Category: Tamil Worship Songs Lyrics

  • Yennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே -2

    உடைத்தீர் உருவாக்கினீர்
    ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்

    1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
      அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
      ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
      இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2
    2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
      பாதாள குழியில் நான் கிடந்தேன்
      பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
      இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2

    Yennaku Yaar Undu Lyrics in English
    Yennaku Yaar Undu

    enakku yaarunndu kalangina naeraththil
    um karam ennai nadaththiyathae -2

    utaiththeer uruvaakkineer
    shitchiththeer seerpaduththineer
    pudamittir puthithaakkineer
    piriththeer piriyaathiruntheer

    1. pallaththin naduvil naan nadanthaen
      atchchaththin utchchaththai paarththaen
      oliyillaa irulil naan nadanthaen
      Yesuvillaa vaalvai naan veruththaen -2
    2. maranaththin vilimpil naan irunthaen
      paathaala kuliyil naan kidanthaen
      paavaththin paaraththai sumanthaen
      Yesuvillaa vaalvai naan veruththaen -2
  • Yennaiye Tharuhiraen Mulumaiyaai Tharuhiraen என்னையே தருகிறேன்

    என்னையே தருகிறேன்
    முழுமையாய் தருகிறேன் – 2
    இதயம் முழுதும் உமக்குத் தந்தேன்
    வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் – 2

    1. பாரங்கள் தருகிறேன்
      என் காயங்கள் தருகிறேன்
      என் ஆத்துமாவை உயிர்ப்பித்து
      எழும்பச் செய்யுமே

    என்னையே தருகிறேன்
    முழுமையாய் தருகிறேன்

    1. எண்ணங்கள் தருகிறேன்
      என் விருப்பங்கள் தருகிறேன்
      இனி உந்தன் சித்தம்
      எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே
    2. நிந்தைகள் ஏற்கிறேன்
      அவமானங்கள் ஏற்கிறேன் உம்
      ஊழியத்தை மகிழ்ச்சியோடே
      நானும் தொடர்கிறேன்

    Yennaiye Tharuhiraen Mulumaiyaai Tharuhiraen Lyrics in English
    ennaiyae tharukiraen
    mulumaiyaay tharukiraen – 2
    ithayam muluthum umakkuth thanthaen
    vaalkkai muluthum umakkuth thanthaen – 2

    1. paarangal tharukiraen
      en kaayangal tharukiraen
      en aaththumaavai uyirppiththu
      elumpach seyyumae

    ennaiyae tharukiraen
    mulumaiyaay tharukiraen

    1. ennnangal tharukiraen
      en viruppangal tharukiraen
      ini unthan siththam
      enthan vaalvil niraivaettumae
    2. ninthaikal aerkiraen
      avamaanangal aerkiraen um
      ooliyaththai makilchchiyotae
      naanum thodarkiraen
  • Yengumullor Yaarum Serthu Sthotharippome எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே

    எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
    இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
    யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
    இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே

    1. தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
      பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
      கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
      ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
      கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
      செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே — எங்கு
    2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
      இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
      தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
      கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
      அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
      நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே — எங்கு
    3. அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
      திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
      ஒலிவ மரத்தின் பலன்கள் கூட அற்றுப்போயினும்
      வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
      இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
      நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே — எங்கு

    Yengumullor Yaarum Serthu Sthotharippome Lyrics in English

    engumullor yaarum sernthu sthoththarippomae
    isravaelin karththarukkuth thuthi seluththumae
    yaakkopin santhathiyaarum kooti vaarumae
    Yesu engal karththar entu sthoththarippomae

    1. thaeva mainthan Yesuvukkaay sthoththarippomae
      parisuththaakamam eenthatharkaay sthoththarippomae
      kadantha kaala veerarukkaay sthoththarippomae
      jeevan vitta suththarukkaay sthoththarippomae
      kothumai manni thaniththaal ilaapam aethu unndu paareer
      seththathaakil palan mikuthi sthoththarippomae — engu
    2. nampikkai ilakkaavannnam mun nadappomae
      iraajaavin kattalaikkuk kanam koduppomae
      thaeva samookap palakkam ullor payam kollamaattar
      geelppatiyak kattukkonntoor thadumaattam kollaar
      avarkkaay ilanthavarkkup parisu nooraththanaiyaakak kittum
      niththiya makilchchi avarai moodum sthoththarippomae — engu
    3. aththi maram thulirvidaamal ponapothilum
      thiraatchaைch setiyil kani kaannaamal karukippoyinum
      oliva maraththin palankal kooda attuppoyinum
      vayalil makasool inti aekkam vanthapothilum
      immaikkaaka alla Yesunaathar maelae ulla pattu
      nam iruppu paralokaththil sthoththarippomae — engu
  • Yenge Sumandhu Pogirir Siluvaiyai Neer எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்

    எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்
    எங்கே சுமந்து போகிறீர் ?

    சரணங்கள்

    1. எங்கே சுமந்து போறீர் ? இந்தக் கானலில் உமது
      அங்கம் சுமந்து நோக , ஐயா , என் ஏசுநாதா — எங்கே
    2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல் ,
      தாளுந் தத்தளிக்கவே , தாப சோபம் உற , நீர்— எங்கே
    3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
      பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே
    4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர ,
      மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர — எங்கே
    5. வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும் ,
      எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்— எங்கே
    6. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
      தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து — எங்கே

    Yenge Sumandhu Pogirir Siluvaiyai Neer Lyrics in English

    engae sumanthu pokireer ? siluvaiyai neer
    engae sumanthu pokireer ?

    saranangal

    1. engae sumanthu poreer ? inthak kaanalil umathu
      angam sumanthu Nnoka , aiyaa , en aesunaathaa — engae
    2. tholil paaram aluththa , thookkap pelam illaamal ,
      thaalun thaththalikkavae , thaapa sopam ura , neer— engae
    3. vaathaiyinaal udalum vaatith thavippunndaaka ,
      paetham illaach seemonum pinnaakath thaangivara — engae
    4. thaayaar aluthuvara saarnthavar pin thodara ,
      maayam illaatha njaana maathar pulampi vara — engae
    5. valla paeyaik kollavum , marananthanai vellavum ,
      ellai illaap paavangal ellaam naasamaakavum— engae
    6. maasanukaatha saththiya vaasakanae , umathu
      thaasarkalaik kaakkavum thaangaach sumaiyai eduththu — engae
  • Yendan Nanbanae Ada எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனே

    எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனே
    நான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2)
    ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டு
    அதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2)
    அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
    இந்த உலகம் ரொம்ப வேஸ்டு
    ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
    என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே

    1. ஏர்டெலில் போட்டோம் கடலை
      ஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ்
      உலகத்தின் இன்பம் நிரந்தரமென்று
      சுற்றித் திரிந்தோம் (2) (அட)
      அட மனுஷனின் அன்பு பொய்யே
      இயேசுவின் அன்பு மெய்யே
      இதை புரிந்தவனாய் நீ வாழ்ந்தால்
      கலக்கிடலாம் (2)

    அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
    இந்த உலகம் ரொம்ப வேஸ்டு
    ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
    என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே

    1. ஸ்கூலில் கடைசி பென்ச்சு
      ஆனால் தியேட்டரில் முதல் சீட்டு
      பரிட்சை மார்கில் நாங்கள் என்றும்
      முட்டை எடுத்தோம் (2) (அட)
      அட ஆகாதவன் என்று
      தள்ளப்பட்ட கல்நான்
      என்னை மூலைக் கல்லாய் மாற்றின இயேசு
      உனக்கு உண்டு (2)
      அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
      இந்த உலகம் ரொம்ப வேஸ்டு
      ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
      என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே

    Endhan Nanbane
    Ada Endhan Nanbane
    Naan Solluvadhu Unmai
    Adhai Nambu Nanbane
    Alagaana Ulagil
    Namakkingu Undu
    Atan Pinne Sendral
    Enna Undu

    1. Ada Vesttu Vesttu Vesttu Indha
      Ulagam Romba Vestu
      Testtu Testtu Testtu En
      Yesu Romba Testtu – Endhan Nanbane
    2. Airtellil Pottom Kadalai
      Aircellil Anuppinom Sms
      Ulakathtin Inbam Nirantaramendru
      Sutrithirindom
      Manusanin Anbu Poyye
      Yesuvin Anbu Meyye
      Idhai Purindhavaaai
      Nee Vaalandhal Kalakkidalam – Endhan Nanbane
    3. Skoolil Kadaisi Benchu
      Aanaal Thiyettaril Mudhal Seettu
      Paritchai Maakkil Naangal
      Endrum Muttai Eduthom
      Ada Aagaadavan Endru Thallappatta Kallai
      Ennai Moolaikkallaai Maatrina
      Yesu Unakku Undu – Endhan Nanbane
  • Yenathu Ullam Yaruku எனது உள்ளம் யாருக்கு தெரியும்

    எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா
    எனது நினைவு யாருக்கு புரியும்

    என்னை நீர் அறிவீரே
    உம்மை நான் அறிவேனே
    என்னை புரிந்து கொண்ட
    தெய்வம் நீரே – இயேசையா

    1. அன்னை தந்தை அறியவில்லையே – என்
      உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
      என்னை அறிந்த தெய்வம் நீரையா – என்
      உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது
    2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
      நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
      நொருங்கி போன எனது உள்ளத்தை
      அரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது
    3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
      என் உள்ளம் நொந்து சோகமானது
      என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
      ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே

    Yenathu Ullam Yaruku Lyrics in English
    enathu ullam yaarukku theriyum – iyaesaiyaa
    enathu ninaivu yaarukku puriyum

    ennai neer ariveerae
    ummai naan arivaenae
    ennai purinthu konnda
    theyvam neerae – iyaesaiyaa

    1. annai thanthai ariyavillaiyae – en
      ullam thannai purinthu kolla mutiyavillaiyae
      ennai arintha theyvam neeraiyaa – en
      ullam purintha annai neeraiyaa — enathu
    2. manithano mukaththai paarkkiraan
      neero en ullamathai arinthu paarkkireer
      norungi pona enathu ullaththai
      aravannaiththu kaayam aattineer — enathu
    3. oorum uravum ennai veruththathu
      en ullam nonthu sokamaanathu
      en ullam arinthu oti vantheerae
      aatti thaetti annaiththuk konnteerae
  • Yen Yesuve Ummai Naan Nesikkiren என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்

    1. என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்
      வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன்
      உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன்
      என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்
    2. இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்
      நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர்
      முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன்
      என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்
    3. பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்
      எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்
      என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்
      என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்
    4. பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்
      நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்
      எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்
      என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

    Yen Yesuve Ummai Naan Nesikkiren Lyrics in English

    1. en yaesuvae! ummaiyae naan naesikkiraen
      vaeraெntha veennvaalvaiyum naadaathiruppaen
      ummaalae maananmaiyai naan kanndatainthaen
      en naathaa! maenmaelum ummai naesikkiraen
    2. ippaaviyin paeril munthi naesam vaiththeer
      neer praanath thiyaakam seythu meettukkonnteer
      mutkreedamum aingaayamum thyaanikkiraen
      en naathaa! maenmaelum ummai naesikkiraen
    3. paeranpin soroopi! ummaip pottukiraen
      eppothum ummanntai thanga vaanjikkiraen
      en jeevan ponaalungaூda neengamaattaen
      en naathaa! maenmaelum ummai naesikkiraen
    4. paerinpa maelokaththil aananthangaொlvaen
      neetooli ummukam kanndu sthoththirippaen
      eppaavamillaamalum naan vaalththal seyvaen
      en naathaa! maenmaelum ummai naesikkiraen
  • Yen Valvin Muloo Yekamellam என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

    என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம்மோடு இருப்பதுதான் – 2
    இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
    என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
    எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
    அல்லேலூயா – 4

    1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
      உம்புகழ் பாடி மகிழ்வதுதான்-2
      இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
      என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி
      மகிழ்ந்திருப்பேன்
      எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
    2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
      உம்மை நேசித்து வாழ்வது தான் -2
      இரவும் பகலும் உம்மைத்தான் நான்
      நேசிப்பேன்
      எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்
    3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
      உம் சித்தம் செய்வதுதான்-2
      இரவும் பகலும் உம்சித்தம் செய்திடுவேன்
      என்ன நேர்ந்தாலும் உம்சித்தம்
      செய்திடுவேன்
      எப்போதுமே உம்சித்தம் செய்திடுவேன்

