Pudhiya Paadal

புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதே
புதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2
இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்
சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2

ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்
ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன்

நம்பிக்கை உடைய சிறைகளே
கரம் உயர்த்தி பாடுங்கள்
அதிசயம் அற்புதம் செய்பவர்
நம் நடுவில் இருக்கின்றார்-2

அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லை
உன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2
இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்
சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2

ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்
ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன்

தோல்வியை சந்தித்த உள்ளமே
நீ மகிழ்ந்து களிகூரு
தீமையை அனைத்தையும் மாற்றுவார்
அவர் கரத்தில் தங்குவார்-2

பறவைபோல் நீ பறந்திடு புது பெலத்தோடு எழும்பிடு
உன் மனதிலே உள்ள பாரங்கள் அவர் பாதத்தில் இரக்கிடு
இரவில் அழுதால் பகலில் சிரிப்போம் (சிரிப்பாய்)
சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவார்-2

ஓ ஓ ஓ ஓ ஒன்று சேர்ந்து துதிப்போம்
ஓ ஓ ஓ ஓ நம் இயேசுவை துதிப்போம்


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply