Category: Tamil Worship Songs Lyrics

  • நான் சிறுமையும் எளிமையும் Nan sirumaium ellimaium

    நான் சிறுமையும் எளிமையும் ஆனவன்
    நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
    ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
    என்னையும் உம் கரம் வணைந்ததே-2
    நன்றி சொல்வேன் (என்) வாழ்நாளெல்லாம்
    ஆராதிப்பேன் உம்மையே-2
    நன்றி நன்றி நன்றி இராஜா-4

    நீர் செய்த உபகாரங்கள்-அவை
    எண்ணி முடியாதவை-2
    எப்படி நன்றி சொல்வேன்
    எண்ணில்லா நன்மை செய்தீர்-2
    நன்றி நன்றி நன்றி இராஜா-4

    குப்பையில் கிடந்த என்னை
    உயர உயர்த்தினீரே-2
    எண்ணையினால் தலையை
    அபிஷேகமும் செய்தீரே-2
    நன்றி நன்றி நன்றி இராஜா-4

    பெலவீனமான என்னை உந்தன்
    பெலத்தால் இடை கட்டினீர்-2
    (என்) வழியை செவ்வைப்படுத்தி
    சேனைக்குள் பாயச்செய்தீர்-2
    நன்றி நன்றி நன்றி இராஜா-4


    Nan sirumaium ellimaium ahnavan
    Neer ennai kannoki partheerey
    Ondrukum udhavadha kaliman nan
    Ennaium um karam vanainthadhey
    Nandri solven en valnal ellam
    Arathipen ummaiye -2
    Nandri nandri nandri raja -4

    Neer seidha ubagarangak avai
    Enni mudiyadhavai -2
    Epadi nandri solven
    Ennilla nanmai seidheer -2
    Nandri nandri nandri raja -4

    Kuppail kidantha ennai
    Uyara uyartheeinerey -2
    Ennaiyal thalaieai
    Abishegamum seidheerey -2
    Nandri nandri nandri raja -4

    Belaveenamana ennai unthan
    Belathal idaikattineer -2
    En valiyai sevai paduthi
    Senaikul paya seidheer -2
    Nandri nandri nandri raja -4


  • என்னை கழுவும் உம் ரத்ததாலே Ennai kazhuvum um raththathaale

    என்னை கழுவும் உம் ரத்ததாலே
    சுத்திகரியும் உம் ஆவியாலே – 2

    என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
    சுத்திகரியும் நான் தூய்மையாவேன் – 2
    உம்மை போல் என்னை மாற்றிடும் – 4

    என்னை தள்ளாதிரும்
    சுத்த ஆவியே விலகாதிரும் – 2
    பரிசுத்த இருதயம் எனில் தாருமே
    நிலைவர ஆவியை புதுப்பியுமே – 2

    என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
    சுத்திகரியும் நான் தூய்மையாவேன் – 2
    உம்மை போல் என்னை மாற்றிடும் – 4

    என் பாவங்கள் எண்ணாதிரும்
    என் அக்கிரமங்கள் நீக்கியருளும் – 2
    கிருபையினால் எனக்கு இறங்கிடும்
    இரக்கத்தினால் என்னை மண்ணித்தருளும் – 2

    என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
    சுத்திகரியும் நான் தூய்மையாவேன் – 2
    உம்மை போல் என்னை மாற்றிடும் – 4

    என் உதடுகள் திறந்தருளும்
    உம் புகழை நான் அறிவித்திட – 2
    இரட்சிப்பின் சந்தோசத்தை திரும்ப தாரும்
    உற்சாக ஆவி என்னை தாங்க செய்யும் – 2

    என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
    சுத்திகரியும் நான் தூய்மையாவேன் – 2
    உம்மை போல் என்னை மாற்றிடும் – 4


    Ennai kazhuvum um raththathaale
    Suthikariyum um aaviyaale – 2

    Ennai kazhuvum Naan suthamaaven
    Suththikariyum naan thooimaiyaaven – 2
    Ummai pol ennai matridum – 4

    Ennai thallaathirum
    Suththa aaviye vilagathirum – 2
    Parisutha iruthayam enil thaarume
    Nilaivara aaviyai puthuppiyume – 2

    Ennai kazhuvum Naan suthamaaven
    Suththikariyum naan thooimaiyaaven – 2
    Ummai pol ennai matridum – 4

    En paavangal ennaathirum
    En akkiramangal neekkiyarulum – 2
    Kirubayinaal enakku irangidum
    Irakkaththinaal ennai manniththarulum – 2

