Blog

  • En Suvasa Katre En என் சுவாசக் காற்றே என்

    என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே

    இறைவா என் உள்ளம் வருவாய்

    என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே

    தலைவா நீ உன்னைத் தருவாய்

    என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே

    இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்

    என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்

    நீதானே நீதானே இறைவா

    என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்

    தருவாயே தருவாயே தலைவா

    வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே

    வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே – 2

    வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

    எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை

    அறிவேனே அறிவேனே இறைவா

    உனைப் போல நானும் பிறரன்பில் வளர

    அருள்வாயே அருள்வாயே தலைவா

    மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே

    ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே – 2

    நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்


    En Suvasa Katre En Lyrics in English
    en suvaasak kaatte en vaalvin ootte

    iraivaa en ullam varuvaay

    ennuyirin unavae en vaalvin valiyae

    thalaivaa nee unnaith tharuvaay

    en vaalvum en valamum ellaamum neethaanae

    iraivaa thalaivaa anpinaip polivaay

    en sontham yaavum en thaevai yaavum

    neethaanae neethaanae iraivaa

    en nenjil naesam maaraatha paasam

    tharuvaayae tharuvaayae thalaivaa

    vaalnaalellaam nee vaenndumae

    valarnthida naalum varam vaenndumae – 2

    vaalvaay valiyaay nirainthida varuvaay

    elil vaanam pola nilaikkum un anpai

    arivaenae arivaenae iraivaa

    unaip pola naanum piraranpil valara

    arulvaayae arulvaayae thalaivaa

    makilnthida naalum arul vaenndumae

    olirnthida naalum thunnai vaenndumae – 2

    nilalaay niraivaay vaalvinil varuvaay

  • En sitham alla um என் சித்தமல்ல உம்

    என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
    என்னாலேயல்ல உம்மாலே ஆகும்

    அடிமை நானே எஜமானன் நீரே நாதா
    பெலவீனன் நானே பெலவான் நீரே நாதா

    காலையில் தோன்றி மாலையில்
    மறைபவன் நாதா-மலர் போல் பூத்து
    நிழல் போல் மறைபவன் நாதா

    களிமண் நானே குயவன் நீரே நாதா
    மண்ணான மனிதன் நான்
    மண்ணுக்கே திரும்புவேன் நாதா

    பாதகன் என்மேல் பாசம் கொண்டீரே நாதா
    பாரெல்லாம் உம் புகழ் பாடி மகிழ்வேன் நாதா

    உம் திருஇரத்தத்தால் மீட்டுக்
    கொண்டீரே நாதா-உம் செல்லப்
    பிள்ளையாய் சொந்தமானேன் நாதா


    En sitham alla um Lyrics in English
    en siththamalla um siththam naathaa
    ennaalaeyalla ummaalae aakum

    atimai naanae ejamaanan neerae naathaa
    pelaveenan naanae pelavaan neerae naathaa

    kaalaiyil thonti maalaiyil
    maraipavan naathaa-malar pol pooththu
    nilal pol maraipavan naathaa

    kalimann naanae kuyavan neerae naathaa
    mannnnaana manithan naan
    mannnukkae thirumpuvaen naathaa

    paathakan enmael paasam konnteerae naathaa
    paarellaam um pukal paati makilvaen naathaa

    um thiruiraththaththaal meettuk
    konnteerae naathaa-um sellap
    pillaiyaay sonthamaanaen naathaa

  • En Sirumaiyai Kannoakki Paarththavar Neer என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்

    என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
    என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் (2)
    துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
    ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

    பீர்லாகாய்ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்
    பீர்லாகாய்ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் (2)

    வனாந்திரம் என் வாழ்வானதே
    பாதைகள் எங்கும் இருளானதே (2)
    எந்தன் அழுகுரல் கேட்டு
    நீரூற்றாய் வந்தவரே (2) – பீர்லாகாய்

    புறஜாதி என்னை தேடி வந்தீர்
    சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் (2)
    வாக்குதத்தம் செய்தீர்
    நீர் சொன்னதை நிறைவேற்றினீர் (2) – பீர்லாகாய்


