சிலுவையில் எந்தன் சிறுமையை
சிதைத்திட்டார் இராஜனே
வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
வெற்றியின் தேவனே
கைகளில் பாய்ந்த ஆணியால்
என் கரம் பிடித்தாரே
இரத்தம் பாய்ந்த தம் காலினால்
என்னை நடக்க செய்தாரே
என் கர்த்தர் நல்லவரே-4
தலை நிமிர செய்தார்
என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயமெனக்கில்லையே
கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார்-2
என் அப்பா நல்லவரே-4
Leave a Reply
You must be logged in to post a comment.