Blog

  • Mangalam Satha Jeya மங்களம் சதா ஜெய

    மங்களம் சதா ஜெய – மங்களம் வேதா
    எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா

    அணைத்துக்காத்தவா – உல – கனைத்தும் படைத்தவா
    இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா

    யேசுநாயாகா – எம் – நேசநாயகா
    மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா

    ஞானவாரியே – திரு – வானமாரியே
    ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா


    Mangalam Satha Jeya Lyrics in English

    mangalam sathaa jeya – mangalam vaethaa
    engal thungamangalarkku – mangalam sathaa

    annaiththukkaaththavaa – ula – kanaiththum pataiththavaa
    innaiyillaa pithaavumakku mangalam sathaa

    yaesunaayaakaa – em – naesanaayakaa
    maasillaatha suthanumakku mangalam sathaa

    njaanavaariyae – thiru – vaanamaariyae
    aananthasuththaaviyumakku mangalam sathaa

  • Mangala Geethangal Paadiduvom மங்கள கீதங்கள் பாடிடுவோம்

    மங்கள கீதங்கள் பாடிடுவோம்
    மணவாளன் இயேசு மனமகிழ
    கறை திரை நீக்கி திருச்சபையாக்கி
    காத்தனர் கற்புள்ள கன்னிகையாய்

    கோத்திரமே யூதா கூட்டமே
    தோத்திரமே துதி சாற்றிடுவோம்
    புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே
    புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம்

    ராஜ குமாரத்தி ஸ்தானத்திலே
    ராஜாதி ராஜன் இயேசுவோடே
    இன ஜன நாடு தகப்பனின் வீடு
    இன்பம் மறந்து சென்றிடுவோம்

    சித்திர தையலுடை அணிந்தே
    சிறந்த உள்ளான மகிமையிலே
    பழுதொன்றுமில்லா பரிசுத்தமான
    பாவைகளாக புறப்படுவோம்

    ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே
    அவர் மணவாட்டி ஆக்கினாரே
    விருந்தறை நேச கொடி ஒளி வீசு
    வீற்றிருப்போம் சிங்காசனத்தில்

    தந்தத்தினால் செய்த மாளிகையில்
    தயாபரன் இயேசு புறப்பாடுவார்
    மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர்
    மன்னன் மணாளன் வந்திடுவர்


    Mangala Geethangal Paadiduvom Lyrics in English

    mangala geethangal paadiduvom
    manavaalan Yesu manamakila
    karai thirai neekki thiruchchapaiyaakki
    kaaththanar karpulla kannikaiyaay

    koththiramae yoothaa koottamae
    thoththiramae thuthi saattiduvom
    puluthiyinintemmai uyarththinaarae
    pukalnthavar naamaththaip pottiduvom

    raaja kumaaraththi sthaanaththilae
    raajaathi raajan Yesuvotae
    ina jana naadu thakappanin veedu
    inpam maranthu sentiduvom

    siththira thaiyalutai anninthae
    sirantha ullaana makimaiyilae
    paluthontumillaa parisuththamaana
    paavaikalaaka purappaduvom

    aarangal pootti alangariththae
    avar manavaatti aakkinaarae
    viruntharai naesa koti oli veesu
    veettiruppom singaasanaththil

    thanthaththinaal seytha maalikaiyil
    thayaaparan Yesu purappaaduvaar
    makil kamal veesa makaththuva naesar
    mannan mannaalan vanthiduvar

  • Manavalan Yesu Varapogirar மணவாளன் இயேசு வரப்போகிறார்

    மணவாளன் இயேசு வரப்போகிறார்
    மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு
    ஆயத்தப்படு , ஆயத்தப்படு
    மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு – 2

