பசுத்தோல் போர்த்திய புலியா நீ
பயிரை மேயும் வேலியா
வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்
இதுதான் உந்தன் வாழ்க்கையா
- அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல்
வாழும் வாழ்க்கையில் பயனில்லை
தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்
வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை - குடியை தேடி புகையை ஊதி
வாழ்நாள் முழுவதும் களியாட்டம்
ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்
பயங்கரமான பாவ குற்றம் – இது - வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம்
மனதில் முழுவதும் மாய்மாலம்
உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்
கிறிஸ்துவுக்குன்னால் அவமானம் - ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி
ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை
அடுத்த நாளே பாவத்துக்கு அடிமை
தேவனுக்குன்னால் மனவேதனை - கண்கள் திறந்தால் வெளிச்சமுண்டாகும்
இருளிலிருந்து வெளியே வா
அத்துமா ரட்சிப்பு மிகவும் அவசியம்
இதயத்தை இன்று தேவனுக்கு தா
Pasuthol porthiya puliyaa – nee
Payirai maeyum vaeliyaa
Veliyil orugunam kovilil oru gunam
Idhudhaan undhan vaazhkaiyaa
- Analum illaamal kulirum illaamal
Vaazhum vaazhkaiyil payanillai
Dhevan mael anbum piranmael anbum
Vaazhkaiyil irundhaal bayamillai - Kudiyai thaedi pugaiyai oodhi
Vaazhnaal muzhuvadhum kaliyaattam
Aalayathil mattum magaa parisutham
Bayangaramaana paava kutram - Vaayil vanjagam veen vaakuvaadham
Manadhil muzhuvadhum maaimaalam
Unnaal kettupogum dhevanadhu naamam
Kristhuvukunnaal avamaanam - Aaviyil nirambi baashaigal paesi
Nyaayitrukilamaiyil aaraadhanai
Adutha naalay paavathukku adimai
Dhevanukkunnaal manavaedhanai - Kangal thirandhaal velichamundaagum
Irulil irundhu veliyae vaa
Aathumaa ratchippu migavum avasiyam
Idhayathai indru dhevanukku thaa
Leave a Reply
You must be logged in to post a comment.