Category: Tamil Worship Songs Lyrics

  • Paava Sagnsalaththai Neekka பாவ சஞ்சலத்தை நீக்க

    இயேசு என் நண்பர்

    1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே
      பாவப் பாரம் தீர்ந்துபோக மீட்பர் பாதம் தஞ்சமே
      சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
      துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்.
    2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டைச் சேருவோம்
      மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
      நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
      நீக்குவாரே மனச் சோர்பை தீய குணம் மாற்றுவார்.
    3. பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
      பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
      ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம்
      அளவற்ற அருள்நாதா உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

    Paava Sagnsalaththai Neekka Lyrics in English

    Yesu en nannpar

    1. paava sanjalaththai neekka piraana nannparthaan unntae
      paavap paaram theernthupoka meetpar paatham thanjamae
      saala thukka thunpaththaalae nenjam nonthu sorungaal
      thunpam inpamaaka maarum ookkamaana jepaththaal.
    2. kashda nashdam unndaanaalum Yesuvanntaich seruvom
      mosa naasam naerittalum jepa thoopam kaattuvom
      neekkuvaarae nenjin Nnovai palaveenam thaanguvaar
      neekkuvaarae manach sorpai theeya kunam maattuvaar.
    3. palaveenamaana pothum kirupaasanam unntae
      panthu janam saakum pothum pukalidam ithuvae
      oppillaatha piraana naesaa ummai nampi naesippom
      alavatta arulnaathaa ummai Nnokkik kenjuvom.
  • Paava Naasar Patta Kaayam பாவ நாசர் பட்ட காயம்

    1. பாவ நாசர் பட்ட காயம்
      நோக்கி தியானம் செய்வது
      ஜீவன், சுகம், நற்சகாயம்,
      ஆறுதலும் உள்ளது.
    2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
      அன்பின் வெள்ளம் ஆயிற்று;
      தெய்வ நேசம் அதினாலே
      மானிடர்க்குத் தோன்றிற்று.
    3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
      தஞ்சம் என்று பற்றினேன்;
      அவர் திவ்ய நேச முகம்
      அருள் வீசக் காண்கிறேன்.
    4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
      துக்கத்தால் கலங்குவேன்;
      அவர் சாவால் துக்கம் மாறி
      சாகா ஜீவன் அடைவேன்.
    5. சிலுவையை நோக்கி நிற்க,
      உமதருள் உணர்வேன்;
      தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட,
      சமாதானம் பெறுவேன்.
    6. அவர் சிலுவை அடியில்
      நிற்பதே மா பாக்கியம்;
      சோர்ந்த திரு முகத்தினில்
      காண்பேன் திவ்விய உருக்கம்.
    7. உம்மை நான் கண்ணாரக் காண
      விண்ணில் சேரும் அளவும்,
      உம்மை ஓயா தியானம் செய்ய
      என்னை ஏவியருளும்.

    Paava Naasar Patta Kaayam Lyrics in English

    1. paava naasar patta kaayam
      Nnokki thiyaanam seyvathu
      jeevan, sukam, narsakaayam,
      aaruthalum ullathu.
    2. raththa vellam paaynthathaalae
      anpin vellam aayittu;
      theyva naesam athinaalae
      maanidarkkuth thontittu.
    3. aanni paayntha meetpar paatham
      thanjam entu pattinaen;
      avar thivya naesa mukam
      arul veesak kaannkiraen.
    4. paasaththaal en nenjam pongi
      thukkaththaal kalanguvaen;
      avar saavaal thukkam maari
      saakaa jeevan ataivaen.
    5. siluvaiyai Nnokki nirka,
      umatharul unarvaen;
      theerththa raththam nenjil pada,
      samaathaanam peruvaen.
    6. avar siluvai atiyil
      nirpathae maa paakkiyam;
      sorntha thiru mukaththinil
      kaannpaen thivviya urukkam.
    7. ummai naan kannnnaarak kaana
      vinnnnil serum alavum,
      ummai oyaa thiyaanam seyya
      ennai aeviyarulum.
  • Paava Mannipin பாவ மன்னிப்பின்

    பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
    பெற்றுக் கொள்ள வேண்டும்
    பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும்

    இயேசு தருகிறார் இன்று தருகிறார்
    அதற்காகத் தான் சிலுவையிலே
    இரத்தம் சிந்தி விட்டார்

    முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு
    பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்

    நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
    நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு

    வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (மகளே)
    நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்

    இரத்தம் சிந்துதல் இல்லாமல்
    பாவ மன்னிப்பில்லை
    இயேசு ராஜா நாமம் இல்லாமல்
    இரட்சிப்பும் இல்லை – நம்ம


    Paava Mannipin Lyrics in English

    paava mannippin nichchayaththai
    pettuk kolla vaenndum
    paralokaththil or idam nee pera vaenndum

    Yesu tharukiraar intu tharukiraar
    atharkaakath thaan siluvaiyilae
    iraththam sinthi vittar

    muthan muthalaay thaevanukku ukanthathaith thaedu
    pinpu ellaamae unakku serththuth thanthiduvaar

    nee thaedum nimmathi Yesu tharukiraar
    nee naadum viduthalai avaridam unndu

    varuththappattu paarangal sumakkinta makanae (makalae)
    nee varuvaayaa Yesu intu vaalvu thanthiduvaar

    iraththam sinthuthal illaamal
    paava mannippillai
    Yesu raajaa naamam illaamal
    iratchippum illai – namma

  • Paava Dhosam Neekida Meetparin Ratham Thane பாவ தோஷம் நீக்கிட மீட்பரின் இரத்தம் தானே

    1. பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே!
      தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே!

    பல்லவி

    மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி
    வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே

    1. என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே!
      மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே!
    2. வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே
      புண்ணியக் கிரியை செல்லாதே! மீட்பரின் இரத்தம் தானே!
    3. மோட்ச மார்க்கம் இதுவே! மீட்பரின் இரத்தம் தானே!
      இயேசு சுத்த தீர்த்தமே! மீட்பரின் இரத்தம் தானே

    Paava Dhosam Neekida Meetparin Ratham Thane Lyrics in English

    1. paava thosham neekkida, meetparin iraththam thaanae!
      theeyakunam maattida, meetparin iraththam thaanae!

    pallavi

    meyyaam jeevanathi! paavam pokkum nathi
    vaetae nathiyai ariyaen! meetparin iraththam thaanae

    1. ennaich suththamaakkida! meetparin iraththam thaanae!
      mannippai naan pettida! meetparin iraththam thaanae!
    2. vaetae iratchippillaiyae! meetparin iraththam thaanae
      punnnniyak kiriyai sellaathae! meetparin iraththam thaanae!
    3. motcha maarkkam ithuvae! meetparin iraththam thaanae!
      Yesu suththa theerththamae! meetparin iraththam thaanae
  • Paatuvoem Makizhvoem பாடுவோம் மகிழ்வோம்

    பாடுவோம் மகிழ்வோம்
    கொண்டாடுவோம்
    அப்பா சமூகத்தில் பாடி
    மகிழ்ந்து கொண்டாடுவோம்

    1. அக்கினி மதில் நீரே
      ஆறுதல் மழை நீரே
      இக்கட்டில் துணை நீரே
      இருளில் வெளிச்சம் நீரே – நன்றி
    2. துயர் நீக்கும் மருத்துவரே
      என் துதிக்குப் பாத்திரரே
      பெலனெல்லாம் நீர்தானையா
      என் பிரியமும் நீர்தானையா
    3. கல்வாரி சிலுவையினால் – என்
      சாபங்கள் உடைந்ததையா
      ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் – இந்த
      அடிமைக்கு கிடைத்ததையா
    4. இயேசுவே உம் இரத்தத்தால்
      என்னை நீதிமானாய் மாற்றினீரே
      பரிசுத்த ஆவி தந்து – உம்
      அன்பை ஊற்றினீரே
    5. உம்மையே நம்பி வாழ்வதால்
      உமக்கே சொந்தமானேன் – என்
      உயிரான கிறிஸ்து வந்தால் – உம்
      உறவுக்குள் வந்துவிட்டேன்
    6. இவ்வுலகப் போக்கின்படி
      நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
      உம்மோடு இணைத்தீரைய்யா – உம்
      மிகுந்து இரக்கத்தினால்
    7. வாழ்வு தரும் ஊற்று நீரே
      வழிகாட்டும் தீபம் நீரே
      புயலில் புகலிடமே – கடும்
      வெயிலில் குளிர் நிழலே
    8. பேரின்ப நீரோடையில்
      என் தாகம் தணிப்பவரே
      உமது பேரன்பு – அது
      எத்தனை மேலானது

    Paatuvoem Makizhvoem Lyrics in English

    paaduvom makilvom
    konndaaduvom
    appaa samookaththil paati
    makilnthu konndaaduvom

    1. akkini mathil neerae
      aaruthal malai neerae
      ikkattil thunnai neerae
      irulil velichcham neerae – nanti
    2. thuyar neekkum maruththuvarae
      en thuthikkup paaththirarae
      pelanellaam neerthaanaiyaa
      en piriyamum neerthaanaiyaa
    3. kalvaari siluvaiyinaal – en
      saapangal utainthathaiyaa
      aapirakaamin aaseervaathangal – intha
      atimaikku kitaiththathaiyaa
    4. Yesuvae um iraththaththaal
      ennai neethimaanaay maattineerae
      parisuththa aavi thanthu – um
      anpai oottineerae
    5. ummaiyae nampi vaalvathaal
      umakkae sonthamaanaen – en
      uyiraana kiristhu vanthaal – um
      uravukkul vanthuvittaen
    6. ivvulakap pokkinpati
      naan vaalnthaen palanaatkal
      ummodu innaiththeeraiyyaa – um
      mikunthu irakkaththinaal
    7. vaalvu tharum oottu neerae
      valikaattum theepam neerae
      puyalil pukalidamae – kadum
      veyilil kulir nilalae
    8. paerinpa neerotaiyil
      en thaakam thannippavarae
      umathu paeranpu – athu
      eththanai maelaanathu
  • Paatum En Ullam Kontaatum En Jeevan பாடும் என் உள்ளம் கொண்டாடும் என் ஜீவன்

    பாடும் என் உள்ளம் கொண்டாடும் என் ஜீவன்
    இயேசு எந்தன் சொந்தமானாரே – கிறிஸ்து

    மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரிப்பேன்
    என் இதயத்தில் இயேசு உள்ளாரே

    நம்பிக்கையோடு இயேசுவை தேடு
    உன் ஜீவியம் மாறச்செய்வாரே – பழைய

    நம்பிக்கையோடு அன்போடு நாடு
    இயேசுவின் பிள்ளையாவாயே – கிறிஸ்து

    நம்பிக்கையோடு கர்த்தரே நாடு
    சொர்க்கத்தின் வாரிசாவாயே – நிfதய
    ராஜ்யத்தின் வாரிசாவாயே


    Paatum En Ullam Kontaatum En Jeevan Lyrics in English

    paadum en ullam konndaadum en jeevan
    Yesu enthan sonthamaanaarae – kiristhu

    makilchchi ponga aarpparippaen
    en ithayaththil Yesu ullaarae

    nampikkaiyodu Yesuvai thaedu
    un jeeviyam maarachcheyvaarae – palaiya

    nampikkaiyodu anpodu naadu
    Yesuvin pillaiyaavaayae – kiristhu

    nampikkaiyodu karththarae naadu
    sorkkaththin vaarisaavaayae – nifthaya
    raajyaththin vaarisaavaayae

  • Paathirar Neere Yesuve Neer Paathirarae பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே

    பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே – 2
    உம்மை போல் வேறு தெய்வமில்லை – 3
    பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே – 2