    1. இனி காலம் செல்லாது
      இனியும் தாமதம் ஏன்
      மெய்யாக இயேசு வரப்போகிறார்
      மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் – 2
    2. நீ ஆயத்தமாயிருந்தால் – நாம்
      அவரோடு சென்றிடலாம்
      ஒரு நொடிப் பொழுதினிலே – நாம்
      மறுரூபமாகிடுவோம் – 2
    3. தேவ நியாயத்தீர்ப்பு முதலில்
      சபையிலே தான் தொடங்கும்
      பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால்
      பரலோகம் சென்றிடலாம் – 2

    Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார் Lyrics in English

    Manavalan Yesu Varapogirar
    manavaalan Yesu varappokiraar
    manavaatti sapaiyae nee aayaththappadu
    aayaththappadu , aayaththappadu
    manavaatti sapaiyae nee aayaththappadu – 2

    1. ini kaalam sellaathu
      iniyum thaamatham aen
      meyyaaka Yesu varappokiraar
      meyvaalvu unakkavar tharukiraar – 2
    2. nee aayaththamaayirunthaal – naam
      avarodu sentidalaam
      oru notip poluthinilae – naam
      maruroopamaakiduvom – 2
    3. thaeva niyaayaththeerppu muthalil
      sapaiyilae thaan thodangum
      parisuththa vaalvu thinam vaalnthaal
      paralokam sentidalaam – 2
  • Manavalan Karthar Yesu மணவாளன் கர்த்தர் இயேசு

    மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
    மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?

    பிரியமே நீ ரூபவதி
    எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன்

    1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
      காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
      அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே
      திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே
    2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
      பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
      கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
      கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு – என் பிரியமே
    3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
      பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
      தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
      பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு – என் பிரியமே

    Manavalan Karthar Yesu Lyrics in English

    manavaalan karththar Yesu varukintarae
    manavaatti santhikka aayaththamthaanaa?

    piriyamae nee roopavathi
    elunthu vaa un naesaraich santhikkavae – manavaalan

    1. kuruvikal paadum saththam engum kaetkuthae
      kaattuppuraa saptham nam thaesam niraiyuthae
      aththimaram kaaykaaykka kaalam vanthathathae
      thiraatchaைk koti poo pooththu vaasam perukuthae – en piriyamae
    2. maarikkaalam sentathu malaiyum vanthathu
      poomiyilae pushpangal pooththuk kulunguthae
      kanmalaiyin sikarangalil thangum puraavae
      karththar Yesu varum naalai sollip paadidu – en piriyamae
    3. saaronin rojaavaam karththar Yesu
      pallaththaakkin leeliyaam paraman Yesu
      thaakam theerkkum jeeva nathi karththar Yesu
      paavam pokkum parikaari paraman Yesu – en piriyamae
  • Manavaalvu Puvi Vaalvinil Vaalvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

    மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
    மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
    மருவிய சோபன சுப வாழ்வு

    1. துணை பிரியாது, தோகையிம்மாது
      சுப மண மகளிவர் இதுபோது
      மனமுறை யோது வசனம் விடாது
      வந்தனர் உமதருள் பெறவேது – நல்ல
    2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
      தெய்வீக மாமண அலங்காரா
      தேவ குமாரா திருவெல்லைய்யூரா
      சோந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல
    3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
      கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
      அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
      அம்புவி தனில் மனைக்கலங்காரம் – நல்ல
    4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
      மந்திரம் அவர் குறையுமே தாவி
      மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி
      அவளையில்லாதவ னொரு பாவி – நல்ல

    Manavaalvu Puvi Vaalvinil Vaalvu Lyrics in English

    manavaalvu puvi vaalvinil vaalvu
    mangala vaalvu vaalvinil vaalvu
    maruviya sopana supa vaalvu

