Blog

  • En Deivam Yesu என் தெய்வம் இயேசு

    என் தெய்வம் இயேசு
    என்னோடு பேசுவார்
    எனக்கு சந்தோஷமே
    அல்லேலூயா

    கனவின் வழியாய் பேசுவார்
    கலக்கம் நீங்கப் பேசுவார்
    காட்சி தந்து பேசுவார்
    சாட்சியாக நிறுத்துவார்

    வேதம் வழியாய் பேசுவார்
    விளக்கம் அனைத்தும் போதிப்பார்
    பாதம் அமர்ந்து தியானிப்பேன்
    பரலோகத்தைத் தரிசிப்பேன்


    En Deivam Yesu Lyrics in English
    en theyvam Yesu
    ennodu paesuvaar
    enakku santhoshamae
    allaelooyaa

    kanavin valiyaay paesuvaar
    kalakkam neengap paesuvaar
    kaatchi thanthu paesuvaar
    saatchiyaaka niruththuvaar

    vaetham valiyaay paesuvaar
    vilakkam anaiththum pothippaar
    paatham amarnthu thiyaanippaen
    paralokaththaith tharisippaen

  • En athumave kartharai என் ஆத்துமாவே கர்த்தரை

    என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
    முழு உள்ளத்தோடே
    அவர் நாமத்தையே ஸ்தோத்திரி
    பரிசுத்தர் நீரே

    நீர் செய்த சகல உபகாரங்களையும்
    ஒவ்வொன்றாய் எண்ணி துதித்திடுவேன்
    என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
    உம்மையே நம்பி துதித்திடுவேன்

    நீர் அன்பில் சிறந்தவர் தயவில் பெரியவர்
    இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவரே – உம்
    கிருபையினால் என்னை
    உயர்த்தின தேவனே – வாழ்நாளெல்லாம்
    உம்மை தொழுதிடுவேன்

    பெலனற்ற நேரம் நீர் பெலனாய் வருவீர்
    நம்பினதெல்லாம் என்னை கைவிட்டாலும்
    உம் முகத்தை மட்டும்
    நோக்கி பார்த்திடுவேனே
    சோர்ந்திடாமல் உம்மை உயர்த்திடுவேன்


    En athumave kartharai Lyrics in English
    en aaththumaavae karththaraith thuthi
    mulu ullaththotae
    avar naamaththaiyae sthoththiri
    parisuththar neerae

    neer seytha sakala upakaarangalaiyum
    ovvontay ennnni thuthiththiduvaen
    enna nadanthaalum enna naernthaalum
    ummaiyae nampi thuthiththiduvaen

    neer anpil siranthavar thayavil periyavar
    irakkaththil aisuvariyam ullavarae – um
    kirupaiyinaal ennai
    uyarththina thaevanae – vaalnaalellaam
    ummai tholuthiduvaen

    pelanatta naeram neer pelanaay varuveer
    nampinathellaam ennai kaivittalum
    um mukaththai mattum
    Nnokki paarththiduvaenae
    sornthidaamal ummai uyarththiduvaen

  • En Arul Naadha Yesuve என் அருள் நாதா இயேசுவே

    1. என் அருள் நாதா இயேசுவே
      சிலுவைக் காட்சி பார்க்கையில்
      பூலோக மேன்மை நஷ்டமே
      என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்
    2. என் மீட்பர் சிலுவை அல்லால்
      வேறெதை நான் பாராட்டுவேன்
      சிற்றின்பம் யாவும் அதினால்
      தகாததென்று தள்ளுவேன்
    3. கை , தலை , காலிலும் இதோ
      பேரன்பும் துன்பும் கலந்தே
      பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ
      முள் முடியும் ஒப்பற்றதே
    4. சராசரங்கள் அனைத்தும்
      அவ்வன்புக்கு எம்மாத்திரம்
      என் ஜீவன் சுகம் செல்வமும்
      என் நேசருக்குப் பாத்தியம்
    5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
      சம்பாதித்தீந்த இயேசுவே
      உமக்கு என்றும் தாசரால்
      மா ஸ்தோத்திரம் உண்டாகவே

    En Arul Naadha Yesuve Lyrics in English

    1. en arul naathaa Yesuvae

    siluvaik kaatchi paarkkaiyil

    pooloka maenmai nashdamae

    entunarnthaen en ullaththil

    1. en meetpar siluvai allaal

    vaeraெthai naan paaraattuvaen

    sittinpam yaavum athinaal

    thakaathathentu thalluvaen

    1. kai , thalai , kaalilum itho

    paeranpum thunpum kalanthae

    paaynthodum kaatchipol unntoo

    mul mutiyum oppattathae

    1. saraasarangal anaiththum

    avvanpukku emmaaththiram

    en jeevan sukam selvamum

    en naesarukkup paaththiyam

    1. maantharkku meetpaik kasthiyaal

    sampaathiththeentha Yesuvae

    umakku entum thaasaraal

    maa sthoththiram unndaakavae

  • En anbare en inbame என் அன்பரே என் இன்பமே

    என் அன்பரே என் இன்பமே
    என் மதுரமே ஸ்தோத்திரம்- என்
    நேசத் தந்தையே என் அன்பின் இரட்சகா
    என் இன்ப ராஜாவே ஸ்தோத்திரம்

    ஆயிரம் பாடல்களை பாடியே ஸ்தோத்திரம்
    ஆனந்த தைலத்தால் நிரம்பியே ஸ்தோத்திரம்
    அற்புதங்கள் தியானிப்பேன்
    அதிசயங்கள் தியானிப்பேன்
    அன்பரே இன்பமே ஸ்தோத்திரம்

    ஆவியில் ஆராதனை செய்துமே ஸ்தோத்திரம்
    அனுதினமும் அன்பினால்
    நிறைந்துமே ஸ்தோத்திரம்
    அஞ்சிடாமல் வாழ்ந்திட சத்துருவை ஜெயித்திட
    அடைக்கலமே மறைவிடமே ஸ்தோத்திரம்

    காலடிகள் வழுவாமல் காத்தீரே ஸ்தோத்திரம்
    ராக்காலத்தில் ஆலோசனைத் தந்தீரே ஸ்தோத்திரம்
    செட்டைகளின் நிழலிலே
    என்னை மறைத்துக் கொண்டீரே
    உன்னதரே சுதந்திரமே ஸ்தோத்திரம்


    En anbare en inbame Lyrics in English
    en anparae en inpamae
    en mathuramae sthoththiram- en
    naesath thanthaiyae en anpin iratchakaa
    en inpa raajaavae sthoththiram

    aayiram paadalkalai paatiyae sthoththiram
    aanantha thailaththaal nirampiyae sthoththiram
    arputhangal thiyaanippaen
    athisayangal thiyaanippaen
    anparae inpamae sthoththiram

    aaviyil aaraathanai seythumae sthoththiram
    anuthinamum anpinaal
    nirainthumae sthoththiram
    anjidaamal vaalnthida saththuruvai jeyiththida
    ataikkalamae maraividamae sthoththiram

    kaalatikal valuvaamal kaaththeerae sthoththiram
    raakkaalaththil aalosanaith thantheerae sthoththiram
    settaைkalin nilalilae
    ennai maraiththuk konnteerae
    unnatharae suthanthiramae sthoththiram

  • En Anbae En Anbae என் அன்பே என் அன்பே

    என் அன்பே என் அன்பே
    என் அன்பே என் அன்பே x 2

    உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
    நான் உம்மைப் பார்க்கணும்
    உந்தன் முகத்தைப் பார்த்து
    நான் உம்மை ரசிக்கணும்

    என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

    Verse 1

    பாவியைப் போல தூரத்தில் நின்று
    பார்த்திட விரும்பவில்லை
    பிள்ளையைப்போல உம்மிடம் வந்து
    பேசிட விரும்புகிறேன் x 2

    என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

    Verse 2

    மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
    நேசம் பகிர்ந்திடுவேன்
    முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
    பரவசமடைந்திடுவேன் x 2

    என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

    Verse 3

    வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
    அன்பை எண்ணுகிறேன்
    துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த
    அன்பைப் பாடுகிறேன் x 2

    என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

    Verse 4

    நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு
    முற்றும் விலகிடுவேன்
    அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
    ரகசியம் பேசிடுவேன் x 2

    என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

    உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
    நான் உம்மைப் பார்க்கணும்
    உந்தன் முகத்தைப் பார்த்து
    நான் உம்மை ரசிக்கணும்

    என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

    இயேசுவே இயேசுவே
    இயேசுவே இயேசுவே x 2

    உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
    நான் உம்மைப் பார்க்கணும்
    உந்தன் முகத்தைப் பார்த்து
    நான் உம்மை ரசிக்கணும்

