தேவாட்டுக் குட்டியே வாழ்த்திடுவோம்
சாலேமின் ராஜனை ஆராதித்திப்போம் – 2
பரிசுத்தர் பரிசுத்தர் யேசுவே – 4
பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும்
துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள – 2
1. ஆகாயம் பூமிக்கு மேலே உயர்ந்தது போல்
தம் கிருபை எனக்கும் பெரியது
மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ
அவ்வளவாய் பாவங்கள் நம்மை விட்டு அகற்றினார் – 2
2. தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்கும் போல்
தாய் தன் பிள்ளையை கொஞ்சும் போல
என் தேவன் என்னையும் நேசித்தாரே
தள்ளாமல் தம் மகனாய் ஏற்றாரே – 2
3. தண்ணீரை நான் கடக்கும் போது
வெள்ளம் என்மேல் புரளுவதில்லையே
தீயின் மீதாய் நான் நடந்தாலும்
அக்கினியால் எரிந்து போவதில்லையே – 2
ஏன் என்றால்
என் தேவன் இஸ்ரவேலின் பரிசுத்தர்
யெகோவாவாம் எந்தன் இரட்ச்சகர்
பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும்
துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள
தேவாட்டுக்குட்டியை…..
Leave a Reply
You must be logged in to post a comment.