    1. thunnai piriyaathu, thokaiyimmaathu
      supa mana makalivar ithupothu
      manamurai yothu vasanam vidaathu
      vanthanar umatharul peravaethu – nalla
    2. jeeva thayaakaraa, sirushtiyathikaaraa
      theyveeka maamana alangaaraa
      thaeva kumaaraa thiruvellaiyyooraa
      sonthavarkkarul tharaa thiruppeeraa? – nalla
    3. kutiththana veeram, kunamulla thaaram
      koduththuk konndaalathu samusaaram
      adakkamaasaaram, anpu, uthaaram
      ampuvi thanil manaikkalangaaram – nalla
    4. mantal sey thaevi, mannaalanukkaavi
      manthiram avar kuraiyumae thaavi
      mantiyip puvi yamarntha sanjaீvi
      avalaiyillaathava noru paavi – nalla
  • Manathurugum deivame மனதுருகும் தெய்வமே

    மனதுருகும் தெய்வமே இயேசய்யா
    மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
    உம் அன்பிற்கு அளவே இல்லை
    அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

    மெய்யாக எங்களது
    பாடுகளை ஏற்றுக்கொண்டு
    துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா

    எங்களுக்கு சமாதானம்
    உண்டு பண்ணும் தண்டனையோ
    உம்மேலே விழுந்ததையா ஐயா

    சாபமான முள்முடியே
    தலைமேலே சுமந்து கொண்டு
    சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா

    எங்களது மீறுதலால்
    காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
    தழும்புகளால் சுகாமானோம் உந்தன்

    தேடிவந்த மனிதர்களின்
    தேவைகளை அறிந்தவராய்
    தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா


    Manathurugum deivame Lyrics in English

    manathurukum theyvamae iyaesayyaa
    manathaarath thuthippaen sthoththarippaen

    neer nallavar sarva vallavar
    um irakkaththirku mutivae illai
    um anpirku alavae illai
    avai kaalaithorum puthithaayirukkum

    meyyaaka engalathu
    paadukalai aettukkonndu
    thukkangalai sumanthu konnteer aiyaa

    engalukku samaathaanam
    unndu pannnum thanndanaiyo
    ummaelae vilunthathaiyaa aiyaa

    saapamaana mulmutiyae
    thalaimaelae sumanthu konndu
    siluvaiyilae vetti sirantheer aiyaa

    engalathu meeruthalaal
    kaayappattir norukkappattir
    thalumpukalaal sukaamaanom unthan

    thaetivantha manitharkalin
    thaevaikalai arinthavaraay
    thinam thinam arputham seytheer aiyaa

  • Manasukkulley Pongum Kadalaai மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்

    மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்
    ஆனந்த நீர் ஊற்று!
    இயேசுவின் வரவால் நிகழ்ந்திடும்
    விந்தையைக் கூறுங்கள் ஆர்ப்பரித்து!
    மீட்புதானே தேவன் வழங்கும்
    உன்னத சீர் அமைப்பு! – 2
    இளமையிலே இந்த அற்புதம்
    விடிந்தால்வாழ்வெல்லாம் சிறப்பு! – 2
    ஆனந்த பூமழையில் – தினம்
    பூரித்து நனைகின்றேன்!
    ஆவியின் அருள் மழையில் – மனம்
    நிரம்பியே வழிகின்றேன்!

    1. மாசில்லாத புனித நல்வாழ்வே
      புத்தம் புது படைப்பு – நல்
      ரூபமாற்றமே அதனைக்
      காட்டிடும் அழகின் அணிவகுப்பு
      வாழ்வைஆள்பவர்வலிமையூட்டினால்
      “வெற்றிச் சிகரம் தொடும்” – அவர்
      அழகு வாசனை, சொல்
      வினையானால்
      உலகம் பாரட்டும்! …. 2 –
      ஆனந்த
    2. நல்ல கிறிஸ்தவன் நாடறிய
      அவன் வாழ்க்கை வேறாகும்!
      நீதி நேர்மையும் உண்மை, நாணயம்
      அவன் விடும் மூச்சாகும்!
      தேவ ஆட்சியின் மாட்சி
      வலிமைதான்“அவனில்
      அரங்கேறும்” – தினம்சிலுவையை
      சுமந்து சீடன் நடந்தால்
      சீடரின் தொகை பெருகும்!… 2 –
      ஆனந்த
    3. சபைகளின் நடுவே உலாவுகின்றவர்
      விடுக்கும் அறைகூவல்!
      ஆதியில்
      கொண்டஅன்புக்குத்திரும்பிட
      அழைக்கும் அன்புக்குரல்!
      ஊன் – உடல் உள்ளம் யாவும்
      படைத்தால் “ஆனந்தம் ஓயாது”
      இளைஞர் எழுச்சியால்
      சபைகள் வளரும்
      சரித்திரம் மாறிவிடும்!… 2 –
      ஆனந்த

