Category: Tamil Worship Songs Lyrics

  • Yen Intha Sothanai ஏன் ஏன் ஏன் இந்த சோதனை

    ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?
    ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?
    என்று கலங்கி தவித்து நிற்கும்
    சூழ்நிலையோ?
    எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்
    உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார்
    திகைத்திடுவார் (ய்)
    உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
    கலங்கிடாதே (2) – ஏன் ஏன் (2)

    1. உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்
      ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு (2)
      இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலே
      அந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய் (2) – ஏன் ஏன் (2)
    2. இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்
      ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதே
      உருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்
      தம் அரவணைக்கும் கரங்களினால் சேர்த்துக் கொள்வார் – ஏன் ஏன் (2)

    Yen Intha Sothanai – ஏன் இந்த சோதனை? Lyrics in English
    Yen Intha Sothanai

    aen aen aen intha sothanai?
    aen aen aen intha vaethanai?
    entu kalangi thaviththu nirkum
    soolnilaiyo?
    epinaesar Yesu unnai thaangiduvaar
    un thukkamellaam maattiduvaar
    thikaiththiduvaar (y)
    un kannnneerellaam thutaiththiduvaar
    kalangidaathae (2) – aen aen (2)

    1. ulakaththilae upaththiravam vanthidalaam
      aanaalum nee palangaொnndu thidanaayiru (2)
      intha ulakaththaiyae jeyiththuvittar siluvaiyilae
      antha niththiya vaalvai unakkaaka tharuvatharkaay (2) – aen aen (2)
    2. imaippoluthu avar unnai kaividalaam
      aanaalum nee mananthalarnthu sornthidaathae
      urukkamaana irakkaththinaal irangiduvaar
      tham aravannaikkum karangalinaal serththuk kolvaar – aen aen (2)
  • Yen Intha Paduthan ஏன் இந்தப் பாடுதான்

    ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி
    என்ன தருவேன் இதற்கீடுநான்?

    ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமிய

    1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்
      கெழு மலர்க் காவிடை போகவும்
      அச்சயனே, மனம் நோகவும் – சொல்
      அளவில்லாத் துயரமாகவும்
    2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்
      முறை முகம் தரைபட வீழவும்
      மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு
      மரண வாதையினில் மூழ்கவும்
    3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர்
      அகலச் செய்யும் என்றுரைக்கவும்
      செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு
      தேவதூதன் வந்து தேற்றவும்
    4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம்
      பாக உதிர வேர்வை ஓடவும்
      சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன்
      தாசரும் பதந்தனை நாடவும்

    aen inthap paaduthaan! – suvaami
    enna tharuvaen ithargeedunaan?

    aanantha naemiyae – enai aalavantha kuru suvaamiya

    1. kethsemanae yidam aekavum – athin
      kelu malark kaavitai pokavum
      achchayanae, manam Nnokavum – sol
      alavillaath thuyaramaakavum
    2. mulanthaal patiyittuth thaalavum – mum
      murai mukam tharaipada veelavum
      malungath thuyar umaich soolavum, – kodu
      marana vaathaiyinil moolkavum
    3. appaa, pithaavae entalaikkavum, – thuyar
      akalach seyyum enturaikkavum
      seppum un siththam entu saattavum, – oru
      thaevathoothan vanthu thaettavum
    4. aaththumath thuyar mika needavum, kulam
      paaka uthira vaervai odavum
      saaththira molikal oththaadavum, – unthan
      thaasarum pathanthanai naadavum
  • Yen Indha Paadugal Umakku ஏன் இந்தப் பாடுகள் உமக்கு

    ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
    என் இயேசுவே காயங்கள் எதற்கு
    கைகள் கால்களில் ஆணிகள் பாய
    கோர காட்சியும் எதற்கு

    சிந்தையில் பாவம் செய்ததால் தான்
    சிரசினில் முள்முடி அறைந்தனரா
    இரத்தம் ஆறாக ஓடிடுதே
    இதயம் புழுவாக துடிக்கிறதே

    தியாகமாய் ஜீவனை ஈந்ததாலே
    தருகிறேன் எந்தன் இதயமதை
    தாகமாய் சிலுவையில் தொங்கினீரே
    தாகத்தை தீர்த்திட வருகின்றேன்


    Ean indha paadugal umakku Lyrics in English

    aen inthap paadukal umakku
    en Yesuvae kaayangal etharku
    kaikal kaalkalil aannikal paaya
    kora kaatchiyum etharku

    sinthaiyil paavam seythathaal thaan
    sirasinil mulmuti arainthanaraa
    iraththam aaraaka odiduthae
    ithayam puluvaaka thutikkirathae

    thiyaakamaay jeevanai eenthathaalae
    tharukiraen enthan ithayamathai
    thaakamaay siluvaiyil thongineerae
    thaakaththai theerththida varukinten

  • Yen Indha Kolam ஏன் இந்த கோலம்

    ஏன் இந்த கோலம் என் ஐயனே
    ஏன் இந்த கோரம் சொல் மெய்யனே (2)
    சிலுவையை சுமந்தது எதற்காக
    சிந்திய இரத்தமே யாருக்காக
    சிலுவையிலே மறித்தீர் எதற்காக – ஏன்

    அழகுமில்லை செளந்தர்யமில்லை
    ஆண்டவர் என்னும் அந்தஸ்துமில்லை (2)
    கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி
    கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி
    குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர்
    குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர் – ஏன்

    வானத்து வெளிகளின் சூரிய சந்திரன்
    உளாவிடும் விண்மீன்கள் படைத்திட்ட இறைவா (2)
    மனிதன் உம்மை வதைத்திட்ட போதும்
    ஈன மனிதன் இகழ்ந்திட்ட போதும்
    இறைவனின் மகனே மெளனம் ஏனோ
    இறைவனின் மகனே மெளனம் ஏனோ – ஏன்

    அரசருக்கெல்லாம் அரசரும் நீரே
    ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் நீரே (2)
    உமக்கு கிடைத்ததோ முள்முடி கிரீடம்
    உமக்கு கிடைத்ததோ முள்முடி கிரீடம்
    உலகம் தந்ததோ சிறுவையின் பாரம்
    உலகம் தந்ததோ சிறுவையின் பாரம் – ஏன்


    Yen Indha Kolam – ஏன் இந்த கோலம் Lyrics in English

    aen intha kolam en aiyanae
    aen intha koram sol meyyanae (2)
    siluvaiyai sumanthathu etharkaaka
    sinthiya iraththamae yaarukkaaka
    siluvaiyilae mariththeer etharkaaka – aen

    alakumillai selantharyamillai
    aanndavar ennum anthasthumillai (2)
    kallarukku naduvae kalvaraay thonti
    kallarukku naduvae kalvaraay thonti
    kuttavaali entu neer kaatchiyaliththeer
    kuttavaali entu neer kaatchiyaliththeer – aen

    vaanaththu velikalin sooriya santhiran
    ulaavidum vinnmeenkal pataiththitta iraivaa (2)
    manithan ummai vathaiththitta pothum
    eena manithan ikalnthitta pothum
    iraivanin makanae melanam aeno
    iraivanin makanae melanam aeno – aen

    arasarukkellaam arasarum neerae
    aanndavarkkellaam aanndavar neerae (2)
    umakku kitaiththatho mulmuti kireedam
    umakku kitaiththatho mulmuti kireedam
    ulakam thanthatho siruvaiyin paaram
    ulakam thanthatho siruvaiyin paaram – aen

  • Yen Devanukai Naan என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன்

    என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன்
    என் வாழ்க்கையிலே அவரே எல்லாம்

    இன்பமோ துன்பமோ
    கஷ்டமோ நஷ்டமோ
    இயேசுவுக்காக நான் வாழ்ந்திடுவேன்
    என்னை அழைத்தவர் உன்மையுள்ளவரே
    எனக்காகவே தம் ஜீவன் ஈந்தார்

    தாய் என்னை மறந்தாலும்
    உற்றார் வெறுத்தாலும்
    என்னை மறவாத தேவன் நீரே
    உம் உள்ளங்கைகளில்
    என்னையும் வரைந்துள்ளீர்
    உயிர் உள்ள நாளெல்லாம்
    என்னோடு இருக்கின்றீர்


    Yen devanukai naan Lyrics in English
    en thaevanukkaay naan vaalnthiduvaen
    en vaalkkaiyilae avarae ellaam

    inpamo thunpamo
    kashdamo nashdamo
    Yesuvukkaaka naan vaalnthiduvaen
    ennai alaiththavar unmaiyullavarae
    enakkaakavae tham jeevan eenthaar

    thaay ennai maranthaalum
    uttaாr veruththaalum
    ennai maravaatha thaevan neerae
    um ullangaikalil
    ennaiyum varainthulleer
    uyir ulla naalellaam
    ennodu irukkinteer

  • Yen Arul Naadha Yesuve என் அருள் நாதா யேசுவே

    என் அருள் நாதா யேசுவே
    சிலுவை காட்சி பார்க்கையில்
    பூலோக மேன்மை நஸ்டமே
    என்று உணர்ந்தேன் என் உள்ளத்தில் -2

    என் மீட்பர் சிலுவை அல்லால்
    வேறதை நான் பாரட்டுவேன்
    சிற்றின்பம் யாவும் அதனால் தகாதது என்று தள்ளுவேன் -2

    கை தலை காலிலும் இதோ
    பேரண்பும் துன்பும் கலந்து
    பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ
    முள்மூடியும் ஒப்பற்றது -2

    சராசரங்கல் அனைத்தும்
    அவ் அன்புக்கு எம்மாத்திரம்
    என் ஜீவன் சுகம் செல்வமும்
    என் நேசருக்கு பாக்கியம் -2

    மாந்தர்க்கு மீட்பை அஸ்தியால்
    சம்பாதித் தீர் இந்த யேசுவே
    உமக்கு என்றும் தாசரால்
    மா ஸ்தோத்திரம் உண்டகவே -2


    Yen Arul Naadha Yesuve Lyrics in English
    en arul naathaa yaesuvae
    siluvai kaatchi paarkkaiyil
    pooloka maenmai nasdamae
    entu unarnthaen en ullaththil -2

    en meetpar siluvai allaal
    vaerathai naan paarattuvaen
    sittinpam yaavum athanaal thakaathathu entu thalluvaen -2

    kai thalai kaalilum itho
    paerannpum thunpum kalanthu
    paaynthodum kaatchi pol unntoo
    mulmootiyum oppattathu -2

    saraasarangal anaiththum
    av anpukku emmaaththiram
    en jeevan sukam selvamum
    en naesarukku paakkiyam -2

    maantharkku meetpai asthiyaal
    sampaathith theer intha yaesuvae
    umakku entum thaasaraal
    maa sthoththiram unndakavae -2

  • Yen Allugirai Yaarai Nee Theduginrai ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்

    ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்
    ஏக்கம் போக்க இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்

    1. கண்ணீர் பொங்கினதோ கவனிப்பார் இல்லையோ
      காருண்ய கர்த்தர் இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்
    2. பெற்றோர் கைவிட்டாரோ பிள்ளைகள் பேணலையோ
      யாரினும் மேலாய் காப்பவர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்
    3. கனியற்ற மரம் ஆனாயோ வெட்டிட சொல்லிட்டாரோ
      களை கொத்தி உரமிட உன்னதர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்

    aen alukintay yaarai nee thaedukintay
    aekkam pokka Yesu irukka aen nee alukintay

    1. kannnneer ponginatho kavanippaar illaiyo
      kaarunnya karththar Yesu irukka aen nee alukintay
    2. pettaோr kaivittaro pillaikal paenalaiyo
      yaarinum maelaay kaappavar irukka aen nee alukintay
    3. kaniyatta maram aanaayo vettida sollittaro
      kalai koththi uramida unnathar irukka aen nee alukintay
  • Yeluputhal Anuppum Yeluputhal Anuppum எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும்

    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    எங்கள் உள்ளத்திலே
    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    சீக்கிரத்திலே

    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    எங்கள் உள்ளத்திலே
    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    இந்த நேரத்திலே

    பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்
    இரட்சகரின் நாமத்திலே
    வியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்
    இயேசுவின் நாமத்திலே


