin arulmoliyaal aaruthal alippavar
    thunpa vaelaiyil thaettuvaarintiyae
    nenthu alarukintar

    ennaiyum thammaip pola maattum immaanaesaththai
    ennnniyennnniyae ullanganinthu naan
    entum pukalnthiduvaen

  • Paareer Arunnothayam Pol பாரீர் அருணோதயம் போல்

    பாரீர் அருணோதயம் போல்
    உதித்து வரும் இவர் யாரோ
    முகம் சூரியன் போல் பிரகாசம்
    சத்தம் பெருவெள்ள இரைச்சல் போலே

    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாம்
    பதினாயிரங்களில் சிறந்தோர்

    1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
      எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
      நாமம் ஊற்றுண்ட பரிமளமே
      இன்பம் ரசத்திலும் அதிமதிரம் — இயேசுவே
    2. அவர் இடது கை என் தலை கீழ்
      வலக்கரத்தாலே தாங்குகிறார்
      அவர் நேசத்தால் சோகமானேன்
      என் மேல் பறந்த கொடி நேசமே — இயேசுவே
    3. என் பிரியமே ரூபவதி

    என அழைத்திடும் இன்ப சத்தம்
    கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
    அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் — இயேசுவே

    1. என் நேசர் என்னுடையவரே
      அவர் மார்பினின் சாய்ந்திடுவேன்
      மணவாளியே வா என்பாரே
      நான் செல்வேன் அந்நேரமே — இயேசுவே
    2. நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்
      ஆட்டுக்குட்டியின் மண நாளிலே
      சுத்த பிரகாச ஆடையோடே
      பறந்திடுவோம் நாம் மேகத்தில்

    Paareer Arunnothayam Pol Lyrics in English

    paareer arunnothayam pol
    uthiththu varum ivar yaaro
    mukam sooriyan pol pirakaasam
    saththam peruvella iraichchal polae

    Yesuvae aathma naesarae
    saaronin rojaavum leeli pushpamumaam
    pathinaayirangalil siranthor

    1. kaattu marangalil kichchili pol
      enthan naesar atho nirkiraar
      naamam oottunnda parimalamae
      inpam rasaththilum athimathiram — Yesuvae
    2. avar idathu kai en thalai geel
      valakkaraththaalae thaangukiraar
      avar naesaththaal sokamaanaen
      en mael parantha koti naesamae — Yesuvae
    3. en piriyamae roopavathi

    ena alaiththidum inpa saththam
    kaettu avar pinnae odiduvaen
    avar samookaththil makilnthiduvaen — Yesuvae

    1. en naesar ennutaiyavarae
      avar maarpinin saaynthiduvaen
      manavaaliyae vaa enpaarae
      naan selvaen annaeramae — Yesuvae
    2. naam makilnthu thuthiththiduvom
      aattukkuttiyin mana naalilae
      suththa pirakaasa aataiyotae
      paranthiduvom naam maekaththil
  • Paaratham Iyaesuvaik Kaanum பாரதம் இயேசுவைக் காணும்

    நம் பாரதம் இயேசுவைக் காணும்

    பாரதம் இயேசுவைக் காணும் – நம்
    தேவன் நினைத்தது நடக்கும்

    1. பாதாள கோபுரங்கள் நொறுங்கும்
      உண்மைச் சீஷர்கள் சேவையின் மூலம்
      ஆவியில் நிறைந்த வாழ்வில்
      தினம் வெளிப்படும் தேவனின் மகிமை
      தேசத்தையே சுதந்தரிக்கும்
      பின் யார் அதை தடுத்திட முடியும்
    2. தெய்வ பயத்துடன் வாழும்
      திருத்தூதுவர் தொண்டர்கள் மூலம்
      திருச்சபை பூத்துக் குலுங்கும்
      இந்த தேசத்தில் நன்மைகள் பிறக்கும்
      உலகம் கண்டு வியந்திடும்
      பரலோகில் பூரிப்பும் மிகுந்திடும்
    3. இராஜாவின் பிள்ளைகளானோம்
      புது மானிடம் அமைக்கவே பிறந்தோம்
      வித்தாகக் களங்களில் விழுந்தே
      தேவ சபைகளை திரளாய் அமைப்போம்
      பிதாவின் சித்தத்தை முடித்தே
      விண் மகிமைக்குள் செல்வோம் மகிழ்ந்தே

