Author: admin

  • கர்த்தருக்கு காணிக்கை karththarukku kanikkai

    கர்த்தருக்கு காணிக்கை தாருங்கள் அவர்
    கணக்கில்லாமல் திருப்பி தருவார்
    ஊழியத்திற்கு உதவி செய்யுங்கள் அவர்
    உங்கள் வாழ்வை ஆசீர்வதிப்பார்

    உலக செல்வம் அனைத்தையுமே
    உருவாக்கியவர் உனக்காக
    யாவற்றையும் தத்தம் செய்தவர்
    தனக்கான தருபவரை தாங்கி நடத்துவார்
    தசம தாகம் அளிப்பவரை
    தழைக்க செய்குவார்

    அன்புடனே தருபவரை ஆதரிப்பவர்
    அளவில்லாமல் அவர்களுக்கே
    அள்ளி கொடுப்பவர்
    ஏழ்மையிலும் தருபவரை
    இயேசு மதிப்பார் இம்மையிலும்
    மறுமையிலும் ஆசீர்வதிப்பார்
    பத்தில் ஒன்று தருபவரை பரமன்
    பார்க்கிறார் தன் பலனின் முதலை
    தருபவரை பார்த்து மகிழ்கிறார்
    பாசத்துடன் இயேசு தேவன்
    உன்னை கேட்கிறார்
    தந்தால் தலகணையை
    திறந்து உம்மை ஆசீர்வதிக்கிறார்

    விண்ணும் வெளியும் தன்னுடையது
    என்று கர்த்தர் சொல்கிறார் அதை
    என்னுடையது என்பவரை
    இயேசு வெறுக்கிறார்
    பொய்யுலக செல்வமதை
    பூச்சி அரித்திடும் உன்
    பொக்கிஷத்தை பரலோகத்தில்
    சேர்த்து வை என்றார்
    பொற்தள வீதி அதை மிதித்து
    நடப்பவர் இப்பூமியிலே பொன்
    நகைகளை வெறுத்து ஒதுக்குவார்
    புண்ணியராம் இயேசு பணி
    புவியில் நடக்கவே தன் பொன் பொருளை
    வழங்கிடுவோர் மோட்சம் சேருவார்


    karththarukku kanikkai tharungkal avar
    kanakkillamal thiruppi tharuvar
    uuzhiyaththirku uthavi seyyungkal avar
    ungkal vazhvai aasirvathippar

    ulaka selvam anaiththaiyume
    uruvakkiyavar unakkaka
    yavarraiyum thaththam seythavar
    thanakkana tharupavarai thangki nataththuvar
    thasama thakam alippavarai
    thazhaikka seykuvar

    anputane tharupavarai aatharippavar
    alavillamal avarkalukke
    alli kotuppavar
    eezhmaiyilum tharupavarai
    iyesu mathippar immaiyilum
    marumaiyilum aasirvathippar
    paththil onru tharupavarai paraman
    parkkirar than palanin muthalai
    tharupavarai parththu makizhkirar
    pasaththutan iyesu thevan
    unnai ketkirar
    thanthal thalakanaiyai
    thiranthu ummai aasirvathikkirar

    vinnum veliyum thannutaiyathu
    enru karththar solkirar athai
    ennutaiyathu enpavarai
    iyesu verukkirar
    poyyulaka selvamathai
    pussi ariththitum un
    pokkishaththai paralokaththil
    serththu vai enrar
    porthala vithi athai mithiththu
    natappavar ippumiyile pon
    nakaikalai veruththu othukkuvar
    punniyaram iyesu pani
    puviyil natakkave than pon porulai
    vazhangkituvor motsam seruvar


  • மகனே என்றழைத்து Makane enrazhaiththu

    மகனே என்றழைத்து
    மறுவாழ்வு உனக்கு தந்த
    அன்பு மாதேவன்
    இயேசுவை நீ மறவாதே

