Author: admin

  • தேவ மைந்தன் தோளின்மீது Theva mainthan tholinmithu

    தேவ மைந்தன் தோளின்மீது
    இத்தனை பாரமா உன்னை
    தேடி வந்து நன்மை செய்தது
    அவரின் பாவமா

    முகத்தினிலே துப்பி தலையிலே
    கொட்டி வாரினாலே அடித்தார் அவர்
    மேனி முழுதும் உழுத நிலம் போல
    உருக்குலைதத்து மகிழ்ந்தார்
    பாடுகள் அடைந்து பரிசுத்த
    தேவன் பாவ பலியாகிறார் உன்
    ஆக்கினை ஏற்று ஆண்டவர்
    இயேசு அங்கே கேடாகிறார்

    இரங்கும் படி கேட்ட குருடனுக்கு
    இரங்கி பார்வை கொடுத்தவர்
    பன்னிரெண்டாண்டு பெரும் பாடடைந்த
    ஸ்திரிக்கு சுகம் தந்தவர்
    பாடையை தொட்டு வாலிபன்
    பிழைக்க அற்புதம் செய்தவர்
    நாறி போன லாசுருவை
    எழுப்பி நட்புக்கு உயிர்தந்தவர்


    theva mainthan tholinmithu
    iththanai parama unnai
    theti vanthu nanmai seythathu
    avarin pavama

    mukaththinile thuppi thalaiyile
    kotti varinale atiththar avar
    meni muzhuthum uzhutha nilam pola
    urukkulaithaththu makizhnthar
    patukal atainthu parisuththa
    thevan pava paliyakirar un
    aakkinai eerru aantavar
    iyesu angke ketakirar

    irangkum pati ketta kurutanukku
    irangki parvai kotuththavar
    pannirentantu perum patataintha
    sthirikku sukam thanthavar
    pataiyai thottu valipan
    pizhaikka arputham seythavar
    nari pona lasuruvai
    ezhuppi natpukku uyirthanthavar


  • மனம் போன பாதையை Manam pona pathaiyai

    மனம் போன பாதையை நான் மறந்தேன்
    இயேசு மாதேவன் அன்பினை நான் உணர்ந்தேன்
    என் அரும் இயேசுவின் பாதம் பணிந்தேன்
    எண்ணில்லா நன்மைகள் நான் அடைந்தேன்

    கானல் நீரை நம்பியதாலே
    கன்மலைத் தேனை நான் இழந்தேனே
    ஜீவத்தண்ணீராம் இயேசு என்னை
    தேடியே வந்தார் தேற்றியே அணைத்தார்
    ஆறுதல் ஈந்து ஆனந்தம் தந்தார்

    உலகத்தின் நேசம் தேவனின் பகையன்ற
    உண்மையை உணர்ந்தேன் நன்மையை நான் அடைந்தேன்
    உன்னதர் இயேசு என்னிடம் வந்தார்
    உலகம் தராத சமாதானம் தந்தார்

    நாசினில் சுவாசமுள்ள மனிதனை நம்பியதால்
    நாணிலம் மீதில் நான் நடைபிணமானேன்
    இயேசுவின் மேல் விசுவாசம் பயந்ததால் பிழைத்தேன்
    என் அரும் இயேசு என்னைத் தேடி வந்தார்
    இணையில்லா நிம்மதி இதயத்தில் தந்தார்


    Manam pona pathaiyai nan maranthen
    iyesu mathevan anpinai nan unarnthen
    en arum iyesuvin patham paninthen
    ennilla nanmaikal nan atainthen

    kanal nirai nampiyathale
    kanmalaith thenai nan izhanthene
    jivaththanniram iyesu ennai
    thetiye vanthar therriye anaiththar
    aaruthal iinthu aanantham thanthar

    ulakaththin nesam thevanin pakaiyanra
    unmaiyai unarnthen nanmaiyai nan atainthen
    unnathar iyesu ennitam vanthar
    ulakam tharatha samathanam thanthar

    nasinil suvasamulla manithanai nampiyathal
    nanilam mithil nan nataipinamanen
    iyesuvin mel visuvasam payanthathal pizhaiththen
    en arum iyesu ennaith theti vanthar
    inaiyilla nimmathi ithayaththil thanthar


  • கிறிஸ்துவை தவிர்த்தொரு kiristhuvai thavirththoru

    கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை
    இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை

    இயேசுவை நம்பினோர் இறைவனின் பிள்ளை ஆஆஅ
    மறுத்திதை உரைப்பவர் மனிதரே இல்லை
    உலகில் கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை
    இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை

    ஏற்றுக்கொண்டோர் வாழ்வில் அமைதி உண்டு
    இகபரண் நலமெல்லாம் நிறைய உண்டு
    இதை மாற்றி உரைப்பவர்க்கும் கருணையுண்டு ஆஆஆ….
    அவர்கள் மனம் திரும்பி வரவும் சலுகையுண்டு

    போற்றி துதிக்க ஒரு புனித தெய்வம்
    இந்த புவியெங்கும் இணையில்லா இனிய தெய்வம்
    தேற்றி அரவணைக்கும் தேவ மைந்தன்
    இயேசு திருநாமம் தொழுவோர்க்கும் பரலோகம்


    kiristhuvai thavirththoru theyvamillai
    iyesu kiristhuvai maruththavar uyvathillai

    iyesuvai nampinor iraivanin pillai aaaaa..
    maruththithai uraippavar manithare illai.
    ulakil kiristhuvai thavirththoru theyvamillai
    iyesu kiristhuvai maruththavar uyvathillai

    eerrukkontor vazhvil amaithi untu
    ikaparan nalamellam niraiya untu
    ithai marri uraippavarkkum karunaiyuntu aaaaaa.
    avarkal manam thirumpi varavum salukaiyuntu

    porri thuthikka oru punitha theyvam
    intha puviyengkum inaiyilla iniya theyvam
    therri aravanaikkum theva mainthan
    iyesu thirunamam thozhuvorkkum paralokam


  • என் ஜனங்கள் ஒருபோதும் En janangkal orupothum

    என் ஜனங்கள் ஒருபோதும்
    வெட்கப்பட்டு போவதில்லை
    கர்த்தருக்கு காத்திருப்போர் என்றும்
    வெட்கப்பட்டு போவதில்லை
    அழைத்தவர் உண்மையுள்ளவர்
    உன்னை அனுதினம் நடத்திடுவார்

    இஸ்ரவேலின் தேவன் பெரியவரே
    வாக்கு மாறாதவரே
    உனக்கு எட்டாததும் நீ அறியாததும்
    பெரிய காரியங்கள் செய்திடுவார்

    சர்வ வல்ல தேவன் அற்புதரே
    அதிசயமானவரே
    நீ நினைப்பதற்கும் நாம் ஜெபிப்பதற்கும்
    மேலான காரியங்கள் செய்திடுவார்

    நம்தேவன் நல்ல வைத்தியரே
    மனதுருக்கம் நிறைந்தவரே
    அவர் தழும்புகளால் உன்னை
    குணமாக்கியே உன்னத
    பெலனால் நிரப்பிடுவார்


    en janangkal orupothum
    vetkappattu povathillai
    karththarukku kaththiruppor enrum
    vetkappattu povathillai
    azhaiththavar unmaiyullavar
    unnai anuthinam nataththituvar

    isravelin thevan periyavare
    vakku marathavare
    unakku ettathathum ni ariyathathum
    periya kariyangkal seythituvar

    sarva valla thevan arputhare
    athisayamanavare
    ni ninaippatharkum nam jepippatharkum
    melana kariyangkal seythituvar

    namthevan nalla vaiththiyare
    manathurukkam nirainthavare
    avar thazhumpukalal unnai
    kunamakkiye unnatha
    pelanal nirappituvar


  • விண்ணின் தேவன் இயேசு vinnin thevan iyesu

    விண்ணின் தேவன் இயேசு தேவன்
    மண்ணில் ஏழ்மை கோலம் கொண்டார்
    மனித பாவம் நீங்கிடவே இயேசு
    புனித பாலகனாய் பிறந்தார்

