எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே
- தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே — எங்கு - நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே — எங்கு - அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
ஒலிவ மரத்தின் பலன்கள் கூட அற்றுப்போயினும்
வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே — எங்கு
Engumullor Yaarum Lyrics in English
engumullor yaarum sernthu sthoththarippomae
isravaelin karththarukkuth thuthi seluththumae
yaakkopin santhathiyaarum kooti vaarumae
Yesu engal karththar entu sthoththarippomae
- thaeva mainthan Yesuvukkaay sthoththarippomae
parisuththaakamam eenthatharkaay sthoththarippomae
kadantha kaala veerarukkaay sthoththarippomae
jeevan vitta suththarukkaay sthoththarippomae
kothumai manni thaniththaal ilaapam aethu unndu paareer
seththathaakil palan mikuthi sthoththarippomae — engu - nampikkai ilakkaavannnam mun nadappomae
iraajaavin kattalaikkuk kanam koduppomae
thaeva samookap palakkam ullor payam kollamaattar
geelppatiyak kattukkonntoor thadumaattam kollaar
avarkkaay ilanthavarkkup parisu nooraththanaiyaakak kittum
niththiya makilchchi avarai moodum sthoththarippomae — engu - aththi maram thulirvidaamal ponapothilum
thiraatchaைch setiyil kani kaannaamal karukippoyinum
oliva maraththin palankal kooda attuppoyinum
vayalil makasool inti aekkam vanthapothilum
immaikkaaka alla Yesunaathar maelae ulla pattu
nam iruppu paralokaththil sthoththarippomae — engu
Leave a Reply
You must be logged in to post a comment.