    En Sirumaiyai Kannoakki Paarththavar Neer Lyrics in English
    en sirumaiyai kannnnokki paarththavar neer
    en elimaiyil kaithookka vanthavar neer (2)
    thuraththappatta ennai meenndum serththukkonnteer
    othukkappatta ennai periya jaathiyaay maattineer

    peerlaakaayroyee ennai kaannkinta thaevan neer
    peerlaakaayroyee engal jeeva neeroottu neer (2)

    vanaanthiram en vaalvaanathae
    paathaikal engum irulaanathae (2)
    enthan alukural kaettu
    neeroottaாy vanthavarae (2) – peerlaakaay

    purajaathi ennai thaeti vantheer
    suthantharavaaliyaay maattivittir (2)
    vaakkuthaththam seytheer
    neer sonnathai niraivaettineer (2) – peerlaakaay

  • En Rakshaka Neer Ennile என் ரக்ஷகா, நீர் என்னிலே

    என் ரக்ஷகா, நீர் என்னிலே
    மென்மேலும் விளங்கும்
    பொல்லாத சிந்தை நீங்கவே
    சகாயம் புரியும்

    என் பலவீனம் தாங்குவீர்
    மா வல்ல் கரத்தால்
    சாவிருள் யாவும் நீக்குவீர்
    மெய் ஜீவன் ஜோதியால்

    துராசாபாசம் நீங்கிடும்
    உந்தன் பிரகாசத்தால்
    சுத்தாங்க குணம் பிறக்கும்
    நல்லாவி அருளால்

    மாசற்ற திவ்விய சாயலை
    உண்டாக்கியருளும்
    என்னில் தெய்வீக மகிமை
    மென்மேலும் காண்பியும்

    சந்தோக்ஷிப்பித்து தாங்குவீர்
    ஒப்பற்ற பலத்தால்
    என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்
    பேரன்பின் ஸ்வாலையால்

    நீர் பெருக நான் சிறுக
    நீர் நற்கிரியை செய்திடும்
    மெய் பக்தியில் நான் வளர
    கடாட்சித்தருளும்


    En Rakshaka Neer Ennile Lyrics in English
    en rakshakaa, neer ennilae
    menmaelum vilangum
    pollaatha sinthai neengavae
    sakaayam puriyum

    en palaveenam thaanguveer
    maa vall karaththaal
    saavirul yaavum neekkuveer
    mey jeevan jothiyaal

    thuraasaapaasam neengidum
    unthan pirakaasaththaal
    suththaanga kunam pirakkum
    nallaavi arulaal

    maasatta thivviya saayalai
    unndaakkiyarulum
    ennil theyveeka makimai
    menmaelum kaannpiyum

    santhokshippiththu thaanguveer
    oppatta palaththaal
    en nenjil anal moottuveer
    paeranpin svaalaiyaal

    neer peruka naan siruka
    neer narkiriyai seythidum
    mey pakthiyil naan valara
    kadaatchiththarulum

  • En paraloga rajavukku என் பரலோக ராஜாவிற்கு

    என் பரலோக ராஜாவிற்கு முன்பாக
    நான் ஒன்றுமில்லை
    என்னை படைத்த என் தெய்வத்திற்கு
    முன்பாக நான் ஒன்றுமில்லை

    என்னை உருவாக்கின தெய்வமும்
    இயேசு தான்- என்னை வாழ வைத்த
    தெய்வமும் இயேசு தான்

    என்னை இயக்குகின்ற தெய்வமும்
    இயேசு தான் – என்னை நடத்துகின்ற
    தெய்வமும் இயேசு தான்

    என்னை தேடி வந்த தெய்வமும்
    இயேசு தான்- என்னை உயர்த்தி
    வைத்த தெய்வமும் இயேசு தான்

    என்னை அபிஷேகித்த தெய்வமும்
    இயேசு தான்- என்னை ஆசீர்வதித்த
    தெய்வமும் இயேசு தான்


    En paraloga rajavukku Lyrics in English
    en paraloka raajaavirku munpaaka
    naan ontumillai
    ennai pataiththa en theyvaththirku
    munpaaka naan ontumillai

    ennai uruvaakkina theyvamum
    Yesu thaan- ennai vaala vaiththa
    theyvamum Yesu thaan

    ennai iyakkukinta theyvamum
    Yesu thaan – ennai nadaththukinta
    theyvamum Yesu thaan

    ennai thaeti vantha theyvamum
    Yesu thaan- ennai uyarththi
    vaiththa theyvamum Yesu thaan

    ennai apishaekiththa theyvamum
    Yesu thaan- ennai aaseervathiththa
    theyvamum Yesu thaan