    Manasukkulley Pongum Kadalaai Lyrics in English

    manasukkullae pongum kadalaay
    aanantha neer oottu!
    Yesuvin varavaal nikalnthidum
    vinthaiyaik koorungal aarppariththu!
    meetputhaanae thaevan valangum
    unnatha seer amaippu! – 2
    ilamaiyilae intha arputham
    vitinthaalvaalvellaam sirappu! – 2
    aanantha poomalaiyil – thinam
    pooriththu nanaikinten!
    aaviyin arul malaiyil – manam
    nirampiyae valikinten!

    1. maasillaatha punitha nalvaalvae
      puththam puthu pataippu – nal
      roopamaattamae athanaik
      kaatdidum alakin annivakuppu
      vaalvaiaalpavarvalimaiyoottinaal
      “vettich sikaram thodum” – avar
      alaku vaasanai, sol
      vinaiyaanaal
      ulakam paarattum! …. 2 –
      aanantha
    2. nalla kiristhavan naadariya
      avan vaalkkai vaeraakum!
      neethi naermaiyum unnmai, naanayam
      avan vidum moochchaாkum!
      thaeva aatchiyin maatchi
      valimaithaan“avanil
      arangaerum” – thinamsiluvaiyai
      sumanthu seedan nadanthaal
      seedarin thokai perukum!… 2 –
      aanantha
    3. sapaikalin naduvae ulaavukintavar
      vidukkum araikooval!
      aathiyil
      konndaanpukkuththirumpida
      alaikkum anpukkural!
      oon – udal ullam yaavum
      pataiththaal “aanantham oyaathu”
      ilainjar eluchchiyaal
      sapaikal valarum
      sariththiram maarividum!… 2 –
      aanantha
  • Manan thirumbum paavikenrum மனந்திரும்பும் பாவிக்கென்றும்

    மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே
    மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே

    வந்தனமப்பா வந்தனமே

    திருச்சபை நடுவில் உமது பெயரைச்
    சொல்லியே பாடிடுவேன் – திருக்கரம்
    செய்திட்ட நன்மை நினைக்கிறேன்
    திருச்சபை நடுவில் உமது பெயரைச்
    சொல்லியே – உம்முடைய செயல்களெல்லாம்
    நினைக்கும் போது வியக்கிறேன்

    இரதங்களும் குதிரைகளும் எங்களை
    இரட்சிக்க முடியவில்லை – உம்மை
    விட்டால் எங்களுக்கு வேறே வழியில்ல
    இரதங்களும் குதிரைகளும் எங்களை
    இரட்சிக்க முடியவில்லை – உம்மை நம்பி
    வந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்ல

    கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
    பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
    காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபை
    கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
    பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே – என்னை
    விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே


    Manan thirumbum paavikenrum Lyrics in English

    mananthirumpum paavikkentum pukalidamae
    manathurukum thaevan enthan maraividamae

    vanthanamappaa vanthanamae

    thiruchchapai naduvil umathu peyaraich
    solliyae paadiduvaen – thirukkaram
    seythitta nanmai ninaikkiraen
    thiruchchapai naduvil umathu peyaraich
    solliyae – ummutaiya seyalkalellaam
    ninaikkum pothu viyakkiraen

    irathangalum kuthiraikalum engalai
    iratchikka mutiyavillai – ummai
    vittal engalukku vaetae valiyilla
    irathangalum kuthiraikalum engalai
    iratchikka mutiyavillai – ummai nampi
    vanthuvittaோmae vaeroru naamam ariyavilla

    karththarukkul makilnthirukkum
    pillaikalukkentum nimmathiyae
    kaaththirunthaal kitaikkum avarin kirupai
    karththarukkul makilnthirukkum
    pillaikalukkentum nimmathiyae – ennai
    vittu edupadaatha nalla pangu avar sannithiyae

  • Manamirangum Devane மனமிரங்கும் தேவனே

    மனமிரங்கும் தேவனே
    மகிமையின் இராஜனே
    உம் சமுகம் போதுமே
    வேறென்ன வேண்டுமே

    உம் அன்பிலே
    நான் உருகினேன்
    உம்மை விட்டு
    நான் எங்கு போவேனோ

    என் கஷ்ட துக்கங்கள்
    நான் யாரிடம் சொல்வேன்
    கவலை கண்ணீரில்
    நான் யாரிடம் சொல்வேன்

    என் தோல்வி நேரத்தில்
    தோள் கொடுத்தீரே
    என் மரண படுக்கையில்
    என்னை சுக படுத்தினீரே


    Manamirangum Devane Lyrics in English

    manamirangum thaevanae
    makimaiyin iraajanae
    um samukam pothumae
    vaeraெnna vaenndumae

    um anpilae
    naan urukinaen
    ummai vittu
    naan engu povaeno

    en kashda thukkangal
    naan yaaridam solvaen
    kavalai kannnneeril
    naan yaaridam solvaen

    en tholvi naeraththil
    thol koduththeerae
    en marana padukkaiyil
    ennai suka paduththineerae

  • Maname nee varutham மனமே நீ வருத்தம்

    மனமே நீ வருத்தம் கொள்ளாதே
    வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
    நம் இயேசுவின் அன்பு உண்டு அது
    உனக்கு என்றும் உண்டு

    நினைத்த காரியம் வாய்த்திடாமல்
    வாடிப்போனாயோ
    பாரங்கள் மலைபோல் குவிந்ததாலே
    பயந்து போனாயோ
    நம் இயேசுவின் கரங்களே அதனை
    இனி செய்து முடித்திடுமே -2

    நோய்களினாலே பெலனிழந்து மனம்
    நொடிந்து போனாயோ
    மரணந்தான் இனி முடிவென்று சொல்லி
    மௌனம் ஆனாயோ
    நம் இயேசுவின் தழும்புகளால்
    சுகமடையே நோய்களில்லை 2

    சோதனை மேலே சோதனை வந்து
    சோர்ந்து போனாயோ
    விடுதலை பெறவே வழி தெரியாமல்
    துவண்டு போனாயோ
    நம் இரட்சகர் இயேசுவினாலே
    விடுதலை உனக்கென்றுமுண்டு -2


    Maname nee varutham Lyrics in English

    manamae nee varuththam kollaathae
    veennaaka nee kalakkam kollaathae
    nam Yesuvin anpu unndu athu
    unakku entum unndu

    ninaiththa kaariyam vaayththidaamal
    vaatipponaayo
    paarangal malaipol kuvinthathaalae
    payanthu ponaayo
    nam Yesuvin karangalae athanai
    ini seythu mutiththidumae -2

    Nnoykalinaalae pelanilanthu manam
    notinthu ponaayo
    marananthaan ini mutiventu solli
    maunam aanaayo
    nam Yesuvin thalumpukalaal
    sukamataiyae Nnoykalillai 2

    sothanai maelae sothanai vanthu
    sornthu ponaayo
    viduthalai peravae vali theriyaamal
    thuvanndu ponaayo
    nam iratchakar Yesuvinaalae
    viduthalai unakkentumunndu -2