Malaigal Vilagi Ponalum

மலைகள் விலகிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே

என்னை விட்டு விலகாத ஆண்டவர்
என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்

யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்
யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்
என் வாழ்வின் நம்பிக்கையானவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்

யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்
யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்
வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply