Blog

  • Kel Jenmitha Raayarke கேள்! ஜென்மித்த ராயர்க்கே

    1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே
      விண்ணில் துத்தியம் ஏறுதே;
      அவர் பாவ நாசகர்,
      சமாதான காரணர்,
      மண்ணோர் யாரும் எழுந்து
      விண்ணோர்போல் கெம்பீரித்து
      பெத்லெகேமில் கூடுங்கள்,
      ஜென்ம செய்தி கூறுங்கள்.
      கேள்! ஜென்மித்த ராயர்க்கே
      விண்ணில் துத்தியம் ஏறுதே.
    2. வானோர் போற்றும் கிறிஸ்துவே,
      லோகம் ஆளும் நாதரே,
      ஏற்ற காலம் தோன்றினீர்,
      கன்னியிடம் பிறந்தீர்.
      வாழ்க நர தெய்வமே,
      அருள் அவதாரமே!
      நீர், இம்மானுவேல், அன்பாய்
      பாரில் வந்தீர் மாந்தனாய்.
    3. வாழ்க, சாந்த பிரபுவே!
      வாழ்க, நீதி சூரியனே!
      மீட்பராக வந்தவர்,
      ஒளி, ஜீவன் தந்தவர்;
      மகிமையை வெறுத்து,
      ஏழைக் கோலம் எடுத்து,
      சாவை வெல்லப் பிறந்தீர்,
      மறு ஜென்மம் அளித்தீர்.

    Kel Jenmitha Raayarke Lyrics in English

    1. kael! jenmiththa raayarkkae
      vinnnnil thuththiyam aeruthae;
      avar paava naasakar,
      samaathaana kaaranar,
      mannnnor yaarum elunthu
      vinnnnorpol kempeeriththu
      pethlekaemil koodungal,
      jenma seythi koorungal.
      kael! jenmiththa raayarkkae
      vinnnnil thuththiyam aeruthae.
    2. vaanor pottum kiristhuvae,
      lokam aalum naatharae,
      aetta kaalam thontineer,
      kanniyidam pirantheer.
      vaalka nara theyvamae,
      arul avathaaramae!
      neer, immaanuvael, anpaay
      paaril vantheer maanthanaay.
    3. vaalka, saantha pirapuvae!
      vaalka, neethi sooriyanae!
      meetparaaka vanthavar,
      oli, jeevan thanthavar;
      makimaiyai veruththu,
      aelaik kolam eduththu,
      saavai vellap pirantheer,
      matru jenmam aliththeer.
  • Keethankal Paatiyae Poerrituvoem கீதங்கள் பாடியே போற்றிடுவோம்

    பாடி போற்றுவோம்

    1. கீதங்கள் பாடியே போற்றிடுவோம் – சங்
      கீதங்கள் பாடியே போற்றிடுவோம் – 2

    கர்த்தர் பெரியவர் மகா உன்னதர்!
    அவர் தயவை எண்ணியே துதித்திடுவோம் – 2

    அற்புதங்கள் செய்பவர் பரிசுத்தமானவர்
    மகிமை படுத்திடுவோம்
    யுத்தத்தில் வல்லவர் இரட்சிப்புமானவர்
    உயர்த்தி மகிழ்ந்திடுவோம்
    அல்லேலூயா – 8

    1. இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு வந்தார்
      கேடகமும் கிருபையும் பெலனுமானார்
      மாராவை மதுரமாக்கினார்
      மாறாத பரிகாரி அவரேயாவார் – 2
    2. நீதியின் தேவனை உயர்த்திடுவோம்
      நித்திய பாதையில் நடத்திடுவோம்
      நிதம் மாறாத அவர் அன்பினை நாம்
      சிதறி எங்குமே கூறிடுவோம் – 2

    Keethankal Paatiyae Poerrituvoem Lyrics in English

    paati pottuvom

    1. geethangal paatiyae pottiduvom – sang
      geethangal paatiyae pottiduvom – 2

    karththar periyavar makaa unnathar!
    avar thayavai ennnniyae thuthiththiduvom – 2

    arputhangal seypavar parisuththamaanavar
    makimai paduththiduvom
    yuththaththil vallavar iratchippumaanavar
    uyarththi makilnthiduvom
    allaelooyaa – 8

    1. isravael janangalai meettu vanthaar
      kaedakamum kirupaiyum pelanumaanaar
      maaraavai mathuramaakkinaar
      maaraatha parikaari avaraeyaavaar – 2
    2. neethiyin thaevanai uyarththiduvom
      niththiya paathaiyil nadaththiduvom
      nitham maaraatha avar anpinai naam
      sithari engumae kooriduvom – 2
  • Keetham Keetham Jeya Jeya Keetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

    கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
    கை கொட்டிப் பாடிடுவோம்

    இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
    ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ! ஆ!

    1.பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
    புரண்டுருண்டோடுது பார் – அங்கு
    போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
    தேவ புத்திரர் சந்நிதிமுன் – ஆ! ஆ!

    2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
    ஓடி உரைத்திடுங்கள் – தாம்
    கூறின மாமறை விட்டனர் கல்லறை
    போங்கள் கலிலேயாவுக்கு – ஆ! ஆ!


    Keetham Keetham Jeya Jeya Keetham Lyrics in English

    geetham geetham jeya jeya geetham
    kai kottip paadiduvom

    Yesu raajan uyirththelunthaar allaelooyaa
    jeyam entu aarpparippom – aa! aa!

    1.paar atho kallarai mootina perungal
    puranndurunntooduthu paar – angu
    potta muththiraik kaaval nirkumo
    thaeva puththirar sannithimun – aa! aa!

    2.vaenndaam vaenndaam aluthida vaenndaam
    oti uraiththidungal – thaam
    koorina maamarai vittanar kallarai
    pongal kalilaeyaavukku – aa! aa!

  • Keelaakaamal unnai melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே

    கீழாக்காமல் உன்னை மேலாக்கியே
    உன்னை நான் அபிஷேகிப்பேன்
    வாலாக்காமல் உன்னை தலையாக்கியே
    புது நாமம் தந்திடுவேன்
    எல்லையை பெரிதாக்கி விஸ்திகரித்து
    உன்னை நான் உயர்த்திடுவேன்

    மறவாமல் என்றும் நான் உன்னோடு இருந்து
    தாயை போல் பரிபாலிப்பேன்
    உன்னை என் கண்மணி போல் நான் காத்து
    புது நாமம் தந்திடுவேன்

    பாழாக்கும் கொள்ளை நோய்க்கு உன்னை காத்து
    கண்ணிமையாய் காத்திடுவேன்
    என் செட்டையின் கீழ் அடைக்கலப்படுத்தி
    கோட்டையாய் காத்திடுவேன்

    பகலில் பறக்கும் அம்பிற்க்கு உன்னை
    விடுவித்து காத்துக் கொள்வேன்
    பொலாப்பு உனக்கு நேரிடாமல் பார்த்து
    எல்லையை காத்திடுவேன்


    Keelaakaamal unnai melaakkiye Lyrics in English

    geelaakkaamal unnai maelaakkiyae
    unnai naan apishaekippaen
    vaalaakkaamal unnai thalaiyaakkiyae
    puthu naamam thanthiduvaen
    ellaiyai perithaakki visthikariththu
    unnai naan uyarththiduvaen

    maravaamal entum naan unnodu irunthu
    thaayai pol paripaalippaen
    unnai en kannmanni pol naan kaaththu
    puthu naamam thanthiduvaen

    paalaakkum kollai Nnoykku unnai kaaththu
    kannnnimaiyaay kaaththiduvaen
    en settaைyin geel ataikkalappaduththi
    kottaைyaay kaaththiduvaen

    pakalil parakkum ampirkku unnai
    viduviththu kaaththuk kolvaen
    polaappu unakku naeridaamal paarththu
    ellaiyai kaaththiduvaen

  • Kearupin serapingal கேரூபீன் சேராபீன்கள்

    கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றி
    உம்மைப் போற்றுதே
    பூலோக திருச்சபையெல்லாம்
    ஓவின்றி உம்மை போற்றிட

    நீர் பரிசுத்தர்,நீர் பரிசுத்தர்,நீர் பரிசுத்தர் எங்கள்
    பரலோக ராஜாவே இந்த
    வானம் பூமியுள்ள யாவும் உங்கள்
    நாமத்தை உயர்த்தட்டுமே