    Yen Valvin Muloo Yekamellam – என் வாழ்வின் முழு Lyrics in English
    Yen Valvin Muloo Yekamellam
    en vaalvin mulu aekkamellaam
    ummodu iruppathuthaan – 2
    iravum pakalum ummoduthaan iruppaen
    enna naernthaalum ummoduthaan iruppaen
    eppothumae naan ummoduthaan iruppaen
    allaelooyaa – 4

    1. en vaalvin mulu aekkamellaam
      umpukal paati makilvathuthaan-2
      iravum pakalum pukalpaati makilnthiruppaen
      enna naernthaalum pukalpaati
      makilnthiruppaen
      eppothumae pukalpaati makilnthiruppaen
    2. en vaalvin mulu aekkamellaam
      ummai naesiththu vaalvathu thaan -2
      iravum pakalum ummaiththaan naan
      naesippaen
      eppothumae ummaiththaan naan naesippaen
    3. en vaalvin mulu aekkamellaam
      um siththam seyvathuthaan-2
      iravum pakalum umsiththam seythiduvaen
      enna naernthaalum umsiththam
      seythiduvaen
      eppothumae umsiththam seythiduvaen
  • Yen Nallavarinanbai Parthen என் நல்லவரின் அன்பை பார்த்தேன்

    என் நல்லவரின் அன்பை பார்த்தேன்
    நான் அதற்குள் முழுகிப்போனேன்
    உம் அன்பின் கடலை பார்த்தேன்
    நான் அதற்குள் முழுகிப்போனேன்

    பிதாவே உம் அன்பை பார்த்தேன்
    நான் அதற்குள் முழுகிப்போனேன்
    உம் அன்பின் கடலை பார்த்தேன்
    நான் அதற்குள் முழுகிப்போனேன்

    இன்னும் முழுகணும் உம்மில் மகிழனும் – 2X

    1. உம் அன்பை ஆராய்ந்து பார்த்தேன்
      உம் அன்பு உன்னதம்பா-2X
    2. உம்மை பலியாக தந்து
      எங்களை வாழ வைத்திரே
    3. கண்ணின் மணிபோல காத்து
      உம் சிறகாலே மூடிக்கொண்டீர்

    Yen Nallavarinanbai Parthen
    Naan Adharkul Muzhugipponen
    Um Anbin Kadalai Parthaen
    Naan Adharkul Muzhugipponen

    Pithavae Um Anbai Parthen
    Naan Adharkul Muzhugipponen
    Um Anbin Kadalai Parthaen
    Naan Adharkul Muzhugipponen

    Innum Muzhuganum Ummil Magizhanum – 2X

    1. Um Anbai Aaraindhu Parthen
      Um Anbu Unnadhamppa

    2.Ummai Baliyaga Thandhu
    Yengalai Vazha Vaithire

    3.Kannin Manipolla Kaathu
    Um Sirakale Moodikkondeer

  • Yen Koodave Irum என் கூடவே இரும்

    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    நீரில்லாமல் நான் வாழ முடியாது

    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
    நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

    1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
      உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
      என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
      எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே
    2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
      காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
      என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
      எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே
    3. வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
      சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
      என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
      எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

    Yen Koodave Irum Lyrics in English
    Yen Koodave Irum

    en koodavae irum o Yesuvae
    neerillaamal naan vaala mutiyaathu

    en pakkaththilae irum o Yesuvae
    neerillamaal naan vaala mutiyaathu (2)

    1. irulaana vaalkkaiyilae velichcham aaneerae
      uyiratta vaalkkaiyilae jeevan aaneerae (2)
      en velichcham neerae en jeevanum neerae
      enakkellaamae neengathaanappaa (2) – en koodavae
    2. kannnneer sinthum naeraththil neer thaayumaaneerae
      kaayappatta naeraththil neer‌ thakappanaaneerae
      en ammaavum neerae en appaavum neerae
      enakkellaamae neenga thaanappaa (2) – en koodavae
    3. viyaathiyin naeraththil vaiththiyaraaneerae
      sothanai naeraththil nannparaanirae (2)
      en vaiththiyar neerae en nannparum neerae
      enakkellaamae neenga thaanappaa (2) – en koodavae