எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது
- பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மா தயவை நினைத்து - எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் - நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய்
நனமையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு
இன்னும் இளமை போலாகவே செய்ததால் - பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்தியமேயிது - மன்னிப்பு மாட்சிமையாம் – மா தேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே
மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே - தந்தை தன பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தை தன பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
Ennaalumae Thudhippaai – Ennaathumaavae Nee
Ennaalumae Thudhippaai
Innaal Varaiyilae Unnadhanaar Seidha
Ennillaa Nanmaigal Yaavum Maravaadhu
- Paavangal Ethanaiyoa – Ninaiyaa Dhirundhaarun
Paavangal Ethanaiyoa
Paazhaana Noayai Agatri Gunamaakki
Paarinil Vaitha Magaa Thayavai Enni - Ethanaiyoa Kirubai – Unnuyirkku Seidhaarae
Ethanaiyoa Kirubai
Nithamunai Mudi Soottinadhumandri
Nithiyamaai Un Jeevanai Meettadhaal - Nanmaiyaalun Vaayai – Niraithaarea Poorthiyaai
Nanmaiyaalun Vaayai
Un Vayadhu Kazhugaippoal Balangondu
Oangu Ilamaipoal Aagave Seidhadhaal - Boomikkum Vaanathukkum – Ulla Dhooram Poalavae
Boomikkum Vaanathukkum
Saami Bayamullavar Mael Avar Arul
Saalavum Thangumae Sathiyamae Idhu - Mannippu Maatchmaiyaam – Maadhaevan Arulum
Mannippu Maatchimaiyaam
Ennuvaayoa Kizhakku Maerkin Thooramae
Mannil Unpaavam Agandrathooramae - Thandhaithan Pillaikadku – Thayavoadirangaanoa
Thandhaithan Pillaikadku
Endha Vaelaiyum Avaroadu Thanginaal
Sondham Paaraattiyae Thookki Sumappaarae
Leave a Reply
You must be logged in to post a comment.