Category: Tamil Worship Songs Lyrics

  • Deiva Aatukuttiye Logatharin Meetpare தெய்வ ஆட்டுக்குட்டியே, லோகத்தாரின் மீட்பரே

    1. தெய்வ ஆட்டுக்குட்டியே,
      லோகத்தாரின் மீட்பரே,
      உம்மால் மீட்கப்பட்ட நான்
      தேவரீர்க்கு அடியான்
      நீர் என் கோட்டை, தஞ்சமாம்,
      ஆர் என் வாழ்வை நீக்கலாம்?
    2. கர்த்தரே, என் உள்ளத்தில்
      அருள் தந்தென் மனதில்
      அந்தகாரம் நீங்கிட,
      அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
      ஆவியின் நல் ஈவையும்
      பூர்த்தியாக அளியும்.
    3. எந்த நாழிகையிலே
      நீர் வந்தாலும், இயேசுவே,
      உம்மையே நான் சந்திக்க,
      கண்ணால் கண்டு களிக்க,
      நான் விழித்திருக்கவே
      நித்தம் ஏவிவாருமே.

    Deiva Aatukuttiye Logatharin Meetpare Lyrics in English
    theyva aattukkuttiyae, lokaththaarin meetparae

    1. theyva aattukkuttiyae,
      lokaththaarin meetparae,
      ummaal meetkappatta naan
      thaevareerkku atiyaan
      neer en kottaை, thanjamaam,
      aar en vaalvai neekkalaam?
    2. karththarae, en ullaththil
      arul thanthen manathil
      anthakaaram neengida,
      anpin theepam svaalikka,
      aaviyin nal eevaiyum
      poorththiyaaka aliyum.
    3. entha naalikaiyilae
      neer vanthaalum, Yesuvae,
      ummaiyae naan santhikka,
      kannnnaal kanndu kalikka,
      naan viliththirukkavae
      niththam aevivaarumae.
  • Dasare Itharaniyai Anbai தாசரே இத்தரணியை அன்பாய்

    தாசரே இத்தரணியை அன்பாய்
    இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

    நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
    அவரைக் காண்பிப்போம்
    மாஇருள் நீக்குவோம்
    வெளிச்சம் வீசுவோம்

    1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
      வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
      உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
      நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
    2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
      பட்சமாக உதவி செய்வோம்
      உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே
    3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
      நீசரை நாம் உயர்த்திடுவோம்
      பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
      நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

    4.இந்துதேச மாது சிரோமணிகளை
    விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
    சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
    நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட

    1. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
      வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
      ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம்
      முயன்றிடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

    Dasare Itharaniyai Anbai Lyrics in English
    thaasarae iththaranniyai anpaay
    Yesuvukkuch sonthamaakkuvom

    naesamaay Yesuvaik kooruvom
    avaraik kaannpippom
    maairul neekkuvom
    velichcham veesuvom

    1. varuththappattu paaranj sumanthorai
      varunthiyanpaay alaiththiduvom
      uriththaay Yesu paava paaraththai
      namathu thukkaththai namathu thunpaththai sumanthu theerththaarae
    2. pasiyuttaோrkkum pinniyaalikatkum
      patchamaaka uthavi seyvom
      usitha nanmaikal nirainthu thamai maranthu Yesu kaninthu thirinthanarae
    3. nerukkappattu odukkappattaோrai
      neesarai naam uyarththiduvom
      porukka vonnnnaa kashdaththukkul
      nishtooraththukkul padukulikkul vilunthanarae

    4.inthuthaesa maathu siromannikalai
    vinthai yolikkul varavalaippom
    sunthara kunangalatainthu ariviluyarnthu
    nirppanthangal theernthu siranthiladangida

    1. maarkkam thappi nadapporai saththiya
      valikkul vanthida serththiduvom
      ookkamaay jepiththiduvom naam
      muyantiduvom naam jeyiththiduvom
  • Dasanagiya Yakobe Bayapadadhe தாசனாகிய யாக்கோபே பயப்படாதே

    தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே

    1. உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன்
      இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன்
      மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன்
    2. வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன்
      வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன்
      உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன்
    3. தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன்
      கால்கள் கல்லில் இடராமல் கருத்தாய் காத்திடுவேன்
      நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன்
    4. ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான் இருப்பேன்
      அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாமல் காத்துக் கொள்வேன்
      உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன்

    Dasanagiya Yakobe Bayapadadhe Lyrics in English
    thaasanaakiya yaakkopae payappadaathae thikaiyaathae