    என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2


    En Anbae En Anbae Lyrics in English
    en anpae en anpae

    en anpae en anpae x 2

    unthan makaa parisuththa sthalaththil

    naan ummaip paarkkanum

    unthan mukaththaip paarththu

    naan ummai rasikkanum

    en anpae en anpae en anpae en anpae x 2

    Verse 1

    paaviyaip pola thooraththil nintu

    paarththida virumpavillai

    pillaiyaippola ummidam vanthu

    paesida virumpukiraen x 2

    en anpae en anpae en anpae en anpae x 2

    Verse 2

    makanaay vanthu matiyil thavalnthu

    naesam pakirnthiduvaen

    muththangal thanthu paasaththai kaatti

    paravasamatainthiduvaen x 2

    en anpae en anpae en anpae en anpae x 2

    Verse 3

    vaarinaal atipattu mulmuti sumantha

    anpai ennnukiraen

    thurokiyaay iruntha ennaiyum naesiththa

    anpaip paadukiraen x 2

    en anpae en anpae en anpae en anpae x 2

    Verse 4

    neer veruththidum ellaa kaariyam vittu

    muttum vilakiduvaen

    araikkul vanthu arukil ummodu

    rakasiyam paesiduvaen x 2

    en anpae en anpae en anpae en anpae x 2

    unthan makaa parisuththa sthalaththil

    naan ummaip paarkkanum

    unthan mukaththaip paarththu

    naan ummai rasikkanum

    en anpae en anpae en anpae en anpae x 2

    Yesuvae Yesuvae

    Yesuvae Yesuvae x 2

    unthan makaa parisuththa sthalaththil

    naan ummaip paarkkanum

    unthan mukaththaip paarththu

    naan ummai rasikkanum

    en anpae en anpae en anpae en anpae x 2

  • En Aayan Yesu En Ullam Thedi என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி

    என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது

    என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது – 2

    என் தவம் நான் செய்தேன் என் நன்றி நான் சொல்வேன் – 2

    பசியால் வாடும் ஏழையின் நிலையில்

    பாவி நான் நின்றிருந்தேன்

    பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி

    அருளமுதை ஈந்தார் – 2

    ஆயிரம் குறைகள் என்னிடம் கண்டும்

    அணைத்திடவே வந்தார்

    ஆண்டவர் இயேசு அன்பினால் என்னை

    மாற்றிடவே வந்தார் – 2

    நண்பனுக்காய் தரும் உயிர்த் தியாகம் மிஞ்சும்

    நட்பெதுவும் உளதோ

    என் அன்பர் இயேசு சிலுவையில் மரித்து

    எனைக் காத்தார் என் சொல்லவோ – 2


    En Aayan Yesu En Ullam Thedi Lyrics in English
    en aayan Yesu ennullam thaeti varukinta naeramithu

    en aanmaa avarai aettip potti makilum vaelaiyithu – 2

    en thavam naan seythaen en nanti naan solvaen – 2

    pasiyaal vaadum aelaiyin nilaiyil

    paavi naan nintirunthaen

    paraman Yesu en paavaththai akatti

    arulamuthai eenthaar – 2

    aayiram kuraikal ennidam kanndum

    annaiththidavae vanthaar

    aanndavar Yesu anpinaal ennai

    maattidavae vanthaar – 2

    nannpanukkaay tharum uyirth thiyaakam minjum

    natpethuvum ulatho

    en anpar Yesu siluvaiyil mariththu

    enaik kaaththaar en sollavo – 2

  • En Aavi Aanmaa Thaekamum என் ஆவி ஆன்மா தேகமும்

    1. என் ஆவி ஆன்மா தேகமும்
      இதோ படைக்கிறேன்;
      என்றும் உம் சொந்தமாகவும்
      பிரதிஷ்டை செய்கிறேன்.
    2. ஆ, இயேசு, வல்ல ரட்சகா
      உம் நாமம் நம்புவேன்;
      ரட்சிப்பீர், மா தயாபரா,
      உம் வாக்கை வேண்டுவேன்.
    3. எப்பாவம் நீங்க, உறுப்பு
      தந்தேன் சமூலமாய்;
      போராட்டம் வெற்றி சிறப்பு
      படைக்கலங்களாய்.
    4. நான் உம்மில் ஜீவித்தல் மகா
      மேலான பாக்கியம்;
      தெய்வ சுதா, என் ரட்சகா,
      என் ஜீவனாயிரும்.
    5. என் நாதா, திரு ரத்தத்தால்
      சுத்தாங்கம் சொந்தமே;
      ஆனேன்! உம் தூய ஆவியால்
      பலி நான் உமக்கே.

