Author: admin

  • நல்லதாக முடிவதெல்லாம் Nallathaka mutivathellam

    நல்லதாக முடிவதெல்லாம் கடவுள் கட்டளை
    இங்கு நடப்பதெல்லாம் பரம பிதா நடத்தும் ஒரு நிலை
    அல்லல் உற்ற நெஞ்சங்களில் அமைதி பொழிந்தார்
    அங்கு அடிமையான மக்களுக்கு விடுதலை தந்தார்

    நாதியற்ற மக்களுக்கோர் நாடு கிடைத்தது சிலர்
    நல்வழியை மறந்ததினால் அல்லல் நேர்ந்தது
    சாலமோனின் தாவீதின் ஆட்சி அமைந்தது
    அருள் சந்ததியால் ஆண்டவரின் பாதை தெரிந்தது

    கர்த்தரிடம் நம்பிக்கை தான் வாழ்வின் இன்பமே அது
    கடுகளவு குறைந்தாலும் துன்பம் தொடருமே
    எசேக்கேலும் தானியேலும் எடுத்துச் சொன்னாரே
    அதை எச்சரிக்கை உணர்ந்த மக்கள் நலமடைந்தாரே

    பரிசுத்த கூடாரம் தேவன் ஆலயம் அது
    பழையதாகி நிலைத்து மீண்டும் புதியதானதே
    திருப்பாடல் சங்கீதம் தெய்வப்பாடலே அதை
    தினம் பாடி துதிப்பது நம் வாழ்வின் கடமையே


    Nallathaka mutivathellam katavul kattalai
    ingku natappathellam parama pitha nataththum oru nilai
    allal urra nenysangkalil amaithi pozhinthar
    angku atimaiyana makkalukku vituthalai thanthar

    nathiyarra makkalukkor natu kitaiththathu silar
    nalvazhiyai maranthathinal allal nernthathu
    salamonin thavithin aatsi amainthathu
    arul santhathiyal aantavarin pathai therinthathu

    karththaritam nampikkai than vazhvin inpame athu
    katukalavu kurainthalum thunpam thotarume
    esekkelum thaniyelum etuththus sonnare
    athai essarikkai unarntha makkal nalamatainthare

    parisuththa kutaram thevan aalayam athu
    pazhaiyathaki nilaiththu mintum puthiyathanathe
    thiruppatal sangkitham theyvappatale athai
    thinam pati thuthippathu nam vazhvin katamaiye


  • நாடில்லா மக்களுக்கும் natilla makkalukkum

    நாடில்லா மக்களுக்கும் நாடொன்று உண்டு என்னும்
    ஆண்டவரின்அருளாளரின் வாக்குறுதி செயலானது அது
    அருளாளர் மோசேயால் வெளியானது – நாடில்லா

    ஓடோடி சென்றலையும் கோடான கோடி மக்கள்
    ஒன்று கூடி வாழ ஓர் ஊர் வந்தது அந்த
    ஊருக்கு கானான் என்னும் பெயர் வந்தது ஆமென்

    அன்போடு அமைதி நிலை ஆண்டவர்க்கு அஞ்சும் நிலை
    ஒன்றே நம் கடமை என உணர்வீர்களே அதை
    ஓயாமல் சொல்லி வந்தார் சான்றோர்களே
    இறைவனது புகழ் மறந்து சிலை வடித்து வணங்குகின்ற
    முறை மாறி வழி காண அறிவீர்களே மோசேஸ்
    குன்றேறி அதை சொன்னார் அந்நாளிலே ஆமென்

    காத்திருந்த மக்களையும் கனிவான தேவனையும்
    சேர்த்து வைக்கும் காலம் தான் நெருங்கி வந்தது அந்த
    சிந்தனையில் எளியோரின் வாழ்விருந்தது
    அருளான வாக்கு ஒன்று அழகான ஒளி மயமாய்
    நிறைவாக நேரில் வரும் நாளும் வந்தது
    மண்ணில் நீதி என்னும் சூரியன் வரும் வேளை வந்தது ஆமென்


    natilla makkalukkum natonru untu ennum
    aantavarinarulalarin vakkuruthi seyalanathu athu
    arulalar moseyal veliyanathu natilla

    oototi senralaiyum kotana koti makkal
    onru kuti vazha oor uur vanthathu antha
    uurukku kanan ennum peyar vanthathu aamen

    anpotu amaithi nilai aantavarkku anysum nilai
    onre nam katamai ena unarvirkale athai
    ooyamal solli vanthar sanrorkale
    iraivanathu pukazh maranthu silai vatiththu vanangkukinra
    murai mari vazhi kana arivirkale moses
    kunreri athai sonnar annalile aamen

    kaththiruntha makkalaiyum kanivana thevanaiyum
    serththu vaikkum kalam than nerungki vanthathu antha
    sinthanaiyil eliyorin vazhvirunthathu
    arulana vakku onru azhakana oli mayamay
    niraivaka neril varum nalum vanthathu
    mannil nithi ennum suriyan varum velai vanthathu aamen