    பாவத்தில் நீ உழன்று
    பரிதவிக்கும் நேரத்திலே
    பகல் வேஷம் மாந்தரெல்லாம்
    பார்த்து உன்னை நகைக்கையிலே
    பட்ட மரம் போல நீயும்
    கெட்டழியும் வேளையிலே

    வியாதி படுக்கையிலே
    வேதனையால் துடிக்கையிலே
    விந்தையான உலக சொந்தம்
    வெறுத்துன்னை ஒதுக்கையிலே
    மருத்துவர் கணித்து சொன்ன
    மரணம் வரும் வேளையிலே

    வறுமையில் நீ வாடி
    வருந்திடும் வேளையிலே
    வாய் பேச்சு வள்ளலெல்லாம்
    வசை மாறி பொழிகையிலே
    வாழ்ந்தது போதும் என்று
    சாக போகும் வேளையிலே


    makane enrazhaiththu
    maruvazhvu unakku thantha
    anpu mathevan
    iyesuvai ni maravathe

    pavaththil ni uzhanru
    parithavikkum neraththile
    pakal vesham mantharellam
    parththu unnai nakaikkaiyile
    patta maram pola niyum
    kettazhiyum velaiyile

    viyathi patukkaiyile
    vethanaiyal thutikkaiyile
    vinthaiyana ulaka sontham
    veruththunnai othukkaiyile
    maruththuvar kaniththu sonna
    maranam varum velaiyile

    varumaiyil ni vati
    varunthitum velaiyile
    vay pessu vallalellam
    vasai mari pozhikaiyile
    vazhnthathu pothum enru
    saka pokum velaiyile


  • இயேசு ஒன்றே வேண்டு Iyesu onre ventum

    இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு
    என்றும் இயேசு ஒன்றே வேண்டும்
    எந்தன் இயேசு நினைவோடு
    என் இதயம் என்றும் மகிழ வேண்டும்
    இயேசு தாசன் நான் என்றே
    மாந்தர் என்றும்
    பாசம் கொள்ள வேண்டும்
    எந்தன் இயேசு கிறிஸ்துவையே
    போற்றி நான் பாடி புகழ வேண்டும்

    நித்தம் ஜெபத்தினிலே நிகரில்லா
    நிம்மதி பெற வேண்டும்
    எந்தன் நித்திரை நேரத்திலும் இயேசு
    வந்து தரிசனம் தரவேண்டும்
    எந்தன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
    இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆகவேண்டும்
    எந்தன் வாழ்க்கை முழுவதுமே
    இயேசுவுக்கு சாட்சியாக வேண்டும்

    படித்து தியானிக்கவே கையில்
    என்றும் பரிசுத்த வேதம் வேண்டும்
    நான் பாடி மகிழ்ந்திடவே இயேசு
    கீத பாடல் கூடவே வேண்டும்
    நான் செல்லும் இடமெல்லாம் இயேசு
    புகழ் சொல்லும் வரம் வேண்டும்
    இயேசு சேவையை நான் செய்தே
    உலகினில் ஜீவித்திட வேண்டும்
    இயேசு சேவையை நான் செய்தே
    எந்தன் ஜீவனை நான் விடவேண்டும்


    iyesu onre ventum enakku
    enrum iyesu onre ventum
    enthan iyesu ninaivotu
    en ithayam enrum makizha ventum
    iyesu thasan nan enre
    manthar enrum
    pasam kolla ventum
    enthan iyesu kiristhuvaiye
    porri nan pati pukazha ventum

    niththam jepaththinile nikarilla
    nimmathi pera ventum
    enthan niththirai neraththilum iyesu
    vanthu tharisanam tharaventum
    enthan varththaikal ovvonrum
    iyesuvukku sthoththiram aakaventum
    enthan vazhkkai muzhuvathume
    iyesuvukku satsiyaka ventum

    patiththu thiyanikkave kaiyil
    enrum parisuththa vetham ventum
    nan pati makizhnthitave iyesu
    kitha patal kutave ventum
    nan sellum itamellam iyesu
    pukazh sollum varam ventum
    iyesu sevaiyai nan seythe
    ulakinil jiviththita ventum
    iyesu sevaiyai nan seythe
    enthan jivanai nan vitaventum


