Author: admin

  • பர்வதங்கள் நிலை Parvathangkal nilai

    பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
    என் கிருபை உன்னை விட்டு விலகாது
    என்றுரைத்த என் இயேசுவே
    உன் சொல் ஒருநாளும் உறங்காது

    இரண்டோ மூன்றோ பேர்கள்
    உம் நாமத்தில் இருக்கும்
    இடத்தில் நீர் இருப்பீர்
    இதயமோ உம்மை நினைத்திருந்தால்
    இன்பமாம் ஆவியில் நிரப்பிடுவீர்
    இன்னல் நீங்க உம்மை அழைத்தால்
    அண்ணல் இயேசுவே நீர் வருவீர்

    ஆறுகளை நான் கடக்கின்ற போதும்
    அக்கினி என்னை சூழ்கின்ற போதும்
    அங்கும் அருகே வந்திடுவீர்
    அழிவின்றி என்னை தாங்கிடுவீர்
    ஆண்டவர் இயேசு என்று
    அழைக்கும் என் மனமே
    அரவணைக்கும் உந்தன் அன்பு கரமே


    parvathangkal nilai peyarnthalum
    en kirupai unnai vittu vilakathu
    enruraiththa en iyesuve
    un sol orunalum urangkathu

    iranto munro perkal
    um namaththil irukkum
    itaththil nir iruppir
    ithayamo ummai ninaiththirunthal
    inpamam aaviyil nirappituvir
    innal ningka ummai azhaiththal
    annal iyesuve nir varuvir

    aarukalai nan katakkinra pothum
    akkini ennai suzhkinra pothum
    angkum aruke vanthituvir
    azhivinri ennai thangkituvir
    aantavar iyesu enru
    azhaikkum en maname
    aravanaikkum unthan anpu karame


  • இயேசு என்றதுமே Iyesu enrathume

    இயேசு என்றதுமே எனக்கு ஒரு
    இன்பம் பிறக்குதம்மா
    காசினியிள்ளவர் போல் எவரையும்
    கண்டதில்லையம்மா

    பேச தொடங்கினாலும்
    பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா
    பார்க்கத்தொடங்கினாலும் பார்வையெல்லாம்
    பாவியில் இல்லையம்மா
    குஷ்ட ரோகிகளை கைகளால்
    கூசாமல் தொட்டாரம்மா
    கஷ்டப்படுவோரைக் கண்டதும்
    கண்ணீர் வடித்தாரம்மா
    கஷ்டப்படுவோரைக் கண்டதும்
    கண்ணீர் வடித்தாரம்மா

    காசு மேல் ஆசை வைத்து
    தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்
    காசு மேல் ஆசை வைத்து
    தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்
    ஆரத் தழுவினோரை காசினியில்
    கண்டதும் உண்டோ அம்மா
    ஆரத் தழுவினோரை காசினியில்
    கண்டதும் உண்டோ அம்மா

    சிலுவை மீதினிலே இரத்தத்தை
    சிந்தி மடிந்தாரம்மா
    சிலுவை மீதினிலே இரத்தத்தை
    சிந்தி மடிந்தாரம்மா
    உலகை மீட்டிடவே இயேசு வந்து
    உவந்து மாண்டாரம்மா
    உலகை மீட்டிடவே இயேசு வந்து
    உவந்து மாண்டாரம்மா
    எங்கு நான் சென்றிடுவேன்
    இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன்
    எங்கு நான் சென்றிடுவேன்
    இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன்
    பங்கம் பல வரிணும் அவர்க்காய்
    பாடுகள் பல பட்டிடுவேன்
    பங்கம் பல வரிணும் அவர்க்காய்
    பாடுகள் பல பட்டிடுவேன்


    Iyesu enrathume enakku oru
    inpam pirakkuthamma
    kasiniyillavar pol evaraiyum
    kantathillaiyamma

    pesa thotangkinalum
    pessellam perinpam sottuthamma
    parkkaththotangkinalum parvaiyellam
    paviyil illaiyamma
    kushta rokikalai kaikalal
    kusamal thottaramma
    kashtappatuvoraik kantathum
    kannir vatiththaramma
    kashtappatuvoraik kantathum
    kannir vatiththaramma

    kasu mel aasai vaiththu
    thammai than kattik kotuththavanin
    kasu mel aasai vaiththu
    thammai than kattik kotuththavanin
    aarath thazhuvinorai kasiniyil
    kantathum unto amma
    aarath thazhuvinorai kasiniyil
    kantathum unto amma

    siluvai mithinile iraththaththai
    sinthi matintharamma
    siluvai mithinile iraththaththai
    sinthi matintharamma
    ulakai mittitave iyesu vanthu
    uvanthu mantaramma
    ulakai mittitave iyesu vanthu
    uvanthu mantaramma
    engku nan senrituven
    ivvanpai evvitham sollituven
    engku nan senrituven
    ivvanpai evvitham sollituven
    pangkam pala varinum avarkkay
    patukal pala pattituven
    pangkam pala varinum avarkkay
    patukal pala pattituven


  • உன்னைத்தான் கேட்கின்றார் unnaiththan ketkinrar

    உன்னைத்தான் கேட்கின்றார் இயேசு
    உன்னைத்தான் கேட்கின்றார்
    மனம் திரும்ப மாட்டாயா நீ
    மனம் திரும்ப மாட்டாயா

    நாடும் வீடும் நிலமும் எனக்கு
    போதும் என்று சொன்னாய்
    கூடு விட்டு ஆவி போகும்
    போது என்ன செய்வாய்
    யாவும் அழிந்து போகும்
    அழியா ஒன்று உண்டு
    உன்னைக் காக்கும் நல்ல இயேசு
    கிறிஸ்துவின் நேசக்கரங்கள்

    பட்டம் பதவி தகுதி உயர்வு
    யாவும் மாறி போகும்
    உலகம் உன்னை வெறுத்து
    ஒதுக்கும் காலம் வந்து சேரும்
    அன்று உணர்ந்து கொள்வாய்
    உண்மை என்ன என்று
    மாறும் உலகில் நிலைத்த ஒருவன்
    இயேசு தேவன் என்று


    unnaiththan ketkinrar iyesu
    unnaiththan ketkinrar
    manam thirumpa mattaya ni
    manam thirumpa mattaya

    natum vitum nilamum enakku
    pothum enru sonnay
    kutu vittu aavi pokum
    pothu enna seyvay
    yavum azhinthu pokum
    azhiya onru untu
    unnaik kakkum nalla iyesu
    kiristhuvin nesakkarangkal

    pattam pathavi thakuthi uyarvu
    yavum mari pokum
    ulakam unnai veruththu
    othukkum kalam vanthu serum
    anru unarnthu kolvay
    unmai enna enru
    marum ulakil nilaiththa oruvan
    iyesu thevan enru


  • ஐந்து காய வேதனை Ainthu kaya vethanai

    ஐந்து காய வேதனை அன்பர்
    இயேசுவை வாட்டுதே
    ஆறாத சோகம் மாறாத துன்பம்
    ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன்

    கற்றூணில் கட்டி
    கசையடிகள் அடித்தனரே
    தலையினிலே குத்தி அவர்
    கன்னத்தில் அறைந்தனரே
    சிவப்பங்கி உடுத்தி கையில்
    கோலினைக் கொடுத்தனரே
    யூத ராஜா என்று இகழ்ந்து
    முகத்தில் காறி உமிழ்ந்தனரே

    மன்னவர் இயேசு உடல்
    பெரும் புண்ணாகி நொந்ததுவே
    மாபெரும் இரத்த வெள்ளம்
    பெருகி ஆறாகி பாய்ந்ததுவே
    மானிடர் பாவம் தனை மா
    தேவன் சுமந்து தீர்த்தார்
    மறாவாதே நீ நெஞ்சமே மனம்
    திரும்பிடு அவர் தஞ்சமே


    Ainthu kaya vethanai anpar
    iyesuvai vattuthe
    aaratha sokam maratha thunpam
    aantavar iyesu mel suzhnthathen

    karrunil katti
    kasaiyatikal atiththanare
    thalaiyinile kuththi avar
    kannaththil arainthanare
    sivappangki utuththi kaiyil
    kolinaik kotuththanare
    yutha raja enru ikazhnthu
    mukaththil kari umizhnthanare

    mannavar iyesu utal
    perum punnaki nonthathuve
    maperum iraththa vellam
    peruki aaraki paynthathuve
    manitar pavam thanai ma
    thevan sumanthu thirththar
    maravathe ni nenysame manam
    thirumpitu avar thanysame