    பூமியனைத்திலும் உந்தன் மகிமை
    நிறைந்து வழிகின்றதே
    ஆலயத்திலும் உந்தன் மகிமை
    அலையலையாய் அசைகின்றதே
    துதிகன மகிமைக்குப் பாத்திரர்
    எல்லா புகழும் உமக்குத்தானே

    வானம் உமது சிங்காசனம்
    பூமி உந்தன் பாதபடி நாங்கள் உந்தன்
    தேவ ஆலயம் நீர் தங்கும் தூய ஸ்தலம்
    சகலமும் படைத்த என் தேவா
    நீர் நித்திய சிருஷ்டிகரே

    பரலோகத்தில் உம்மையல்லால்
    யாருண்டு தேவனே பூலோகத்தில்
    உம்மைத்தவிர வேறொரு விருப்பமில்லை
    என்றும் உம்மோடு வாழ என்னை
    உமக்காய் தெரிந்தெடுத்தீர்


    Kearupin serapingal Lyrics in English

    kaeroopeen seraapeenkal oyvinti
    ummaip pottuthae
    pooloka thiruchchapaiyellaam
    ovinti ummai pottida

    neer parisuththar,neer parisuththar,neer parisuththar engal
    paraloka raajaavae intha
    vaanam poomiyulla yaavum ungal
    naamaththai uyarththattumae

    poomiyanaiththilum unthan makimai
    nirainthu valikintathae
    aalayaththilum unthan makimai
    alaiyalaiyaay asaikintathae
    thuthikana makimaikkup paaththirar
    ellaa pukalum umakkuththaanae

    vaanam umathu singaasanam
    poomi unthan paathapati naangal unthan
    thaeva aalayam neer thangum thooya sthalam
    sakalamum pataiththa en thaevaa
    neer niththiya sirushtikarae

    paralokaththil ummaiyallaal
    yaarunndu thaevanae poolokaththil
    ummaiththavira vaeroru viruppamillai
    entum ummodu vaala ennai
    umakkaay therintheduththeer

  • kazhugu pola கழுகு போல

    கழுகு போல காத்திருந்து
    புது பெலன் அடைவேன்
    கர்த்தருக்கு காத்திருந்து
    உயர எழும்பிடுவேன்

    நடந்தாலும் சோர்வடைவதில்லை
    ஓடினாலும் இளைப்படைவதில்லை

    உந்தன் சமூகக் காற்று
    என்னை உயர உயர உயர எழுப்பிடுமே
    அல்லேலூயா அல்லேலுயா
    உயர எழும்பிடுவேன்

    கர்த்தர் உமக்கு காத்திருப்போர்
    வெட்கப்பட்டு போவதில்லை
    நீதிமானின் கால்களை நீர்
    தள்ளாட விடுவதில்லை

    கர்த்தர் உம்மை தேடுவோர்க்கு
    குறைவே இருப்பதில்லை
    இஸ்ரவேலை காக்கும் தேவன்
    நீர் உறங்கிப்போவதில்லை

    கர்த்தர் உரைத்த வார்த்தை
    ஒன்றும் தவறிப் போவதில்லை
    நீதிமானின் வாக்குத்தத்தம்
    தரையில் விழுவதில்லை


    kazhugu pola Lyrics in English

    kaluku pola kaaththirunthu
    puthu pelan ataivaen
    karththarukku kaaththirunthu
    uyara elumpiduvaen

    nadanthaalum sorvataivathillai
    otinaalum ilaippataivathillai

    unthan samookak kaattu
    ennai uyara uyara uyara eluppidumae
    allaelooyaa allaeluyaa
    uyara elumpiduvaen

    karththar umakku kaaththiruppor
    vetkappattu povathillai
    neethimaanin kaalkalai neer
    thallaada viduvathillai

    karththar ummai thaeduvorkku
    kuraivae iruppathillai
    isravaelai kaakkum thaevan
    neer urangippovathillai

    karththar uraiththa vaarththai
    ontum thavarip povathillai
    neethimaanin vaakkuththaththam
    tharaiyil viluvathillai

  • Kavarchi Nayaganae கவர்ச்சி நாயகனே

    கவர்ச்சி நாயகனே
    கண்களில் நிறைந்தவரே
    கரம் பிடித்தவரே
    கைவிடா கன்மலையே

    உமக்கே ஸ்தோத்திரம்
    உமக்கே ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்
    உமக்கே ஸ்தோத்திரம்

    1. என்னை இழுத்துக்கொள்ளும்
      ஓடி வந்திடுவேன்
      அறைக்குள் அழைத்துச் செல்லும்
      அன்பில் களிகூறுவேன்
    2. திராட்சை இரசம் பார்க்கிலும்
      இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமே
      உலகெல்லாம் உம் மணமே
    3. இடக்கையால் தாங்குகிறீர்
      வலக்கையால் தழுவுகிறீர்
      எனக்கு உரியவரே
      இதயம் ஆள்பவரே
    4. உம் மீது கொண்ட நேசம்
      அக்கினி ஜுவாலையன்றோ
      தண்ணீரும் வெள்ளங்களும்
      தணிக்க முடியாதையா

    Kavarchi Nayaganae – கவர்ச்சி நாயகனே Lyrics in English

    Kavarchi Nayaganae
    kavarchchi naayakanae
    kannkalil nirainthavarae
    karam pitiththavarae
    kaividaa kanmalaiyae

    umakkae sthoththiram
    umakkae sthoththiram
    uyirulla naalellaam
    umakkae sthoththiram

    1. ennai iluththukkollum
      oti vanthiduvaen
      araikkul alaiththuch sellum
      anpil kalikooruvaen
    2. thiraatchaை irasam paarkkilum
      inimaiyaanavarae oottunnda parimalamae
      ulakellaam um manamae
    3. idakkaiyaal thaangukireer
      valakkaiyaal thaluvukireer
      enakku uriyavarae
      ithayam aalpavarae
    4. um meethu konnda naesam
      akkini juvaalaiyanto
      thannnneerum vellangalum
      thannikka mutiyaathaiyaa
  • Kavalaippataatheer Enrum Kavalaippataatheer கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்

    கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
    கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
    உயிர் வாழ எதை உண்பதோ
    உடலுக்கெதை உடுப்பதென்றோ
    (கவலைப்)

    பறவைகளைப் பாருங்கள் – அவை
    விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
    களஞ்சியம் சேர்ப்பதுமில்லை (2)
    கடவுள் அதற்கும் உணவளிக்கின்றார் (2) (கவலைப்)

    காட்டுச்செடியைப் பாருங்கள் – அவை
    உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
    அழகிலே இணையதற்கில்லை (2)
    கடவுள் அவற்றை உடுத்தி வருகிறார் (2) (கவலைப்)

    இறையரசின் நீதிதனை முதலில் தேடுவோம்
    அதை முதன்மையாக்குவோம்
    உலகினில் வாழ்ந்து காட்டுவோம் (2)
    கடவுள் நம்மைக் காத்து வருகிறார்
    கடவுள் நம்மை வழி நடத்துகிறார் (கவலைப்)


    Kavalaippataatheer Enrum Kavalaippataatheer Lyrics in English

    kavalaippadaatheer entum kavalaippadaatheer
    kavalaippadaatheer entum kavalaippadaatheer
    uyir vaala ethai unnpatho
    udalukkethai uduppathento
    (kavalaip)

    paravaikalaip paarungal – avai
    vithaippathumillai aruppathumillai
    kalanjiyam serppathumillai (2)
    kadavul atharkum unavalikkintar (2) (kavalaip)

    kaattuchchetiyaip paarungal – avai
    ulaippathumillai noorpathumillai
    alakilae innaiyatharkillai (2)
    kadavul avattaை uduththi varukiraar (2) (kavalaip)

    iraiyarasin neethithanai muthalil thaeduvom
    athai muthanmaiyaakkuvom
    ulakinil vaalnthu kaattuvom (2)
    kadavul nammaik kaaththu varukiraar
    kadavul nammai vali nadaththukiraar (kavalaip)

  • Kavalaipadade Magane கவலைப்படாதே மகனே

    கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
    கவலைப்படாதே மகளே கவலைப்படாதே

    உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதா
    உன் அருகே இருக்கிறார் கலங்காதே
    உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்
    உன் குறை எல்லாம் நீக்கீடுவார்

    காக்கைகளை போஷிக்கும் தேவனவர்
    அனுதினமும் நடத்துவார் கலங்காதே
    பூக்களை உடுத்திடும் ராஜனவர்
    கண்மணி போல் உன்னை காத்திடுவார்

    துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்
    உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே
    கவலைகள் அவரிடம் சொல்லி விடு
    கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார்


    Kavalaipadade Magane Lyrics in English

    kavalaippadaathae makanae kavalaippadaathae
    kavalaippadaathae makalae kavalaippadaathae

    unnai entum visaarikkum paramapithaa
    un arukae irukkiraar kalangaathae
    unnaiyum naesikkum thakappanavar
    un kurai ellaam neekgeeduvaar

    kaakkaikalai poshikkum thaevanavar
    anuthinamum nadaththuvaar kalangaathae
    pookkalai uduththidum raajanavar
    kannmanni pol unnai kaaththiduvaar

    thuyaramellaam purinthidum theyvamavar
    un paaram siluvaiyil sumanthaarae
    kavalaikal avaridam solli vidu
    kannnneerkal yaavaiyum thutaiththiduvaar

  • Kavalaigal Kanneergal Soozhndha கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த

    கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
    நீர் தானே என் ஆனந்தம் – 2
    கடுஞ்சொற்கள் நெஞ்சைப் பிளந்திடும் போதும்
    நீர் தானே பேரின்பம் -2
    கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
    நீர் தானே என் ஆனந்தம்

    1. பெற்றோரின் பாசம் உற்றோரின் நேசம்
      ஒரு நாளில் பல மாற்றம் அடைவதைக் கண்டேன் – 2
      மற்றென்ன சொல்வேன் மாறிடா நேசம்
      மாசற்ற இயேசுவே உம் அன்பில் கண்டேன் – 2
      கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
      நீர் தானே என் ஆனந்தம்
    2. உமக்காக வாழ்ந்து உமக்காக மறிக்கும்
      ஒரு வாழ்க்கை நான் விரும்பி உம்மிடம் கேட்டேன் – 2
      உலகத்தின் கரங்கள் அதைத் தாக்கும்போது
      உன்னதா உம் கரத்தால் எனைத் தூக்கக் கண்டேன் – 2
      கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
      நீர் தானே என் ஆனந்தம்
    3. அழுகையின் பள்ளத் தாக்கினைக் கடந்து
      அருமையாய் நீரூற்றை என் வாழ்வில் கண்டேன் – 2
      கண்ணீரால் நானும் விதைதிடும் விதைகள்
      கெம்பீர அறுவடையாய் உம் கரத்தில் பெறுவேன் – 2
      கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
      நீர் தானே என் ஆனந்தம் – 3

    Kavalaigal Kanneergal Soozhndha Lyrics in English

    kavalaikal kannnneerkal soolntha ivvulakil
    neer thaanae en aanantham – 2
    kadunjaொrkal nenjaip pilanthidum pothum
    neer thaanae paerinpam -2
    kavalaikal kannnneerkal soolntha ivvulakil
    neer thaanae en aanantham

    1. pettaோrin paasam uttaோrin naesam
      oru naalil pala maattam ataivathaik kanntaen – 2
      mattenna solvaen maaridaa naesam
      maasatta Yesuvae um anpil kanntaen – 2
      kavalaikal kannnneerkal soolntha ivvulakil
      neer thaanae en aanantham
    2. umakkaaka vaalnthu umakkaaka marikkum
      oru vaalkkai naan virumpi ummidam kaettaen – 2
      ulakaththin karangal athaith thaakkumpothu
      unnathaa um karaththaal enaith thookkak kanntaen – 2
      kavalaikal kannnneerkal soolntha ivvulakil
      neer thaanae en aanantham
    3. alukaiyin pallath thaakkinaik kadanthu
      arumaiyaay neeroottaை en vaalvil kanntaen – 2
      kannnneeraal naanum vithaithidum vithaikal
      kempeera aruvataiyaay um karaththil peruvaen – 2
      kavalaikal kannnneerkal soolntha ivvulakil
      neer thaanae en aanantham – 3