    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2

    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்குமே என் சித்தமல்ல,
    உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே – 2
    உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
    வனைந்திடும் உம் சித்தம் போல் – 2
    உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே – 2

    உருவாக்குமே…. உருவாக்குமே…

    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2
    உருவாக்குமே…. உருவாக்குமே…
    உருவாக்குமே…. உருவாக்குமே…


    Paathirar Neere Yesuve Neer Paathirarae – 2
    Ummai pol veru deivamillai – 3
    Paathirar Neere Yesuve Neer Paathirarae – 2

    Ennai Tharugiren Tharugiren Um Karathil
    Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil
    Ennai Tharugiren Tharugiren Um Karathil
    Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil

    Kuyavanae Um Kaiyil Kaliman Naan
    Udaithu uruvaakkum
    En Sithamalla um siththam naadha
    Tharugiren um kaiyilae
    En Sithamalla um siththam naadha
    Tharugiren um kaiyilae

    Um Sevaikkai Enai Tharugiren
    Vanaindhidum Um Siththam pol
    Um Sevaikkai Enai Tharugiren
    Vanaindhidum Um Siththam pol

    Um Siththam Seidhidavae
    Um Saththam Kattidavae
    Um Siththam Seidhidavae
    Um Saththam Kattidavae
    Uruvaakkumae … Uruvaakkumae..

    Ennai Tharugiren Tharugiren Um Karathil
    Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil
    Ennai Tharugiren Tharugiren Um Karathil
    Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil
    Uruvaakkumae … Uruvaakkumae..
    Uruvaakkumae … Uruvaakkumae..

  • Paatham Potriye Paninthiduven Yesuvin பாதம் போற்றியே பணிந்திடுவேன் இயேசுவின்

    பாதம் போற்றியே பணிந்திடுவேன் – இயேசுவின்
    பாதம் போற்றியே பணிந்திடுவேன்

    1. முன்னணைப் புல்லினை மிதித்திட்ட பாதம்
      மன்னவர் முவர் பணிந்திட்ட பாதம்
      வண்ணமாய் மேய்ப்பர்கள் வணங்கிய பாதம்
      எண்ணிலாத் தூதர்கள் சுமந்திட்ட பாதம்
    2. நோய்களைத் தீர்த்திட விரைந்திட்ட
      பேய்களைத் துரத்திட சென்றிட்ட பாதம்
      மாய்ந்திடும் பாவியை ஈட்டிடும் பாதம்
      தூய்மையின் ஊற்றாம் இயேசுவின் பாதம்
    3. பொங்கிடும் ஆழியின் அலைகளின் வேகம்
      மங்கிய இருளும் சூழ்ந்திடும் நேரம்
      ஏங்கிடும் சீஷரை மீட்டிடும் வண்ணம்
      பாங்குடன் கடல் மேல் நடந்திட்ட பாதம்
    4. பரிசேயன் வீட்டிற்கு சென்ற நற்பாதம்
      உரிமையாய் பாவி வந்தவன் இல்லம்
      பரிமள தைலத்தைப் பூசிய பாதம்
      பரிவுடன் மன்னித்த இயேசுவின் பாதம்
    5. கொல்கதா மலைபேல் நடந்திட்ட பாதம்
      நல்லவர் இயேசுவின் மென்மையாம் பாதம்
      வெள்ளமாய்க் குருதி ஒடிடும் வண்ணம்
      அறைந்திடத்தானே கொடுத்த நற்பாதம்