  • சத்தியம் மணக்கும் Saththiyam manakkum

    சத்தியம் மணக்கும் உத்தம
    தேவ சாலேமின் ராஜாவே
    சாந்தமும் தாழ்மையும் உள்ளவரே எங்கள்
    சாபங்கள் பாவங்கள் சுமந்தவரே

    நெஞ்சின் புண் ஆற நிம்மதி சேர
    நேசர் என் இயேசுவே நின் அடி பணிந்தோம்
    தஞ்சம் என்போர்க்கும் தாயகம் நீரே
    தாங்கிடும் நல்ல புயமுடையோரே

    என் உயிர் நரம்பிலும் கிருபையின் நாதம்
    இரவும் பகலும் நீர் என் சங்கீதம்
    என்பான் நாள் வரை இதுவே போதும்
    என் மனம் நாவும் உம்மையே ஓதும்


    saththiyam manakkum uththama
    theva salemin rajave
    santhamum thazhmaiyum ullavare engkal
    sapangkal pavangkal sumanthavare

    nenysin pun aara nimmathi sera
    nesar en iyesuve nin ati paninthom
    thanysam enporkkum thayakam nire
    thangkitum nalla puyamutaiyore

    en uyir narampilum kirupaiyin natham
    iravum pakalum nir en sangkitham
    enpan nal varai ithuve pothum
    en manam navum ummaiye oothum


  • இயேசு எனக்கு இருக்கு Iyesu enakku irukkum

    இயேசு எனக்கு இருக்கும் போது
    மனிதன் என்ன செய்வான் என்
    நேசர் எனக்கு இருக்கும்போது
    சாத்தான் என்ன செய்வான்
    சாத்தான் என்ன செய்வான்

    ஆலயம் எனக்கு இருக்கும் போது
    பாரங்கள் என்ன செய்யும்
    பரிசுத்த ஆவி எனக்குள் இருக்கும் போது
    பாவங்கள் என்ன செய்யும்
    பாவங்கள் என்ன செய்யும்

    வேதம் எனக்கு இருக்கும் போது
    வேதனை என்ன செய்யும்
    இயேசுவின் பாதம் எனக்கு
    இருக்கும் போது
    சோதனை என்ன செய்யும்
    சோதனை என்ன செய்யும்

    கல்வாரி எனக்கு இருக்கும் போது
    கவலைகள் என்ன செய்யும்
    இயேசுவின் சிலுவை எனக்கு
    இருக்கும் போது
    பாடுகள் என்ன செய்யும்
    பாடுகள் என்ன செய்யும்


    iyesu enakku irukkum pothu
    manithan enna seyvan en
    nesar enakku irukkumpothu
    saththan enna seyvan
    saththan enna seyvan

    aalayam enakku irukkum pothu
    parangkal enna seyyum
    parisuththa aavi enakkul irukkum pothu
    pavangkal enna seyyum
    pavangkal enna seyyum

    vetham enakku irukkum pothu
    vethanai enna seyyum
    iyesuvin patham enakku
    irukkum pothu
    sothanai enna seyyum
    sothanai enna seyyum

    kalvari enakku irukkum pothu
    kavalaikal enna seyyum
    iyesuvin siluvai enakku
    irukkum pothu
    patukal enna seyyum
    patukal enna seyyum


  • பாவமில்லாத ஆட்டுக்குட்டி avamillatha aattukkutti

    பாவமில்லாத ஆட்டுக்குட்டி
    பாரச் சிலுவையை தோளில் ஏற்றி
    பாதம் இடறி பாதை தவறி பதறிப்
    பயணம் போவதெங்கே

    பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு
    பரமனும் பாதகர் நடுவில் நின்று
    பால் மறவாத பாலனைப் போல
    வாய் திறவாமல் போனதென்ன