  • ஆடுங்கள் கொண்டாடுங்கள் Aatungkal kontatungkal

    ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது
    ஆயன் பிறந்தநாள்
    பாடுங்கள் பண்பாடுங்கள்
    தேவ பாலன் பிறந்தநாள்

    மரியின் மடியில் மாடடைக்குடிலில்
    இறைமகன் இயேசு பிறந்தநாள்
    அந்த திருமகன் தனக்கு அனைவரும்
    சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள்

    நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே
    கர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வ
    நம்பிக்கை அன்பு அமைதி விதைக்க
    குழந்தையாய் இயேசு பிறந்த நாள்


    Aatungkal kontatungkal ithu
    aayan piranthanal
    patungkal panpatungkal
    theva palan piranthanal

    mariyin matiyil matataikkutilil
    iraimakan iyesu piranthanal
    antha thirumakan thanakku anaivarum
    samam ena eliyavar natuvil malarntha nal

    nalinthavarkkellam nan thunai enre
    karththar thonriya iniya nal theyva
    nampikkai anpu amaithi vithaikka
    kuzhanthaiyay iyesu pirantha nal


  • அன்று சொன்ன Anru sonna iyesu

    அன்று சொன்ன இயேசு வார்த்தை
    இன்று கூட உண்மையே அதை
    அவர் பிறந்த நல்ல நாளில்
    எண்ண எண்ண நன்மையே

    துயரமுற்றோர் பேறு பெற்றோர்
    ஆறுதலைக் காணலாம்
    தூய உள்ளம் கொண்ட மக்கள்
    தேவனையேக் பார்க்கலாம்
    நண்பரோடு நட்பு வைக்க
    தீயவர்க்கும் தோன்றுமே ஒரு
    பகைவன் மீது பாசம் நட்பு
    நல்லவர்க்கும் வேண்டுமே என்று

    குற்றவாளி கொள்ளையர்கள்
    வாழ்வைக்கூட காணுங்கள் தம்
    பெற்ற பிள்ளை யாவருக்கும்
    நன்மை செய்வார் பாருங்கள்
    அனைவருக்கும் தந்தை அந்த
    ஆண்டவர் தான் தெரியுமா இங்கு
    அவர் கொடுக்கும் நன்மையெல்லாம்
    அளந்து காட்ட முடியுமா என்று

    ஊசி காதில் ஒட்டகங்கள்
    நுழைவதெல்லாம் சுலபமே
    பணம் காசால் ஒருவன் கடவுள்
    அரசில் நுழைவதென்றால் கடினமே
    மரத்தின் தன்மை கனியில் உண்டு
    மனிதரெல்லாம் காணுங்கள் உங்கள்
    மனத்தின் தன்மை சொல்லில் உண்டு
    நல்ல வார்த்தை பேசுங்கள் என்று


    anru sonna iyesu varththai
    inru kuta unmaiye athai
    avar pirantha nalla nalil
    enna enna nanmaiye

    thuyaramurror peru perror
    aaruthalaik kanalam
    thuya ullam konta makkal
    thevanaiyek parkkalam
    nanparotu natpu vaikka
    thiyavarkkum thonrume oru
    pakaivan mithu pasam natpu
    nallavarkkum ventume enru

    kurravali kollaiyarkal
    vazhvaikkuta kanungkal tham
    perra pillai yavarukkum
    nanmai seyvar parungkal
    anaivarukkum thanthai antha
    aantavar than theriyuma ingku
    avar kotukkum nanmaiyellam
    alanthu katta mutiyuma enru

    uusi kathil ottakangkal
    nuzhaivathellam sulapame
    panam kasal oruvan katavul
    arasil nuzhaivathenral katiname
    maraththin thanmai kaniyil untu
    manitharellam kanungkal ungkal
    manaththin thanmai sollil untu
    nalla varththai pesungkal enru


  • ஆண்டவரின் திருமகனே aantavarin thirumakane

    ஆண்டவரின் திருமகனே இயேசு என்ற
    உண்மைதனை அறிவித்த அடையாளம்
    ஏராளம் அந்த அடையாளம் கண்டு
    கொண்டு அவர் வழியில் செல்வது தான்
    (இயேசு) திருசபையில் நாம்
    காணும் வாழ்வாகும்

    கானானூர் கல்யாணத்தில் தண்ணீரை
    திரட்சை ரசம்ஆகியதே
    அற்புதத்தில் முதலாகும் அன்று
    கப்பற் நகர் அதிகாரி மகன் உயிரை
    மீட்டுத்தந்த கர்த்தர் என்னும்
    அடையாளம் இரண்டாகும்
    முப்பத்தெட்டு ஆண்டுகளாய்
    முடியாத நோய் தீர்த்த
    எருசலேமின் அருட்செயலே மூன்றாகும்
    வெறும் அப்பம் ஐந்து ஈணிரண்டில்
    ஐயாயிரம் பேர உண்ட கலிலேயா
    அருள் நிகழ்ச்சி நான்காகும்

    கடல் மீது நடந்து வந்து
    கடும் புயல் தானடக்கி
    கனிவோடு காத்த செயல் ஐந்தாகும்
    ஒரு குருடனுக்கு பார்வை தந்து
    உலகின் ஒளி அவரே என
    வெளியான தத்துவமே ஆறாகும்
    இறந்து விட்ட லாசுருவை
    எழுப்பியவர் இறைமகனே
    என்பது தான் ஏழாகும் இன்னும்
    எண்ணில்லா அற்புதத்தை
    இவ்வுலகில் செய்து வைத்த
    இயேசுவின் மேல் அன்பு
    வைத்தால் நலமாகும்


    aantavarin thirumakane iyesu enra
    unmaithanai ariviththa ataiyalam
    eeralam antha ataiyalam kantu
    kontu avar vazhiyil selvathu than
    iyesu thirusapaiyil nam
    kanum vazhvakum

    kananur kalyanaththil thannirai
    thiratsai rasamaakiyathe
    arputhaththil muthalakum anru
    kappar nakar athikari makan uyirai
    mittuththantha karththar ennum
    ataiyalam irantakum
    muppaththettu aantukalay
    mutiyatha noy thirththa
    erusalemin arutseyale munrakum
    verum appam ainthu iinirantil
    aiyayiram pera unta kalileya
    arul nikazhssi nankakum

    katal mithu natanthu vanthu
    katum puyal thanatakki
    kanivotu kaththa seyal ainthakum
    oru kurutanukku parvai thanthu
    ulakin oli avare ena
    veliyana thaththuvame aarakum
    iranthu vitta lasuruvai
    ezhuppiyavar iraimakane
    enpathu than eezhakum innum
    ennilla arputhaththai
    ivvulakil seythu vaiththa
    iyesuvin mel anpu
    vaiththal nalamakum


  • இயேசுவின் தோற்றம் Iyesuvin thorram

    இயேசுவின் தோற்றம் பிறவிப்பயணம்
    இறைமகன் மனுவாய் ஏகிய பயணம்
    வந்தபின் வளர்ந்தது தேவனின் பயணம்
    வழியாய் ஒளியாய் விளங்கிய பயணம்

    பன்னிரு வயதில் பாஸ்கா பயணம்
    பண்டிதரை எங்கள் தெளிவித்த பயணம்
    பெற்றோர் மகிழ வளர்ந்த பின் வந்தது
    பிறவியின் இலட்சியம் செயல்படும் பயணம்

    சமாரியர் மண்ணில் சத்திய பயணம்
    சாய்ந்த இனத்தையும் நிமிர்த்திய பயணம்
    ஒதுக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டு
    தண்ணீர் அருந்திய தலைவனின் பயணம்

    உலக உயிர்களை இரட்சிக்கும் பயணம்
    உத்தம கர்த்தரின் மீட்பின் பயணம்
    ஆண்டவர் மனம் போல் மனுகுலம் துலங்க
    அழைத்ததும் உழைத்ததும் இயேசுவின் பயனம்


    Iyesuvin thorram piravippayanam
    iraimakan manuvay eekiya payanam
    vanthapin valarnthathu thevanin payanam
    vazhiyay oliyay vilangkiya payanam

    panniru vayathil paska payanam
    pantitharai engkal theliviththa payanam
    perror makizha valarntha pin vanthathu
    piraviyin ilatsiyam seyalpatum payanam

    samariyar mannil saththiya payanam
    sayntha inaththaiyum nimirththiya payanam
    othukkappatta pennitam kettu
    thannir arunthiya thalaivanin payanam

    ulaka uyirkalai iratsikkum payanam
    uththama karththarin mitpin payanam
    aantavar manam pol manukulam thulangka
    azhaiththathum uzhaiththathum iyesuvin payanam


  • ஜெபமே ஜெயம் Jepame jeyam

    ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
    இயேசு ஜெபமே ஜெயம்
    அபயம் அபயம் என்று அலைந்திடும் மாந்தர்க்கு
    ஆனந்த வாழ்வளிக்கும் ஆண்டவர் இயேசுவின்
    ஜெபமே ஜெயம் இயேசு ஜெபமே ஜெயம்

    ஒரு மனதோடு வந்து உன் திரு நாமம் போற்றி
    துதி கீதம் பாடிடும் தூயவர் வாழ்வினிலே
    கதி நீரே மதி நீரே (2)
    கண்ணீரை துடைப்பவரே எந்நாளும் இவ்வுலகில்
    இணையில்லா இன்பம் பெற

    முழு ஆத்மாவோடும் முழு இருதயத்தோடும்
    உம் மீது அன்பு கூர்ந்து உன்னத வாழ்வு பெற
    தன்னை போல பிறர் மேலே
    அன்பு கூர்ந்து வாழ்ந்தென்றும் தரணியில்
    தாழ்வின்றி தழைத்தோங்கி சிறந்திடவே


    jepame jeyam jepame jeyam
    iyesu jepame jeyam
    apayam apayam enru alainthitum mantharkku
    aanantha vazhvalikkum aantavar iyesuvin
    jepame jeyam iyesu jepame jeyam

    oru manathotu vanthu un thiru namam porri
    thuthi kitham patitum thuyavar vazhvinile
    kathi nire mathi nire kannirai thutaippavare
    ennalum ivvulakil inaiyilla inpam pera

    muzhu aathmavotum muzhu iruthayaththotum
    um mithu anpu kurnthu unnatha vazhvu pera
    thannai pola pirar mele
    anpu kurnthu vazhnthenrum tharaniyil
    thazhvinri thazhaiththongki siranthitave


  • எங்கள் பரலோக Engkal paraloka

    எங்கள் பரலோக நன்னாடு பரன்
    இயேசுவின் பொன் வீடு
    தூதரோடு கூடி துதி கீதம் பாடி
    துயரின்றி வாழும் தூய நாடு

    கர்த்தர் இயேசு கிறிஸ்து அன்றி அங்கு
    கணக்கற்ற தெய்வங்கள் இருபதில்லை
    விக்ரக உருவ சிலை வணக்கம் அந்த
    விண்ணக தேசத்தில் நடப்பதில்லை
    இயேசுவின் திருநாம மகிமை ஒன்றே அங்கு
    எங்கெங்கும் ஓங்கி ஒலிக்கும் நாடு
    ஏழாம் நாளாம் ஓய்வு நாளில்
    இயேசுவை எல்லோரும் துதிக்கும் நாடு

    பெற்று வளர்த்த தாய் தந்தையை மதியா
    பிள்ளைக்கு அங்கு இடமில்லை
    பொய் கொலை களவு விபசாரம் செய்யும்
    புல்லர்கள் அங்கு செல்வதில்லை
    மாற்றான் மனைவியை இச்சிக்கும் மதிகெட்ட
    துர் மார்க்கர் அங்கு இருப்பதில்லை
    மாதேவன் இயேசு வகுத்திட்ட வழியில்
    வாழ்ந்திட்ட மனிதர்கள் வாழும் நாடு


    engkal paraloka nannatu paran
    iyesuvin pon vitu
    thutharotu kuti thuthi kitham pati
    thuyarinri vazhum thuya natu

    karththar iyesu kiristhu anri angku
    kanakkarra theyvangkal irupathillai
    vikraka uruva silai vanakkam antha
    vinnaka thesaththil natappathillai
    iyesuvin thirunama makimai onre angku
    engkengkum oongki olikkum natu
    eezham nalam ooyvu nalil
    iyesuvai ellorum thuthikkum natu

    perru valarththa thay thanthaiyai mathiya
    pillaikku angku itamillai
    poy kolai kalavu vipasaram seyyum
    pullarkal angku selvathillai
    marran manaiviyai issikkum mathiketta
    thur markkar angku iruppathillai
    mathevan iyesu vakuththitta vazhiyil
    vazhnthitta manitharkal vazhum natu