    Paatham Potriye Paninthiduven Yesuvin Lyrics in English

    paatham pottiyae panninthiduvaen – Yesuvin
    paatham pottiyae panninthiduvaen

    1. munnannaip pullinai mithiththitta paatham
      mannavar muvar panninthitta paatham
      vannnamaay maeypparkal vanangiya paatham
      ennnnilaath thootharkal sumanthitta paatham
    2. Nnoykalaith theerththida virainthitta
      paeykalaith thuraththida sentitta paatham
      maaynthidum paaviyai eetdidum paatham
      thooymaiyin oottaாm Yesuvin paatham
    3. pongidum aaliyin alaikalin vaekam
      mangiya irulum soolnthidum naeram
      aengidum seesharai meetdidum vannnam
      paangudan kadal mael nadanthitta paatham
    4. pariseyan veettirku senta narpaatham
      urimaiyaay paavi vanthavan illam
      parimala thailaththaip poosiya paatham
      parivudan manniththa Yesuvin paatham
    5. kolkathaa malaipael nadanthitta paatham
      nallavar Yesuvin menmaiyaam paatham
      vellamaayk kuruthi odidum vannnam
      arainthidaththaanae koduththa narpaatham
  • Paathai Kaattum Maa Yekoevaa பாதை காட்டும் மா யெகோவா

    1. பாதை காட்டும் மா யெகோவா
      பரதேசியான நான்
      பலவீனன் அறிவீனன்
      இவ்வுலோகம் காடுதான்
      வானாகாரம்
      தந்து என்னைப் போஷியும்.
    2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
      நீர் திறந்து தாருமேன்
      தீப மேக ஸ்தம்பம் காட்டும்
      வழியில் நடத்துமேன்
      வல்ல மீட்பர்!
      என்னைத் தாங்கும் இயேசுவே.
    3. சாவின் அந்தகாரம் வந்து
      என்னை மூடும் நேரத்தில்
      சாவின்மேலும் வெற்றி தந்து
      என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
      கீத வாழ்த்தல்
      உமக்கென்றும் பாடுவேன்.

    Paathai Kaattum Maa Yekoevaa Lyrics in English

    1. paathai kaattum maa yekovaa
      parathaesiyaana naan
      palaveenan ariveenan
      ivvulokam kaaduthaan
      vaanaakaaram
      thanthu ennaip poshiyum.
    2. jeeva thannnneer oorum oottaை
      neer thiranthu thaarumaen
      theepa maeka sthampam kaattum
      valiyil nadaththumaen
      valla meetpar!
      ennaith thaangum Yesuvae.
    3. saavin anthakaaram vanthu
      ennai moodum naeraththil
      saavinmaelum vetti thanthu
      ennaich serppeer motchaththil
      geetha vaalththal
      umakkentum paaduvaen.
  • Paathagan En Vinaitheer பாதகன் என் வினைதீர்

    பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
    பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.

    அனுபல்லவி

    தீதகற்றவே சிறந்த
    சேண் உலகினிமை விட்டு,
    பூதலத் துகந்து வந்த
    புண்ணியனே, யேசு தேவா. — பாதகன்

    சரணங்கள்

    1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
      மாசில்லாத யேசு நாதனே,
      உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
      முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? — பாதகன்
    2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்
      சின்னபின்னம் செய்ய வல்லதே;
      பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
      விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே — பாதகன்
    3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
      ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
      தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
      செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. — பாதகன்

    Paathagan En Vinaitheer-பாதகன் என் வினைதீர், ஐயா Lyrics in English

    paathakan en vinaitheer, aiyaa; kirupaakaraa, nin
    paadu ninain thenaich ser, aiyaa.

    anupallavi

    theethakattavae sirantha
    senn ulakinimai vittu,
    poothalath thukanthu vantha
    punnnniyanae, yaesu thaevaa. — paathakan

    saranangal

    1. vanthurum eppaavikalaiyum – angaீkarikkum
      maasillaatha yaesu naathanae,
      unthan idam vanthulamae uruki aluthamaathu
      munthimikach seytha paavam muluthum poruththaay anto? — paathakan
    2. sinthina un uthiram athae – theeyon maraththaich
      sinnapinnam seyya vallathae;
      pantham ura untan valap paakaamutta kalvanaiyae
      vinthaiyura vaeratchiththa vaethanae, avvithamaayae — paathakan
    3. arpavisuvaasamulan aam – atiyaenai ini
      aatharippathaar? un thanjamae;
      tharparaa, unaith tharisith thanti nampitaen, enavae
      seppina thomaavukkuppol, thiru urukkaatchi thanthu. — paathakan