    Ennai kazhuvum Naan suthamaaven
    Suththikariyum naan thooimaiyaaven – 2
    Ummai pol ennai matridum – 4

    En uthadukal thirantharulum
    Um pugazhai naan ariviththida – 2
    Ratchippin santhosaththai thirumba tharum
    Urchaaga aavi ennai thaanga seyyum – 2

    Ennai kazhuvum Naan suthamaaven
    Suththikariyum naan thooimaiyaaven – 2
    Ummai pol ennai matridum – 4


  • நீர் வந்தாலே போதுமையா Neer Vanthalae Pothumaiya

    நீர் வந்தாலே போதுமையா
    எங்கள் சூழ்நிலை மாறுமையா – 2
    உம் மகிமையின் பிரசன்னத்தினாலே
    மலைகளும் பர்வதமும் உருகுமே
    உம் மகிமையின் வல்லமையினாலே
    இருளும் வெறுமையும் மறையுமே

    என் கண்ணீர்கள் மாறும்
    என் கவலைகள் மாறும்
    என் தோல்விகள் மாறும்
    எல்லாமே மாறுமையா – இயேசைய்யா
    எல்லாமே மாறுமையா – 2

    காற்றையும் காணவில்லை மழையையும் பார்க்க்வில்லை
    ஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமே
    அழுகையின் பள்ளதாக்கில் உருவ நான் நடந்தாலும்
    நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர்

    நீர் வந்தாலே போதுமையா
    எங்கள் சூழ்நிலை மாறுமையா – 4

    பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும்
    கட்டுகள் எல்லாமே கழன்றிடுமே
    சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும்
    இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே

    தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு இறங்கும்
    என் ஆத்துமா பலவானை மிதித்திடுமே
    எதிரிகள் மேலே என் கைகள் உயரும்
    சத்துருக்கள் மேல் என்னை உயர்த்திடுவீர்


    Neer Vanthalae Pothumaiya
    Engal Soozhlnilai Marumaiya – 2
    Um Magimayin Prasannathinalae
    Malaigalum Parvathamum Urugumae
    Um Magimayin Vallamayinalae
    Irulum Verumaiyum Mariyoumae

    En Kanneergal Marum
    En Kavalaigal Marum
    En Thozhvigal Marum
    Ellamae Maarumaiya
    Yesaiya Ellamae Maarumaiya – 2

    Kaatraium Kanavillai Mazhaiyaium Parkkavillai
    Aanalum Vaikkalgal Nirambidumae
    Azhugayin Pallathakkil Uruva Naan Nadanthalum
    Neerootrai Athaium Neer Matriduveer

    Neer Vanthalae Pothumaiya
    Engal Soozhlnilai Marumaiya – 4

    Boomium Adhirum Kadhavugal Thirakum
    Kattukkal Ellamae Kalandridumae
    Sirai Vazhvu Maraium Seer Vazhvu Thirumbum
    Ratchipin Santhosham Perugidumae

    Dhevanin Rajiyam Belathodu Irangum
    En Aathma Belavaanai Mithithidumae
    Ethirigal Maelae En Kaigal Uyarum
    Sathrukkal Meal Ennai Uyarthiduveer


  • யூத ராஜ சிங்கம் Yootha Raaja Singam

    யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
    உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

    வேதாளக் கணங்கள் ஓடிடவே
    ஓடிடவே உருகி வாடிடவே

    வானத்தின் சேனைகள் துதித்திடவே
    துதித்திடவே பரனைத் துதித்திடவே

    மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
    தெறிபட்டன நொடியில் முறிபட்டன

    எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
    எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே

    மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
    அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்

    உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
    மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை

    பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார்
    அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார்

    கிறிஸ்தவரே நாம் அவர் பாதம் பணிவோம்
    பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம்


    Yootha Raaja Singam Uyirththelunthaar
    Uyirththelunthaar Narakai Jeyiththelunthaar

    Vaethaalak Kanangal Otidavae
    Otidavae Uruki Vaatidavae – Yootha

    Vaanaththin Senaikal Thuthiththidavae
    Thuthiththidavae Paranaith Thuthiththidavae

    Maranaththin Sangilikal Theripattana
    Theripattana Notiyil Muripattana

    Elunthaar Enta Thoni Engum Kaetkuthae
    Engum Kaetkuthae Payaththai Entum Neekkuthae