  • உள்ளமெல்லாம் உருகுதய்யா ullamellam urukuthayya

    உள்ளமெல்லாம் உருகுதய்யா உம்
    கல்வாரி காட்சி கண்டு என்
    தேகமெல்லாம் நடுங்குதய்யா உம்
    சிலுவையின் பாடு கண்டு உம்
    சிலுவையின் பாடு கண்டு

    மகிமை மாட்சிமை மறந்து விட்டு
    மனிதனாய் ஏன் பிறந்தீர்
    மண்ணான என்னை நீர் நேசித்ததால் உம்
    மகிமை மறந்தீரோ மனு
    உருவாய் பிறந்தீரோ மனு
    உருவாய் பிறந்தீரோ

    இரத்தமும் ஆறாய் பெருகிடவே இரண
    காயங்கள் ஏன் அடைந்தீர்
    இரட்சிப்பின் வாழ்வை நான் பெறவே
    இரத்தத்தை வடித்தீரோ தேவ
    சித்தத்தை முடித்தீரோ தேவ
    சித்தத்தை முடித்தீரோ

    அன்பின் ரூபம் ஆனவரே உம்
    மேல் ஆணிகள் பாய்ந்ததேனோ
    ஆணவத்தால் நான் செய்த
    பாவங்களே கூர் ஆணியாய் மாறியதோ
    உம் மேனியில் பாய்ந்ததுவோ
    உம் மேனியில் பாய்ந்ததுவோ


    ullamellam urukuthayya um
    kalvari katsi kantu en
    thekamellam natungkuthayya um
    siluvaiyin patu kantu um
    siluvaiyin patu kantu

    makimai matsimai maranthu vittu
    manithanay een piranthir
    mannana ennai nir nesiththathal um
    makimai maranthiro manu
    uruvay piranthiro manu
    uruvay piranthiro

    iraththamum aaray perukitave irana
    kayangkal een atainthir
    iratsippin vazhvai nan perave
    iraththaththai vatiththiro theva
    siththaththai mutiththiro theva
    siththaththai mutiththiro

    anpin rupam aanavare um
    mel aanikal paynthatheno
    aanavaththal nan seytha
    pavangkale kur aaniyay mariyatho
    um meniyil paynthathuvo
    um meniyil paynthathuvo


  • இயேசு நம்பி iyEsu nampi

    இயேசு நம்பி தான் நான்
    வாழ்ந்திருக்கேன் அவர்
    பேச்சை நம்பித்தான் நான்
    வளர்ந்திருக்கேன் இயேசு
    வாக்குத்தத்தம் என் நெஞ்சிலே அது
    வந்து வந்து தேத்தும்மா

    தாய் என்னை மறந்தாலும் இயேசு
    நான் உன்னை மறவேன் என்றார்
    தந்தை என்னை வெறுத்தாலும்
    என் இயேசு தாங்கி சுமப்பேன் என்றார்
    பந்தங்கள் சொந்தகள் பாரினில் மாறிடும்
    பரமன் இயேசுவோ என்றென்றும் மாறிடாரே

    உலகம் முடிவு பரியந்தம் நான்
    உன்னோடு இருப்பேன் என்றார்
    இந்த உலகம் தரக்கூடாத சமாதானம்
    உன்னிலே வைப்பேன் என்றார்
    உன் மேல் என் கண்ணை வைத்து
    ஆலோசனை சொல்வேன் என்றார்
    உன்னை நான் ஒரு போதும்
    கைவிட மாட்டேன் என்றார்

    காலங்கள் மாறிவிடும் என் இயேசு
    கர்த்தரோ மாறமாட்டார்
    கோலங்கள் அழிந்து விடும் என் இயேசு
    கொள்கையோ நிலைத்து நிற்கும்
    வானமும் பூமியும் ஒருநாள் ஒழிந்திடும்
    தேவனின் வார்த்தையோ
    எந்நாளும் ஒழிவதில்லை


    iyesu nampi than nan
    vazhnthirukken avar
    pessai nampiththan nan
    valarnthirukken iyesu
    vakkuththaththam en nenysile athu
    vanthu vanthu theththumma

    Thay ennai maranthalum iyesu
    nan unnai maraven enrar
    thanthai ennai veruththalum
    en iyesu thangki sumappen enrar
    panthangkal sonthakal parinil maritum
    paraman iyesuvo enrenrum maritare

    ulakam mutivu pariyantham nan
    unnotu iruppen enrar
    intha ulakam tharakkutatha samathanam
    unnile vaippen enrar
    un mel en kannai vaiththu
    aalosanai solven enrar
    unnai nan oru pothum
    kaivita matten enrar

    kalangkal marivitum en iyesu
    karththaro maramattar
    kolangkal azhinthu vitum en iyesu
    kolkaiyo nilaiththu nirkum
    vanamum pumiyum orunal ozhinthitum
    thevanin varththaiyo
    ennalum ozhivathillai


  • ஆயிரம் இருந்து Aayiram irunthu

    ஆயிரம் இருந்து என்ன நமக்கு தேவ
    ஆலயம் ஒன்றே போதும்
    நாளெல்லாம் வாழ்ந்தென்ன நமக்கு
    நம் நாயகன் அன்பொன்றே போதும்
    இயேசு நாயகன் அன்பொன்றே போதும்

    காலமென்னும் ஊஞ்சலிலே
    கனிவுடனே நம்மை ஆட வைத்தார்
    அன்பினிலே நம்மை வார்த்தெடுத்தார்
    நல்ல பண்பினிலே நம்மை தோய்த்தெடுத்தார்
    வேதனை தீயால் புடமிட்டார்
    தேவா ……. தேவா …… தேவா ….
    கடும் சோதனையால் நல் மெருகிட்டார்

    ஆஸ்தியை மலைப்போல் குவித்தாலும்
    இந்த அகிலம் முழுவதையும் சேர்த்தாலும்
    ஆத்தும மீட்பு இல்லையென்றால்
    அவைகளினால் ஒரு நன்மையில்லை
    ஆண்டவர் பாத்திரத்தில் பங்குமில்லை
    மனமே மனமே மனமே அந்த
    அருள் நாதர் மாளிகையில் இடமுமில்லை


    aayiram irunthu enna namakku thEva
    aalayam onRE pOthum
    naLellam vazhnthenna namakku
    nam nayakan anponRE pOthum
    iyEsu nayakan anponRE pOthum

    kalamennum uunysalilE
    kanivutanE nammai aata vaiththar
    anpinilE nammai varththetuththar
    nalla paNpinilE nammai thOyththetuththar
    vEthanai thIyal putamittar
    thEva thEva thEva
    katum sOthanaiyal nal merukittar

    aasthiyai malaippOl kuviththalum
    intha akilam muzhuvathaiyum sErththalum
    aaththuma mItpu illaiyenRal
    avaikaLinal oru nanmaiyillai
    aaNtavar paththiraththil pangkumillai
    manamE manamE manamE antha
    aruL nathar maLikaiyil itamumillai


  • எல்லா மகிமையும் Ella makimaiyum

    எல்லா மகிமையும் கர்த்தருக்கே
    இங்கே எல்லா மேன்மையும் இறைவனுக்கே
    வல்லான் ஆண்டவர் பரம பிதா விண்ணில்
    வாழும் உயிர்களின் தந்தைக்கே

    வானும் ஒளியும் நிலமும் நீரும்
    காற்றும் முதலில் படைத்தாரே
    வகை வகையான பயிர்களும்
    உயிர்களும் படைத்து பெருகிட விதித்தாரே
    ஆதாம் மனிதனை ஏவாள் மங்கையை
    அவர் தன் சாயலில் படைத்தாரே
    அது முதல் உலகில் மனுகுலம்
    பலுகி அருள் வழி நடந்திட விதித்தாரே