    Yeluputhal Anuppum Yeluputhal Anuppum Lyrics in English

    elupputhal anuppum , elupputhal anuppum
    engal ullaththilae
    elupputhal anuppum , elupputhal anuppum
    seekkiraththilae

    elupputhal anuppum , elupputhal anuppum
    engal ullaththilae
    elupputhal anuppum , elupputhal anuppum
    intha naeraththilae

    paavaththai manniyum aaviyaith thaarum
    iratchakarin naamaththilae
    viyaathiyai neekkum , pisaasaith thuraththum
    Yesuvin naamaththilae

  • Yelunbi Pragasi Un எழும்பிப் பிரகாசி உன்

    எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
    கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது

    பூமியையும் ஜனங்களையும்
    காரிருள் மூடும் – ஆனாலும்
    உன்மேல் கர்த்தர் உதிப்பர்

    1. உன் குமாரரும் குமாரத்திளும்
      உன் அருகினில் வளர்க்கப்படுவர் – உன்
      கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்
      உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்
    2. உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்
      ராஜ்ஜியங்களும் பாழாகப் போய்விடும்
      கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்
      என்று கூறி நீ அழைக்கப்படுவாய்

    3.உன் தேசத்திலே கொடுமை கேட்காதே
    உன் எல்லைகளில் நாசமும் வராதே
    உன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்
    உன் வாசல்களை துதியென்றும் சொல்வாய்

    4.சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை
    சந்திரன் இனி மறைவதுமில்லை
    கர்த்தரே நித்ய வெளிச்சமாவாரே
    உன் துக்க நாட்கள் முடிந்து போயிற்றே


    Yelunbi Pragasi Un Lyrics in English
    Yelunbi Pragasi Un
    elumpip pirakaasi un oli vanthathu
    karththar makimai unmael uthiththathu

    poomiyaiyum janangalaiyum
    kaarirul moodum – aanaalum
    unmael karththar uthippar

    1. un kumaararum kumaaraththilum
      un arukinil valarkkappaduvar – un
      kannnnaal kanndu nee oti varuvaay
      un iruthayam makilnthu poorikkum
    2. unnai sevikka jaathikal aliyum
      raajjiyangalum paalaakap poyvidum
      karththar nakaram parisuththarin seeyon
      entu koori nee alaikkappaduvaay

    3.un thaesaththilae kodumai kaetkaathae
    un ellaikalil naasamum varaathae
    un mathilkalai iratchippentu solvaay
    un vaasalkalai thuthiyentum solvaay

    4.sooriyan ini asthamippathillai
    santhiran ini maraivathumillai
    karththarae nithya velichchamaavaarae
    un thukka naatkal mutinthu poyitte

  • Yelumbiduvir Valibare எழும்பிடுவீர் வாலிபரே

    எழும்பிடுவீர் வாலிபரே
    எழும்பிடுவீர் கன்னியரே -2
    எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரே
    எழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2

    1.உல்லாசம் தந்திடும் உலகம் இது
    ஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2
    ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு
    வாடி வதங்கிடும் வருகை அன்று

    2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு
    ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2
    திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று
    திருமறை சொல்வதை கேட்பவர் யார்?

    3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்
    தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2
    நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை
    தடுத்திட தம்மை தந்தவர் யாரோ?


    Yelumbiduvir Valibare – எழும்பிடுவீர் வாலிபரே Lyrics in English
    Yelumbiduvir Valibare
    elumpiduveer vaaliparae
    elumpiduveer kanniyarae -2
    elumpiduveer (ellaa) vaaliparae
    elumpiduveer (ippo) kanniyarae – 2

    1.ullaasam thanthidum ulakam ithu
    aadamparam thanthidum alaku intu -2
    aarppaattam seythidum manathu ingu
    vaati vathangidum varukai antu

    2.eththanai murai kaettaோr ingu unndu
    orumurai kaelaathor angu unndu -2
    thiruvilaa peruvilaa theruvukkontu
    thirumarai solvathai kaetpavar yaar?

    3.tharpukal paadidum maanthar maththiyil
    thammaithantha thaevanai arivippor yaar -2
    narakaththin paathai sellum maantharai
    thaduththida thammai thanthavar yaaro?