    Maathar Thootharaik Kanndaka Makilnthaar
    Akamakilnthaar Paranai Avar Pukalnthaar

    Uyirththa Kiristhu Ini Marippathillai
    Marippathillai Ini Marippathillai

    Paavaththirkentu Oru Tharam Mariththaar
    Avar Mariththaar Orae Tharam Mariththaar

    Kiristhavarae Naam Avar Paatham Pannivom
    Paatham Pannivom Pathaththai Siram Annivom


  • வென்றனரே நம் இயேசு Venranare Nam Yesu

    வென்றனரே நம் இயேசு பரன்
    என்றென்றும் ஜெயித்தெழுந்தார்
    ஜெயமே அடைந்துமே
    இரட்சகரில் வளருவோம்

    சேதமேதும் நெருங்கிடா
    தேவ தேவன் தாங்குவார்
    துன்பம் யாவும் நீங்கிடும்
    இன்பம் என்றும் தங்கிடும்

    தீங்கு நாளில் மறைத்துமே
    சுகமாய் காத்து மூடுவார்
    தகுந்த வேளை கரத்தினில்
    உயர்த்தி ஜெயமே நல்குவார்

    தேவனோடு செல்லுவேன்
    மதிலைத் தாண்டி பாயுவேன்
    உலகை ஜெயிக்கும் தேவனால்
    யாவும் ஜெயித்து செல்லுவேன்

    நீதிமானை உயர்த்துவார்
    நீதிபரனாம் இயேசுவே
    சத்துரு வீழ்ந்து அழிந்திட
    தேவன் ஜெயமே தந்திடுவார்


    Venranare Nam Yesu Paran
    Enrenrum Jeyiththezhunthar
    Jeyame Atainthume
    Iratsakaril Valaruvom

    Sethamethum Nerungkita
    Theva Thevan Thangkuvar
    Thunpam Yavum Ningkitum
    Inpam Enrum Thangkitum

    Thingku Nalil Maraiththume
    Sukamay Kaththu Mutuvar
    Thakuntha Velai Karaththinil
    Uyarththi Jeyame Nalkuvar

    Thevanotu Selluven
    Mathilaith Thanti Payuven
    Ulakai Jeyikkum Thevanal
    Yavum Jeyiththu Selluven

    Nithimanai Uyarththuvar
    Nithiparanam Yesuve
    Saththuru Vizhnthu Azhinthita
    Devan Jeyame Thanthituvar


  • மகிமையான தேவன் மனிதனாக Magimaiyana Devan Manidhanaaga

    மகிமையான தேவன் மனிதனாக பிறந்து வந்து
    மனுக்குலத்தின் பாவத்திற்காய் பலியானரே
    மரித்துவிட்டார் என்று எண்ணி கல்லறையில் வைத்தாலும்
    மூன்றாம் நாள் சொன்னபடி உயிர்தெழுந்தாரே – 2

    உயிர்தெழுந்தாரே இயேசு உயிர்தெழுந்தாரே
    மூன்றாம் நாள் சொன்னபடி உயிர்தெழுந்தாரே – 2
    உயிர்தெழுந்தாரே இயேசு உயிர்தெழுந்தாரே
    வேதவாக்கியம் நிறைவேற உயிர்தெழுந்தாரே

    துரைத்தனங்கள் அதிகாரங்கள் முறிந்து போனதே
    பாவ சாப நோய்களெல்லாம் பறந்து போனதே – 2
    எதிரிடையாய் இருந்த எல்லா கையெழுத்தையும் துலைத்து
    சிலுவையின் மேல் ஆணி அடித்து ஜெயித்தெழுந்தாரே – 2

    மரணம் வந்து ஜெயமாக விழுங்கப்பட்டதையே
    பாதாளத்தின் வல்லமைகள் முறிக்கப்பட்டதையே – 2
    சாவுக்கு ஏதுவான சரீரத்தை உயிர்ப்பித்து
    சாவாமையை தரித்து கொள்ள ஜெயித்தெழுந்தாரே – 2

    புதிய ஜீவ மார்க்கத்தில் வழி பிறந்ததே
    புதிய முனேஷனாக வாழ கிருபை கிடைத்ததே – 2
    பாவியாக வாழ்ந்து வந்த என் வாழ்க்கையை மாற்றி
    கிறிஸ்துவுக்குள் நீதியாகி ஜெயித்தெழுந்தாரே – 2