    தவறுகள் பாவங்கள் வளர்த்திடும்
    சாத்தான் மனுக்களில் கலந்திட கண்டாரே
    தன் வழி நடக்கும் தலைமுறை
    தழைக்க ஆபிரஹாமை அழைத்தாரே
    அவன் வழி உலகில் மனிதரை
    எல்லாம் ஆசீர்வதிப்பேன் என்றாரே
    அதுமுதல் தூய சான்றோர் தலைமுறை
    மீண்டும் நிறைந்திட வகுத்தாரே


    ella makimaiyum karththarukke
    ingke ella menmaiyum iraivanukke
    vallan aantavar parama pitha vinnil
    vazhum uyirkalin thanthaikke

    vanum oliyum nilamum nirum
    karrum muthalil pataiththare
    vakai vakaiyana payirkalum
    uyirkalum pataiththu perukita vithiththare
    aatham manithanai eeval mangkaiyai
    avar than sayalil pataiththare
    athu muthal ulakil manukulam
    paluki arul vazhi natanthita vithiththare

    thavarukal pavangkal valarththitum
    saththan manukkalil kalanthita kantare
    than vazhi natakkum thalaimurai
    thazhaikka aapirahamai azhaiththare
    avan vazhi ulakil manitharai
    ellam aasirvathippen enrare
    athumuthal thuya sanror thalaimurai
    mintum nirainthita vakuththare


  • கடவுள் உண்டு katavul untu

    கடவுள் உண்டு தான்
    அதுவும் ஒன்று தான்
    கற்பனையில் உருவாகும் கல்லும்
    மண்ணும் கடவுளல்ல
    மடமை என்று ஓர் மடத்தின்
    மண்டபத்தின் மலை உச்சியில்
    உடமையும் பொருள் கொடுத்து
    முடியும் பண்டிகை கடவுளல்ல

    கூழுக்கு வழியில்லா மக்கள்
    விதி மட்கி மாளும் போது
    ஆளுக்கொரு தெய்வம் என்று
    நாளுக்கொரு சடங்குகள் ஏன்
    உள்ளத்தின் அன்பாகி உலகத்தின்
    ஒளியான எள்ளத்தும் களமில்லா
    இயேசுவே கடவுள் என்போம்

    பாவத்தை கண்ணீராக பருகுகின்ற
    மாந்தர்களின் சாபத்தை தொலைப்பதற்கு
    சாத்திரங்கள் என்ன செய்யும்
    பாவத்தின் பலியாகி பரலோகம் வழியாகி
    பாவத்தின் பலியாகி…. ஆ….
    சிலுவையில் சாபம் தீர்த்த
    இயேசுவே கடவுள் என்போம்


    katavul untu than
    athuvum onru than
    karpanaiyil uruvakum kallum
    mannum katavulalla
    matamai enru oor mataththin
    mantapaththin malai ussiyil
    utamaiyum porul kotuththu
    mutiyum pantikai katavulalla

    kuzhukku vazhiyilla makkal
    vithi matki malum pothu
    aalukkoru theyvam enru
    nalukkoru satangkukal een
    ullaththin anpaki ulakaththin
    oliyana ellaththum kalamilla
    iyesuve katavul enpom

    pavaththai kanniraka parukukinra
    mantharkalin sapaththai tholaippatharku
    saththirangkal enna seyyum
    pavaththin paliyaki paralokam vazhiyaki
    pavaththin paliyaki. aa.
    siluvaiyil sapam thirththa
    iyesuve katavul enpom


  • இருக்கிறார் இருக்கிறார் Irukkirar Irukkirar

    இருக்கிறார் இருக்கிறார் இயேசு
    இயேசு இருக்கிறவராக இருக்கிறார்
    இங்கேயும் இருக்கிறார்
    எங்கேயும் இருக்கிறார்
    இப்போதும் இருக்கிறார்
    எப்போதும் இருக்கிறார்

