Blog

  • Immaanuvaelin Iraththaththaal இம்மானுவேலின் இரத்தத்தால்

    1. இம்மானுவேலின் இரத்தத்தால்
      நிறைந்த ஊற்றுண்டே
      எப்பாவத் தீங்கும் அதினால்
      நிவிர்த்தியாகுமே
    2. மா பாவியான கள்ளனும்
      அவ்வூற்றில் மூழ்கினான்
      மன்னிப்பும் மோட்சானந்தமும்
      அடைந்து பூரித்தான்
    3. அவ்வாறே நானும் யேசுவால்
      விமோசனம் பெற்றேன்
      என் பாவம் நீங்கிப் போனதால்
      ஓயாமல் பாடுவேன்
    4. காயத்தில் ஓடும் ரத்தத்தை
      விஸ்வாசத்தால் கண்டேன்
      ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
      எங்கும் பிரஸ்தாபிப்பேன்
    5. பின் விண்ணில் வல்ல நாதரை
      நான் கண்டு பூரிப்பேன்
      அங்கென்னை மீட்ட நேசத்தைக்
      கொண்டாடிப் போற்றுவேன்

    Immaanuvaelin Iraththaththaal Lyrics in English

    1. immaanuvaelin iraththaththaal
      niraintha oottunntae
      eppaavath theengum athinaal
      nivirththiyaakumae
    2. maa paaviyaana kallanum
      avvoottil moolkinaan
      mannippum motchaாnanthamum
      atainthu pooriththaan
    3. avvaatae naanum yaesuvaal
      vimosanam petten
      en paavam neengip ponathaal
      oyaamal paaduvaen
    4. kaayaththil odum raththaththai
      visvaasaththaal kanntaen
      oppatta meetpar naesaththai
      engum pirasthaapippaen
    5. pin vinnnnil valla naatharai
      naan kanndu poorippaen
      angaெnnai meetta naesaththaik
      konndaatip pottuvaen
  • Immaanuvaelae Vaarum Vaarumae இம்மானுவேலே வாரும் வாருமே

    இம்மானுவேலர் வந்தார்

    1. இம்மானுவேலே வாரும் வாருமே
      மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே
      மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
      உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்

    மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே
    இம்மானுவேலின் நாள் சமீபமே

    1. ஈசாயின் வேர்த் துளிரே வாருமே
      பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே
      பாதாள ஆழம் நின்று இரட்சியும்
      வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்
    2. அருணோதயமே ஆ வாருமே
      வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே
      மாந்தார ராவின் மேகம் நீக்கிடும்
      இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்
    3. தாவீதின் திறவுகோலே வாருமே
      விண் வாசலைத் திறந்து தாருமே
      ஒடுக்கமாம் நல்வழி காத்திடும்
      விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்
    4. மா வல்ல ஆண்டவா வந்தருளும்
      முற்காலம் சீனாய் மலைமீதிலும்
      எக்காளம் மின்னலோடு தேவரீர்
      பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்

    Immaanuvaelae Vaarum Vaarumae Lyrics in English

    immaanuvaelar vanthaar

    1. immaanuvaelae vaarum vaarumae
      mey isravaelaich sirai meelumae
      maa theyva mainthan thontum varaikkum
      un janam paaril aengith thavikkum

    makil! makil! seeyonin sapaiyae
    immaanuvaelin naal sameepamae

    1. eesaayin vaerth thulirae vaarumae
      pisaasin valla koshdam neekkumae
      paathaala aalam nintu iratchiyum
      vem saavinmael paer vetti aliyum
    2. arunnothayamae aa vaarumae
      vanthengal nenjai aattith thaettumae
      maanthaara raavin maekam neekkidum
      irunnda saavin nilal otdidum
    3. thaaveethin thiravukolae vaarumae
      vinn vaasalaith thiranthu thaarumae
      odukkamaam nalvali kaaththidum
      visaalamaam thurp paathai thoorththidum
    4. maa valla aanndavaa vantharulum
      murkaalam seenaay malaimeethilum
      ekkaalam minnalodu thaevareer
      piramaanam isravaelukkaliththeer
  • Imayamum kumariyum இமயமும் குமரியும்

    இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
    எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
    நெஞ்சார் அன்பின் தியாக சேவையே
    நெறியாம் சிலுவையின் வீரம்
    தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
    சாந்தியின் வாழ்வருள் நாதா!
    சமாதானம் யேசுவின் வீடே
    சகலர்க்கும் சாந்தி எம் நாடே,
    சாந்தி இதற்கிலை ஈடே,
    இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
    எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
    ஜெயமே, ஜெயமே, ஜெயமே!
    ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!