  • En Paavangal En என் பாவங்கள் என்

    என் பாவங்கள் என் இயேசு
    மன்னித்து விட்டார்
    தன் மகனாய் என் இயேசு
    ஏற்றுக் கொண்டார்

    இனி நான் பாவியல்ல
    பரிசுத்தமாகிவிட்டேன்
    நேசரின் பின் செல்லுவேன் நான்
    திரும்பி பார்க்க மாட்டேன் என்

    ஆழ்கடலில் எறிந்து விட்டார்
    காலாலே மிதித்து விட்டார்
    நினைவு கூர மாட்டார் என்
    நேசரைத் துதிக்கின்றேன் இனி

    கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
    மறுபடி பிறந்துவிட்டேன்
    பழையன கழிந்தனவே நான்
    புதிய படைப்பானேன்


    En Paavangal En Lyrics in English
    en paavangal en Yesu
    manniththu vittar
    than makanaay en Yesu
    aettuk konndaar

    ini naan paaviyalla
    parisuththamaakivittaen
    naesarin pin selluvaen naan
    thirumpi paarkka maattaen en

    aalkadalil erinthu vittar
    kaalaalae mithiththu vittar
    ninaivu koora maattar en
    naesaraith thuthikkinten ini

    kiristhuvukkul vaalkinten
    marupati piranthuvittaen
    palaiyana kalinthanavae naan
    puthiya pataippaanaen

  • En Paavam Theerntha Naalaiyae என் பாவம் தீர்ந்த நாளையே

    1. என் பாவம் தீர்ந்த நாளையே
      அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
      அந்நாளில் பெற்ற ஈவையே
      சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்

    இன்ப நாள்! இன்ப நாள்!
    என் பாவம் தீர்ந்து போன நாள்!
    பேரன்பர் என்னை ரட்சித்தார்
    சீராக்கி இன்பம் நல்கினார்
    இன்ப நாள்! இன்ப நாள்!
    என் பாவம் தீர்ந்து போன நாள்!

    1. இம்மானுவேல் இப்பாவியைத்
      தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
      சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
      தந்தென்னை அன்பாய் சேர்த்தனர்
    2. என் உள்ளமே உன் மீட்பரை
      என்றைக்கும் சார்ந்து வாழுவாய்
      ஆருயிர் தந்த நாதரை
      ஓர்காலும் விட்டு நீங்கிடாய்
    3. ஆட்கொண்ட நாதா! எந்தனை
      நாடோறும் தத்தம் செய்குவேன்
      பின் மோட்ச வீட்டில் பேரன்பை
      இன்னோசையாலே பாடுவேன்

    En Paavam Theerntha Naalaiyae Lyrics in English

    1. en paavam theerntha naalaiyae
      anpodu ennnni jeevippaen
      annaalil petta eevaiyae
      santhoshamaayk konndaaduvaen

    inpa naal! inpa naal!
    en paavam theernthu pona naal!
    paeranpar ennai ratchiththaar
    seeraakki inpam nalkinaar
    inpa naal! inpa naal!
    en paavam theernthu pona naal!

    1. immaanuvael ippaaviyaith
      tham sonthamaakkik konndanar
      santhaekam neekki mannippaith
      thanthennai anpaay serththanar
    2. en ullamae un meetparai
      entaikkum saarnthu vaaluvaay
      aaruyir thantha naatharai
      orkaalum vittu neengidaay
    3. aatkonnda naathaa! enthanai
      naatoorum thaththam seykuvaen
      pin motcha veettil paeranpai
      innosaiyaalae paaduvaen
  • En paaththiram nirambi என் பாத்திரம் நிரம்பி நிரம்பி

    என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
    வழிந்து ஓடுகின்றது

    எனக்குள்ளே ஜீவஊற்று
    அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம்

    அபிஷேகன் நதி நானே
    அகிலமெங்கும் பரவிடுவேன்
    ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்
    நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்
    இடமெல்லாம்-எனக்கு

    ஆனந்த தைலம் நானே
    புலம்பலுக்கு எதிரானேன்
    துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்
    அலங்காரமாக்கிடுவேன் -சபையை

    கனி கொடுக்கும் மரம் நானே
    நாள்தோறும் கனி கொடுப்பேன்
    இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்
    விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு

    முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
    ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
    காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
    விடுதலை பறைசாற்றுவேன்

    அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
    இறைவாக்கு உரைத்திடுவேன்
    சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்
    அதிசயம் தினம் காண்பேன்


    En paaththiram nirambi Lyrics in English
    en paaththiram nirampi nirampi valikintathu
    valinthu odukintathu

    enakkullae jeevaoottu
    athu vattaாthu oru naalum – en paaththiram

    apishaekan nathi naanae
    akilamengum paraviduvaen
    aeraalamaana meenkal thiralaana uyirinangal
    nathi paayum idamellaam naan pokum
    idamellaam-enakku

    aanantha thailam naanae
    pulampalukku ethiraanaen
    thuthiutai porththiduvaen saampal neekkiduvaen
    alangaaramaakkiduvaen -sapaiyai

    kani kodukkum maram naanae
    naalthorum kani koduppaen
    ilaikal uthirvathillai kanikal keduvathillai-en
    virunthum marunthum naanae – sapaikku

    mulangiduvaen thinam suvisesham
    odukkappatta intha ulakaththirku
    kaayangal aattiduvaen kattukkal avilththiduvaen
    viduthalai paraisaattuvaen

    ayalmolikal thinam paesiduvaen
    iraivaakku uraiththiduvaen
    saaththaanai thuraththiduvaen karam neetti sukam kooruvaen
    athisayam thinam kaannpaen

  • En Oosai Kaetkinrathaa Iyaesaiyaa என் ஓசை கேட்கின்றதா இயேசையா

    என் ஓசை கேட்கின்றதா இயேசையா
    ஆழத்திலிருந்து அழைக்கின்றேனே (அழுகின்றேனே)
    பாழ் உலக பாரத்தாலே
    பாவ உலகில் நான் மாள வேண்டுமா

    உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன்
    என்சித்தத்தால் எங்கேயோ தவறிவிட்டேன்
    இரக்கங்கள் பாராட்டுமே இயேசய்யா
    இன்னும் ஒரே முறை எழுப்பிடுமே

    எத்தனை தூரம் அலைந்தேனய்யா
    அத்தனையும் உம் ஆணையாலே
    நினைத்தருளும் உம் வாக்குகளை
    வனைந்தது போதுமே இயேசய்யா

    ஜெபம் கேட்டு பதில் தந்து எழுப்பினீரே
    ஜெயக்கிறிஸ்துவே என்றும் மாறாதவர்
    பயங்கள் பறந்தோட செய்தவரே
    என் பரிசுத்தம் உயரட்டும் இயேசய்யா


    En Oosai Kaetkinrathaa Iyaesaiyaa Lyrics in English
    en osai kaetkintathaa iyaesaiyaa
    aalaththilirunthu alaikkintenae (alukintenae)
    paal ulaka paaraththaalae
    paava ulakil naan maala vaenndumaa

    um siththam niraivaera oppuviththaen
    ensiththaththaal engaeyo thavarivittaen
    irakkangal paaraattumae iyaesayyaa
    innum orae murai eluppidumae

    eththanai thooram alainthaenayyaa
    aththanaiyum um aannaiyaalae
    ninaiththarulum um vaakkukalai
    vanainthathu pothumae iyaesayyaa

    jepam kaettu pathil thanthu eluppineerae
    jeyakkiristhuvae entum maaraathavar
    payangal paranthoda seythavarae
    en parisuththam uyarattum iyaesayyaa

  • En Nilaimai Nantay Arinthavar என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
    பாவி என்னை அழைத்தவர்
    மீறின பின்பும் வெறுக்காதவர்

    உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை
    நேசித்தவரில் இது போல்
    அன்பை இன்னும் காணவில்லை

    விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
    உம் அன்பை மட்டும் என்னவென்று
    சொல்ல தெரியவில்லை
    தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
    உம் அன்பில் ஒன்றே உண்மை
    உண்டென்று கண்டேன்


    En Nilaimai Nantay Arinthavar Lyrics in English
    en nilaimai nantay arinthavar
    paavi ennai alaiththavar
    meerina pinpum verukkaathavar

    ummaippol ennai naesikka oruvarum illai
    naesiththavaril ithu pol
    anpai innum kaanavillai

    vivarikka mutiyavillai varnnikka vaarththaiyillai
    um anpai mattum ennaventu
    solla theriyavillai
    thaeti vantha naesamae aaruyir Yesuvae
    um anpil onte unnmai
    unndentu kanntaen