    குற்றமில்லாத இரத்தம் ஆறாய்
    குருசினில் ஓடுவதேன் பாராய்
    உருகலையோ உன் மனமே
    உணர்வில்லையோ உன் கல் மனமே


    pavamillatha aattukkutti
    paras siluvaiyai tholil eerri
    patham itari pathai thavari patharip
    payanam povathengke

    pavam seythorkal ingke untu
    paramanum pathakar natuvil ninru
    pal maravatha palanaip pola
    vay thiravamal ponathenna

    kurramillatha iraththam aaray
    kurusinil ootuvathen paray
    urukalaiyo un maname
    unarvillaiyo un kal manam


  • கேட்டேன் கேட்டேன் ketten ketten

    கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று
    எப்போது என் இயேசு வருவார் என்று
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் இன்று
    எப்போது தரிசனம் தருவார் என்று
    எப்போது தரிசனம் தருவார் என்று

    வானத்தைக் கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது வாடியே போனது தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    வெந்து அழிந்து போவோம் என்று

    கடலினை கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது கதறியே அழுதது தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    வெட்டாந்தரையாய் போவோம் என்று

    மலைகளை கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது மலைத்தே நின்றது தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    பெயர்ந்து நொறுங்கி போவோம் என்று

    மேகத்தை கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது வேகமாய் சென்றது தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    வாகனமாக வருவோம் என்று

    தேவ தூதரைக் கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது ஆனந்தம் கொண்டனர் தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    தாங்களும் கூட வருவோம் என்று

    இயேசுவைக் கேட்டேன்
    எப்போது தேவா உம் வருகை என்று
    அவர் அமைதியாய் நின்றார் தெரியாது என்றார்
    பிதாத்தவிர வருகையின் நாளை ஒருவரும் அறியார் என்றார்
    ஆனாலும் இதோ சீக்கிரமாக வருகிறேன் என்றார்


    ketten ketten ketten inru
    eppothu en iyesu varuvar enru
    parththen parththen parththen inru
    eppothu tharisanam tharuvar enru
    eppothu tharisanam tharuvar enru

    vanaththaik ketten
    eppothu en iyesu varuvar enru
    athu vatiye ponathu theriyathu enrathu
    karanam avar varukaiyil
    venthu azhinthu povom enru

    katalinai ketten
    eppothu en iyesu varuvar enru
    athu kathariye azhuthathu theriyathu enrathu
    karanam avar varukaiyil
    vettantharaiyay povom enru

    malaikalai ketten
    eppothu en iyesu varuvar enru
    athu malaiththe ninrathu theriyathu enrathu
    karanam avar varukaiyil
    peyarnthu norungki povom enru

    mekaththai ketten
    eppothu en iyesu varuvar enru
    athu vekamay senrathu theriyathu enrathu
    karanam avar varukaiyil
    vakanamaka varuvom enru

    thevathutharaik ketten
    eppothu en iyesu varuvar enru
    athu aanantham kontanar theriyathu enrathu
    karanam avar varukaiyil
    thangkalum kuta varuvom enru

    iyesuvaik ketten
    eppothu theva um varukai enru
    avar amaithiyay ninrar theriyathu enrar
    pithaththavira varukaiyin nalai oruvarum ariyar enrar
    aanalum itho sikkiramaka varukiren enrar


  • கொல்கதா என்றாலே kolkatha enrale

    கொல்கதா என்றாலே கொலை நடுங்குது
    மனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது

    எப்படி தான் மனித கரங்களும்
    புனித தலையை கொட்டத் துணிந்ததோ
    அப்படியே அவர் கன்னங்களில் அறைய
    எப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோ
    அய்யோ கதறுகின்றாரே அவர் கன்னங்கள் சிவந்திடவே
    மரியாள் முத்தமிட்ட மாசற்ற கால்கள்
    பெருதொரு ஆணியினால் குருசில் என்றதே
    வா என்ற அழைத்த அன்பின் கரங்கள் நோகவே
    பெரிதொரு ஆணியால் குருசி என்றதே
    அப்பா அங்கே குருசினில் பாவியை நோக்கி
    இப்பாவியை நினைத்தீர்

