Author: admin

  • பரலோகமே பரலோகமே Paralokame paralokame

    பரலோகமே பரலோகமே
    பேரின்பம் பேரின்பமே
    தினந்தோறுமே தினந்தோறுமே அங்கு
    ஆனந்தம் ஆனந்தமே
    ஓஹோ … பேரின்பம் போரின்பமே

    இயேசு ராஜா அழகையெல்லாம்
    ஒவ்வொன்றாக ரசித்திடுவேன்
    அப்பப்பா என்ன சந்தோஷமே
    எப்படி நான் சொல்லுவேன்

    அவர் மடியில் அமர்ந்திடுவேன்
    மார்பினிலே சாய்ந்திடுவேன்
    கட்டிப்பிடித்து முத்தம் செய்வேன்
    எந்நாளும் களிப்பூருவேன்

    கவலையில்ல கண்ணீரில்ல
    கஷ்ட நஷ்டம் அங்கு இல்ல
    எப்போதும் அங்கு சந்தோஷமே
    எந்நாளும் கொண்டாட்டமே


    Paralokame paralokame
    perinpam perinpame
    thinanthorume thinanthorume angku
    aanantham aananthame
    ooho perinpam porinpame

    iyesu raja azhakaiyellam
    ovvonraka rasiththituven
    appappa enna santhoshame
    eppati nan solluven

    avar matiyil amarnthituven
    marpinile saynthituven
    kattippitiththu muththam seyven
    ennalum kalippuruven

    kavalaiyilla kannirilla
    kashta nashtam angku illa
    eppothum angku santhoshame
    ennalum kontattame


  • நீ பயப்படாதே நான் Ni payappatathe nan

    நீ பயப்படாதே நான்
    உன்னோடு இருக்கின்றேன்
    திகையாதே நான் உன் தேவன்
    நான் உன்னை பெலப்படுத்தி சகாயம்
    பண்ணிடுவேன்
    என் நீதியின் வலது கரத்தால்
    உன்னை தாங்குவேன் நான்
    உன்னை தாங்குவேன்


    Ni payappatathe nan
    unnotu irukkinren
    thikaiyathe nan un thevan
    nan unnai pelappatuththi sakayam
    pannituven
    en nithiyin valathu karaththal
    unnai thangkuven nan
    unnai thangkuven


  • ஜீவனைப் பார்க்கிலும் Jivanaip parkkilum

    ஜீவனைப் பார்க்கிலும் உம்
    கிருபை நல்லது
    ஜீவனுள்ள மட்டும் பாடுவேன்
    உம் கிருபையை
    ஜீவனைப் பார்க்கிலும்
    கிருபை இயேசுவே உம் கிருபையே
    ஓ…. இயேசுவே உம் கிருபையே

    உதடுகளால் உம்மை உயர்த்துவேன்
    பரிசுத்த உள்ளத்தோடு பாடுவேன்
    பரிசுத்த கரங்களால் போற்றுவேன்
    பாடிடுவேன் எந்நாளுமே

    வானாந்திரமான வாழ்க்கையில்
    சத்துருக்கள் என்னை தொடர்கையில்
    தனிமையில் வாழ்ந்து தவிக்கையில்
    நேசித்தவர்கள் வெறுக்கையில்

    பிரானனை அழிக்க தேடுவோர்
    பட்டயத்தால் வீழ்ந்து போவார்கள்
    பாடுகள் என்னைத் தொடர்ந்தாலும்
    ஆத்துமா தொடர்ந்தும்மை பற்றிக்கொள்ளும்

    படுக்கையில் உம்மை நினைக்கையில்
    பரவசத்தோடு உம்மை தியானிக்கிறேன்
    நீர் என் துணையாய் இருப்பதால்
    சற்றே உன் நிழலில் களிப்புறுவேன்


    Jivanaip parkkilum um
    kirupai nallathu
    jivanulla mattum patuven
    um kirupaiyai
    jivanaip parkkilum
    kirupai iyesuve um kirupaiye
    oo. iyesuve um kirupaiye

    uthatukalal ummai uyarththuven
    parisuththa ullaththotu patuven
    parisuththa karangkalal porruven
    patituven ennalume

    vananthiramana vazhkkaiyil
    saththurukkal ennai thotarkaiyil
    thanimaiyil vazhnthu thavikkaiyil
    nesiththavarkal verukkaiyil

    pirananai azhikka thetuvor
    pattayaththal vizhnthu povarkal
    patukal ennaith thotarnthalum
    aaththuma thotarnthummai parrikkollum

    patukkaiyil ummai ninaikkaiyil
    paravasaththotu ummai thiyanikkiren
    nir en thunaiyay iruppathal
    sarre un nizhalil kalippuruven


  • என் விருப்பம் என் En viruppam en

    என் விருப்பம் என் ஆசை நீங்கதானைய்யா
    நீர் இல்லாத வாழ்க்கை நினைச்சு பார்க்க முடியல
    தந்தையைப் போல சுமக்கின்றீர்
    தாயைப்போல தேற்றுகின்றீர்
    நீங்க இல்லாமல் வாழ முடியாதே
    இயேசைய்யா என் இயேசைய்யா
    நீங்க மட்டும் போதும் இயேசைய்யா

    உளையான சேற்றிலே தவித்த என்னையும்
    தூக்கி எடுத்து என்னை துதிக்க செய்தீரே

    உம்மைத் தேடாமல் மறந்த போதெல்லாம்
    நீரோ என்னை மறக்கவில்லையே

    மனிதர் வாக்குகளை மறந்துப் போனார்கள்
    நீரோ வாக்குகளை மறக்கவில்லையே


    En viruppam en aasai ningkathanaiyya
    nir illatha vazhkkai ninaissu parkka mutiyala
    thanthaiyaip pola sumakkinrir
    thayaippola therrukinrir
    ningka illamal vazha mutiyathe
    iyesaiyya en iyesaiyya
    ningka mattum pothum iyesaiyya

    ulaiyana serrile thaviththa ennaiyum
    thukki etuththu ennai thuthikka seythire

    ummaith thetamal marantha pothellam
    niro ennai marakkavillaiye

    manithar vakkukalai maranthup ponarkal
    niro vakkukalai marakkavillaiye


  • இயேசப்பா நீர் செய்த Iyesappa nir seytha

    இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்
    வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதே
    உந்தன் அன்பை நினைத்து துதிப்பேன்
    உந்தன் செயல் நினைத்து துதிப்பேன்
    எந்தன் உள்ளம் பொங்கத் துதிப்பேன்
    இயேசுவே உம்மைத் துதிப்பேன்
    உயிரே உயிரே எந்தன் இயேசுவே
    உயிரே உயிரே உம்மைப் பாடுவேன்

    ஒரு வார்த்தை சொன்னீரே இந்த உலகமே உருவானது
    உம் வார்த்தைகள் எல்லாம் அதிசயமானதே
    உந்தன் படைப்பெல்லாம் அதிசயமானதே

    உலகினை மீட்கவே நீர் மனிதனாய் உருவானீரே
    உம் செயல்கள் எல்லாம் அதிசயமானதே
    உந்தன் அன்பும் அதிசயமானதே

    என் வாழ்க்கை பயணத்திலே வழி
    காட்டும் எங்கள் தெய்வமே
    உம் பாதைகள் எல்லாம் அதிசயமானதே
    நீரே எந்தன் அதிசய தெய்வமே