    1. unakku munpaaka naan selvaen valikal sevvaiyaakkuvaen
      ithuvaraiyilum kaaththittaen iniyum kaaththiduvaen
      maraivilirukkum pokkishangalai unakku thanthiduvaen
    2. valakkaraththinaal thaangiduvaen pelanai koduththiduvaen
      varannda nilaththin mael aarukalai odachcheyvaen
      un mael aaviyum aaseervaathamum oottiduvaen
    3. thaayaip pola thaettiduvaen thanthai pol annaiththiduvaen
      kaalkal kallil idaraamal karuththaay kaaththiduvaen
      ninaiththidaatha alavirku naan unnai uyarththiduvaen
    4. aarukalai nee kadakkaiyilae unnodu naan iruppaen
      akkini juvaalai unnaip pattaாmal kaaththuk kolvaen
      unakku ethiraay elumpuvorai naanae sitharatippaen
  • Dam Dam Dam Damaku டம் டம் டம் டமக்கு

    டம் டம் டம் டமக்கு டம் டம் (3) டம் டம்

    தண்ணிக்குள்ள யாரு?
    பெரிய மீனுதான் பாரு
    மீனின் வயிற்றிலே யாரு?
    நம்ம யோனா தான் பாரு } – 2

    ஐய்யய்யோ (4) மாட்டிக்கிட்டாரு யோனா மாட்டிக்கிட்டாரு
    கர்த்தர் சொன்ன பேச்சை கேட்காம மாட்டிக்கிட்டாரு

    எப்படி இருந்த யோனா இப்படி ஆயிட்டாரு (2)
    நீயும் இப்படி வாழாதே கீழ்ப்படிந்து வாழ்ந்திடு
    நீயும் இப்படி வாழாதே மனந்திரும்பி வாழ்ந்திடு

    Song Theme : மன்னிக்கிறவரை வந்து பாருங்கள்


    Dam Dam Dam Damaku – டம் டம் டம் டமக்கு Lyrics in English
    Dam Dam Dam Damaku

    dam dam dam damakku dam dam (3) dam dam

    thannnnikkulla yaaru?
    periya meenuthaan paaru
    meenin vayittilae yaaru?
    namma yonaa thaan paaru } – 2

    aiyyayyo (4) maattikkittaru yonaa maattikkittaru
    karththar sonna paechchaை kaetkaama maattikkittaru

    eppati iruntha yonaa ippati aayittaru (2)
    neeyum ippati vaalaathae geelppatinthu vaalnthidu
    neeyum ippati vaalaathae mananthirumpi vaalnthidu

    Song Theme : mannikkiravarai vanthu paarungal

  • Daevanalae Kudada தேவனாலே கூடாத

    தேவனாலே கூடாத காரியம்
    ஒன்றும் இல்லையே
    அழைத்த தேவன் நடத்திடுவார்
    என்றென்றும் கலங்காதே

    என்னைப் படைத்த தெய்வமே
    என்னை அழைத்த தெய்வமே
    வாக்குத் தத்தங்கள் நீர் தந்த தெய்வமே
    அந்த வாக்குத் தத்தங்கள் நிறைவேற்ற வாருமே

    உம்மை நம்பிடுவேனே நீர் எந்தன் தெய்வமே
    உம்மை ஆராதிப்பேனே எந்தன் இயேசு இராஜனே

    யோசேப்பைப் போல் பின்பற்றுவேன்
    அடிமையாய் விற்றாலுமே
    தானியேல் போல் ஜெபித்திடுவேன்
    உலகமே எதிர்த்தாலுமே

    யோபு போல பின்பற்றுவேன்
    எல்லாமே இழந்தாலுமே
    பவுலைப் போல ஊழியம் செய்வேன்
    மனிதர்கள் எதிர்த்தாலுமே


    Daevanalae Kudada Lyrics in English
    thaevanaalae koodaatha kaariyam
    ontum illaiyae
    alaiththa thaevan nadaththiduvaar
    ententum kalangaathae

    ennaip pataiththa theyvamae
    ennai alaiththa theyvamae
    vaakkuth thaththangal neer thantha theyvamae
    antha vaakkuth thaththangal niraivaetta vaarumae

    ummai nampiduvaenae neer enthan theyvamae
    ummai aaraathippaenae enthan Yesu iraajanae

    yoseppaip pol pinpattuvaen
    atimaiyaay vittaாlumae
    thaaniyael pol jepiththiduvaen
    ulakamae ethirththaalumae

    yopu pola pinpattuvaen
    ellaamae ilanthaalumae
    pavulaip pola ooliyam seyvaen
    manitharkal ethirththaalumae

  • Christmas nalithe கிறிஸ்மஸ் நாளிதே

    கிறிஸ்மஸ் நாளிதே
    எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
    கிறிஸ்துமஸ் நாளிதே

    மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
    தொழுதிட பிறந்திட்டார் இயேசு
    குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
    தொழுதிட பிறந்திட்டார் இயேசு

    பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
    துதித்திட பிறந்திட்டார் இயேசு
    பூலோகம் மகிழ்ந்திட உலகமே
    துதித்திட பிறந்திட்டார் இயேசு


    Christmas nalithe Lyrics in English
    kirismas naalithae
    ellorum paati konndaati makilum

    kiristhumas naalithae

    maeypparkal vanangida saasthirikal

    tholuthida piranthittar Yesu

    kudumpangal sernthida Yesuvai

    tholuthida piranthittar Yesu

    paralokam makilnthida thootharkal

    thuthiththida piranthittar Yesu

    poolokam makilnthida ulakamae

    thuthiththida piranthittar Yesu

  • Christmas christmas vandhachu கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு

    கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்
    கிறிஸ்மஸ் வந்தாச்சு
    நமக்காகவே நம்
    இயேசு பிறந்தாரே

    தேவகுமாரன் பூவில் வந்தார்
    பரலோகத்தை விட்டு இறங்கினார்

    நம்மைப் போல் ஒரு மனிதன் ஆனார்
    நம்மேல் எவ்வளவாய் அன்பு வைத்தார்

    களிகூர்ந்து பாடிடுவோம்
    நம் ராஜா நம்மிடம் வந்துட்டாரு
    இருள் நீக்கி வெளிச்சத்தை தந்திட
    உலகத்தின் ஒளியாய் பிறந்திட்டாரு

    விண்ணில் மகிமை உலகத்தில் மகிழ்ச்சி
    சமாதானம் எங்கும் பெருகட்டுமே
    மண்ணில் உதித்த மகிமையின் தேவனை
    பணிந்து குனிந்து தொழுதிடுவோமே

    Come on Rise up shine For Him
    அவர் ஒளி நம்மிலே
    let us tell his love today
    உலகத்திலே

    திரள் கூட்ட தூதர்கள் சேனை
    துதிகள் வானில் தொனித்திடவே
    பனியும் குளிரும் மூடிய இரவில்
    பூவில் நம்பிக்கை மலர்ந்திடவே

    முன்னனைமீது மரியாளின் மைந்தன்
    பாலகன் இயேசு பிறந்திட்டாரே
    நம்மை நடத்தும் விடிவெள்ளி சுடராய்
    நம்மோடு நித்தியர் இருக்கிறாரே

    There is fear no more Shame no more
    அவர் பெலன் நம்மிலே

    Let our hearts be filled with joy
    இன்றும் என்றுமே


    Christmas christmas vandhachu Lyrics in English
    kirismas kirismas
    kirismas vanthaachchu
    namakkaakavae nam
    Yesu piranthaarae

    thaevakumaaran poovil vanthaar
    paralokaththai vittu iranginaar

    nammaip pol oru manithan aanaar
    nammael evvalavaay anpu vaiththaar

    kalikoornthu paadiduvom
    nam raajaa nammidam vanthuttaru
    irul neekki velichchaththai thanthida
    ulakaththin oliyaay piranthittaru

    vinnnnil makimai ulakaththil makilchchi
    samaathaanam engum perukattumae
    mannnnil uthiththa makimaiyin thaevanai
    panninthu kuninthu tholuthiduvomae

    Come on Rise up shine For Him
    avar oli nammilae
    let us tell his love today
    ulakaththilae

    thiral kootta thootharkal senai
    thuthikal vaanil thoniththidavae
    paniyum kulirum mootiya iravil
    poovil nampikkai malarnthidavae

    munnanaimeethu mariyaalin mainthan
    paalakan Yesu piranthittarae
    nammai nadaththum vitivelli sudaraay
    nammodu niththiyar irukkiraarae

    There is fear no more Shame no more
    avar pelan nammilae

    Let our hearts be filled with joy
    intum entumae

  • Christhuvin sayal கிறிஸ்துவின் சாயல்

    கிறிஸ்துவின் சாயல் தரித்திட
    தந்தேன் என்னை முழுவதுமாய்
    உம்மைப் போல் மாறிட வாஞ்சிக்கிறேன்
    மாற்றிடும் என்னை முழுவதுமாய்