    மண்ணின் மாந்தர் மகிழ்ந்திடவே
    விண்ணின் தூதர் வியந்திடவே
    மகிமையின் தேவன் மனிதனார்
    மழலை உருவில் புவியில் வந்தார்

    இருக்கின்றவராய் இருக்கிறவர்
    பிறக்கின்றவராய் பிறந்து வந்தார்
    மறுப்பவர் மறப்பவர் மனதில் எல்லாம்
    மகிழ்ச்சியை அளித்திடும் மழலையானார்

    பரலோகமதிலே நம்மை சேர்க்க
    பாவ உலகில் இயேசு பிறந்தார்
    ஆதியில் மனிதனை உயிர்ப்பிக்கவே
    மாம்சத்தில் தேவன் வெளிப்பட்டாரே


    vinnin thevan iyesu thevan
    mannil eezhmai kolam kontar
    manitha pavam ningkitave iyesu
    punitha palakanay piranthar

    mannin manthar makizhnthitave
    vinnin thuthar viyanthitave
    makimaiyin thevan manithanar
    mazhalai uruvil puviyil vanthar

    irukkinravaray irukkiravar
    pirakkinravaray piranthu vanthar
    maruppavar marappavar manathil ellam
    makizhssiyai aliththitum mazhalaiyanar

    paralokamathile nammai serkka
    pava ulakil iyesu piranthar
    aathiyil manithanai uyirppikkave
    mamsaththil thevan velippattare


  • அன்புருவான ஆண்டவர்

    அன்புருவான ஆண்டவர் இயேசுவை நான்
    அனுதினமும் புகழ்ந்து பாடிடுவேன் நான்
    அவர் என்னை தேடி வந்தார்
    ஆனந்த வாழ்வை தந்தார்
    ஆனந்தம் ஆனந்தமே

    பாலை நிலமான என்னை
    சோலைவனமாக செய்தார்
    பாவ வாழ்வில் உழன்ற என்னை
    தூய வாழ்வை தொடரச் செய்தார்
    புழுவான எனக்கு தன்
    புது ரூபம் தந்தார்
    அழுகின்ற என் நெஞ்சுக்கு
    ஆறுதல் ஈந்தார்
    வழிகாட்டி வாழ்விக்க வழியாக வந்தார்
    பழி பாவம் இல்லா சத்திய
    பாதையை தந்தார் இயேசுவே
    என் வாழ்வின் பேரின்பமே

    மண்ணுலக மாய வாழ்வில்
    மதிமயங்கி அலைந்த என்னை
    பொன்னுலக வாழ்வில் சேர்க்கும்
    புனித வழி நடக்க செய்தார்
    மண்ணான எனக்குத் தன்
    மகிமையை தந்தார்
    மாறாத மெய்யன்பை
    என் மீது பொழிந்தார்
    மறு ரூபம் நான் பெறவே
    மறு பிறப்பு ஈந்தார்
    மகிமை மேல் மகிமை
    பெற மாகிருபை தந்தார்
    மாதேவன் துதி பாடி
    மகிழ்ந்திடுவேன்


    anpuruvana aantavar iyesuvai nan
    anuthinamum pukazhnthu patituven nan
    avar ennai theti vanthar
    aanantha vazhvai thanthar
    aanantham aananthame

    palai nilamana ennai
    solaivanamaka seythar
    pava vazhvil uzhanra ennai
    thuya vazhvai thotaras seythar
    puzhuvana enakku than
    puthu rupam thanthar
    azhukinra en nenysukku
    aaruthal iinthar
    vazhikatti vazhvikka vazhiyaka vanthar
    pazhi pavam illa saththiya
    pathaiyai thanthar iyesuve
    en vazhvin perinpame

    mannulaka maya vazhvil
    mathimayangki alaintha ennai
    ponnulaka vazhvil serkkum
    punitha vazhi natakka seythar
    mannana enakkuth than
    makimaiyai thanthar
    maratha meyyanpai
    en mithu pozhinthar
    maru rupam nan perave
    maru pirappu iinthar
    makimai mel makimai
    pera makirupai thanthar
    mathevan thuthi pati
    makizhnthituven