    Magimaiyana Devan Manidhanaaga Pirandhu Vandhu
    Manukulathin Paavathirkaai Baliyaanarae
    Marithuvaitaar Endru Ennil Kallaraiyil Vaithaalum
    Moondram Naal Sonnapadi Uyirthezhundhaarae – 2

    Uyirthezhundhaarae Yesu Uyirthezhundhaarae
    Moondram Naal Sonnapadi Uyirthezhundhaarae – 2
    Uyirthezhundhaarae Yesu Uyirthezhundhaarae
    Vaedhavaakiyam Niraivaera Uyirthezhundhaarae

    Thuraithanangal Adhigaarangal Murindhu Ponadhae
    Paava Saaba Noigalellaam Parandhu Ponadhae – 2
    Edhiridaiyaai Irundha Ellaa Kaiyezhuthaiyum Thulaithu
    Siluvaiyin Mael Aani Adithu Jeithezhundhaarae – 2

    Maranam Vandhu Jeyamaaga Vizhungapatadhae
    Paadhaalathin Vallamigal Murikappattadhae – 2
    Saavuku Yaedhuvaana Sareerathai Uyirpithu
    Saavaamaiyai Tharithu Kolla Jeithezhundhaarae – 2

    Pudhiya Jeeva Maarkathil Vazhi Pirandhadhae
    Pudhiya Munshanaaga Vaazha Kirubai Kidaithathae – 2
    Paavaiyaaga Vaazhndhu Vandha En Vaazhkaiyai Maatri
    Kristhuvukul Needhiyaaki Jeithezhundhaarae – 2


  • இறுதி நாளும் வந்திட்டதே Iruthi Naalum Vanthittathae

    இறுதி நாளும் வந்திட்டதே
    பிரிந்து சென்றிடும் நேரம் இதே – 2
    எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்
    முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே – 2

    நல்ல போராட்டத்தை போராடினேன்
    ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே – 2
    உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனே
    என்று என்னை அழைப்பார்
    கட்டி அணைத்திடுவார் – 2

    அந்நிய கண்களால் அல்லவே
    என் சொந்த கண்களால் பார்ப்பேனே
    என் மீட்பரோடு நான்இருப்பேனே
    நித்திய காலமும் வாழ்வேனே – 2


    Iruthi Naalum Vanthittathae
    Pirinthu Sendridum Neram Ithae – 2
    Eththanai Perinbam Yesuvai Arinthen
    Mudivu Motchamae Nithiya Jeevan Thaanae – 2

    Nalla Poraathathai Poraadinaen
    Ottaththai Jeyamaai Mudithenae – 2
    Unmaiyum Uththamamum Ulla Oozhiyanae
    Endru Ennai Azhaippaar Katti Anaiththiduvaar – 2

    Anniya Kangalaai Allavae
    En Sontha Kangalaal Paarpenae
    En Meetparodu Naan Iruppenaen
    Niththiya Kaalamum Vaazhvenae – 2


  • ஆடிப் பாடி உம்மை Aadi Padi Ummai

    ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்
    ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் – 2

    ஆராதனை உமக்கே – 8

    செங்கடல் எதிரிட்டாலும்
    பாதைகள் அடைப்பட்டாலும் – 2
    சேனைகளின் கர்த்தரே
    புது வழியை திறந்திடுவார் – 2

    ஜெயம் என்றும் நமக்கே – 4

    சத்துரு எழும்பினாலும்
    எதிர்த்து போரிட்டாலும் – 2
    பலத்தால் என்னை நிரப்பி
    வழியை செவ்வையாக்குவார் – 2

    ஜெயம் என்றும் நமக்கே – 4

    போராட்ட வேலைகளிலும்
    நிந்தைகள் சூழ்ந்த போதும் – 2
    எக்காளத்தை எடுத்து
    எரிகோவை தகர்த்திடுவேன்
    துதியின் சத்தம் உயர்த்தி
    எரிகோவை தகர்த்திடுவேன்

    ஜெயம் என்றும் நமக்கே – 4


    Aadi Padi Ummai Aarathipaen
    Aanathamaga Ummai Aarathipaen – 2

    Aarathanai Umakkae – 8

    Sengadal Ethirittalum
    Paathaigal Adaipattalum – 2
    Seanaigalin Kartharae
    Puthu Vazhiyai Thiranthiduvaar – 2

    Jayam Entrum Namakkae – 4

    Sathuru Ezhumbinalum
    Ethirittu Porittalum – 2
    Bealathal Ennai Nirappi
    Vazhiyai Sevvaiyakkuvaar – 2