  • என்னையாளும் இன் Ennaiyalum inpa

    என்னையாளும் இன்ப நாதனே என்
    இயேசு மணாளனே –
    துணையாரும் இல்லை என்று
    மனம் நொந்து போனேன்
    துணையாக வந்து தோள் தந்து என்னை
    மீட்ட தேவனே – என்னையாளும்

    மனம் நொந்து வாடினேன் திரு பாதம் தேடினேன்
    தினம் கண்ணீர் சிந்தினேன் முழங்காலில் தங்கினேன்
    அழும் என்னை தேடி வந்து அணைத்து அன்பில் ஆழ்த்தினார்
    புழு என்னை தொட்டு தன் போல் புது ரூபம் ஆக்கினார்

    கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
    முரடான காடுகள் முள் கல் பாதைகள்
    அவமான நிந்தைகள் எவை வந்த போதிலும்
    இது எந்தன் பாக்கியம் என சொன்ன இயேசுவே

    கடன்காரன் ஆனதால் உடன் வந்த பாடுகள்
    இடம் மாறி போயினும் தடுமாற செய்திடும்
    தடுமாறும் கால்கள் உம் முன் தள்ளாடலாகுமா
    தள்ளாடும் என்னை தாங்கி நில் என்ற இயேசுவே


    ennaiyalum inpa nathane en
    iyesu manalane
    thunaiyarum illai enru
    manam nonthu ponen
    thunaiyaka vanthu thol thanthu ennai
    mitta thevane ennaiyalum

    manam nonthu vatinen thiru patham thetinen
    thinam kannir sinthinen muzhangkalil thangkinen
    azhum ennai theti vanthu anaiththu anpil aazhththinar
    puzhu ennai thottu than pol puthu rupam aakkinar

    karatana metukal katum pallaththakkukal
    muratana katukal mul kal pathaikal
    avamana ninthaikal evai vantha pothilum
    ithu enthan pakkiyam ena sonna iyesuve

    katankaran aanathal utan vantha patukal
    itam mari poyinum thatumara seythitum
    thatumarum kalkal um mun thallatalakuma
    thallatum ennai thangki nil enra iyesuve


  • அத்திமரம் துளிர் Aththimaram thulir

    அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே
    ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே
    இயேசு வருகையின் நேரமே

    நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்கும் என்றார் இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களிட்ன் செய்தி கேட்டிடுதே வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடியும் என்றார் இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடிந்திடுதே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காதுகர்த்தரின் வருகை நிற்காது

    கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்கும் என்றார்இன்று கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்டிடுதே பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கும் என்றார் இன்று பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கிடுதே
    கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது

    கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும்
    கர்த்தரின் நாமம் தரித்து கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் கர்த்தரின் பெயரை சொல்லி கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே
    கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது


    aththimaram thulir vittathu vasantha kalame
    aapaththukkal nerungkinathu varukaiyin nerame
    iyesu varukaiyin nerame

    nattukku natu yuththangkalin
    seythikal ketkum enrar
    inru nattukku natu yuththangkalitn
    seythi kettituthe
    vittukku vitu janam ezhumpi
    pakaiyinil mutiyum enrar
    inru vittukku vitu janam ezhumpi
    pakaiyinil mutinthituthe
    kalangkitathe natungkitathe
    karththarin varththai niraiveruthu
    kalam ithu kataisi kalam karththarin
    varukai nirkathu
    karththarin varukai nirkathu

    kollai noykalum kolaiveriyum
    kukkural ketkum enrar
    inru kollai noykalum kolaiveriyum
    kukkural kettituthe
    panysangkalum kalakangkalum
    parinai kalakkum enrar
    inru panysangkalum kalakangkalum
    parinai kalakkituthe
    kalangkitathe natungkitathe
    karththarin varththai niraiveruthu
    kalam ithu kataisi kalam
    karththarin varukai nirkathu
    karththarin varukai nirkathu

    kallaththirkkatharisikalum anthikkiristhukalum
    karththarin namam thariththu
    kontu vanysiththu vazhvar enrare
    kallaththirkkatharisikalum anthikkiristhukalum
    karththarin peyarai solli kontu
    vanysiththu vazhvar enrare
    kalangkitathe natungkitathe
    karththarin varththai niraiveruthu
    kalam ithu kataisi kalam
    karththarin varukai nirkathu
    karththarin varukai nirkathu