    En Aavi Aanmaa Thaekamum Lyrics in English

    1. en aavi aanmaa thaekamum
      itho pataikkiraen;
      entum um sonthamaakavum
      pirathishtai seykiraen.
    2. aa, Yesu, valla ratchakaa
      um naamam nampuvaen;
      ratchippeer, maa thayaaparaa,
      um vaakkai vaennduvaen.
    3. eppaavam neenga, uruppu
      thanthaen samoolamaay;
      poraattam vetti sirappu
      pataikkalangalaay.
    4. naan ummil jeeviththal makaa
      maelaana paakkiyam;
      theyva suthaa, en ratchakaa,
      en jeevanaayirum.
    5. en naathaa, thiru raththaththaal
      suththaangam sonthamae;
      aanaen! um thooya aaviyaal
      pali naan umakkae.
  • En Aathuma Ummai Nokki என் ஆத்துமா உம்மை நோக்கி

    என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
    நான் நம்புவது உம்மாலே ஆகும்
    கன்மலையே அடைக்கலமே
    என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)

    அசைவுற விடமாட்டீர் – 2
    (என்னை)

    1. எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
      என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
    2. கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
      சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே
    3. என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
      நான் நம்புவது உம்மாலே ஆகும்

    En Aathuma Ummai Nokki Lyrics in English
    en aaththumaa ummai Nnokki amarnthirukkum
    naan nampuvathu ummaalae aakum
    kanmalaiyae ataikkalamae
    en pelanae ennai meettavarae (kaappavarae)

    asaivura vidamaattir – 2
    (ennai)

    1. ekkaalaththilum ummai nampiduvaen
      en ithayaththai ummidam oottiduvaen
    2. kirupaiyum makimaiyum nirainthavarae
      samayaththil thakka palan alippavarae
    3. en aaththumaa ummai nampi ilaippaaridum
      naan nampuvathu ummaalae aakum
  • En Aaththumaavae En Ullamae என் ஆத்துமாவே என் உள்ளமே

    என் ஆத்துமாவே என் உள்ளமே
    கர்த்தரை ஸ்தோத்தரி
    என் ஆத்துமாவே என் உள்ளமே
    அவர் நாமத்தை ஸ்தோத்தரி

    1. அவர் செய்த நன்மை உதவிகளை
      என்றென்றும் மறவாதே -2
      அவர் பரிசுத்தர் மகத்துவர்
      ஆத்துமாவின் நேசரே -2
    2. வியாதியை எல்லாம் குணமாக்கினார்
      கர்த்தரை ஸ்தோத்தரி -2
      அவரை போற்றுவோம் புகழுவோம்
      என்றும் நல்லவர் -2

    En Aaththumaavae En Ullamae Lyrics in English
    en aaththumaavae en ullamae
    karththarai sthoththari
    en aaththumaavae en ullamae
    avar naamaththai sthoththari

    1. avar seytha nanmai uthavikalai
      ententum maravaathae -2
      avar parisuththar makaththuvar
      aaththumaavin naesarae -2
    2. viyaathiyai ellaam kunamaakkinaar
      karththarai sthoththari -2
      avarai pottuvom pukaluvom
      entum nallavar -2
  • En Aathmavum Sariramum En என் ஆத்துமாவும் சரீரமும் என்

    என் ஆத்துமாவும் சரீரமும்
    என் ஆண்டவர்க்கே சொந்தம்
    இனி வாழ்வது நானல்ல
    என்னில் இயேசு வாழ்கின்றார்

    1. இயேசு தேவா அர்ப்பணித்தேன்
      என்னையே நான் அர்ப்பணித்தேன்
      ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
      என் இதயம் வாசம் செய்யும்
    2. அப்பா உம் திருசித்தம் – என்
      அன்றாட உணவையா
      நான் தப்பாமல் உம் பாதம்
      தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்
    3. கர்த்தாவே உம் கரத்தில்
      நான் களிமண் போலானேன்
      உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
      என்னை எந்நாளும் நடத்திடும்

    En Aathmavum Sariramum En Lyrics in English
    en aaththumaavum sareeramum
    en aanndavarkkae sontham
    ini vaalvathu naanalla
    ennil Yesu vaalkintar

    1. Yesu thaevaa arppanniththaen
      ennaiyae naan arppanniththaen
      aettuk kollum aenthikkollum
      en ithayam vaasam seyyum
    2. appaa um thirusiththam – en
      antada unavaiyaa
      naan thappaamal um paatham
      thinam eppothum amarnthiruppaen
    3. karththaavae um karaththil
      naan kalimann polaanaen
      unthan ishdampol vanainthidum
      ennai ennaalum nadaththidum