    Jayam Entrum Namakkae – 4

    Poratta Vealaikalilum
    Ninthaigal Suzhuntha (Sulntha) Pothum – 2
    Ekkalathai Eduthu
    Erikovai Thakarthiduvean
    Thuthiyin Satham Uyarthi
    Erikovai Thakarthiduvaen

    Jeyam Entrum Namakkae – 8


  • ராஜ ராஜன் பிறந்தாரே Raja rajan pirantharae

    ராஜ ராஜன் பிறந்தாரே-4
    செம்மேனி அழகு வாய்ந்தவர்
    செம்பாவம் போக்க வந்தவர் -2
    முன்னனை மீதினில் வந்ததுதித்தார்
    வந்ததுதித்தார்-ராஜ ராஜன்

    பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம்
    பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2
    கந்தை கோலமாக தேவன்
    கன்னி வயிற்றினில் பிறந்தாரே
    நிந்தை யாவும் நீக்கிடவே
    நீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன்

    வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர்
    இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2
    விண்ணின் தூதர் பாட்டுப்பாட
    விண்ணின் மைந்தன் பிறந்தாரே
    இயற்கையும் அவர் அழகைப்பாட
    இயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன்


    Raja rajan pirantharae-4
    Chemmeni azhagu vainthavar
    Sembavam pokka vanthavar-2
    Munnanai meetheenil vanthuthithar
    Vanthuthithar -raja rajan

    Paavathin vazhkaiyai matra vanthavaram
    Paralogathil nammaium serkka vanthavaram -2
    Kandhai kolamaga devan
    Kanni vairtil pirantharae
    Nindhai yavum nikidavae
    Neethi devan pirantharae – Raja rajan

    Vaanamum boomium nadungum naamam ivar
    Indha naanilam thannilae vanthuthitharae -2
    Vinnil thuthar pattu pada
    Vinnin mainthan pirantharae
    Iyarkaium avar azhagai paada
    Yeasu balan pirantharae – Raja rajan


  • உம் இரக்கத்தை ஆடி Um Erakathai Aadi

    உம் இரக்கத்தை ஆடி பாடுவேன்
    உம் கிருபையை கொண்டாடுவேன்
    உம்மை போல தெய்வம் வேற இல்லை
    உம் மகிமையை நான் பாடுவேன்
    எவ்வுலகெங்கும் பறை சாற்றுவேன்
    எங்கள் நேசர் , மீட்பர் நீர் தானே

    உந்தன் அன்பை கண்டதாலே
    எந்தன் உள்ளம் உம் அன்பை பாடாதிருக்குமோ

    எங்கள் கால்கள் நடனம் ஆடி துதிக்கும்
    உன்னதரே உந்தன் கிருபையை பாடுவோம்
    உம் தயவை பாடுவோம்
    எங்கள் நாவுகள் உம்மை போற்றி துதிக்கும்
    உன்னதரே உந்தன் அன்பை பாடுவோம்
    உம் தயவை பாடுவோம்

    என் கால்கள் நடனம் ஆடுதல்
    என் கரங்கள் உம்மை உயர்த்ததே
    உந்தன் அன்பால் என் வழக்கை மாறியதே
    உம் கிருபையை நான் பாடுவேன்
    உம் இரக்கத்தை நான் போற்றுவேன்
    எந்தன் ஆசை ஏக்கம் நீர்தானே


    Um Erakathai Aadi Paaduvaen
    Um Kirubaiyai Kondaduvaen
    Ummai Pola Dheivam Vaera Illai
    Um Magimaiyai Naan Paaduvaen
    Evuzhalgengum Parai Saatruvaen
    Engal Naesar, Meetpar Neer Dhanae

    Undhan Anbai Kandadhalae
    Endhan Ullalm Um Anbai Paadaadhirukkumo

    Engal Kaalgal Nadanam Aadi Thudhikum
    Unnadharae Undhan Kirubaiyai Paaduvom
    Um Dhayavai Paaduvom
    Engal Naavugal Ummai Potri Thudhikum
    Unnadharae Undhan Anbai Paaduvom
    Um Dhayavai Paaduvom

    En Kaalgal Nadanam Aadudhae
    En Karangal Ummai Uyarththey
    Undhan Anbal En Vazhkai Maariyadhey
    Um Kirubaiyai Naan Paaduvaen
    Um Erakathai Naan Pottruvaen
    Endhan Aasai Yaekam Neerdhanae