    Iyesappa nir seytha athisayam aayiram
    varththaiyal varniththal vanam kollathe
    unthan anpai ninaiththu thuthippen
    unthan seyal ninaiththu thuthippen
    enthan ullam pongkath thuthippen
    iyesuve ummaith thuthippen
    uyire uyire enthan iyesuve
    uyire uyire ummaip patuven

    oru varththai sonnire intha ulakame uruvanathu
    um varththaikal ellam athisayamanathe
    unthan pataippellam athisayamanathe

    ulakinai mitkave nir manithanay uruvanire
    um seyalkal ellam athisayamanathe
    unthan anpum athisayamanathe

    en vazhkkai payanaththile vazhi
    kattum engkal theyvame
    um pathaikal ellam athisayamanathe
    nire enthan athisaya theyvame


  • கர்த்தர் என் பட்சத்தில் karththar en patsaththiL

    கர்த்தர் என் பட்சத்தில்
    நான் பயப்படவே மாட்டேன்
    மனிதன் எனக்கு என்ன செய்திடுவான்
    இயேசுவே பெலனும் இரட்சிப்பும் ஆனவர்
    இயேசுவே பெலனும் இரட்சிப்பும் ஆனவர்
    அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
    அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
    அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
    அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
    அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
    அல்லேலூயா அல்லேலூயா


    karththar en patsaththil
    nan payappatave matten
    manithan enakku enna seythituvan
    iyesuve pelanum iratsippum aanavar
    iyesuve pelanum iratsippum aanavar
    alleluya alleluya aamen
    alleluya alleluya aamen
    alleluya alleluya aamen
    alleluya alleluya aamen
    alleluya alleluya aamen
    alleluya alleluya


  • இது எப்படி ஆகும் என்று Ithu eppati aakum

    இது எப்படி ஆகும் என்று தெரியுமா
    தேவனால் எல்லாம் கூடுமே
    இது எப்படி ஆகும் என்று தெரியுமா
    தேவனால் எல்லாம் கூடுமே
    கூடும் எல்லாம் கூடும்
    தேவனால் எல்லாம் கூடும்
    கூடும் எல்லாம் கூடும்
    வார்த்தையால் எல்லாம் கூடுமே
    அல்லேலூயா பாடுவோம்
    கைகள் தட்டி போற்றுவோம்
    நடமாடித் துதிப்போம்
    அல்லேலூயா அல்லேலூயா

    தண்ணீரை திராட்சை ரசமாக
    மாற்றினாரே சுவையாக

    கசந்த மராவின் தண்ணீரை
    மாற்றினீரே மதுரமாக

    தண்ணீரால் வறண்ட பள்ளத்தாக்கை
    நிறைத்தாரே மகிமையாக


    ithu eppati aakum enru theriyuma
    thevanal ellam kutume
    ithu eppati aakum enru theriyuma
    thevanal ellam kutume
    kutum ellam kutum
    thevanal ellam kutum
    kutum ellam kutum
    varththaiyal ellam kutume
    alleluya patuvom
    kaikal thatti porruvom
    natamatith thuthippom
    alleluya alleluya.

    thannirai thiratsai rasamaka
    marrinare suvaiyaka

    kasantha maravin thannirai
    marrinire mathuramaka

    thanniral varanta pallaththakkai
    niraiththare makimaiyaka


  • என் பிரியமே கலங்காதே En piriyame kalangkathe

    என் பிரியமே கலங்காதே
    நான் உன்னை நேசிக்கிறேன்
    உன் ஸ்நேகத்தால் ஸ்நேகித்து
    ஆதரவாய் இருப்பேன்

    இஸ்ரவேல் கன்னிகையே உன்னை
    மீண்டும் நான் கட்டுவிப்பேன்
    மேள வாத்தியத்தோடும் ஆடல் பாடலோடும்
    மீண்டும் மகிழ்ச்சிக்கொள்ளுவாய்

    இஸ்ரேலே பயப்படாதே உன்னை
    பெயர் சொல்லி நான் அழைத்தேன்
    உன்னை வாலாக்காமால் உன்னை தலையாக்குவேன்
    கீழாகாமல் மேலாவாய்

    இஸ்ரேலே கலங்கிடாதே உன்னை
    ஆசிர்வதிப்பது என் பிரியம்
    அன்றே பாகமில்லை குறி சொல்லுதல் இல்லை
    ஆசிர்வாதமாய் இருப்பாய் நீ