    உம்மைப் போல் மாற்றிடும்
    உம்மைப் போல் வனைந்திடும்
    உம்மாக மாறிட வாஞ்சிக்கிறேன்
    மாற்றிடும் என்னை முழுவதுமாய்

    தாழ்மையின் சிந்தை தரித்திட
    தந்தேன் என்னை முழுவதுமாய்
    மரண பரியந்தம் தாழ்த்தினீரே
    தாழ்த்துகிறேன் என்னை முற்றிலுமாய்

    அன்பு என்னில் பெருகிட
    அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய்
    அக்கினி அபிஷேக என்னில் ஈந்திடும்
    அனலாய் என்றும் பிரகாசிப்பேன்


    Christhuvin sayal Lyrics in English
    kiristhuvin saayal thariththida
    thanthaen ennai muluvathumaay
    ummaip pol maarida vaanjikkiraen
    maattidum ennai muluvathumaay

    ummaip pol maattidum
    ummaip pol vanainthidum
    ummaaka maarida vaanjikkiraen
    maattidum ennai muluvathumaay

    thaalmaiyin sinthai thariththida
    thanthaen ennai muluvathumaay
    marana pariyantham thaalththineerae
    thaalththukiraen ennai muttilumaay

    anpu ennil perukida
    arppanniththaen ennai muluvathumaay
    akkini apishaeka ennil eenthidum
    analaay entum pirakaasippaen

  • Christhuvin Sareeramithu Kristhavar கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர்

    கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது – இந்த

    உணவையே உண்போம் ஓருடலாவோம்

    ஒரு மனம் கொண்டு வாழ்ந்திருப்போம் – 2

    கருணையின் வடிவமிது நம் கடவுளின் வாழ்வுமிது – 2

    அருளின் படிவமிது நம் ஆனந்த சக்தியிது – 2

    மனதிற்கு இனிமை தரும் நம் மாசுகள் நீக்கிவிடும் – 2

    மண்ணக வாழ்வையுமே மிக மாண்புறச் செய்துவிடும் – 2

    உறவுக்குப் பாலமிது நம் உரிமைக்குக் குரலுமிது – 2

    உண்மையின் கோலமிது எந்த நன்மைக்கும் நன்மையிது – 2


    Christhuvin Sareeramithu Kristhavar Lyrics in English
    kiristhuvin sareeramithu kiristhavar unavumithu – intha

    unavaiyae unnpom orudalaavom

    oru manam konndu vaalnthiruppom – 2

    karunnaiyin vativamithu nam kadavulin vaalvumithu – 2

    arulin pativamithu nam aanantha sakthiyithu – 2

    manathirku inimai tharum nam maasukal neekkividum – 2

    mannnaka vaalvaiyumae mika maannpurach seythuvidum – 2

    uravukkup paalamithu nam urimaikkuk kuralumithu – 2

    unnmaiyin kolamithu entha nanmaikkum nanmaiyithu – 2

  • Chinnachiru Sudane Ennarum Thavame சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே

    சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
    மன்னர் மன்னவனே உன்னதத் திருவே

    1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
      கூடுண்டு பறவைகட்கு
      பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
      வீடுண்டோ உந்தனுக்கு

    தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
    காரணம் நீரானீரோ
    கோர வெம்பகைகள் பாரச்சுமைகள்
    தீர மருந்தானீரோ ஆ.. ஆ.. ஆ

    1. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்
      முற்றிலும் நீரல்லவோ
      குற்றம் துடைக்க பற்றினை நீக்க
      உற்றவர் நீரல்லவோ

    பாசமாய் வந்து காசினை மீட்ட
    நேசமுள்ள ஏசுவே
    நீச சிலுவை தொங்கப் பிறந்த
    தாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ


    Chinnachiru Sudane Ennarum Thavame Lyrics in English
    sinnanjitru suthanae ennarum thavamae

    mannar mannavanae unnathath thiruvae

    1. kaadunndu narikku kulikalumunndu

    koodunndu paravaikatku

    paadunndu umakku manithakumaaranae

    veedunntoo unthanukku

    thaaranni thuyarkal thunpangal neenga

    kaaranam neeraaneero

    kora vempakaikal paarachchumaikal

    theera marunthaaneero aa.. aa.. aa

    1. suttam thaay thanthai mattumanaiththum

    muttilum neerallavo

    kuttam thutaikka pattinai neekka

    uttavar neerallavo

    paasamaay vanthu kaasinai meetta

    naesamulla aesuvae

    neesa siluvai thongap pirantha

    thaasarin thaaparamae aa.. aa.. aa