  • மனமே நீ ஏன் விணாய் Maname ni een vinay

    மனமே நீ ஏன் விணாய் சிந்திக்கிறாய்
    வீணாய் கவலை கொள்வதனால்
    அதனால் உனக்கும் லாபம் என்ன
    ஒரு முழம் கூட்ட முடியுமோ

    உலகோர் உன்னை வெறுத்திட்டாலும்
    வெறுத்திடா தேவன் உனக்குண்டு
    உண்மையாய் நேசிக்கும் இயேசுவைப் பார்
    உன்னதர் இயேசு உன் துணையே

    உன்னை விசாரிக்க யாருமில்லை
    என்று எண்ணி ஏங்குகிறாய்
    உன்னை விசாரிக்கும் இயேசுவைப் பார்
    தாயினும் மேலாய் நடத்திடுவார்

    பறக்கும் பறவையை கவனித்துப் பார்
    விதைக்கவில்லை அறுக்கவில்லை
    அவைகளை போஷிக்கும் இயேசுவைப் பார்
    உன்னையும் போஷித்து நடத்திடுவார்


    maname ni een vinay sinthikkiray
    vinay kavalai kolvathanal
    athanal unakkum lapam enna

    oru muzham kutta mutiyumo
    ulakor unnai veruththittalum
    veruththita thevan unakkuntu
    unmaiyay nesikkum iyesuvaip par
    unnathar iyesu un thunaiye

    unnai visarikka yarumillai
    enru enni eengkukiray
    unnai visarikkum iyesuvaip par
    thayinum melay nataththituvar

    parakkum paravaiyai kavaniththup par
    vithaikkavillai arukkavillai
    avaikalai poshikkum iyesuvaip par
    unnaiyum poshiththu nataththituvar


  • சாலேமின் ராஜா இயேசு Salemin raja iyesu

    சாலேமின் ராஜா இயேசு
    சாரோனின் ரோஜா
    சஞ்சலம் வருத்தம் தீர்த்திடுவார்
    சாப பாவம் நீக்கிடுவார்
    சாந்தம் சமாதானம் தந்திடுவார்

    இருவர் மூவர் அவர் பெயரால்
    கூடும் இடத்தில் அவர் இருப்பார்
    இயேசு நாமத்தில் கேட்பதெல்லாம்
    எதையும் தவறாமல் தருபவராம்
    அழைத்தால் வருவார் கேட்டால் தருவார்
    அன்பாய் என்றும் துணையிருப்பார்

    நோய்கள் பேய்கள் விரட்டிடுவார்
    நொந்த உள்ளத்தை தேற்றிடுவார்
    கண்ணீர் கவலை மாற்றிடுவார்
    கண்ணின் மணிபோல் காத்திடுவார்
    ஜெபத்தை கேட்பார்
    ஜெயத்தை கொடுப்பார்
    துதியில் வாசம் செய்திடுவார்


    Salemin raja iyesu
    saronin roja
    sanysalam varuththam thirththituvar
    sapa pavam nikkituvar
    santham samathanam thanthituvar

    iruvar muvar avar peyaral
    kutum itaththil avar iruppar
    iyesu namaththil ketpathellam
    ethaiyum thavaramal tharupavaram
    azhaiththal varuvar kettal tharuvar
    anpay enrum thunaiyiruppar

    noykal peykal virattituvar
    nontha ullaththai therrituvar
    kannir kavalai marrituvar
    kannin manipol kaththituvar
    jepaththai ketpar
    jeyaththai kotuppar
    thuthiyil vasam seythituvar


  • தூக்கி சுமக்கும் Thukki sumakkum

    தூக்கி சுமக்கும் தோளினிலே
    சிலுவை சுமந்ததேன்
    என்னை தேடி வந்ததேன்
    என்னை நாடி வந்ததேன்

    பாவ பாரம் என்னில் நீங்க
    பரனே வந்ததேன்
    என்னை மீட்க வந்ததேன்
    கரை மீட்க வந்ததேன்
    வினை தீர்க்க வந்ததேன்