    உழவெழத் தொழிலெழ உற்ப்பத்தி மிகவே
    ஓங்கிய வர்த்தகம் தாங்கப்
    பொய்யா மொழி மாகாணத்தலைவர்
    புருஷோத்தம மந்திரிகள்
    நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை
    நட்புடன் கருணை இலங்கப்
    பணிவிடை நேர்மை அருளே,
    பரனர செனப்பகர் தெருளே,
    பாரதம் போற்ற மெய்ப் பொருளே!
    இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
    எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
    ஜெயமே, ஜெயமே, ஜெயமே!
    ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!


    Imayamum kumariyum Lyrics in English

    imayamum kumariyum ellaikkadalutai
    enthaay naattinaik kaaththaal.
    nenjaar anpin thiyaaka sevaiyae
    neriyaam siluvaiyin veeram
    thangidath thaesaththalaivarmael aasi
    saanthiyin vaalvarul naathaa!
    samaathaanam yaesuvin veetae
    sakalarkkum saanthi em naatae,
    saanthi itharkilai eetae,
    imayamum kumariyum ellaikkadalutai
    enthaay naattinaik kaaththaal.
    jeyamae, jeyamae, jeyamae!
    jeya, jeya, jeya, jeyamae!

    ulavelath tholilela urppaththi mikavae
    ongiya varththakam thaangap
    poyyaa moli maakaanaththalaivar
    purushoththama manthirikal
    narkiris thiraivanin siluvaich sevai
    natpudan karunnai ilangap
    pannivitai naermai arulae,
    paranara senappakar therulae,
    paaratham potta meyp porulae!
    imayamum kumariyum ellaikkadalutai
    enthaay naattinaik kaaththaal.
    jeyamae, jeyamae, jeyamae!
    jeya, jeya, jeya, jeyamae!

  • Imaya Muthal Kumari Varai இமய முதல் குமரி வரை

    1. இமய முதல் குமரி வரையுள்ள
      இதயங்கள் விடுதலைக் காணவே
      இயேசென்னும் தீபம் ஏற்றுவோம்
      இளைஞரே எழுந்து செல்வோம்
      செல்லுவோம் சேனை வீரராய்
      வெல்லுவோம் தேவ அருளால்
      ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
    2. ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்
      அறியாமை இருட்டினில் வாழ்கிறார்
      இயேசுவின் விடுதலைக் கூறுவோம்
      பாரெங்கும் புகுந்து செல்லுவோம்
      சுடராய் வாழந்திடுவோம்
      சபையை பெருக்கிடுவோம்
      ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
    3. என் பெயரை சொல்லி அழைத்த
      உன்னத தேவன் நீரன்றோ
      உன்னோடே கூட வருவேன் என்றீர்
      ஆவியால் நிறைத்திடுவீர்
      வரங்கள் உவந்தளிப்பீர்
      கனியால் அலங்கரிப்பீர்
      ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2

    Imaya Muthal Kumari Varai Lyrics in English
    imaya muthal kumari varai

    1. imaya muthal kumari varaiyulla
      ithayangal viduthalaik kaanavae
      iyaesennum theepam aettuvom
      ilainjarae elunthu selvom
      selluvom senai veeraraay
      velluvom thaeva arulaal
      osannaa! osannaa! osannaa! – 2
    2. aanndukalaay janangalellaam
      ariyaamai iruttinil vaalkiraar
      Yesuvin viduthalaik kooruvom
      paarengum pukunthu selluvom
      sudaraay vaalanthiduvom
      sapaiyai perukkiduvom
      osannaa! osannaa! osannaa! – 2
    3. en peyarai solli alaiththa
      unnatha thaevan neeranto
      unnotae kooda varuvaen enteer
      aaviyaal niraiththiduveer
      varangal uvanthalippeer
      kaniyaal alangarippeer
      osannaa! osannaa! osannaa! – 2
  • Im Mattum Kaivida Devan இம்மட்டும் கைவிடா தேவன்