    நிலமெல்லாம் நின் இரத்தம் கொட்டி விட்டதே
    எலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதே
    இடும்பையின் கடலிலே இறங்கி விட்டீர் இயேசுவே
    கொடும்பாவி என்னை தீக்கடலில் மீட்கவே
    என் பாவம் மாபெரிது மன்னியும் இயேசு நாதா
    புசியாது நின் வயிறு ஒட்டிப் போனதே
    பசியினால் நின் உடல் வாடி வதங்கிற்றே
    அடியினால் உம் தேகம் உருகுலைந்ததே
    வடிவது மாறி உடல் கோரமானதே
    என்னழகே என்னால் உம் அழகிழந்தீரே


    kolkatha enrale kolai natungkuthu
    manam kumuruthu mey silirththituthu

    eppati than manitha karangkalum
    punitha thalaiyai kottath thuninthatho
    appatiye avar kannangkalil araiya
    eppatiththan pava karangkal ezhunthatho
    ayyo katharukinrare avar kannangkal sivanthitave
    mariyal muththamitta masarra kalkal
    peruthoru aaniyinal kurusil enrathe
    va enra azhaiththa anpin karangkal nokave
    perithoru aaniyal kurusi enrathe
    appa angke kurusinil paviyai nokki
    ippaviyai ninaiththi

    nilamellam nin iraththam kotti vittathe
    elumpukalellam ennath theriyuthe
    itumpaiyin katalile irangki vittir iyesuve
    kotumpavi ennai thikkatalil mitkave
    en pavam maperithu manniyum iyesu natha
    pusiyathu nin vayiru ottip ponathe
    pasiyinal nin utal vati vathangkirre
    atiyinal um thekam urukulainthathe
    vativathu mari utal koramanathe
    ennazhake ennal um azhakizhanthire


  • புறப்படப் போகுது வண்டி Purappatap pokuthu vanti

    புறப்படப் போகுது வண்டி இப்ப
    புறப்படப் போகுது வண்டி
    வண்டி ஓட்டுநர் ஆவியானவர்
    வண்டி நடத்துபவர் இயேசு ஆனவர்

    எக்காளம் என்னும் வீசில் ஊதினால்
    நிற்காமல் போய்விடும் வண்டி
    ஏற ஆயத்தம் இல்லையென்றால் நம்மை
    ஏமாற்றி போய் விடும் வண்டி

    பரிசுத்தம் என்னும் டிக்கெட் இருந்தால்
    பயமில்லாமல் பயணம் போகலாம்
    பரலோகம் என்னும் ஊரினிலே
    பரவசமாக இறங்கிடலாம்

    பாவத்தோடு பயணம் செய்தால்
    பரமன் இயேசு பார்த்திடுவார்
    பாதியில் வண்டியை நிறுத்திடுவார்
    பாதாள சேற்றினில் இறக்கிடுவார்

    கர்த்தக்குள்ளே இருப்பவர் எல்லாம்
    கைகளை ஆட்டி சென்றிடுவார்
    அவர் காட்டிய வழியை மறந்தவர் எல்லாம்
    கைகளை மார்பில் அடித்துக்கொள்வார்

    மரித்து போன பரிசுத்தவாங்கள்
    எழுந்து முதலில் இடம் பிடிப்பார்
    தேவனை மறந்து போன பாவிகள் எல்லாம்
    எரியும் அக்கினி கடலினில் அமிழ்ந்திடுவார்


    purappatap pokuthu vanti ippa
    purappatap pokuthu vanti
    vanti oottunar aaviyanavar
    vanti nataththupavar iyesu aanavar

    ekkalam ennum visil uuthinal
    nirkamal poyvitum vanti
    eera aayaththam illaiyenral nammai
    eemarri poy vitum vanti

    parisuththam ennum tikket irunthal
    payamillamal payanam pokalam
    paralokam ennum uurinile
    paravasamaka irangkitalam

    pavaththotu payanam seythal
    paraman iyesu parththituvar
    pathiyil vantiyai niruththituvar
    pathala serrinil irakkituvar

    karththakkulle iruppavar ellam
    kaikalai aatti senrituvar
    avar kattiya vazhiyai maranthavar ellam
    kaikalai marpil atiththukkolvar

    mariththu pona parisuththavangkal
    ezhunthu muthalil itam pitippar
    thevanai maranthu pona pavikal ellam
    eriyum akkini katalinil amizhnthituvar