En Thaivam Vazhum Poomiyithu என் தெய்வம் வாழும் பூமியிது

என் தெய்வம் வாழும் பூமியிது

எத்துணை அழகு இது

உலகே கண்கள் திறவாயோ

உவகை இன்று காணாயோ

பரந்து விரிந்த உலகம் படைத்தவன் அன்பு இதயம்

உயர்ந்து விரிந்த வானம் படர்ந்த அவர்மனம் கூறும்

எங்கெங்கும் வீசிடும் தென்றல் காற்றும்

பொங்கிடும் நீரின் ஊற்றும்

மின்னிடும் மீன்களும் ஒளிதரும் கதிரும்

மின்னலும் தன்னொளி நிலவும்

என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு –2

இயற்கையை அணுகு இன்பம் அள்ளிப்பருகு – என் தெய்வம்

நிறைந்த அன்புடை நெஞ்சம் நிலவென ஒளிதரும் அறிவும்

மலர்ந்த முகந்தனின் அழகும் மங்கா கலைகளின் வளமும்

என்றென்றும் உழைக்கும் தன்மான மாந்தர்

எங்கெங்கும் ஒன்றாகும் கரங்கள்

நீதிக்கும் நேர்மைக்கும் போராடும் குணங்கள்

நிம்மதி தேடிடும் மனங்கள்

என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு –2

எழில் கண்டு வணங்கு இன்பம் அள்ளிப்பருகு – என் தெய்வம்


En Thaivam Vazhum Poomiyithu Lyrics in English
en theyvam vaalum poomiyithu

eththunnai alaku ithu

ulakae kannkal thiravaayo

uvakai intu kaannaayo

paranthu virintha ulakam pataiththavan anpu ithayam

uyarnthu virintha vaanam padarntha avarmanam koorum

engaெngum veesidum thental kaattum

pongidum neerin oottum

minnidum meenkalum olitharum kathirum

minnalum thannoli nilavum

ennenna alaku engaெngum meruku –2

iyarkaiyai anuku inpam allipparuku – en theyvam

niraintha anputai nenjam nilavena olitharum arivum

malarntha mukanthanin alakum mangaa kalaikalin valamum

ententum ulaikkum thanmaana maanthar

engaெngum ontakum karangal

neethikkum naermaikkum poraadum kunangal

nimmathi thaedidum manangal

ennenna alaku engaெngum meruku –2

elil kanndu vanangu inpam allipparuku – en theyvam


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply