எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
- வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் - மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே - என் காலை தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே - வலப்பக்கத்தின் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே - எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்
Enakkoththaasai Varum Parvatham Naeraay
En Kannkalai Aeraduppaen
- Vaanamum Poomiyum Pataiththa
Valla Thaevanidamirunthae
Ennukkadangaa Nanmaikal Varumae
En Kannkal Aeraduppaen - Malaikal Peyarnthakantitinum
Nilaimaari Puviyakantitinum
Maaridumo Avar Kirupai Ennaalum
Aaruthal Enakkavarae - En Kaalai Thallaada Vottar
Ennaik Kaakkum Thaevan Urangaar
Isravaelaik Kaakkum Nalthaevan
Iraappakal Urangaarae - Valappakkaththin Nilal Avarae
Valuvaamal Kaappavar Avarae
Sooriyan Pakalil Santhiran Iravil
Sethappaduththaathae - Eththeengum Ennai Anukaamal
Aaththumaavaik Kaakkumen Thaevan
Pokkaiyum Varaththaiyum Paththiramaaka
Kaappaarae Ithu Muthalaay
Leave a Reply
You must be logged in to post a comment.