    இம்மட்டும் கைவிடா தேவன்
    இனியும் கைவிட மாட்டார்
    தாயின் வயிற்றில் தாங்கினார்
    ஆயுள் முழுதும் தாங்குவார்
    தாங்குவார் தப்புவிப்பார்
    ஏந்துவார் என் தெய்வம்

    ஆயன் இயேசு ஆடு நான்
    ஆதலால் பயமில்லை
    சாத்தான் பறிக்க முடியாது
    சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்

    இயேசு கிறிஸ்து வசனத்தால்
    எல்லா நாளும் சந்தோஷம்
    வியாதி வறுமை வேதனை
    எது தான் பிரிக்க முடியுமோ

    கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
    கலக்கம் எனக்கு இனியில்லை
    துதித்து துதித்து நாளெல்லாம்
    துரத்திடுவேன் சத்துருவை


    Im Mattum Kaivida Devan Lyrics in English

    immattum kaividaa thaevan
    iniyum kaivida maattar
    thaayin vayittil thaanginaar
    aayul muluthum thaanguvaar
    thaanguvaar thappuvippaar
    aenthuvaar en theyvam

    aayan Yesu aadu naan
    aathalaal payamillai
    saaththaan parikka mutiyaathu
    sapikkinten Yesu naamaththil

    Yesu kiristhu vasanaththaal
    ellaa naalum santhosham
    viyaathi varumai vaethanai
    ethu thaan pirikka mutiyumo

    karththar enakkaay yuththam seyvaar
    kalakkam enakku iniyillai
    thuthiththu thuthiththu naalellaam
    thuraththiduvaen saththuruvai

  • Illa Illa Ummai Pola இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல உம்மைப்

    இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
    உம்மைப் போல யாருமில்லப்பா
    சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர்
    உம்மை போல யாருமில்லைப்பா – இயேசப்பா

    உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன்
    உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன்
    நீங்க இல்லாம நானும் இல்லப்பா
    இயேசப்பா இயேசப்பா
    இல்ல -5 நீங்க இல்லாம நானும் இல்லப்பா

    என் பெலத்தினால் ஒன்னும் முடியல
    என் சுயத்தினால் வாழ முடியால
    உம்மை விட்டு வாழ முடியல இயேசப்பா
    உம்மை விட்டு வாழ முடியல
    இல்ல -5 உம்மை விட்டு வாழ முடியல

    இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு இருந்தேனே
    சோர்ந்து போனேனே கலக்கத்தால் சூழ்ந்தேனே
    பயமே இல்லாம வாழ செஞ்சீங்க இயேசப்பா
    பயமே இல்லாம வாழ செஞ்சீங்க
    இல்ல – 5 இப்போ எனக்கு பயமே இல்லப்பா


    Illa Illa Ummai Pola Lyrics in English

    illa illa illa illa illa
    ummaip pola yaarumillappaa
    sarva vallavar avar entum nallavar
    ummai pola yaarumillaippaa – iyaesappaa

    um kirupaiyaal naan entum vaalkiraen
    um irakkaththaal naan nilai nirkiraen
    neenga illaama naanum illappaa
    iyaesappaa iyaesappaa
    illa -5 neenga illaama naanum illappaa

    en pelaththinaal onnum mutiyala
    en suyaththinaal vaala mutiyaala
    ummai vittu vaala mutiyala iyaesappaa
    ummai vittu vaala mutiyala
    illa -5 ummai vittu vaala mutiyala

    irulil vaalnthaenae payaththodu irunthaenae
    sornthu ponaenae kalakkaththaal soolnthaenae
    payamae illaama vaala senjaீnga iyaesappaa
    payamae illaama vaala senjaீnga
    illa – 5 ippo enakku payamae illappaa

  • Ilamaiyai Iyaesuvukkup இளமையை இயேசுவுக்கு

    இளமையை இயேசுவுக்குப் பரிசாக்குவோம்! – நம்
    வாழ்நாளை அவருக்கு பலியாக்குவோம்!
    ஜீவ பலியாக்குவோம்!

    1. முடமாக்கும் பாவத்துக்கு முடிவுகட்டுவோம்
      முழு சிந்தையையும் இயேசுவுக்கு உரிமையாக்குவோம்!
      உடலாலும் உள்ளத்தாலும் ஆராதிப்போம்! இனி..
      ஒருபோதும் உலகுக்கு அடிமைப்படோம்!
    2. தள்ளாடும் முழங்காலை ஊன்றக்கட்டுவோம்
      தவறான பற்றுகளை வெட்டி எறிவோம்
      அறிவோடும் உணர்வோடும் பின் பற்றுவோம்! இனி..
      உளமாற இயேசுவில் நாம் அன்பு கூருவோம்
    3. பலிபீடத்தனல் கொண்டு சிந்தையைத் தொடும்!
      துதிபாடும் அனல்கொண்ட உள்ளம்தாரும்!
      விழிவைத்து எதிர்நோக்கும் என்னைப்பாரும்! இனி..
      பதிவாக உம்மில் நான் நிலைப்பேன் என்றும்!

    Ilamaiyai Iyaesuvukkup Lyrics in English

    ilamaiyai Yesuvukkup parisaakkuvom! – nam
    vaalnaalai avarukku paliyaakkuvom!
    jeeva paliyaakkuvom!

    1. mudamaakkum paavaththukku mutivukattuvom
      mulu sinthaiyaiyum Yesuvukku urimaiyaakkuvom!
      udalaalum ullaththaalum aaraathippom! ini..
      orupothum ulakukku atimaippatoom!
    2. thallaadum mulangaalai oontakkattuvom
      thavaraana pattukalai vetti erivom
      arivodum unarvodum pin pattuvom! ini..
      ulamaara Yesuvil naam anpu kooruvom
    3. palipeedaththanal konndu sinthaiyaith thodum!
      thuthipaadum analkonnda ullamthaarum!
      vilivaiththu ethirNnokkum ennaippaarum! ini..
      pathivaaka ummil naan nilaippaen entum!
  • Ilakkai Noekki Thotarkiraen இலக்கை நோக்கி தொடர்கிறேன்

    இலக்கை நோக்கி தொடர்கிறேன் இலட்சியம் என் இயேசுவே
    இந்து தேச என் ஜனம் இரட்சிப்பின்றி மாளுதே

    1. அவரன்பை ருசித்த உனக்கு வந்ததே ஒரு அழைப்பு
      ஆழி போன்ற உன் தேசம் இருளில் பெருங்கூட்டம்
      ஆதி அன்பை இழந்ததென்ன? ஆத்ம பாரம் குறைந்ததென்ன?
      ஆசையாய் நாம் தொடருவோம்! ஜீவ கிரீடம் சூட்டுவார்
    2. தூய உள்ளம் உன்னில் இன்று துங்கவன் விரும்புகின்றார்
      தேவ கரங்களை நோக்கி உன் கைகளை நீட்டு
      பாவ சேற்றில் விழுந்ததென்ன? பரம அழைப்பை மறந்ததென்ன?
      பரிசுத்தம் நாம் தேடுவோம்! பரிசுப் பொருளை நாடுவோம்
    3. உன் இயேசு காட்டிய நேசம் உடலில் இரத்த வெள்ளம்
      உன்னைச் சொந்தமாக்கிடவே – நிந்தை சுமந்தாரே
      அன்பின் அலைகள் எங்கே உன்னில்? அழியும் நினிவே உந்தன் முன்னே
      அன்பிலே நாம் வளருவோம்! ஆழத்தில் வலை வீசுவோம்
    4. தேவ கோபம் வேகம் வருதே தேசத்தில் மோசம் வருமே
      தினம் தேடு அவர்பாதம் மன்றாடு இரவெல்லாம்
      வேண்டல் உன்னில் குறைந்ததென்ன?
      வேலைப்பளுவென்றுரைப்பதென்ன?
      ஒலிவ மலையில் ஏறுவோம்! ஒருமித்தே மன்றாடுவோம்
    5. இந்தப் பூவின் வேஷம் மாறும் பொன் பொருள் நிலையன்று
      இன்ப இயேசு பணி ஒன்றே நிலைத்தோங்குமே என்றும்
      என்ன உந்தன் பங்கு இன்று? இறைவன் பணிக்கு கைகள் நீட்டு
      என்னையே நான் தருகிறேன் , உந்தன் பாதம் படைக்கிறேன்

    Ilakkai Noekki Thotarkiraen Lyrics in English

    ilakkai Nnokki thodarkiraen ilatchiyam en Yesuvae
    inthu thaesa en janam iratchippinti maaluthae

    1. avaranpai rusiththa unakku vanthathae oru alaippu
      aali ponta un thaesam irulil perungaூttam
      aathi anpai ilanthathenna? aathma paaram kurainthathenna?
      aasaiyaay naam thodaruvom! jeeva kireedam soottuvaar
    2. thooya ullam unnil intu thungavan virumpukintar
      thaeva karangalai Nnokki un kaikalai neettu
      paava settil vilunthathenna? parama alaippai maranthathenna?
      parisuththam naam thaeduvom! parisup porulai naaduvom
    3. un Yesu kaattiya naesam udalil iraththa vellam
      unnaich sonthamaakkidavae – ninthai sumanthaarae
      anpin alaikal engae unnil? aliyum ninivae unthan munnae
      anpilae naam valaruvom! aalaththil valai veesuvom
    4. thaeva kopam vaekam varuthae thaesaththil mosam varumae
      thinam thaedu avarpaatham mantadu iravellaam
      vaenndal unnil kurainthathenna?
      vaelaippaluventuraippathenna?
      oliva malaiyil aeruvom! orumiththae mantaduvom
    5. inthap poovin vaesham maarum pon porul nilaiyantu
      inpa Yesu panni onte nilaiththongumae entum
      enna unthan pangu intu? iraivan pannikku kaikal neettu
      ennaiyae naan tharukiraen , unthan paatham pataikkiraen
  • Ilaignar Iyakkamaayp இளைஞர் இயக்கமாய்

    1. இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம்
      இந்தியா எங்கும் சென்றிடுவோம்
      அழியும் ஜனங்களை மீட்டிடுவோம்
      ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம்

    இராஜாதி ராஜன் வருகின்றார்
    பாதையை ஆயத்தமாக்கிடுவோம்
    தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார்

    1. பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம்
      விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம்
      வேதத்தின் வழியில் நடந்திடுவோம்
      பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம்
    2. சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம்
      தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம்
      சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம்
      பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம்

    Ilaignar Iyakkamaayp Lyrics in English

    ilainjanae elunthiru!

    1. ilainjar iyakkamaayp purappaduvom
      inthiyaa engum sentiduvom
      aliyum janangalai meetdiduvom
      aanndavar varukaiyai viraivaakkuvom

    iraajaathi raajan varukintar
    paathaiyai aayaththamaakkiduvom
    thootharkal soola parisuththarotae thaevan varukintar

    1. parisuththa vaalvaith thariththiduvom
      visuvaasak kaedakam pitiththiduvom
      vaethaththin valiyil nadanthiduvom
      paavaththai muttilum veruththiduvom
    2. suviseshath theepaththai aettiduvom
      thaevach siththam athai niraivaettuvom
      siluvaikku mun thaesam panniyach seyvom
      paralokam makilnthida vaalnthiduvom
  • Ilaesaana Kaariyam இலேசான காரியம்

    இலேசான காரியம் – எதுவும்
    இலேசான காரியம்
    பெலமுள்ளவன் – பெலனற்றவன்
    யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
    இலேசான காரியம்
    உமக்கது இலேசான காரியம்.

    மண்ணை பிசைந்து மனிதனை படைப்பது
    இலேசான காரியம்
    மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவதும்
    இலேசான காரியம்

    கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது
    இலேசான காரியம்
    ஆழ்கடல் மீன் அதில் வரிப்பணம் பெறுவதும்
    இலேசான காரியம்

    கற்பாறை போலே கடல்மேல் நடப்பது
    இலேசான காரியம்
    கற்சாடி நீரை கனிரசமாக்குதல்
    இலேசான காரியம் – இயேசுவுக்கு


    Ilaesaana Kaariyam – Ethuvum Lyrics in English

    ilaesaana kaariyam – ethuvum
    ilaesaana kaariyam
    pelamullavan – pelanattavan
    yaaraayirunthaalum uthavikal seyvathu
    ilaesaana kaariyam
    umakkathu ilaesaana kaariyam.

    mannnnai pisainthu manithanai pataippathu
    ilaesaana kaariyam
    mannnnaana manitharkku mannaavai tharuvathum
    ilaesaana kaariyam

    koolaangallaalae koliyaath veelnthathu
    ilaesaana kaariyam
    aalkadal meen athil varippanam peruvathum
    ilaesaana kaariyam

    karpaarai polae kadalmael nadappathu
    ilaesaana kaariyam
    karsaati neerai kanirasamaakkuthal
    ilaesaana kaariyam – Yesuvukku