Ennai Peyar Solli Azaithavarae

என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
உள்ளங்கைகளில் வரைந்தவரே
என்னை கரம் பிடித்து நடத்தினீரே
உருவாக்கி உயர்த்தினீரே – 2

ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
வெற்றியை காண செய்தீர் – 2

  1. வனாந்திரமாய் இருந்த என்னை
    வற்றாத ஊற்றாய் மாற்றினீரே – 2
    என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
    என்றும் உம் வழியில் நடந்திடுவேன் – 2 – என்னை பெயர்
  2. கை விடப்பட்டு இருந்த என்னை
    உம் கரத்தால் நடத்தினீரே – 2
    என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
    என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன் – 2 – என்னை பெயர்

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply