Blog

  • Aayiram aayiram nanmaigal ஆயிரம் ஆயிரம் நன்மைகள்

    ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
    அனுதினமும் என்னை சூழ்ந்திட
    கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
    நல்ல எபிநேசராய் என்னை
    நடத்தி வந்தீரே
    நன்றி சொல்ல வார்த்தை இல்லை

    காலை மாலை எல்லாம் வேளையிலும்
    என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
    தேவை பெருகும் போது சிக்கி
    தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
    எல்லா நெருக்கத்திலும் என்னை
    விழாமல் காக்கும் அன்பின்
    நல்ல கர்த்தரே

    மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
    மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
    வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
    தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
    எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
    அன்பின் நல்ல கர்த்தரே


    Aayiram aayiram nanmaigal Lyrics in English

    aayiram aayiram nanmaikal
    anuthinamum ennai soolnthida
    kirupaiyum irakkamum anpum konnteerae
    nalla epinaesaraay ennai
    nadaththi vantheerae
    nanti solla vaarththai illai

    kaalai maalai ellaam vaelaiyilum
    ennai nadaththum um karangal naan kanntaen
    thaevai perukum pothu sikki
    thaviththidaathu uthavum um karangal naan kanntaen
    ellaa nerukkaththilum ennai
    vilaamal kaakkum anpin
    nalla karththarae

    marana pallaththaakkil naan nadantha vaelai
    mitkum um karangal naan kanntaen
    vaati ninta vaelai matinthidaathu ennai
    thaangum um karangal naan kanntaen
    enthan maaraavin vaalvai mathuramaay maattum
    anpin nalla karththarae

  • Aayathamaa Aayathamaa ஆயத்தமா ஆயத்தமா

    ஆயத்தமா ஆயத்தமா
    இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா
    அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா

    1. மணவாட்டி போல நீ காத்திருந்தால்
      அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால்
      மேகங்கள் மீதினில் வந்திடுவார் – உன்னை
      மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார்
      புவியை வெறுத்திட ஆயத்தமா
      அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா
    2. நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் – உன்
      பாவங்கள் இன்று தலை தூக்கினால்
      பரலோக கனவுகள் பாழாகுமே – உந்தன்
      பாடுகள் அனைத்துமே வீணாகுமே
      நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா – அட
      இன்று போல் நாளையும் ஆயத்தமா

    Aayathamaa Aayathamaa Lyrics in English

    aayaththamaa aayaththamaa
    iranndaam varukaikku aayaththamaa
    avar eppothum varalaam aayaththamaa

    1. manavaatti pola nee kaaththirunthaal
      avar naamaththai thinamum pottirunthaal
      maekangal meethinil vanthiduvaar – unnai
      motchaththukkalaiththu sentiduvaar
      puviyai veruththida aayaththamaa
      anthap paranai pattikkolla aayaththamaa
    2. naettu varaikkum nee nanmai seythum – un
      paavangal intu thalai thookkinaal
      paraloka kanavukal paalaakumae – unthan
      paadukal anaiththumae veennaakumae
      naettaைp pol intum nee aayaththamaa – ada
      intu pol naalaiyum aayaththamaa
  • Aaviyodum unmaiyodum ஆவியோடும் உண்மையோடும்

    ஆவியோடும் உண்மையோடும்
    ஆண்டவரை தொழுதிடுவோம்
    பரிசுத்த அலங்காரத்துடனே நாமும்
    பரிசுத்தரை தொழுவோமே

    நடுக்கத்தோடும் பயபக்தியோடும்
    கர்த்தரில் களிகூருவோம்
    பணிந்து குனிந்து தலைகள் தாழ்த்தி
    பாதம் பணிந்திடுவோம்
    அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
    பரிசுத்தரிடம் பாவமில்லையே- அவர்
    பரிசுத்தம் எல்லையில்லையே

    ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும்
    சந்நிதி வாருங்களே
    கர்த்தரே தேவன் மகாராஜன்
    என்று சொல்லுங்களே
    அவர் வாசலிலே துதியோடும் புகழ்சியோடும்
    வந்து கீர்த்தனம் பண்ணுங்களே
    துதிபலிகளை செலுத்துங்களே

    உதட்டிலல்ல உள்ளத்திலிருந்து
    ஸ்தோத்திர பலியிடுவோம்
    ஒன்று கூடி ஒரு மனமாய்
    பாடி புகழ்ந்திடுவோம்
    அவரே தேவன் நாம் அவர் ஆடுகளே
    அவர் சத்தியம் மேய்ந்திடுவோம்
    அதில் என்றென்றும் நிலைத்திருப்போம்


    Aaviyodum unmaiyodum Lyrics in English

    aaviyodum unnmaiyodum
    aanndavarai tholuthiduvom
    parisuththa alangaaraththudanae naamum
    parisuththarai tholuvomae

    nadukkaththodum payapakthiyodum
    karththaril kalikooruvom
    panninthu kuninthu thalaikal thaalththi
    paatham panninthiduvom
    avar parisuththar parisuththar parisuththarae
    parisuththaridam paavamillaiyae- avar
    parisuththam ellaiyillaiyae

    aarvaththodum aananthaththodum
    sannithi vaarungalae
    karththarae thaevan makaaraajan
    entu sollungalae
    avar vaasalilae thuthiyodum pukalsiyodum
    vanthu geerththanam pannnungalae
    thuthipalikalai seluththungalae

    uthattilalla ullaththilirunthu
    sthoththira paliyiduvom
    ontu kooti oru manamaay
    paati pukalnthiduvom
    avarae thaevan naam avar aadukalae
    avar saththiyam maeynthiduvom
    athil ententum nilaiththiruppom

  • Aaviyilae Analaay Iruppoemae ஆவியிலே அனலாய் இருப்போமே

    ஆவியிலே அனலாய் இருப்போமே
    கர்த்தரின் ஊழியத்தை விரைந்து செய்வோமே

    1.மாயமற்ற அன்பு செய்வோமே
    தீமையற்ற வாழ்வு வாழ்வோமே
    நன்மையை நாம் பற்றிக் கொள்வோமே – பிறரை
    கனம்பண்ண முந்திக் கொள்வோமே

    1. நம்பிக்கையில் மகிழ்ந்திருப்போம்
      துன்பத்திலும் பொறுமை கொள்வோம்
      ஜெபத்தில் ஊன்றத் தரித்திருப்போம் – நாம்
      அசதியின்றி விழித்திருப்போம்
    2. பரிசுத்தர் குறைவினில்
      உதவிட முந்திக்கொள்வோமே
      சபித்தோரை ஆசீர்வதித்தே – என்றும்
      துன்பத்திலும் மலர்ந்திருப்போம்

    Aaviyilae Analaay Iruppoemae Lyrics in English

    aaviyilae analaay iruppomae
    karththarin ooliyaththai virainthu seyvomae

    1.maayamatta anpu seyvomae
    theemaiyatta vaalvu vaalvomae
    nanmaiyai naam pattik kolvomae – pirarai
    kanampannna munthik kolvomae

    1. nampikkaiyil makilnthiruppom
      thunpaththilum porumai kolvom
      jepaththil oontath thariththiruppom – naam
      asathiyinti viliththiruppom
    2. parisuththar kuraivinil
      uthavida munthikkolvomae
      sapiththorai aaseervathiththae – entum
      thunpaththilum malarnthiruppom
  • Aaviyea arulumea swami ஆவியை அருளுமே சுவாமீ

    ஆவியை அருளுமே சுவாமீ எனக்
    காயுர் கொடுத்த வானத்தினரசே

    நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ
    நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ
    முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ
    முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ

    பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்
    பாம சந்தோஷம் நீடிய சாந்தம்
    தேவ சமாதானம் நற்குணம் தயவு
    திட விசுவாசம் சிறிதெனுமில்லை

    தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்
    திரி யவியாமலே தீண்டியே யேற்றும்
    பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்
    பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்


    Aaviyea arulumea swami Lyrics in English

    aaviyai arulumae suvaamee enak
    kaayur koduththa vaanaththinarase

    narkani thaetivarung kaalanakal lallavo
    naanoru kaniyatta paalmara mallavo
    murkani mukangaannaa vempayi rallavo
    mulunenjam vilaivatta uvarnila mallavo

    paavikku aaviyin kaniyenunj sinaekam
    paama santhosham neetiya saantham
    thaeva samaathaanam narkunam thayavu
    thida visuvaasam sirithenumillai

    theepaththuk kennnneyaich seekkiram oottum
    thiri yaviyaamalae theenntiyae yaettum
    paava asoosangal vilakkiyae maattum
    parisuththavaran thanthen kuraikalaith theerum

  • Aaviye Thooya Aaviye ஆவியே தூய ஆவியே

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே

    சுகம் தாரும் தேவ ஆவியே
    பெலன் தாரும் தூய ஆவியே

    ஜெயம் தாரும் தேவ ஆவியே
    வரம் தாரும் தூய ஆவியே

    தாயிலும் மேலாக நேசித்தீரே
    தந்தையிலும் மேலாக அரவணைத்தீர்

    யாருமே இல்லாமல் தவிக்கும்போது
    நீரே வந்து என்னை ஆதரித்தீர்


    Aaviye Thooya Aaviye Lyrics in English

    aaviyae thooya aaviyae
    aaviyae thooya aaviyae

    sukam thaarum thaeva aaviyae
    pelan thaarum thooya aaviyae

    jeyam thaarum thaeva aaviyae
    varam thaarum thooya aaviyae

    thaayilum maelaaka naesiththeerae
    thanthaiyilum maelaaka aravannaiththeer

    yaarumae illaamal thavikkumpothu
    neerae vanthu ennai aathariththeer

  • Aaviyanavare analay irangidume ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே

    ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே
    எல்லா ஆவியின் வரங்களோடு
    பலமாய் இங்கு இறங்கும் இன்று

    வானங்கள் இன்று திறக்கட்டுமே
    அபிஷேக மழையை பெய்யட்டுமே
    உன்னத ஆவியை ஊற்றிடுமே
    மறுரூபமாய் என்னை மாற்றிடுமே

    பெந்தெகொஸ்தே நாளின் அனுபவங்கள்
    அப்படியே இன்று நடக்கட்டுமே
    பலத்த காற்றின் முழுக்கம் போல் ஒரு
    வல்லமை இங்கு வீசட்டுமே

    அக்கினி மயமான நாவுகள்
    எங்கள் மேல் வந்து அமரட்டுமே
    ஆவியின் வரங்கள் யாவையுமே
    வெளிப்படுத்தணுமே செயல்படுத்தணுமே

    கண்ணீர் கவலைகள் மறையணுமே
    கட்டுகள் யாவையும் உடையணுமே
    அற்புதம் அதிசயம் நடக்கணுமே நீர்
    யார் என்று ஜனம் அறியணுமே

    பெலத்தின் ஆவியால் நிரம்பணுமே
    சாட்சியாய் எங்கும் வாழணுமே
    எங்கள் சித்தம் மறையணுமே
    தேவ சித்தம் நீறைவேறணுமே


    Aaviyanavare analay irangidume Lyrics in English

    aaviyaanavarae analaay irangidumae
    ellaa aaviyin varangalodu
    palamaay ingu irangum intu

    vaanangal intu thirakkattumae
    apishaeka malaiyai peyyattumae
    unnatha aaviyai oottidumae
    maruroopamaay ennai maattidumae

    penthekosthae naalin anupavangal
    appatiyae intu nadakkattumae
    palaththa kaattin mulukkam pol oru
    vallamai ingu veesattumae

    akkini mayamaana naavukal
    engal mael vanthu amarattumae
    aaviyin varangal yaavaiyumae
    velippaduththanumae seyalpaduththanumae

    kannnneer kavalaikal maraiyanumae
    kattukal yaavaiyum utaiyanumae
    arputham athisayam nadakkanumae neer
    yaar entu janam ariyanumae

    pelaththin aaviyaal nirampanumae
    saatchiyaay engum vaalanumae
    engal siththam maraiyanumae
    thaeva siththam neeraivaeranumae

  • Aaviyanavare Aaviyanavare Unthan Vallamaiyai ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை

    ஆவியானவரே ஆவியானவரே
    உந்தன் வல்லமையை ஊற்றுமையா
    ஆவியானவரே ஆவியானவரே
    உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா

    1. பரிசுத்தத்தோடு ஆராதித்திட
      சுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே
    2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
      எந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே
    3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
      வல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே

    ரூஹா காற்றே ரூஹா காற்றே
    சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே

    ஆவியானவரே ஆவியானவரே
    உந்தன் வல்லமையை ஊற்றுமையா
    ஆவியானவரே ஆவியானவரே
    உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 2


    Aaviyanavare Aaviyanavare Unthan Vallamaiyai Lyrics in English

    aaviyaanavarae aaviyaanavarae
    unthan vallamaiyai oottumaiyaa
    aaviyaanavarae aaviyaanavarae
    unthan apishaekaththaal nirappumaiyaa

    1. parisuththaththodu aaraathiththida
      suththikariyum thooya aaviyae – 2 – aaviyaanavarae
    2. aesaayaavin uthadukal thotta thaevaa
      enthan uthadukal intu thodumae – 2 -aaviyaanavarae
    3. akkiniyin naavukal irangattumae
      vallamaiyaay ooliyam naan seythida – 2 -aaviyaanavarae

    roohaa kaatte roohaa kaatte
    suvaasak kaatte ennai uyarppiyumae

    aaviyaanavarae aaviyaanavarae
    unthan vallamaiyai oottumaiyaa
    aaviyaanavarae aaviyaanavarae
    unthan apishaekaththaal nirappumaiyaa 2