    Paaratham Iyaesuvaik Kaanum Lyrics in English

    nam paaratham Yesuvaik kaanum

    paaratham Yesuvaik kaanum – nam
    thaevan ninaiththathu nadakkum

    1. paathaala kopurangal norungum
      unnmaich seesharkal sevaiyin moolam
      aaviyil niraintha vaalvil
      thinam velippadum thaevanin makimai
      thaesaththaiyae suthantharikkum
      pin yaar athai thaduththida mutiyum
    2. theyva payaththudan vaalum
      thiruththoothuvar thonndarkal moolam
      thiruchchapai pooththuk kulungum
      intha thaesaththil nanmaikal pirakkum
      ulakam kanndu viyanthidum
      paralokil poorippum mikunthidum
    3. iraajaavin pillaikalaanom
      puthu maanidam amaikkavae piranthom
      viththaakak kalangalil vilunthae
      thaeva sapaikalai thiralaay amaippom
      pithaavin siththaththai mutiththae
      vinn makimaikkul selvom makilnthae
  • Paara Siluvaiyinai Thoelil பாரச் சிலுவையினை தோளில்

    பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்
    பாதம் என் தெய்வம் அல்லவோ!
    தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்
    ஞாபகம் நான் அல்லவோ!
    அவர் ஞாபகம் நான் அல்லவோ!

    1. ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்கு
      இருபக்கம் கள்வர் அல்லவோ!
      பாவம் அறியா அவர் பாதத்தில்
      பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ!
      சுப பாக்கியம் தந்தாரல்லோ!
    2. கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்க
      பார்த்திபன் சாவதன்றோ!
      தன்னலமாகச் சென்ற பாதகன்
      எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோ
      அவர் பொற்பாதம் ஆணி அல்லோ!
    3. கல்வாரி மலையில் நின்றிடும் சிலுவையே
      மாபாவி நானும் வந்தேன்!
      தொங்கிடும் என் தெய்வம்
      தங்கிட என் உள்ளம் தந்திட இதோ வந்தேன்!
      நேசர் தங்கிட இதோ வந்தேன்!

    Paara Siluvaiyinai Thoelil Lyrics in English

    paarach siluvaiyinai tholil sumakkum anthap
    paatham en theyvam allavo!
    thaakamaay irukkiraen entu sollum avar
    njaapakam naan allavo!
    avar njaapakam naan allavo!

    1. eeraatru seedarudan vaalntha avarukku
      irupakkam kalvar allavo!
      paavam ariyaa avar paathaththil
      panninthidum paakkiyam thanthaarallo!
      supa paakkiyam thanthaarallo!
    2. kannkalil kannnneeraal paarvaiyil oli manga
      paarththipan saavathanto!
      thannalamaakach senta paathakan
      enai vellap porpaatham aanni allo
      avar porpaatham aanni allo!
    3. kalvaari malaiyil nintidum siluvaiyae
      maapaavi naanum vanthaen!
      thongidum en theyvam
      thangida en ullam thanthida itho vanthaen!
      naesar thangida itho vanthaen!
  • Paar Poerrum Vaenthan Ippaazh Ullam Vanthaar பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்

    அல்லேலூயா கீதம் பாடுவேன்

    1. பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்
      பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்
      பரிசுத்தவான்களோடு இணைத்தார்
      இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே

    அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்
    ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்
    ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்
    அல்லேலூயா! அல்லேலூயா!

    1. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே
      பரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே
      உடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே
      இயேசுவின் சிலுவை அடிவாரமே!
    2. தாழ்மை உள்ளம் கொண்டு பின் செல்வேன் நானே
      சுந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்
      உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கலே
      வல்ல தேவன் காட்டும் சுத்தக் கிருபையே!
    3. நாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்
      விட்டு வந்த பாவக் கிடங்கிற்குச் செல்லேன்
      என் முன்னே அநேக சுத்தர் செல்கின்றார்
      இப்பாதையே எந்தன் ஜீவ பாதையே!

    Paar Poerrum Vaenthan Ippaazh Ullam Vanthaar Lyrics in English

    allaelooyaa geetham paaduvaen

    1. paar pottum vaenthan ippaal ullam vanthaar
      poorippaal ullam yaavum mootinaar
      parisuththavaankalodu innaiththaar
      intha vaalkkai entum inpa vaalkkaiyae

    allaelooyaa geetham naan entum paaduvaen
    aarppariththu ullam makilnthu poorippaen
    jeevanulla mattum entum kooruvaen
    allaelooyaa! allaelooyaa!