    சிந்தும் இரத்தம் இடைவிடாமல்
    என்னை அழைப்பதேன்
    என்னை தழுவ வந்ததேன்
    என்னை தழுவி நிற்பதேன்
    என்னை தாங்க வந்ததேன்
    காயங்கள் ஏற்ற கரங்களாலே
    காக்க வந்ததேன்
    என்னை மாற்ற வந்ததேன்
    என்னை தேற்ற வந்ததேன்
    என்னை ஆற்ற வந்ததேன்

    விண்ணைப் பார்க்கும் உந்தன்
    கண்கள் என்னை பார்ப்பதேன்
    உந்தன் சிரமும் சாய்ந்ததேன்
    உந்தன் கரங்கள் தளர்ந்ததேன்
    காரிருளும் சூழ்ந்ததேன்
    அப்பா உந்தன் அன்புக்கிடாய்
    என்ன செய்குவேன்
    நான் என்ன செய்குவேன்
    உம்மை எங்கும் பாடுவேன்
    உம்மை என்றும் நாடுவேன்


    thukki sumakkum tholinile
    siluvai sumanthathen
    ennai theti vanthathen
    ennai nati vanthathen

    pava param ennil ningka
    parane vanthathen
    ennai mitka vanthathen
    karai mitka vanthathen
    vinai thirkka vanthathen

    sinthum iraththam itaivitamal
    ennai azhaippathen
    ennai thazhuva vanthathen
    ennai thazhuvi nirpathen
    ennai thangka vanthathen
    kayangkal eerra karangkalale
    kakka vanthathen
    ennai marra vanthathen
    ennai therra vanthathen
    ennai aarra vanthathen

    vinnaip parkkum unthan
    kankal ennai parppathen
    unthan siramum saynthathen
    unthan karangkal thalarnthathen
    karirulum suzhnthathen
    appa unthan anpukkitay
    enna seykuven
    nan enna seykuven
    ummai engkum patuven
    ummai enrum natuven


  • தங்கமணி மாளிகையில் Thangkamani malikaiyil

    தங்கமணி மாளிகையில்
    இயேசு பிறக்கவில்லை
    யூத சிங்கம் இயேசு
    தொழுவத்திலே வந்து பிறந்தாரே
    தாலாட்டு பாட அங்கு தாதியர் இல்லை
    தேவ தூதர் எல்லாம்
    பாடியதே தாலாட்டு
    ஆராரோ ஆரிரரோ
    ஆரிரரோ ஆரிரரோ
    ஆரிரரோ ஆராரோ – 2

    சத்தியத்தின் நாயகனாம்
    நம் தேவ பிள்ளை அங்கு
    சத்திரத்தில் தலை
    சாய்க்க இடமுமில்லை
    உத்தமராம் கர்த்தர்
    இயேசு பாலனுக்கு அங்கு
    பெத்லேகேமில் உடுத்தி நிற்க
    உடையுமில்லை

    மீட்பவராக பிறந்தவரை
    பார்ப்பதற்கு தேவ
    தூதர் சென்று சேதி
    சொன்னார் மேய்பருக்கு
    மன்னருக்கும் மந்திரிக்கும்
    அழைப்பு இல்லை மந்தை
    மேய்ப்பர்களோ அங்கு
    வந்து வாழ்த்துகிறார்


    Thangkamani malikaiyil
    iyesu pirakkavillai
    yutha singkam iyesu
    thozhuvaththile vanthu piranthare
    thalattu pata angku thathiyar illai
    theva thuthar ellam
    patiyathe thalattu
    aararo aariraro
    aariraro aariraro
    aariraro aararo – 2

    saththiyaththin nayakanam
    nam theva pillai angku
    saththiraththil thalai
    saykka itamumillai
    uththamaram karththar
    iyesu palanukku angku
    pethlekemil utuththi nirka
    utaiyumillai

    mitpavaraka piranthavarai
    parppatharku theva
    thuthar senru sethi
    sonnar meyparukku
    mannarukkum manthirikkum
    azhaippu illai manthai
    meypparkalo angku
    vanthu vazhththukirar