    En piriyame kalangkathe
    nan unnai nesikkiren
    un snekaththal snekiththu
    aatharavay iruppen

    isravel kannikaiye unnai
    mintum nan kattuvippen
    mela vaththiyaththotum aatal patalotum
    mintum makizhssikkolluvay

    isrele payappatathe unnai
    peyar solli nan azhaiththen
    unnai valakkamal unnai thalaiyakkuven
    kizhakamal melavay

    isrele kalangkitathe unnai
    aasirvathippathu en piriyam
    anre pakamillai kuri solluthal illai
    aasirvathamay iruppay ni


  • இயேசு என்னும் Iyesu ennum

    இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்
    சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும்
    இயேசையா இயேசையா
    இயேசையா இயேசையா

    மனிதர் மீட்படைய வேறொரு நாமமில்ல
    வானத்தின் கீழெங்கும் பூமியின் மேலெங்கும்

    பக்தனை கூப்பிட்டால் இயேசுவே இரங்குமென்றார்
    பார்வை அடைந்தார் இயேசுவை பின்தொடர்ந்தார்

    குஷ்டரோகி பத்து பேர் சத்தமாய் கூப்பிட்டார்கள்
    போகும் வழியிலே சுகமாய் சென்றார்கள்
    ஒருவன் திரும்பி வந்து தேங்கியூ தேங்கியூ சொன்னான்


    iyesu ennum namam enrum namathu navil
    solla solla ellam natakkum
    iyesaiya iyesaiya
    iyesaiya iyesaiya 2

    manithar mitpataiya veroru namamilla
    vanaththin kizhengkum pumiyin melengkum

    pakthanai kuppittal iyesuve irangkumenrar
    parvai atainthar iyesuvai pinthotarnthar

    kushtaroki paththu per saththamay kuppittarkal
    pokum vazhiyile sukamay senrarkal
    oruvan thirumpi vanthu thengkiyu thengkiyu sonnan


  • உன்னை தூணாக்குவேன் Unnai thunakkuven

    உன்னை தூணாக்குவேன்
    தேவ ஆலயத்தில் தூணாக்குவேன்
    அதிலிருந்து ஒருகாலும் நீங்குவது
    இல்லைநீ அதிலிருந்து
    ஒருகாலும் நீங்குவது இல்லை

    உன்னை பேர் சொல்லி அழைத்தேன்
    உன்னை சுதந்திரனாய் மாற்றினேன்
    உன்னை பிரித்தெடுத்தேன் கண்டுகொண்டேன்
    உன்னை ஜீவ கரையில் சேர்த்திடுவேன்

    உன்னை உயர்த்தி வைத்தேன்
    உன்னை அதிகாரத்தில் நிறுத்துவேன்
    உன்னை நடத்திடுவேன் துணையிருப்பேன்
    உன்னை உறவாக்கி மகிழ்ந்திடுவேன்

    உன்னை பரிசுத்தம் செய்வேன்
    உன்னை பரத்திலே வரவேற்பேன்
    உன்னை அணைத்திடுவேன் மகிழ்ந்திடுவேன்
    உன்னை வலப்பக்கம் அமர்த்திடுவேன்


    unnai thunakkuven
    theva aalayaththil thunakkuven
    athilirunthu orukalum ningkuvathu
    illaini athilirunthu
    orukalum ningkuvathu illai

    unnai per solli azhaiththen
    unnai suthanthiranay marrinen
    unnai piriththetuththen kantukonten
    unnai jiva karaiyil serththituven

    unnai uyarththi vaiththen
    unnai athikaraththil niruththuven
    unnai nataththituven thunaiyiruppen
    unnai uravakki makizhnthituven

    unnai parisuththam seyven
    unnai paraththile varaverpen
    unnai anaiththituven makizhnthituven
    unnai valappakkam amarththituven