  • Aaviyanavare aaviyanavare parisutha ஆவியானவரே ஆவியானவரே

    ஆவியானவரே ஆவியானவரே
    பரிசுத்த ஆவியானவரே
    அன்பின் ஆவியே, அன்பின் ஆவியே
    அபிஷேகம் இன்று தாருமே

    பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
    கன்மலை தடாகமாக வேண்டுமே
    கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
    வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே

    ஜனத்தின் மேல் அசைவாட வேண்டுமே
    ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
    ஒழுங்கின்மை மாற வேண்டுமே
    வெறுமை நிறைவாக வேண்டுமே

    உள்ளத்தில் ஆறுதல் வேண்டுமே
    வாழ்விலே மாறுதல் வேண்டுமே
    ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
    பாழிடங்கள் அரண்மனையாகவே

    நாவிலே அக்கினி வேண்டுமே
    உள்ளத்தி ஜீவநதி ஓடவே
    பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
    இருக்கும் இடம் அசைய வேண்டுமே

    வல்லமை வரங்கள் வேண்டுமே
    சொல்லவும் வாக்குகள் வேண்டுமே
    கள்ளங்கபடு மாற வேண்டுமே
    உள்ளத்தில் தேவ அன்பு வேண்டுமே

    அந்நிய பாஷைகள் பேசியே
    மண்ணிலே சாட்சியாய் வாழவே
    விண்ணிலே உம்மை நான் சந்திக்க
    புண்ணியரே என்னையும் நிரப்புமே


    Aaviyanavare aaviyanavare parisutha Lyrics in English

    aaviyaanavarae aaviyaanavarae
    parisuththa aaviyaanavarae
    anpin aaviyae, anpin aaviyae
    apishaekam intu thaarumae

    paaththiram nirampi valiya vaenndumae
    kanmalai thadaakamaaka vaenndumae
    karpaarai neeroottaாka vaenndumae
    varappukal yaavum thanniya vaenndumae

    janaththin mael asaivaada vaenndumae
    janaththin paavam unarththa vaenndumae
    olunginmai maara vaenndumae
    verumai niraivaaka vaenndumae

    ullaththil aaruthal vaenndumae
    vaalvilae maaruthal vaenndumae
    ooliyaththil elupputhal vaenndumae
    paalidangal arannmanaiyaakavae

    naavilae akkini vaenndumae
    ullaththi jeevanathi odavae
    perungaattu mulakkam vaenndumae
    irukkum idam asaiya vaenndumae

    vallamai varangal vaenndumae
    sollavum vaakkukal vaenndumae
    kallangapadu maara vaenndumae
    ullaththil thaeva anpu vaenndumae

    anniya paashaikal paesiyae
    mannnnilae saatchiyaay vaalavae
    vinnnnilae ummai naan santhikka
    punnnniyarae ennaiyum nirappumae

  • Aaviyanavare ஆவியானவரே

    ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
    உம் அக்கினி அபிஷேகத்தால்
    என்மேல் இறங்கிடுமே
    என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
    மகிமையாய் விளங்கிடவே

    எழுந்தருளின இயேசுவானவர்
    இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில்
    என்னை உட்கார செய்ய அநுகிரமம்
    செய்தீர் ஆவியால்

    கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள்
    நிறைவேற செய்யும் ஆவியால்
    மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து
    துதிக்கட்டும் ஆவியால்

    அக்கினி மயமான நாவுகளாலே
    இறங்கி வந்தீர் ஆவியாலே
    அக்கினி ஜூவாலைகளாக மாற்றி
    உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்

    என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
    மகிமையாய் விளங்கிடவே


    Aaviyanavare Lyrics in English

    aaviyaanavarae ennai nirappidumae
    um akkini apishaekaththaal
    enmael irangidumae
    ennai maruroopamaakkidumae umakku
    makimaiyaay vilangidavae

    eluntharulina Yesuvaanavar
    irangineerae aaviyaay unnathangalil
    ennai utkaara seyya anukiramam
    seytheer aaviyaal

    kataisi naatkalil vaakku thaththangal
    niraivaera seyyum aaviyaal
    maamsamaana yaavarum ummai makilnthu
    thuthikkattum aaviyaal

    akkini mayamaana naavukalaalae
    irangi vantheer aaviyaalae
    akkini joovaalaikalaaka maatti
    uyirppikkum thaeva aaviyaal

    ennai maruroopamaakkidumae umakku
    makimaiyaay vilangidavae