மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இயேசு தருவாரே மகிழ்ச்சி
துதித்திடுவேன் உம்மை பாடிடுவேன்
புகழ்ந்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்
குறைவு வெறுமை நீக்கிடுவார்
நிறைவைத் தந்திடுவார்
சிறுமைப்பட்ட நாட்களெல்லாம்
மறந்து மகிழச் செய்திடுவார்
இருளான இரவை மாற்றிடுவார்
பயத்தைப் போக்கிடுவார்
மகிமையால் என்னை மூடிடுவார்
பிரசன்னத்தால் என்னை நிரப்பிடுவார்
தனிமை தவிப்பை எடுத்திடுவார்
பாதை காட்டிடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
ஆனந்த சந்தோஷம் தந்திடுவார்
என்னைத் தேடி இயேசு வந்தார்
என்னை ஏற்றுக்கொண்டார்
பழைய வாழ்க்கையை அகற்றி விட்டார்
புதிய வாழ்வை காணச் செய்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.