    1. paava maekam yaavum kalainthu sentathae
      parisuththa joovaalai kavarnthu konndathae
      udal porul aavi aanmaa yaavumae
      Yesuvin siluvai ativaaramae!
    2. thaalmai ullam konndu pin selvaen naanae
      sunthal allavo en narseyal ellaam
      ullaththil kiristhu vanthu thangalae
      valla thaevan kaattum suththak kirupaiyae!
    3. naalthorum naathan valiyai aasippaen
      vittu vantha paavak kidangirkuch sellaen
      en munnae anaeka suththar selkintar
      ippaathaiyae enthan jeeva paathaiyae!
  • Paar Nam Paaratham Paar பார் நம் பாரதம் பார்

    நமது பாரதம்

    பார் நம் பாரதம் பார்! பார் வறண்ட உள்ளம் பார்!
    தூய்மை நாடும் கூட்டத்தார் பாவம் போக்க அலைகின்றார்
    பார்! பார்! பார்!

    சேர்! தூய சேனை சேர்!
    சேர்! பார் மீட்கும் சேனை சேர்!

    1. தேவனின் கரத்தினின்று வல்ல காரியங்களை
      பெற்றுக்கொள்ள நீ எதிர்பார்
      தேவநாம மகிமைக்கென்று பெரிய சாதனைகனை
      திட்டம்தீட்டி செய்துவிடப் பார்!
    2. தேவனின் ஒத்தாசையால் இந்த சந்ததி
      நித்திய வாழ்வு பெற்று மகிழும் பார்
      உந்தன் ஜெபத்தையும் உந்தன் முயற்சியையும்
      தேவன் கனம் பண்ணுவார் பார்!

    Paar Nam Paaratham Paar! Lyrics in English

    namathu paaratham

    paar nam paaratham paar! paar varannda ullam paar!
    thooymai naadum koottaththaar paavam pokka alaikintar
    paar! paar! paar!

    ser! thooya senai ser!
    ser! paar meetkum senai ser!

    1. thaevanin karaththinintu valla kaariyangalai
      pettukkolla nee ethirpaar
      thaevanaama makimaikkentu periya saathanaikanai
      thittamtheetti seythuvidap paar!
    2. thaevanin oththaasaiyaal intha santhathi
      niththiya vaalvu pettu makilum paar
      unthan jepaththaiyum unthan muyarsiyaiyum
      thaevan kanam pannnuvaar paar!
  • Paar Munnanaiyil Devakumaran Win Aalum பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்

    பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்

    1. பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்
      நாதர் பாலகனாய் நம்பாவம் யாவும் தம்மீது
      ஏற்கும் தேவாட்டுக் குட்டித் தோன்றினார்
    2. மாதூய பாலன் மீட்பின் நல்ல வேந்தன் மாசற்றோ
      ராகப் பூவில் வாழ்ந்தார் தீயோனை வென்று நம் பாவம்
      போக்கி மகிமை மீட்பர் ஆளுகின்றார்
    3. தீர்க்கர் முன்கூற, விண்தூதர் பாட விந்தையின்
      பாலன் வந்துதித்தார் பூலோக மீட்பர் பாதாரம்
      சேர்வோர் அழியா வாழ்வைக் கண்டடைவார்

    Paar Munnanaiyil Devakumaran Win Aalum Lyrics in English

    paar munnannaiyil thaevakumaaran vinn aalum

    1. paar munnannaiyil thaevakumaaran vinn aalum
      naathar paalakanaay nampaavam yaavum thammeethu
      aerkum thaevaattuk kuttith thontinaar
    2. maathooya paalan meetpin nalla vaenthan maasattaோ
      raakap poovil vaalnthaar theeyonai ventu nam paavam
      pokki makimai meetpar aalukintar
    3. theerkkar munkoora, vinnthoothar paada vinthaiyin
      paalan vanthuthiththaar pooloka meetpar paathaaram
      servor aliyaa vaalvaik kanndataivaar
  • Paar Munnanai Ondril Thottil பார் முன்னணை ஒன்றில் தொட்டில்

    பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே

    1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
      பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
      வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
      காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.
    2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
      ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;
      நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
      தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.
    3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
      என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
      உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
      சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.

    Paar Munnanai Ondril Thottil Lyrics in English

    paar, munnannai ontil thottil intiyae

    1. paar, munnannai ontil thottil intiyae
      paalanaam nam Yesu kidanthanarae;
      veliyil pulmeethu thoongumpaalan thaam
      kaana minnittathae vaanvellikalthaam.
    2. maa, maa, enum saththam kaettu vilippaar,
      aayin paalan Yesu alavaemaattar;
      naan naesikkum naathaa, neer Nnokkip paarppeer,
      thookkaththil neer thangi raavellaam kaappeer.
    3. en naathaa, entum neer ennai naesippeer,
      ennodu thariththae anpaay annaippeer;
      um paalarthammai neer aaseervathiththae
      serththidum vinn veettil thooyoraakkiyae.