    இருவர் மூவர் இயேசுவின் பெயரால்
    கூடுமிடத்தில் அவர் இருக்கிறார்
    அவரை உயர்த்தும் எந்த ஸ்தானத்திலும்
    இரங்கி ஆசீர்வதிக்கிறார்

    பாவத்தை போக்கி சாபத்தை நீக்கி
    பரிசுத்த வாழ்வை அளிக்கிறார்
    பேயினை விரட்டி நோயினை அகற்றி
    பேரின்ப வாழ்வை தருகிறா

    குறைகளை போக்கி நிறைவை உண்டாக்கி
    குதுகுல வாழ்வை அளிக்கிறார்
    வறுமையை நீக்கி வளமை சேர்த்து
    வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறார்


    Irukkirar irukkirar iyesu
    iyesu irukkiravaraka irukkirar
    ingkeyum irukkirar
    engkeyum irukkirar
    ippothum irukkirar
    eppothum irukkirar

    iruvar muvar iyesuvin peyaral
    kutumitaththil avar irukkirar
    avarai uyarththum entha sthanaththilum
    irangki aasirvathikkirar

    pavaththai pokki sapaththai nikki
    parisuththa vazhvai alikkirar
    peyinai viratti noyinai akarri
    perinpa vazhvai tharukirar

    kuraikalai pokki niraivai untakki
    kuthukula vazhvai alikkirar
    varumaiyai nikki valamai serththu
    vazhkkaiyai aasirvathikkirar


  • கல்வாரி மலையிலே kalvari malaiyile

    கல்வாரி மலையிலே என்
    கர்த்தா உம் வேதனை
    கண்ணீர் பெருகிடுதே கல்
    நெஞ்சமும் உருகிடுதே

    முப்பது வெள்ளியின் மோகமும் யூதாஸ்
    முத்தத்தால் உம்மை விற்கலாகுமோ
    வஞ்சகனாய் நண்பன் மாறிவிட்டான்
    வலியவர்க்கே உம்மை காட்டித்தந்தான்
    இரக்கமில்லாதவர் தேடி வந்தார்
    இதயம் இல்லாதவர் பிடித்துச்சென்றார்

    இரத்தம் நதி போல் பாயுதய்யா
    என் இதயம் தனலாய் வேகுதய்யா
    உத்தமர் உடலும் துடிக்குதய்யா அங்கு
    உளுத்தவர் உள்ளமும் களிக்குதய்யா
    எத்தர்கள் நெஞ்சினில் இரக்கமில்லை அதை
    நித்தமும் நினைக்கையில் உறக்கமில்லை

    ஆணி உம் மேனியில் பாயலாமோ உம்
    அங்கமெல்லாம் காயம் ஆகலாமோ
    தாகத்தால் நீரும் தவிக்கலாமோ குடிக்க
    காடியை கொடியவன் கொடுக்கலாமோ
    சிலுவையில் நீர் பட்ட பாடுகளை இன்றும்
    சிந்தித்தால் என் உள்ளம் துடிக்குதய்யா


    kalvari malaiyile en
    karththa um vethanai
    kannir perukituthe kal
    nenysamum urukituthe

    muppathu velliyin mokamum yuthas
    muththaththal ummai virkalakumo
    vanysakanay nanpan marivittan
    valiyavarkke ummai kattiththanthan
    irakkamillathavar theti vanthar
    ithayam illathavar pitiththussenra

    iraththam nathi pol payuthayya
    en ithayam thanalay vekuthayya
    uththamar utalum thutikkuthayya angku
    uluththavar ullamum kalikkuthayya
    eththarkal nenysinil irakkamillai athai
    niththamum ninaikkaiyil urakkamillai

    aani um meniyil payalamo um
    angkamellam kayam aakalamo
    thakaththal nirum thavikkalamo kutikka
    katiyai kotiyavan kotukkalamo
    siluvaiyil nir patta patukalai inrum
    sinthiththal en ullam thutikkuthayya